I. பலவுள் தெரிக
5 × 1 = 5
1. 'மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ' - இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை
ஆ) பச்சை
இ) பழுப்பு
ஈ) நீலம்
2. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்.
அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
3. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு. இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,
அ) பாண்டிய நாடு, சேரநாடு
ஆ) சோழநாடு, சேரநாடு
இ) சேரநாடு, சோழநாடு
ஈ) சோழநாடு, பாண்டியநாடு
4. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது.
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
5. அரசரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது ______ ஆகும்.
அ) பொதுவியல் திணை
ஆ) கைக்கிளைத் திணை
இ) பாடாண் திணை
ஈ) பெருந்திணை
II. எவையேனும் நான்கினுக்கு மட்டும் விடையளி
4 × 2 = 8
(11 வது வினாவுக்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்)
6. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவழு - இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
7. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
8. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
9. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக:
உழவர்கள் மலையில் உழுதனர்
முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
10. படிப்போம் பயன்படுத்துவோம்.
அ) Screenplay
ஆ) Rebellion
11. உலகு என முடியும் திருக்குறளை எழுதுக.
III. ஏதேனும் இரண்டிற்கு விடையளி
2 × 3 = 6
(14-வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்)
12. மருத நிலத்தில் இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலை நயத்துடன் விளக்குக.
13. 'தலைமைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
14. அ) தண்டலை எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) தூசும் துகிரும் எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
IV. ஏதேனும் மூன்றினுக்கு விடையளி
3 × 5 = 15
15. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
16. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
17. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
18. நீங்கள் படித்து முடித்தபின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.
V. இரண்டினுக்கு விடையளி
2 × 8 = 16
19. அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் கொண்ட கலைவர்கள் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் சான்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியையும் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி.... தண்டலை மயில்கள் ஆட... இவ்வுரையைத் தொடர்க.
(அல்லது)
ஆ) நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்கள் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
20. அ) எம்.எஸ். அப்புலட்சமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப் பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
10th Study Materials
10th Std Study Materials
10th Tamil Study Materials
10th English Study Materials
10th Maths Study Materials
10th Science Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys
Important Links
10th Syllabus
10th Lesson Plans
10th Monthly Test & Unit Test
Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table