Put your final revision to the test with this 12th Tamil Public Exam - Model Question Paper 2 full portion mock & solved PDF resource. Crafted to reflect the latest board exam difficulty level, this practice paper helps you refine your presentation skills and maximize your final score.
பகுதி - I • அனைத்து வினாக்களுக்கும் விடை தருக:
14 × 1 = 14
1. 'கிறித்தவக் கம்பர்' என்று அழைக்கப்பட்டவர்
அ) கால்டுவெல் ஆ) ஜி யு போப் இ) வேதநாயகர் ஈ) எச் ஏ கிருட்டினனார்
2. 'சாபவிமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களை பயன்படுத்தியவர்
அ) கு அழகிரிசாமி ஆ) புதுமைப்பித்தன் இ) ஜெயமோகன் ஈ) எஸ் ராமகிருஷ்ணன்
3. மாசி திங்களில் நிகழும் விழாவாக மயிலை பதிகம் சுட்டுவது
அ) விளக்குத்திருவிழா ஆ) ஓணவிழா இ) கடலாட்டுவிழா ஈ) திருவாதிரை விழா
4. ஒட்டுப் போடாத ஆகாயம் போல - இந்த உலகமும் ஒன்றேதான்... இக்கவிதையில் பயின்றுவருவது
அ) உவமை ஆ) உருவகம் இ) உள்ளுறை ஈ) இறைச்சி
5. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச்சாறு இ) கடுக்காய் ஈ) மாவிலை கரி
6. ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர் ஆ) சொல்லியபடி செய்பவர் இ) தூதுவர் ஈ) உறவினர்
7. நகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று
அ) கொடை ஆ) பிணி இ) பேதைமை ஈ) செல்வம்
8. 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்' என்று குறிப்பிட்டவர் யார்?
அ) பாரதிதாசன் ஆ) கவிமணி இ) பாரதியார் ஈ) ஔவையார்
9. நகுலன் அவர்களின் இயற்பெயர்
அ) செல்வராஜ் ஆ) பானுசந்திரன் இ) டி.கே.துரைசாமி ஈ) துரைக்கண்ணு
10. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
அ) தனிக்குடும்ப முறை ஆ) விரிந்த குடும்பமுறை இ) தாய் வழிச் சமூக முறை ஈ) தந்தைவழிச்சமூகமுறை
11. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர்
அ) கம்பராமாயணம் ஆ) இராமவரலாறு இ) இராமாயணம் ஈ) இராமாவதாரம்
12. பொருத்துக.
அ) அன்பும் அறனும் - 1) பண்புத்தொகை
ஆ) நன்கலம் - 2) ஆகுபெயர்
இ) மறத்தல் - 3) எண்ணும்மை
ஈ) உலகு - 4) தொழிற்பெயர்
அ) 2, 1, 4, 3 ஆ) 3, 1, 4, 2 இ) 4, 2, 3, 1 ஈ) 1, 4, 2, 3
13. கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று தவறு, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்று சரி, காரணம் சரி
14. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வு கட்டுரைகளின் தொகுப்பு
அ) மத்த விலாசம் ஆ) தமிழ்நாட்டு வரலாறு இ) அஞ்சிறைத்தும்பி ஈ) திசையெட்டும்
பகுதி - II
பிரிவு - 1 • எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக:
3 × 2 = 6
15. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை?
16. சினத்தை ஏன் காக்க வேண்டும்?
17. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
18. கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக.
பிரிவு - 2 • எவையேனும் இரண்டனுக்கு விடை தருக:
2 × 2 = 4
19. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் நூல் பற்றி குறிப்பு வரைக?
20. புக்கில் தன்மனை - குறிப்பு வரைக.
21. பருவத்தே பயிர்செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
பிரிவு - 3 • எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக:
7 × 2 = 14
22. பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
இளங்கோவடிகள் சாத்தனாரிடம் முன் செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்
23. கீழ்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லை தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.
அ) நேற்று முதல் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. (அணை)
ஆ) முருகன் வேகம் சென்றும் பேருந்தை பிடிக்க இயலவில்லை. (வேகம்)
24. பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க.
அ) கான் காண் (அல்லது) ஆ) ஊண் ஊன்
25. எண் வகை மெய்ப்பாடுகள் யாவை?
26. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
அ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
ஆ) ஐப்பசி அடமழையில் ஊருனி நிறைந்தது.
27. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக
அ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
ஆ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
28. கலைச்சொல் தருக.
அ) EMOTION ஆ) ANTHROPOLOGY
29. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக.
அ) பெருந்தேர் (அல்லது) ஆ) உள்ளொன்று
30. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக.
அ) கலங்கி (அல்லது) ஆ) பொலிந்தான்
பகுதி - III
பிரிவு - 1 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக:
2 × 4 = 8
31. புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
32. “ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
33. ஒருமுக எழினி பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
34. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
பிரிவு - 2 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக:
2 × 4 = 8
35. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் - எழுதுக.
36. திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
37. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
38. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொகுத்துரைக்க.
பிரிவு - 3 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக:
2 × 4 = 8
39. அ) “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.” - குறளில் வரும் அணியை விளக்குக.
(அல்லது)
ஆ) உவமை அணியை விளக்கு.
40. அ) பொதுவியல் திணையை விளக்குக.
(அல்லது)
ஆ) பொருண்மொழிக் காஞ்சித் துறையை விளக்குக.
41. கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.
| சங்க இலக்கியங்கள் |
| எட்டுத்தொகை |
பத்துப்பாட்டு |
| அகம் |
புறம் |
அகம் |
புறம் |
| நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை |
புறநானூறு, பதிற்றுப்பத்து (அகமும் புறமும்: பரிபாடல்) |
குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை |
மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை |
42. மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் ஒன்றினை எழுதுக.
43. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக:
அ) எறும்பு ஊரக் கல்லும் தேயும். (அல்லது) ஆ) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
குறிப்பு : செவி மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று வினா.
சொற்றொடர்ப் பிழைகளை நீக்கி எழுதுக.
அ) கோவலன் மதுரைக்குச் சென்றது.
ஆ) பறவைகள் நெல்மணிகளை வேகமா கொத்தி தின்றது.
இ) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது.
ஈ) அவன் வெண்மதியிடம் பேசினாய்.
பகுதி - IV • அனைத்து வினாக்களுக்கும் விடை தருக:
3 × 6 = 18
44. அ) “சினத்தைக் காத்தல்” வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
(அல்லது)
ஆ) நாட்டிய அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின் வழி விளக்கி எழுதுக.
45. அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.
(அல்லது)
ஆ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரை காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா உங்கள் கருத்தை கட்டுரையாக்குக.
46. அ) சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துக்களைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
(அல்லது)
ஆ) கோடை மழை கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேய பண்புகளை விளக்குக.
பகுதி - V • அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக:
4 + 2 = 6
47. அ) 'குழல்வழி...' எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
ஆ) '...சினம்' என முடியும் குறளை எழுதுக.