பகுதி - I
6 × 1 = 6
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
2. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) பாலை, குறிஞ்சி, முல்லை நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) முல்லை, பாலை, மருத நிலங்கள்
3. கூற்று 1 : போராட்டப் பண்டுடனை வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) கூற்று 1 தவறு, 2 தவறு
ஈ) கூற்று 1 சரி, 2 சரி
4. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை
ஆ) பச்சை
இ) பழுப்பு
ஈ) நீலம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. (5, 6)
நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்று தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு
5. பாடல் இடம் பெற்ற நூல்
அ) புறநானூறு
ஆ) முத்தொள்ளாயிரம்
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
6. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்க.
அ) நந்தின் - பந்தர்
ஆ) திகழ்முத்தம் - தென்னன்
இ) வெண்குடை - திகழ்முத்தம்
ஈ) இளஞ்சினையும் - குவிமொட்டும்
பகுதி - II (பிரிவு - 1)
3 × 2 = 6
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க.
7. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
8. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
9. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
10. விடைகளுக்கேற்ற வினாக்கள் எழுதுக.
அ) சொற்கொழிவுகளைக் கேட்டும் இலக்கிய அறிவைப் பெற்றார் ம.பொ.சி.
ஆ) கலைஞர், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் தம் முத்திரையைப் பதித்ததால் 'முத்தமிழ் அறிஞர்' எனப் போற்றப்பட்டார்.
11. 'பொருள்' என முடியும் திருக்குறளை எழுதுக.
பகுதி - II (பிரிவு - 2)
3 × 2 = 6
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க.
12. கலைச்சொல் எழுதுக.
(i) Playwright
(ii) Agreement
குறிப்பு: செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
அ) வரப்போகிறேன் ஆ) கொஞ்சம் அதிகம்
13. கொண்ட - பகுத உறுப்பிலக்கணம் தருக.
14. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பு எழுதுக.
15. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
16. அழைப்புமணி ஒலித்தது. கல்வியின் கதவைத் திறந்தார். (கலவைத் தொடராக மாற்றுக)
பகுதி - III (பிரிவு - 1)
3 × 3 = 9
III. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க.
17. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.
18. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.
19. "கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் பெய்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன". - காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், மூதைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய சூழலையும் எழுதுக.
20. மொழிபெயர்த்து எழுதுக.
Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation, as it had the most fertile lands. The prosperity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.
21. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் கலைக்கிறனோடு எழுபவை நிகழ்த்துக்கலைகள். சிற்றார் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகியவற்றின் எச்சங்களைக் கொண்டவை இவை. கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், புலியாட்டம் போல்வை உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துக்கலைகள். கதையொன்றில் இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவை இணைந்த வடிவமே தெருக்கூத்து ஆகும்.
வினாக்கள்:
1. எவற்றின் எச்சங்களை நிகழ்த்துக்கலைகள் கொண்டுள்ளன?
2. நிகழ்த்துகலைகள் எப்படிப்பட்டவை?
3. உங்களைக் கவர்ந்த நிகழ்த்துகலைகள் இரண்டினை எழுதுக.
பகுதி - III (பிரிவு - 2)
1 × 3 = 3
அடிபிறழாமல் எழுதுக.
22. "தூசும் துகிரும்" எனத்தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
பகுதி - IV
2 × 5 = 10
IV. எவையேனும் இரண்டினுக்கு விடையளிக்க.
23. நீங்கள் படித்து முடித்த பிறகு உங்கள் துறையின் அறிவைக்கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகள் நான்கினை எழுதுக.
24. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவர் திருநாள்' என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
25. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
26. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
பகுதி - V
2 × 8 = 16
V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விரிவாக விடையளிக்க.
27. நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
28. பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுச் சுருக்கி எழுதுக.
29. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
குறிப்புகள்:
முன்னுரை
நிகழ்த்தப்பட்ட கலைகள்
உங்களுக்குப் பிடித்த கலை
கலைகளை வளர்ப்போம் - கலைஞர்களை உயர்த்துவோம்
முடிவுரை