Evaluate your mid-term preparation with this 12th Tamil - Half Portion Test - Question Paper 2 revision mock & solutions resource. Focused on key units from the first half of the syllabus, this practice paper helps you spot weak areas and build confidence before the final board exams.
பகுதி - I • அனைத்து வினாக்களுக்கும் விடையளி:
14 × 1 = 14
1. 'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை:
அ) இலக்கியம் ஆ) கணிதம் இ) புவியியல் ஈ) வேளாண்மை
2. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க:
அ) வசம்பு ஆ) கடுக்காய் இ) மாவிலைக்கரி ஈ) மணத்தக்காளி
3. ஆராய்ந்து சொல்கிறவர்:
அ) அரசர் ஆ) சொல்லியபடி செய்பவர் இ) தூதுவர் ஈ) உறவினர்
4. 'நகை' என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று _______:
அ) கொடை ஆ) பிணி இ) பேதைமை ஈ) செல்வம்
5. பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்க:
அ) கர்ணன் தோற்றான் போ ஆ) போறான் தருமன்
இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு ஈ) வயதில் சிறியவர், ஆனாலும் தலைவர்
6. 'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) கால்டுவெல் ஆ) போப் இ) வேதநாயகர் ஈ) எச்.ஏ. கிருட்டினனார்
7. சோழநாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்த செய்தியைக் கூறும் நூல் எது?
அ) பதிற்றுப்பத்து ஆ) பட்டினப்பாலை இ) நன்னூல் ஈ) நெடுநல்வாடை
8. பொருத்துக:
அ) அறம் - 1) கர்ணன்
ஆ) வலிமை - 2) மனு நீதிச்சோழன்
இ) நீதி - 3) பீமன்
ஈ) வள்ளல் - 4) தருமன்
அ) 2, 3, 1, 4 ஆ) 2, 1, 4, 3 இ) 2, 4, 3, 1 ஈ) 4, 3, 2, 1
9. மார்கழித் திங்களில் நிகழும் விழாவாக மயிலாப்பூர் பதிகத்தில் சுட்டப்படுவது:
அ) விளக்குத் திருவிழா ஆ) ஓண விழா இ) கடலாட்டு விழா ஈ) திருவாதிரை விழா
10. விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்தவை:
அ) சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆ) நன்னூல், தொல்காப்பியம்
இ) சிலப்பதிகாரம், மணிமேகலை ஈ) அகநானூறு, புறநானூறு
11. 'ஞானசாகரம்' என்ற இதழை நடத்தி வந்தவர்:
அ) பரிதிமாற் கலைஞர் ஆ) மறைமலையடிகள் இ) காந்தி ஈ) பாரதியார்
12. "உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே" - என்றவர்:
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) கவிமணி ஈ) நாமக்கல்லார்
13. 'அன்பினால் இணைதல்' என்ற நிலைக்களனில் தோன்றும் மெய்ப்பாடு _______:
அ) பெருமிதம் ஆ) நகை இ) உவகை ஈ) இளிவரல்
14. 18 வயது முழுமை பெறாதவர் வாகனத்தை இயக்கினால் அவரின் பெற்றோர்க்கு விதிக்கப்படும் தண்டத்தொகை:
அ) ரூபாய் 5000 ஆ) ரூபாய் 50,000 இ) ரூபாய் 25,000 ஈ) ரூபாய் 2500
பகுதி - II
பிரிவு - 1 • எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி:
3 × 2 = 6
15. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
16. கலிவிழா - ஒலி விழா விளக்கம் தருக.
17. வறுமையும் சிறுமையும் தருவது எது?
18. யாழின் வகைகள் யாவை?
பிரிவு - 2 • எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி:
2 × 2 = 4
19. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
20. பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
21. பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
பிரிவு - 3 • எவையேனும் ஏழனுக்கு மட்டும் விடையளி:
7 × 2 = 14
22. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக:
அ) ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.
ஆ) நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
23. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க:
அ) பலகை (அல்லது) ஆ) தலைமை
24. பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க:
அ) களம், கலம் (அல்லது) ஆ) புல், புள்
25. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக:
அ) ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போகச் சொல்லு.
ஆ) இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு, நீயும் புரிஞ்சுக்கோ.
26. கலைச்சொல் தருக:
அ) Sound Effect ஆ) Customs Officer
27. மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக:
அ) ஆற அமர ஆ) ஆணி அடித்தார் போல
28. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக:
அ) புகழெனின் (அல்லது) ஆ) உள்ளொன்று
29. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக:
அ) நினைக்கின்ற (அல்லது) ஆ) களைந்து
பகுதி - III
பிரிவு - 1 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி:
2 × 4 = 8
30. ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின் - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
31. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
32. அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் அறிவன யாவை?
33. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
பிரிவு - 2 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி:
2 × 4 = 8
34. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
35. திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
36. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
37. பொருண்மொழிக் காஞ்சித்துறையை விளக்குக.
பிரிவு - 3 • எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி:
3 × 4 = 12
38. இலக்கிய நயம் பாராட்டுக (பாடலின் மையக்கருத்தை எழுதி ஏற்புடைய நயங்கள் மூன்றினை எழுதுக):
பிறப்பினால் எவர்க்கும்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் நல்ல
செய்கை வேண்டுமப்பா !
நன்மை செய்பவரே உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தீமை செய்பவரே - அண்டித்
தீண்ட ஒண்ணாதார்!
- கவிமணி தேசிக விநாயகம்
39. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகழ்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
(அல்லது)
சொற்பொருள் பின்வருநிலை அணி விளக்குக.
40. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக:
அ) முருகன் சோறு சாப்பிட்டு பால் குடித்தான்.
ஆ) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
இ) கோவலன் மதுரைக்கு சென்றது.
ஈ) அவன் வெண்மதியிடம் பேசினாய்.
41. கருத்துப்படத்தைப் புரிந்து கொண்டு பத்தியாக எழுதுக:
| சங்க இலக்கியங்கள் – எட்டுத்தொகை |
| அகம் |
புறம் |
அகமும் புறமும் |
| நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை |
புறநானூறு, பதிற்றுப்பத்து |
பரிபாடல் |
| சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு |
| அகம் |
புறம் |
| குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை |
மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை |
பகுதி - IV • அனைத்து வினாக்களுக்கும் விடையளி:
3 × 6 = 18
42. அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
(அல்லது)
எச்.ஏ. கிருட்டினனார் 'கிறித்துவக் கம்பரே' என்பதை நம் பாடப்பகுதி வழி நிறுவுக.
43. நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
44. "சூரியனைப் பிரசவிக்கும் பாறை" எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
'கோடைமழை' கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.
பகுதி - V • அடிபிறழாமல் எழுதுக:
4 + 2 = 6
45. அ) 'ஒருமையுடன்' - எனத் தொடங்கும் பாடலை எழுதுக.
ஆ) 'தொடர்பு' - என முடியும் குறள்.