Put your preparation to the test with this 12th Tamil - Test Question Paper 2 practice set & answer key. Designed to match the latest exam blueprint, this mock paper helps you evaluate your speed, accuracy, and readiness for the final board exams.
பகுதி - I • I. சரியான விடையினைத் தேர்ந்தெடுக்க:
14 × 1 = 14
1. குளிரால் நடுங்கியது எது?
அ) குரங்குகள் ஆ) விலங்குகள் இ) பறவைகள் ஈ) பசுக்கள்
2. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
அ) சூரிய ஒளிக்கதிர் ஆ) மழை மேகங்கள் இ) மழைத்துளிகள் ஈ) நீர் நிலைகள்
3. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு:
அ) வினைத்தொகை ஆ) உரிச்சொல் இ) இடைச்சொல் ஈ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
4. வையகமும் வானகமும் ஆற்றலாது எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி ஆ) பயன் தூக்கார் செய்த உதவி இ) தினைத்துணை நன்றி ஈ) காலத்தினால் செய்த நன்றி
5. பயன்தூக்கார் செய்த உதவி:
அ) சேர்ந்தாரைக் கொல்லி ஆ) ஞாலத்தின் மாணப் பெரிது இ) தெய்வத்துள் வைக்கப்படும் ஈ) நன்மை கடலின் பெரிது
6. 'உலகு' இலக்கணக்குறிப்பு தருக:
அ) பண்புத்தொகை ஆ) ஆகுபெயர் இ) எண்ணும்மை ஈ) தொழிற்பெயர்
7. அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை:
அ) 38 ஆ) 70 இ) 25 ஈ) 35
8. இருக்கைப்பட்டை அணியாமல் சென்றால் தண்டத்தொகை:
அ) 1000 ஆ) 500 இ) 10000 ஈ) 25000
9. கழை என்பதன் பொருள்:
அ) முத்து ஆ) மூங்கில் இ) எடை அளவு ஈ) இடக்கை வாத்தியம்
10. 'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை:
அ) இலக்கியம் ஆ) கணிதம் இ) புவியியல் ஈ) வேளாண்மை
11. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க:
அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச் சாறு இ) கடுக்காய் ஈ) மாவிலைக்களி
12. திண்ணியர் என்பதன் பொருள்:
அ) அறிவுடையவர் ஆ) மன உறுதி உடையவர் இ) தீக்காய்வார் ஈ) அறிவினார்
13. ஆராய்ந்து சொல்கிறவர்:
அ) அரசர் ஆ) சொல்லியபடி செய்பவர் இ) தூதுவர் ஈ) உறவினர்
14. வறுமை தருவது எது?
அ) தீக்காய்வார் ஆ) சீர் அழிக்கும் சூது இ) கள் உண்பவர் ஈ) உடம்பாடு இல்லாதவரோடு வாழ்தல்
பகுதி - II
பிரிவு - 1 • மூன்று வினாக்களுக்கு விடையளிக்க:
3 × 2 = 6
15. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம் தருக.
16. ஞாலத்தின் மாணப் பெரியது எது?
17. சினத்தை ஏன் காக்க வேண்டும்?
18. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?
பிரிவு - 2 • இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:
2 × 2 = 4
19. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?
20. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
21. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை குறிப்பு வரைக.
பிரிவு - 3 • ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:
7 × 2 = 14
22. நான்கு சொற்களைக் கொண்டு தொடர் அமைக்க:
i) வானம், பற, நிலவு, தொடு
23. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
i) தலை, தளை, தழை
24. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக:
i) இனநிரை ii) புதுப்பெயல்
25. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக:
i) கலங்கி ii) தொழுதனர்
26. எண்வகை மெய்ப்பாடுகள் எவை?
27. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக:
i) இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
28. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக:
i) முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
29. இலக்கணக்குறிப்பு தருக:
i) ஆடலும் பாடலும் ii) தொல்நெறி
30. மருட்கை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்கள் யாவை?
பகுதி - III
பிரிவு - 1 • எவையேனும் இரண்டனுக்கு விடையளிக்க:
2 × 4 = 8
31. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
32. எவற்றையெல்லாம்விட நன்றி உயர்ந்தது குறள் வழி விளக்குக.
33. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
34. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
பிரிவு - 2 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:
2 × 4 = 8
35. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
36. கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
37. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
38. சென்னை அறிவின் நகரம் என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
பிரிவு - 3 • எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க:
3 × 4 = 12
39. அ) நிரல்நிறை அணியினை எழுதுக.
(அல்லது)
ஆ) ஏகதேச உருவக அணியினைச் சான்றுடன் எழுதுக.
40. பழமொழிக்கு விளக்கம் தருக:
அ) எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
(அல்லது)
ஆ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
41. மையக்கருத்தை எழுதி ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக:
வெட்டி யடிக்குது மின்னல்- கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்- கூவென்று
விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்.
42. தமிழாக்கம் தருக:
The serious dearth of library facilities in this country is scarcely keeping with India's status in the international community of nations or with her educational and social needs. In this matter, India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library of any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected. There are no travelling libraries to reach them of the kind that are to be found even in some backward countries.
The growth of libraries has lagged far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading rooms, most of them cannot attain regular reading habits.
43. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
பகுதி - IV • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:
3 × 6 = 18
44. அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
ஆ) சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரிந்துரைக்க.
45. அ) நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல் கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
46. அ) சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்தை எழுதுக.
(அல்லது)
ஆ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலத்தை விவரிக்க.
பகுதி - V • அடிபிறழாமல் எழுதுக:
4 + 2 = 6
47. அ) "குழல்வழி" எனத் தொடங்கும்படி சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
ஆ) "படும்" என முடியும் குறட்பாவினை எழுதுக.