12th Tamil Public Exam - Model Question Paper 1 | Blueprint & Previous Year Sets

Step into your final board exams with confidence using this 12th Tamil Public Exam - Model Question Paper, blueprint & previous year sets guide. Built around the official exam structure, these full-portion papers help you practice time allocation and tackle high-weightage questions effectively.


12th Tamil Public Exam - Model Question Paper | Blueprint & Previous Year Sets
12th Tamil பன்னிரண்டாம் வகுப்பு - பொதுத்தமிழ்

பொதுத்தேர்வு - 2026 • மாதிரி வினாத்தாள் - 1

காலம் : 3 மணி நேரம் மதிப்பெண்கள் : 90
பகுதி - I • அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: 14 × 1 = 14
1. ச. த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
அ) பௌத்தமும் தமிழும்      ஆ) இசுலாமும் தமிழும்      இ) சமணமும் தமிழும்      ஈ) கிறித்தவமும் தமிழும்
2. தமிழில் திணைப்பாகுபாடு _______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு      ஆ) சொற்குறிப்பு      இ) தொடர்க்குறிப்பு      ஈ) எழுத்துக்குறிப்பு
3. “நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது” என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
அ) சூரிய ஒளிக்கதிர்      ஆ) மழை மேகங்கள்      இ) மழைத்துளிகள்      ஈ) நீர் நிலைகள்
4. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி      ஆ) பயன்தூக்கார் செய்த உதவி      இ) தினைத்துணை நன்றி      ஈ) காலத்தினால் செய்த நன்றி
5. குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்
அ) தொல்காப்பியம்      ஆ) திருக்குறள்      இ) குறுந்தொகை      ஈ) புறநானூறு
6. கல்வியை நிலைக்களன்களாகக் கொண்ட மெய்ப்பாடு
அ) பெருமிதம்      ஆ) உவகை      இ) நகை      ஈ) மருட்கை
7. கண்ணாடியாகும் கண்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
அ) நகுலன்      ஆ) பிரமிள்      இ) சிற்பி      ஈ) அய்யப்ப மாதவன்
8. திண்ணியர் என்பதன் பொருள்
அ) அறிவுடையவர்      ஆ) மன உறுதியுடையவர்      இ) தீக்காய்வார்      ஈ) அறிவினார்
9. “வாளால் அறுத்துச் சுடினும்...” - இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது
அ) போர்      ஆ) மருத்துவம்      இ) விளையாட்டு      ஈ) வேளாண்மை
10. புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர்
அ) உ. வே. சாமிநாதர்      ஆ) மாயூரம் வேதநாயகர்      இ) மா. இராசமாணிக்கனார்      ஈ) சி. வை. தாமோதரனார்
11. 'சாபவிமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
அ) கு. அழகிரிசாமி      ஆ) புதுமைப்பித்தன்      இ) ஜெயமோகன்      ஈ) எஸ். ராமகிருஷ்ணன்
12. பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.      ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.      ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
13. உத்தம சோழன் நடத்தி வரும் திங்களிதழ்
அ) வெளிச்சம்      ஆ) அஞ்ஞாடி      இ) கிழக்கு வாசல் உதயம்      ஈ) நிறை
14. 14 நரம்புகளைக் கொண்ட யாழ்
அ) பேரியாழ்      ஆ) மகரயாழ்      இ) சகோடயாழ்      ஈ) செங்கோட்டியாழ்
பகுதி - II
பிரிவு - 1 • எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: 3 × 2 = 6
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
17. வறுமையும் சிறுமையும் தருவது எது?
18. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
பிரிவு - 2 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக: 2 × 2 = 4
19. பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
20. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
21. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை - குறிப்பு வரைக.
பிரிவு - 3 • எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக: 7 × 2 = 14
22. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக:
அ) புதுப்பெயல்    (அல்லது)    ஆ) ஒருமையுடன்
23. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக:
அ) களைந்து    (அல்லது)    ஆ) விம்முகின்ற
24. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) அலை, அளை, அழை    (அல்லது)    ஆ) தலை, தளை, தழை
25. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
26. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக:
அ) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
ஆ) முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
27. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக:
அ) வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
28. மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக:
அ) ஆற அமர      ஆ) ஆணி அடித்தாற் போல
29. கலைச் சொல் தருக:
அ) SOUND EFFECT      ஆ) HABITAT
30. இலக்கணக் குறிப்பு வரைக:
அ) உயர்ந்தோர்      ஆ) ஒரீஇ
பகுதி - III
பிரிவு - 1 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக: 2 × 4 = 8
31. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
32. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
33. அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?
34. “வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு - 2 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக: 2 × 4 = 8
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
37. மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
38. சென்னை 'அறிவின் நகரம்' என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
பிரிவு - 3 • எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக: 3 × 4 = 12
39. அ) “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
(அல்லது)
ஆ) தொழில் உவமையணியைச் சான்றுடன் விளக்குக.
40. இலக்கிய நயம் பாராட்டுக. (மையக்கருத்துடன் ஏற்புடைய நயங்கள் மூன்றை எழுதுக.)
முச்சங்கக் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
41. அ) வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக   (அல்லது)   ஆ) கூதிர்ப்பாசறை சான்றுடன் விளக்குக.
42. தமிழாக்கம் தருக:
அ) LEARNING IS A TREASURE THAT WILL FOLLOW IT'S OWNER EVERYWHERE.
ஆ) A NEW LANGUAGE IS A NEW LIFE.
இ) IF YOU WANT PEOPLE TO UNDERSTAND YOU, SPEAK THEIR LANGUAGE.
ஈ) OLD IS GOLD.
43. பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக:
அ) ஆனைக்கும் அடி சறுக்கும்    (அல்லது)    ஆ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா:
கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே. - மொழி வரலாறு (மு. வரதராசனார்)
பகுதி - IV • அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: 3 × 6 = 18
44. அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதிவழி நிறுவுக.
(அல்லது)
ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
45. அ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
ஆ) மயிலை சீனி. வேங்கடசாமி 'ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதனைச் சான்றுகளுடன் விளக்குக.
46. அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
(அல்லது)
ஆ) நடிகர் திலகத்தைக் கண்ட பாலசந்திரனின் நினைவலைகளை நயத்துடன் தொகுத்தெழுதுக.
பகுதி - V • அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக: 4 + 2 = 6
47. அ) ஒருமையுடன் நினது... எனத் தொடங்கும் தெய்வமணிமாலைப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
ஆ) ...பவர் என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.

12th Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url