12th Tamil - 2, 4, 6 Marks - Study Material | Guide & Book Back Answers

Master short and long answers effortlessly with this 12th Tamil - 2, 4, 6 Marks - Study Material, guide & book back answers resource. Organized unit-wise to match the latest syllabus, these concise notes help you memorize key points and score maximum marks in your exams.


12th Tamil - 2, 4, 6 Marks - Study Material | Guide & Book Back Answers
12th தமிழ் வகுப்பு : 12

தமிழ் – 2, 4, 6 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு

உரைநடை குறுவினா
1. விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வதொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்- யார் யாரைப் பற்றி எதற்காக கூறுகிறார் ?
• பாவேந்தர் பாரதிதாசன் மயிலை சீனி வேங்கடசாமி பற்றி கூறியது.
• தமிழரின் மேன்மையை மேலும் ஓங்கிட செய்வதையே தனது உயிர் பணியாகக் கொண்டவர்.
2. தமிழர் வளர்த்த அழகு கலைகள் நூல் பற்றி குறிப்பு வரைக.
• தமிழர் வளர்த்த அழகு கலைகள் என்னும் நூல் கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல்.
• தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது.
3. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
• காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 இல் இந்நூலகம் உருவாக்கப்பட்டது.
• அரிய ஓலைச்சுவடிகள் தாள் சுவடிகள் புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.
4. இந்தோ சாரசனிக் கட்டடக்கலை குறிப்பு வரைக.
• முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.
• 1768 இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே ஆகும்.
5. புக்கில் தன்மனை சிறு குறிப்பு வரைக.
• புக்கில் : தற்காலிகத் தங்குமிடம்.
• தன்மனை : திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்துப் பிரிந்து, தனியாக வாழும் இடம்.
6. சங்ககாலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
• சங்க காலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்களுக்குக் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் சென்று சேர்ந்தன.
• தாய் வழியாகவே குலத் தொடர்ச்சியைக் குறிக்கும் உரிமை.
7. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
• தமிழில் நிகண்டு நன்னூல் காரிகை தண்டியலங்காரம் நீதி நூல்கள்.
• கணிதத்தில் கீழ்வாயிலக்கம் மேல்வாயிலக்கம் குழிமாற்று முதலியன.
8. பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
• பின்னணி இசை திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகிறது.
• பின்னணி இசை சேர்ப்பும் சில வேளைகளில் மௌனமும் திரையில் உணர்வுகளை வெளிக் கொண்டு வர உதவுகின்றன.
9. பருவத்தே பயிர் செய் நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
• ஏற்ற காலம் அறிந்து, ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொள்வது நேர மேலாண்மை ஆகும்.
• அதுபோல உரிய காலத்தை அறிந்து பயிர் செய்து சரியான வழிமுறையைப் பின்பற்றினால் நல்ல விளைச்சலைப் பெற முடியும்.
செய்யுள் குறுவினா
1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
• உடல் வருந்த உழைக்கும் தொழிலாளர்களின் கைகள் வானைப்போல சிவந்திருக்கும்.
• அவர்களின் தோள் மீது முத்து முத்தாய் வியர்வை துளிகள் காணப்படும்.
• இவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.
2. விடியல் - வனப்பு இரு சொற்களையும் ஒருங்கே அமைத்து தொடர் எழுதுக.
• விடியல் வானம் வனப்பு மிகுந்தது.
3. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது – விளக்கம் தருக.
• மழை பெய்ததால் நகரம் மாசு நீங்கி புதுப்பொலிவு அடைகிறது.
• அப்போது திடீரென தோன்றிய சூரிய வெளிச்சத்தால் நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம்போல் காட்சியளிக்கும்.
4. இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
• இனநிரை = இனம் + நிரை
• மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் → இனநிரை
5. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
• ஆனந்தம்  •  மனசோர்வு  •  அற்பத்தனம்  •  விழிப்புணர்வு
6. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
• இராமன் சுக்ரீவனிடம், விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்.
• தீயவராக இருப்பினும் கூட உன் நண்பர்கள் என் நண்பர்கள்.
• உன் உறவினர் என் உறவினர்.
• அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்.
• நீ என் இனிய உயிர்.
7. துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?
• நிழலின் அருமை
8. காற்றின் தீராத பக்கங்களில் எதனை, எது எழுதிச் சென்றது?
• காற்றின் தீராத பக்கங்களில், சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது.
9. மாதவியின் நாட்டிய நிகழ்வில் ஒலித்த இசைக் கருவிகளைப் பட்டியலிடுக.
• குழல்  •  யாழ்  •  தண்ணுமையாகிய மத்தளம்  •  முழவு  •  ஆமந்திரிகை (இடக்கை வாத்தியம்).
10. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
• குடிமக்கள் காப்பியம்  •  புரட்சிக் காப்பியம்  •  மூவேந்தர் காப்பியம்  •  ஒற்றுமைக் காப்பியம்  •  உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்  •  பொதுமைக்காப்பியம்  •  முத்தமிழ்க் காப்பியம்  •  நாடகக் காப்பியம்
11. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
• மருத்துவத்தில் மருந்து அவசியம் தான். ஆனால் மருந்து மட்டும் நோயாளியை குணப்படுத்தி விட முடியாது.
• அன்பான வார்த்தையும், நீங்கள் விரைவாகக் குணமாகி விடுவீர்கள் என்ற நம்பிக்கையான வார்த்தையும் தான் நோயாளியை விரைவாகக் குணப்படுத்தும் என்பது உண்மையிலும் உண்மையாகும்.
12. கலி விழா - ஒலிவிழா விளக்கம் தருக.
• கலிவிழா : மக்களுக்கு எழுச்சி தரும் விழா
• ஒலி விழா : ஆரவார விழா
13. தர்மமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே தொடருக்குப் பதவுரை எழுதுக.
தருமமிகுஅறம் செய்வார்
சென்னையில்நிறைந்திருக்கும் சென்னையில்
கந்த கோட்டத்துள்கந்த கோட்டத்துத்
வளர்திருக்கோவிலில்
தல மோங்குஎழுந்தருளியிருக்கும்
கந்தவேளேமுருகவேளே.
14. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநானூறு கூறுகிறது?
• தமிழர்கள் புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பர்.
• பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
15. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன?
• மக்களுக்கு நல்லது செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண்மொழிக்காஞ்சித் துறை.
16. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
• இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும், இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! வானம் இடிந்து விழவில்லையே! கடல் நீர் வற்றிப் போகவில்லையே!
• இந்த உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ என்று மக்கள் புலம்பினர்.
திருக்குறள்
1. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
• அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர் பல வகையான சிறப்புடையோரை விட மேம்பட்டவர் ஆவார்.
2. ஞாலத்தின் பெரியது எது?
• ஏற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவியின் அளவு சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவை விட மிகப் பெரியது ஆகும்.
3. மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?
• ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது.
• ஆனால் அவர் நமக்கு செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.
4. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
• ஒருவர் தாம் ஈட்டிய செல்வம் குறையாமல் இருக்க வழி என்னவென்றால், பிறருடைய கைப்பொருளை விரும்பாமல் இருத்தலே ஆகும்.
5. சினத்தை ஏன் காக்க வேண்டும்?
• ஒருவர் தன்னைத் தானே காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
• அவ்வாறு அச்சினத்தைக் காக்காவிட்டால் அது தன்னை சேர்ந்தவனையே அழித்து விடும்.
உரைநடை சிறுவினா
1. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
• 1950 களில் கி.பி 3 கி.பி 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சி புரிந்த மன்னர்களைப் பற்றி ஆய்வு நடத்தினார்.
• மகேந்திரவர்மன் நரசிம்மவர்மன் மூன்றாம் நந்திவர்மன் ஆகிய மன்னர்களைக் குறித்தும் எழுதினார்.
• சங்ககால மூவேந்தர்கள், கொங்கு நாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதினார்.
• தமிழகத்தின் இருண்ட காலம் என்று அழைக்கப்பட்ட களப்பிரர் ஆட்சி காலத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.
2. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
• இந்திய சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் சென்னையின் பழமையை இன்றும் பறைசாற்றுகின்றன.
• தமிழ்நாடு ஆவணக் காப்பகம்  •  எழும்பூர் அருங்காட்சியகம்  •  கோட்டை அருங்காட்சியகம்  •  சேப்பாக்கம் அரண்மனை  •  ரிப்பன் கட்டடம்  •  மத்திய தொடர்வண்டி நிலையம்  •  எழும்பூர் தொடர்வண்டி நிலையம்  •  கன்னிமாரா நூலகம்  •  விக்டோரியா அரங்கம்.
3. சென்னை அறிவின் நகரம் என்பதைச் சான்றுடன் விளக்குக.
• 18ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறை கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின.
• 1812 சென்னைக் கோட்டை கல்லூரி  •  1837 கிறித்தவக் கல்லூரி  •  1840 பிரசிடென்சி பள்ளி  •  1857 சென்னைப் பல்கலைக்கழகம்  •  1914 இராணிமேரி கல்லூரி.
• மேலும் பச்சையப்பன் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கவின் கலை கல்லூரி, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி இவை யாவும் சென்னை நகரை அறிவின் நகரமாக பறை சாற்றின.
4. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக.
• சங்ககாலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களுடன் பெற்றோர்களும் உடன் வாழ்வது விரிந்த குடும்பம்.
• செவிலித்தாயும் அவளது மகளாகிய தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர்.
• இல்லற வாழ்வில் இறுதி காலத்தில் மக்களோடு நிறைந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன் என்றனர்.
• இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம், தந்தை வழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது.
5. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
• என் பெற்றோர்கள் வரும் வரை தம்பி தங்கைகளை அன்போடு கவனித்துக் கொள்வேன்.
• வீட்டை சுத்தமாக வைப்பதுடன் என்னுடைய வேலைகளை நானே செய்து கொள்வேன்.
• வீட்டில் உள்ள பாத்திரம் கழுவுதல் துணி துவைத்தல் போன்ற சிறு சிறு வேலைகளை நானே செய்வேன்.
• வீட்டிற்குத் தேவையான பொருள்களை அருகில் உள்ள கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.
6. மணந்தகம் - விளக்குக.
• மணம் புரிந்து கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக் கூடிய தொடக்கக் கட்டமே மணந்தகம்.
• முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலைக் குறிக்கிறது.
• இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று தொல்காப்பியம் கூறுகிறது.
• இதன் மூலம் மணந்தகம் எனும் குடும்ப அமைப்பு முதன்மை பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
7. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
• பண்டைய காலத்தில் பிள்ளைகள் முதலில் மணலில் எழுதி பழகுவார்கள்.
• உபாத்தியாயர் முதலில் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் எழுதுவார்கள்.
• பின்னர் பனை ஓலைகளிலும் தாழை மடல்களிலும் எழுத்தாணியைப் பயன்படுத்தி எழுதினார்கள்.
• இன்று வெள்ளைத்தாளில் எழுதுகோல் கொண்டு எழுதும் முறை உள்ளது.
• கணினியைக் கொண்டு நேரடியாக அதன் திரையில் தட்டச்சு செய்தும் எழுதுகிறார்கள்.
• தற்போது பேசப் பேச திரையில் எழுத்தாக மாறும் வசதி உருவாகியுள்ளது.
8. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
• நான் ஆசிரியரானால் மாணவர்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டவனாய் நடந்து கொள்வேன்.
• மாணவர்களின் தவறுகள் குற்றங்கள் போன்றவற்றை அன்பின் வழியில் புரிய வைப்பேன்.
• கல்வியின் அவசியத்தை உணர்த்தி எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிப்பேன்.
• பாட அறிவோடு நின்று விடாமல் அறக்கருத்துக்களையும் உலக நடப்புகள் பலவற்றையும் எடுத்துக் கூறுவேன்.
9. திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
• காட்சியின் ஆற்றல்: காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது. திரைப்படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனம் தேவையில்லை. திரைப்படத்தில் வசனம் இன்றி காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை சொல்வார்கள்.
• காட்சி மறைவு: ஒரு காட்சியைச் சிறிது சிறிதாக மங்கலாக்கி, இருள் காட்சியாக மாற்றுவர் இதனை காட்சி மறைவு என்பர்.
• காட்சி உதயம்: ஒரு காட்சி மறைந்து அடுத்த காட்சி தொடங்கும் போது இருட்டாக இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாகும் இது காட்சி உதயம்.
• கலவை (அ) கூட்டு: ஒரு காட்சி மறையும் போது அடுத்த காட்சி தெரிய தொடங்குவது கூட்டு எனப்படும்.
• அழிப்பு: பழைய காட்சியை அழித்துக் கொண்டே அடுத்த காட்சி தோன்றுவதை அழிப்பு என்பர்.
10. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
• வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
• சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல்.
• உரிய நேரத்தில் விதைத்தல்.
• நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்.
• அறுவடைக்குப் பின் பாதுகாத்தல்.
• உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால் தான் வேளாண்மை செழிக்கும்.
செய்யுள் சிறுவினா
1. ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
• இடம்: தண்டியலங்காரம்
• பொருள்: இந்த உலகத்தின் இருளைப் போக்குவது சூரியனும் தமிழும் ஆகும்
• விளக்கம்: உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றி மக்களால் போற்றப்பட்டு கடலால் சூழப்பட்ட உலகத்தில் புற இருளை அகற்றுவது கதிரவன். பொதிகை மலையில் தோன்றி சான்றோரால் தொழப்பட்டு மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவது தனக்கு நிகரில்லாத தமிழாகும்.
2. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
• மாலை நேரத்தில் சிவந்த நிறமுடைய சூரியன் மலைக்குப் பின்னால் மறையும்.
• செந்நிறமானது வானமெங்கும் ஒளி வீசும். இது சிவந்த நிறம் உடைய பூக்கள் வானமெங்கும் பரவி கிடப்பது போல காணப்படும்.
3. நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள் இக்கவிதையின் அடி, தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
• “நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்” – நீர்நிலைகளில் உள்ள நீரானது சூரியனின் வெப்ப கதிர்களால் ஆவியாக மாறுவதை இக்கவிதை வரிகள் உணர்த்துகின்றது.
• “தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே” – மூங்கில் இலையின் நுனியில் பனித்துளிகள் இருக்கின்றன. அவை சூரியனின் கதிர்கள் பட்டதும் நீர் ஆவியாக மாற்றம் பெறுகின்றன என்பதைத்தான் உணர்த்துகின்றது. எனவே நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள அடியானது நாட்டுப்புற பாடலின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
4. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
• தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருகியதால் வளைந்த கோலை உடைய ஆயர்கள் எருமை பசு ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேய விட்டனர்.
• தாம் பழகிய நிலத்தை விட்டு பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். நீண்ட இதழ்களை உடைய காந்தள் மலர் மாலை கசங்கியது.
• பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
5. வருபவர் எவராயினும் நன்றி செலுத்து - இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
• இடம்: விருந்தினர் இல்லம்
• பொருள்: இல்லத்திற்கு வருபவர் எவராக இருந்தாலும் நாம் நன்றி செலுத்த வேண்டும்.
• விளக்கம்: ஆனந்தம், மனசோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு போன்றவை எதிர்பாராத விருந்தினராக வருகின்றன. இவற்றை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுவதால் இன் முகத்துடன் வரவேற்க வேண்டும் என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.
6. குகனோடு ஐவராகி வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டி காட்டுக.
• இராமன் குகனிடம், நாங்கள் நால்வர் உடன் பிறந்தவர் என்றிருந்தோம். இப்போது உன்னையும் சேர்த்து ஐவர் ஆகின்றோம்.
• பின்னர் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்.
• உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த வீடணனோடுச் சேர்த்து எழுவரானோம்.
7. கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்பு படுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
• அன்பு, கருணை போன்ற உயர்ந்த குணங்களோடு இவ்வுலகில் வாழ பிறக்கிறோம். ஆனால் இவ்வுலகை விட்டு மறைந்து விடுவது மாறாத உண்மை.
• இந்த உண்மையை மறைக்க பல நிலையற்ற செயல்களைச் செய்து கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறோம்.
• கடல் உள்ள வரை அலைகள் இருக்கும். உடலில் உயிர் உள்ளவரை வாழ்வில் இன்ப துன்பங்கள் வரும். ஆகவே வாழ்ந்து தான் ஆக வேண்டும்.
8. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
• ஒருமுக எழினி: மேடையில் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது.
• பொருமுக எழினி: மேடையில் இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது.
• கரந்துவரல் எழினி: மேடையில் மேலிருந்து கீழே இறங்கும் வகையில் அமைக்கப்படுவது.
9. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமென கேட்கிறார்?
• ஒருமைப்பட்ட மனதுடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.
• உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு வேண்டாம் என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டுகிறார்.
10. மாளாத காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
• நோயாளன் போல் உவமை : மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணை கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என்பதனை உணர்ந்த நோயாளி அவரை நேசிப்பார்.
• அது போன்று வித்துவக்கோட்டில் இருக்கும் அன்னையே நீ உனது விளையாட்டால் துன்பங்களைத் தந்தாலும் நாம் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்வேன் என்கிறார் குலசேகராழ்வார்.
11. பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
• இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளை உடைய பெரிய ஊர் திருமயிலை. அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நடைபெறும்.
• மயிலை கபாலீச்சரம் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு பூசையிடும் பங்குனி உத்திரமானது இசை ஒலிகள் நிறைந்த ஆரவார விழாவாக கொண்டாடப்படும்.
12. ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மீன் இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
• இடம் : இரட்சணிய யாத்திரிகம்
• பொருள் : எவ்வித உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.
• விளக்கம் : இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அவர்களுக்காக இறைமகன் இரக்கப்படுகிறார். அன்பு என்ற கட்டில் இருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போன்று அமைதியுடன் நின்றார்.
13. உண்டால் அம்ம....... எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பொதுவியல் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
• திணை விளக்கம்: வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும், அத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
• சான்று: “தமக்கென முயலா நோன்தாள் / பிறர்க்கென முயலுநர் உண்மை யான”
• சான்று விளக்கம்: தமக்காக உழைக்காமல் பிறருக்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால் தான் இவ்வுலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
• திணைப் பொருத்தம்: தமக்காக உழைக்காமல் பிறருக்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால் தான் இவ்வுலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளுள் பொதுவான செய்தியைக் கூறியிருப்பதால் இது பொதுவியல் திணையாகும்.
நெடுவினா
1. மயிலை சீனி வேங்கடசாமி ஓர் ஆராய்ச்சி பேரறிஞர் என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.
• தொடக்க கால ஆய்வுகள்: 1934 இல் ச. த. சற்குணர் உரையைக் கேட்டு, கிறிஸ்தவமும் தமிழும் என்னும் நூலை மயிலை சீனி வேங்கடசாமி எழுதினார். பின்னர் பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் ஆகிய நூல்களை எழுதினார்.
• கலையியல் ஆய்வுகள்: தமிழரது கலைத்திறனை எடுத்துரைக்கும் தமிழர் வளர்த்த அழகு கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல். இந்நூல் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது.
• பன்மொழிப்புலமை: மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சி உடையவர். மகேந்திரவர்மனின் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் செய்தார்.
• ஆராய்ச்சிப் பேரறிஞர்: 1962 தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது வழங்கியது. அறிஞர்கள் கூடி மணி விழா எடுத்து ஆராய்ச்சிப்பேரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கினர்.
2. நீங்கள் வியந்து பார்த்த நகரம் குறித்து இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
• சென்னையின் தொன்மை : குடியம், அத்திரம்பாக்கம் பகுதிகளில் அகழாய்வு செய்து மனித நாகரீகம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்றனர். திருவெற்றியூர், மயிலாப்பூர் கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலங்கள். சென்னை நகராட்சி 1688 இல் உருவாக்கப்பட்டது.
• இந்தோ சாரசனிக் கட்டடக்கலை : முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்திய பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது. இப்பாணியில் 1768 ல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே.
• பண்பாட்டு அடையாளம் : தமிழ்நாடு ஆவணக் காப்பகம், கோட்டை அருங்காட்சியகம், எழும்பூர் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், மத்திய தொடர்வண்டி நிலையம், ரிப்பன் கட்டடம்.
• அறிவின் நகரம் : 1812 கல்லூரி, 1837 கிறிஸ்தவக் கல்லூரி, 1840 பிரசிடென்சி பள்ளி, 1857 சென்னைப் பல்கலைக்கழகம், 1914 இராணி மேரி கல்லூரி.
• நம்பிக்கை நகரம் : சென்னை நகரம் மட்டுமல்ல அது நம்பிக்கையின் மையம். கணினி, வாகன உற்பத்தி, மென்பொருள், மின்னணு பொருள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.
3. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு விளக்குக.
• குடும்பம் : குடும்பம் என்னும் சொல் முதன் முதலில் திருக்குறளில் தான் பயின்று வருகிறது. குடும்பம் கூடி வாழ்தல்.
• வாழிடம் : சங்க இலக்கியத்தில் இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், கூரை, நகர், மாடம் முதலியவை வாழ்விடங்களில் உள்ள வேறுபாட்டினைச் சுட்டுகிறது. புக்கில் : தற்காலிகத் தங்குமிடம். தன்மனை : திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம்.
• மணந்தகம் : மணம் புரிந்து கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க கட்டமே மணந்தகம் எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலைக் குறிக்கிறது. இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது.
• விரிந்த குடும்பம் : சங்ககாலத்தில் தனி குடும்பம் விரிவு பெற்று பெற்றோர்களும் உடன் வாழ்வது விரிந்த குடும்பம். சங்க கால குடும்ப அமைப்பில் செவிலி, தோழி முதன்மை பங்கு பெற்றனர். இல்லற வாழ்வின் இறுதி காலத்தில் மக்களோடு நிறைந்து தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன் என்று எண்ணினார்கள்.
• தாய் வழிக்குடும்பம் : சங்ககாலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்களுக்கு குடும்பத்தின் சொத்தும் வளங்களும் சென்று சேர்ந்தன. தாய் வழியாகவே குலத் தொடர்ச்சியைக் குறிக்கும் உரிமை.
4. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
• மொழிப்பற்று : தமிழ் தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்ள வேண்டும். புதிய செய்தி புதிய யோசனை புதிய உண்மை புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்.
• சமூகப்பற்று : தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் தோன்ற வேண்டும். அங்கு நவீன கலைகள் பயிற்றுவிக்க வேண்டும். நம்மிலும் எளியவருக்கு இரங்கி அவர்களை நமக்கு நிகரானவராக மாற்ற வேண்டும். ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரண்டு தலைகள். பெண்ணை அடைத்து வைப்பவர் தன் கண்களை மூடி கொள்வதற்குச் சமம். பெண்ணைத் தாழ்த்துபவர்கள் தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டதற்குச் சமம். நாட்டில் வியாபாரம் தொழில் பெருக வேண்டும். தமிழ்நாட்டில் நோய்கள் தீர வேண்டும்.
5. பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரை தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
• முன்னுரை : உத்தமசோழன் எழுதிய முதல் கல் என்னும் கதையில் மருதனின் பண்பு நலத்தைக் காண்போம்.
• மூழ்கும் பயிரும் மருதனின் கவலையும் : நான்கு நாள் அடைமழையில் இளம் பயிர்கள் நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்தன.
• பொறுப்புணர்வும் அக்கறையும் : மருதன் கவலையுடன் கரை வழியே நடந்தான். வடிகால் மதகைக் கண்டான். காட்டாமணக்குச் செடிகள் மண்டிக் கிடந்தன. இச்செடிகளைப் பிடுங்கி எறிந்தால் ஒரே நாளில் உபரி நீர் வடிந்து விடும் என்பதை உணர்ந்தான் மருதன்.
• மருதனின் நம்பிக்கை : ஊர் மக்களை ஒன்று திரட்டி பயிர்களைக் காப்பாற்ற முடிவு செய்தான் மருதன். அனைவரும் மறுத்து விட்டனர்.
• விடாமுயற்சியுடன் செயல்படல் : தனி ஒருவனாக நின்று செடிகளை வெட்டி எறிந்தான். மனைவி அல்லி, மாரிமுத்து, காளியப்பன், பிரேம்குமார் ஆகியோரும் இணைந்து செயல்பட்டனர்.
• முடிவுரை : மருதனின் விடாமுயற்சியால் பயிரும் ஊரும் காப்பாற்றப்பட்டது. மருதனின் விடாமுயற்சி தன்னம்பிக்கை பொறுப்புணர்வு போன்ற பண்பு நலன்கள் இச்சிறுகதை வாயிலாக அறியலாம்.
6. உரிமை தாகம் கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையை புலப்படுத்துக.
• முன்னுரை : உரிமை தாகம் என்னும் இக்கதையில் அண்ணன் தம்பி சொத்து பிரச்சனை மூக்கம்மாளின் அன்பு அண்ணன் தம்பிக்காக செய்த செயல் மூலம் நமக்கு உறவின் மேன்மையை உணர செய்கிறார் ஆசிரியர் பூமணி.
• தம்பி வெள்ளைச்சாமி கடன் வாங்குதல் : வெள்ளைச்சாமி தனது திருமணத்திற்குப் பின் அண்ணனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தான். நிலத்தின் மீது 200 ரூபாய் பங்காரு சாமியிடம் கடன் வாங்கினான். அண்ணன் முத்தையனுக்கு இது தெரியாது.
• மூக்கம்மாவின் செயல் : தன் காதில் கிடந்த கம்மலை கழற்றிக் கொடுத்து நிலத்தை மீட்கச் சொல்கிறாள்.
• முத்தையாவின் அன்பு உள்ளம் : முத்தையன் ரூபாய் 200 எடுத்துக் கொண்டு பங்காரு சாமியிடம் செல்கிறான். தம்பி கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கிறான். பங்காரு சாமி 400 ரூபாய் தந்தால்தான் பத்திரத்தைத் தருவதாக கூறுகிறார். கோபத்தில் திரும்புகிறான் முத்தையன்.
• அண்ணனும் தம்பியும் இணைதல் : அண்ணனும் தம்பியும் வயலை உழுதனர். அப்போது பங்காரு சாமி வந்து மிரட்டுகிறார். அண்ணனும் தம்பியும் இணைந்து அவரை விரட்டுகின்றனர்.
• முடிவுரை : அண்ணன் முத்தையன் அவன் மனைவி மூக்கம்மாவின் செயல்கள் மூலம் உறவின் மேன்மையை உணரச் செய்துள்ளனர்.
7. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
• செந்தமிழே துணை : மாலை நேரத்தில் சிவந்த நிறமுடைய சூரியன் மலைகளுக்குப் பின்னால் மறையும். சூரியனின் செந்நிறமானது வானம் எங்கும் ஒளி வீசும். இக்காட்சியானது சிவந்த நிறமுடைய பூக்கள் வானம் எங்கும் பரவி கிடப்பது போல காணப்படும். உடல் வருந்த உழைக்கும் தொழிலாளர்களின் கைகள் வானைப் போல சிவந்திருக்கும். அவர்களின் தோள் மீது முத்து முத்தாய் வியர்வை துளிகள் காணப்படும். இவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்.
• பொதிகைத் தென்தமிழ் : கவிதை பசிக்கு உணவாய் இருப்பது முத்தமிழ். பாரி முதலான வள்ளல்களைத் தந்ததும் தமிழே. மீண்டும் அந்த பழமை உருவாக குயிலினைப் போல் கூவி வா. சிங்கம் போல வா. தென் தமிழே சீறி வா.
8. பண்பின் படிமமாக படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நின்று நிறுவுக.
• குகன் : வேடுவர் தலைவன் குகன். கங்கையைக் கடக்க உதவுகிறான். இராமன், குகனை உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான்.
• சடாயு : கழுகு அரசன் சடாயு. இறந்த சடாயுவை தந்தையாகக் கருதி இறுதி சடங்குகளைச் செய்தான் இராமன்.
• சவரி : இராமனிடம் மிகுதியான அன்பும் பக்தியும் கொண்டவள் சவரி. இராமன் சவரிடம் இவ்வளவு காலம் நீ துன்பம் இன்றி நலமுடன் இருந்தாய் அல்லவா? என்று கேட்டான்.
• சுக்ரீவன் : வானரத் தலைவன் சுக்ரீவன். சுக்ரீவனிடம் உன் பகைவர் என் பகைவர் உன் நண்பர்கள் என் நண்பர்கள் என்று கூறி ஆறாம் சகோதரனாக ஏற்றான் இராமன்.
• வீடணன் : வீடணனுக்கு இலங்கை அரசை உரிமையாக்கினான் இராமன். ஏழாம் சகோதரனாக ஏற்றுக் கொண்டான் இராமன்.
9. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
• மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
• தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருகியதால் வளைந்த கோலையுடைய ஆயர்கள் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேய விட்டனர்.
• தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மலர் மாலை கசங்கியது.
• பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
• விலங்குகள் குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.
• மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.
10. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.
• வையகமும் வானகமும் ஈடாகாது: தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் கைமாறாக கொடுத்தாலும் ஈடாகாது.
• உலகை விடப் பெரியது: உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும் அது உலகை விடப் பெரியது.
• கடலை விடப் பெரியது: இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விடப் பெரியது.
• பனையளவாகப் போற்றுவர்: ஒருவர் தினை அளவு உதவி செய்தாலும் அதன் பயன் தெரிந்தவர்கள் பனை அளவாகப் போற்றுவர்.
• நன்றியை மறக்கக்கூடாது: ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறக்கக்கூடாது. அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுவது நல்லது.
• உய்வுண்டு - உய்வில்லை: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வாய்ப்பிருக்கும். ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்து விட்டவருக்கு உய்வே இல்லை.
11. சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
• தன் சினம் செல்லுபடியாகும் மெலியவரிடத்தில் சினம் கொள்ளாமல் காப்பவரே உண்மையில் சினம் காப்பவர். செல்லுபடி ஆகாத வலியவரிடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
• தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும்.
• முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.
• ஒருவர் தன்னைத் தானே காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அச்சினத்தைக் காக்காவிட்டால், அது நம்மையே அழித்து விடும்.
• சினம், தன்னைச் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு போன்றது. அது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
12. அறிவுடைமை வாழ்வில் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
• கருவி: அறிவு என்பது அதை உடையவருக்கு அழிவு வராமல் காக்கும் கருவி. பகைவராலும் அழிக்க முடியாத பாதுகாப்பு மிகுந்த அரணும் அதுவே ஆகும்.
• அறிவு: மனத்தை அதன் போக்கில் செல்ல விடாமல் தீமையிலிருந்து அதைத் தடுத்து நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
• மெய்ப்பொருள்: எத்தகைய பொருளாக இருந்தாலும் அவற்றை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மையான பொருளைக் காண்பதே அறிவாகும். உலகம் செல்லுகின்ற உயர்ந்த நெறியில் தானும் இணைந்து செல்வதே அறிவு.
• துன்பம் இல்லை: பின்னால் வரப்போகும் துன்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

12th Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url