I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
8 × 1 = 8
1) சித்திரை, வைகாசி மாதங்களை ............ காலம் என்பர்.
அ) முதுவேனில்
ஆ) பின்பனி
இ) முன்பனி
ஈ) இளவேனில்
2) 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'. மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
3) 'மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ' இப்படால் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை
ஆ) பச்சை
இ) பழுப்பு
ஈ) நீலம்
4) மண்ணாசை கருதி, பகைவர் நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் போர் தொடுத்துச் செல்வது ............ திணை ஆகும்.
அ) வெட்டி
ஆ) கரந்தை
இ) வஞ்சி
ஈ) காஞ்சி
5) கலைஞர் எழுதிய முதல் நாடகம் ............
அ) தூக்குமேடை
ஆ) பழநியப்பன்
இ) மணிமகுடம்
ஈ) காகிதப்பூ
6) நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே.
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு
ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக:
நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு
7) இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) கம்பராமாயணம்
இ) காசிக்காண்டம்
ஈ) முத்தொள்ளாயிரம்
8) இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை எழுதுக.
அ) நந்தின் - பந்தர்
ஆ) பந்தர் - சிந்தி
இ) புன்னை - தென்னன்
ஈ) இளஞ்சினையும் - இளங்கமுகின்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி
3 × 2 = 6
(வினா எண் 13 கட்டாய வினா)
9) விடைக்கேற்ற வினா அமை:
அ) தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது.
ஆ) சிலப்பதிகாரம் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி. கருதினார்.
10) சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
11) வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
12) இலக்கியம் பேசிய, கலைஞரின் திரைப்படங்கள் இரண்டினை எழுதுக.
13) 'வினை' என முடியும் 'பொருள்செயல் வகை' என்ற அதிகாரத்தில் உள்ள திருக்குறளினை எழுதுக.
III. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி
3 × 2 = 6
14) பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக:
உங்களிடம் எழு கோல்டு பிஸ்கட் உள்ளது, அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட் டைக் கண்டுபிடிக்கவும்.
15) புறத்தினைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
16) அயற்கூற்றாக எழுதுக:
"கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.
17) கொண்ட - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
18) படிப்போம்; பயன்படுத்துவோம்!
அ) Screenplay
ஆ) Agreement
IV. எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளி
4 × 3 = 12
(வினா எண் 24 கட்டாய வினா)
19) 'தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்' - இக்குறளில் பயின்றுவரும் அணியைச் சுட்டி விளக்கு.
20) தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.
21) சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
22) பாடாண்தினை - விளக்குக.
23) "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" - இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
24) அடிபிறழாமல் எழுதுக:
அ) தண்டலை மயில்கள் ............ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
ஆ) தூசும் துகிரும் ............ எனத் தொடங்கி மறுகும் வரை சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
V. விரைவாக விடையளி
2 × 5 = 10
25) அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
(அல்லது)
ஆ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
26) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:
VI. விரைவாக விடையளி
1 × 8 = 8
27) அ) நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் "மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்" என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
(அல்லது)
ஆ) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.