Give your final revision an edge with this 12th Tamil Public Exam - Model Question Paper 3 expected questions & scoring key resource. Designed to simulate real exam conditions, this paper helps you master tricky sections and walk into the exam hall fully prepared.
பகுதி - I • அனைத்து வினாக்களுக்கும் விடை தருக:
14 × 1 = 14
1. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேரிலாத தமிழ்” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களை தேர்க
அ) அடிமோனை, அடி எதுகை ஆ) சீர்மோனை, சீர் எதுகை இ) அடி எதுகை, சீர் மோனை ஈ) சீர் எதுகை, அடிமோனை
2. பொருத்தி விடை தருக.
அ) அவன், அவள், அவர் - 1) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - 2) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் - 3) தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம் - 4) பதிலிப் பெயர்கள்
அ) 4, 1, 2, 3 ஆ) 2, 3, 4, 1 இ) 3, 4, 1, 2 ஈ) 4, 3, 1, 2
3. பின்வருவனவற்றுள் தொன்மத்திற்கு பொருந்தாத ஒன்றை தேர்க
அ) கர்ணன் தோற்றான் போ ஆ) வயதில் சிறியவர், ஆனாலும் தலைவர்!
இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு. ஈ) இந்தா போறான் தருமன்
4. 'திராவிட வித்தியா பூஷணம்' என்னும் பட்டம் பெற்றவர் யார்?
அ) திரு.வி.க ஆ) பாரதியார் இ) உ.வே.சா ஈ) சீனி. வேங்கடசாமி
5. “வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும்” - இந்நூற்பா இடம்பெற்ற நூல்
அ) தொல்காப்பியம் ஆ) காரிகை இ) நன்னூல் ஈ) தண்டியலங்காரம்
6. சவரி பிறப்பு நீங்கு படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அ) அயோத்தியா காண்டம் ஆ) ஆரணிய காண்டம் இ) கிட்கிந்தா காண்டம் ஈ) பால காண்டம்
7. தமிழ்ச் சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருபவர்
அ) பாரதியார் ஆ) பக்தவச்சல பாரதி இ) பாரதிதாசன் ஈ) விவேக பாரதி
8. திருக்குறள் _______ நூல்களுள் ஒன்று
அ) பத்துப்பாட்டு ஆ) எட்டுத்தொகை இ) பதினெண் கீழ்க்கணக்கு ஈ) பதினெண் மேற்கணக்கு
9. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் - காரணம்
அ) நேரடி மறைமுக வேலை வாய்ப்புகளின் களம்.
ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு.
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை.
ஈ) அ, ஆ, இ அனைத்தும்.
10. “தமிழ்வழிக் கல்வி இயக்கம்” - என்னும் அமைப்பை நிறுவியவர்.
அ) பரிதிமாற் கலைஞர் ஆ) மறைமலை அடிகள் இ) வ. சுப. மாணிக்கம் ஈ) மாயூரம் வேதநாயகர்
11. சோழநாட்டில் இறக்குமதி பொருள்களுக்கு சுங்கம் வசூலித்த செய்தியை கூறும் நூல் எது?
அ) பதிற்றுப்பத்து ஆ) பட்டினப்பாலை இ) மலைபடுகடாம் ஈ) நெடுநல்வாடை
12. “என்னைப்போல் சிவாஜி நடிப்பார். ஆனால், என்னால் தான் சிவாஜி போல் நடிக்க முடியாது” என்று கூறியவர் யார்?
அ) எம். ஜி. ஆர் ஆ) சார்லி சாப்ளின் இ) மார்லன் பிராண்டோ ஈ) நம்பியார்
13. மார்கழித் திங்களில் நிகழும் விழாவாக மயிலை பதிகம் சுட்டுவது
அ) விளக்குத் திருவிழா ஆ) ஓண விழா இ) கடலாட்டு விழா ஈ) திருவாதிரை விழா
14. 'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை
அ) இலக்கியம் ஆ) புவியியல் இ) வேளாண்மை ஈ) கணிதம்
பகுதி - II
பிரிவு - 1 • எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக:
3 × 2 = 6
15. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநானூறு கூறுகிறது?
16. 'தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே' - தொடருக்கு பதவுரை எழுதுக.
17. மனத்தை அதன் போக்கில் செல்ல விடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?
18. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
பிரிவு - 2 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக:
2 × 2 = 4
19. “விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிட செய்வது ஒன்றே உயிர் பணியாக் கொண்டோன்” – யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
20. பின்னணி இசை படத்தின் காட்சி அமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
21. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
பிரிவு - 3 • எவையேனும் ஏழனுக்கு விடை தருக:
7 × 2 = 14
22. கீழ்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.
அ) வானம், பற, நிலவு, தொடு ஆ) குழந்தை, நட, தளிர்நடை, விழு
23. திருவளர்ச்செல்வன், திருவளர்செல்வன் - இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
24. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சனைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
25. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.
அ) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
ஆ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
26. தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
அ) ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
ஆ) வனவிலங்கு காப்பகத்தில் சிங்கக்குருளையும் யானைக் குட்டியும் கண்டேன்.
27. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அ) ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.
ஆ) அண்ணைக்கு அவனுக்கு பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதுதான.
28. மரபுச் சொற்களை தொடரில் அமைத்து எழுதுக.
அ) கண்துடைப்பு ஆ) வழிவழியாக
29. தமிழாக்கம் தருக.
அ) If you want people to understand you speak their language.
ஆ) A new language is new life.
30. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க.
பகுதி - III
பிரிவு - அ • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக:
2 × 4 = 8
31. “செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்” தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
32. “ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்” - இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
33. “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
34. மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதை குறள் நெறி நின்று விளக்குக.
பிரிவு - 2 • எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக:
2 × 4 = 8
35. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
36. மையாடல் விழா - குறிப்பு வரைக?
37. மணந்தகம் - குறிப்பு வரைக.
38. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
பிரிவு - 3 • எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக:
3 × 4 = 12
39. அ) எடுத்துக்காட்டு உவமையணி - விளக்குக.
(அல்லது)
ஆ) ஏகதேச உருவக அணி - விளக்குக.
40. அ) வாகைத்திணையைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) பொருண்மொழிக்காஞ்சி துறையை விளக்குக.
41. உங்கள் கனவு ஆசிரியர் குறித்து கட்டுரை எழுதுக.
42. பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.
அ) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (அல்லது) ஆ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
43. தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பம் எழுதுக.
பகுதி - IV • அனைத்து வினாக்களுக்கும் விடை தருக:
3 × 6 = 18
44. அ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்கு துணை நிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக?
(அல்லது)
ஆ) எச்.ஏ. கிருட்டினனார் 'கிறித்தவக் கம்பரே' என்பதை பாடப்பகுதி வழி நிறுவுக.
45. அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு விளக்குக.
(அல்லது)
ஆ) பண்டைக் கால கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல் கற்பித்தல் முறைகளை தொகுத்து எழுதுக.
46. அ) சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துக்களை சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
(அல்லது)
ஆ) உரிமைத்தாகம் கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையை புலப்படுத்துக.
பகுதி - V • அடிபிறழாமல் எழுதுக:
4 + 2 = 6
47. அ) 'ஓங்கலிடை' - எனத் தொடங்கும் தண்டியலங்கார பாடல்.
ஆ) 'தன்னைத்தான்' எனத் தொடங்கும் குறட்பாவை எழுதுக.