Boost your board exam confidence with our 12th Tamil Test Question Paper, model papers & free PDF download hub. Solving these chapter-wise unit tests and full-length practice papers will help you understand the exam pattern, improve your writing speed, and score top marks.
பகுதி - I • சரியான விடையினைத் தேர்ந்தெடுக்க:
14 × 1 = 14
1. ச. த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்:
அ) பௌத்தமும் தமிழும் ஆ) இசுலாமும் தமிழும் இ) சமணமும் தமிழும் ஈ) கிறித்துவமும் தமிழும்
2. "செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்
3. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு:
அ) மத்த விலாசம் ஆ) திசை எட்டும் இ) தமிழ்நாட்டு வரலாறு ஈ) அஞ்சிறைத்தும்பி
4. தமிழில் திணைப்பாகுபாடு _______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது:
அ) பொருட்குறிப்பு ஆ) சொற்குறிப்பு இ) தொடர்க்குறிப்பு ஈ) எழுத்துக்குறிப்பு
5. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே:
அ) அஃறிணை, உயர்திணை ஆ) உயர்திணை, அஃறிணை இ) விரவுத்திணை, அஃறிணை ஈ) உயர்திணை, விரவுத்திணை
6. மொழியின் அடிப்படை அலகுகள்:
அ) 1 ஆ) 2 இ) 3 ஈ) 4
7. கன்றுகளைத் தவிர்த்தன எவை?
அ) குரங்குகள் ஆ) விலங்குகள் இ) பறவைகள் ஈ) பசுக்கள்
8. குளிரால் நடுங்கின எவை?
அ) பசுக்கள் ஆ) பறவைகள் இ) குரங்குகள் ஈ) விலங்குகள்
9. பொய்யா வானம், புதுப்பெயல் பொழிந்தென - சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க:
அ) வினைத்தொகை ஆ) உரிச்சொல் தொடர் இ) இடைச்சொல் தொடர் ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
10. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
அ) 5 ஆ) 6 இ) 7 ஈ) 8
11. கிளை என்பதன் பொருள்:
அ) மகிழ்ச்சி ஆ) காடு இ) பகைவர் ஈ) உறவினர்
12. கானம் என்பதன் பொருள்:
அ) காடு ஆ) மகிழ்ச்சி இ) பகைவர் ஈ) உறவினர்
13. செற்றார் என்பதன் பொருள்:
அ) மகிழ்ச்சி ஆ) காடு இ) பகைவர் ஈ) உறவினர்
14. தடக்கையான் - இலக்கணக்குறிப்பு:
அ) உரிச்சொல் தொடர் ஆ) வினைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) இடைச்சொல் தொடர்
பகுதி - II
பிரிவு - I • மூன்று வினாக்களுக்கு விடையளிக்க:
3 × 2 = 6
15. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
16. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கே அமைத்து ஒரு தொடர் எழுதுக.
17. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
18. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம் தருக.
பிரிவு - II • இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:
2 × 2 = 4
19. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
20. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை - குறிப்பு வரைக.
21. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
பிரிவு - III • ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:
7 × 2 = 14
22. உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக:
i) அச்சாணி இல்லாத தேர்போல
23. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
i) கலை, களை, கழை
24. நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக:
i) குதிரை, ஓடு, வேகம், தாவு
25. கலைச்சொல்லாக்கம் தருக:
i) Archive ii) Software
26. பகுபத உறுப்பிலக்கணம் தருக:
i) தந்தனன் ii) பொலிந்தான்
27. புணர்ச்சி விதி தருக (எவையேனும் ஒன்றனுக்குத் தருக):
i) அருங்கானம் ii) இனநிரை
28. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான் அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டு தீர்ப்பார்கள்.
29. வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதுக:
i) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
30. இலக்கணக்குறிப்பு தருக:
i) உளது ii) நுந்தை
பகுதி - III
பிரிவு - I • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:
2 × 4 = 8
31. 'வருபவர் எவராயினும் நன்றி செலுத்து' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
32. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
33. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
34. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
பிரிவு - II • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:
2 × 4 = 8
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. சென்னை - அறிவின் நகரம் என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
37. மணந்தகம் - விளக்குக.
38. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.
பிரிவு - III • எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க:
3 × 4 = 12
39. ஏகதேச உருவக அணியினைச் சான்றுடன் விளக்குக.
40. "ஓங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
41. மையக்கருத்தை எழுதி எவையேனும் மூன்று நயங்களை எழுதுக:
"வெட்டி யடிக்குது மின்னல்- கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்- கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்" - பாரதியார்
42. தமிழாக்கம் தருக:
i) Learning is a treasure that will follow its owner everywhere.
ii) A new language is a new life.
iii) If you want people to understand you, speak their language.
iv) Knowledge of language is the doorway to wisdom.
43. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்:
1. தமிழறிஞர்: முதலிரு எழுத்துக்கள் மறைக்கலாம்.
2. தாய்மொழி: ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.
3. சிறுகதை ஆசிரியர்: முதல் பாதி நவீனம்.
4. முன்னெழுத்து அரசன், பின்னெழுத்து மாதம்.
பகுதி - IV • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:
3 × 6 = 18
44. அ) மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர் என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
45. அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
ஆ) தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பம் எழுதுக.
46. அ) 'உரிமைத்தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
(அல்லது)
ஆ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவாதிக்க.
பகுதி - V • அடிபிறழாமல் எழுதுக:
4 + 2 = 6
47. i) "துன்பு உளது" எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல். (அல்லது) "ஓங்கலிடை" எனத் தொடங்கும் பாடல்.
ii) "மகற்கு" என முடியும் குறட்பாவினை எழுதுக.