I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
8 × 1 = 8
1. 'மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ' பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை
ஆ) பச்சை
இ) பழுப்பு
ஈ) நீலம்
2. சித்திரை வைகாசி மாதங்களை ______ காலம் என்பர்.
அ) முதுவேனில்
ஆ) பின்பனி
இ) முன்பனி
ஈ) இளவேனில்
3. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு, மண், ஏர், மாடு
ஆ) மண், மாடு, ஏர், உழவு
இ) உழவு, ஏர், மண், மாடு
ஈ) ஏர், உழவு, மாடு, மண்
4. அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
அ) 2010
ஆ) 2012
இ) 2015
ஈ) 2008
5. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் எது?
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
'பகர்வனர் திரிதிரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்;
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்'
6. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) முத்தொள்ளாயிரம்
7. பாடலில் இடம்பெற்றுள்ள அடி மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.
அ) பகர்வனர் - பட்டினும்
ஆ) பட்டினும் - பருத்தி
இ) ஆரமும் - வீதியும்
ஈ) தூசும் - துகிரும்
8. 'பாசவர்' - பொருள் தருக.
அ) நெய்பவர்
ஆ) ஓவியர்
இ) வெற்றிலை விற்பவர்
ஈ) நறுமணப் பொருள் விற்பவர்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி. (13 வது வினா கட்டாய வினா)
3 × 2 = 6
9. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ) 'தூக்கு மேடை' என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் 'கலைஞர்' என்று சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.
ஆ) உரை என்பது பேச்சு மொழியின் ஓட்டம்.
10. கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.
11. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் மா.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
12. புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழ்கத்தின் வடக்கெல்லை, தெற்கெல்லையாகக் கூறப்படுபவை யாவை?
13. 'வினை' என முடியும் திருக்குறளை அடிபிறழாமல் எழுதுக.
14. பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.
'கம்பனும் கண்டேத்தும் உமறுப்புலவரை எந்தக் கொம்பனும்
பணியும் அறம்பாடும் ஐவாது ஆசுகவியை காசிம்புலவரை
குணங்குடியாரை சேகனாப் புலவரை செய்தும்பிப்
பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோர்'
15. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் தலைமில் உழுதனர்.
முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
16. தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
அ) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ______.
ஆ) கல் கிலை ஆகுமெனில், தெல் ______ ஆகும்.
17. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.
18. படிப்போம் ; பயன்படுத்துவோம்.
அ) Screenplay
ஆ) Agreement
IV. எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி. (24 வது வினா கட்டாய வினா)
4 × 3 = 12
19. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.
20.
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய்தொழுக லான்
- இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை விளக்குக.
21. 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
22. தமிழ் மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.
23. கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும், நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதும், பண்டைத் தமிழின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
24. அடிபிறழாமல் எழுதுக.
அ) 'வெய்யோன் ஒளி' எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்.
(அல்லது)
ஆ) 'அள்ளல் பழனத்து' எனத் தொடங்கும் முதுகொள் யிரம் பாடல்.
V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.
2 × 5 = 10
25. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
(அல்லது)
ஆ) கு.கார்த்திகா என்பவரது மகள் நிலானிகா, 52 வடக்கு வீதி, திருவள்ளூர் - 602001 என்ற முகவரியில் வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அதே பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி வணிகவியல் பாடப்பிரிவில் 11 ஆம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை நிலானிகாவாகக் கருதி, கொடுக்கப்பட்ட மேல்நிலைச் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.
26. அ) நீங்கள் படித்து முடித்த பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.
(அல்லது)
ஆ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
27. அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்கு.
(அல்லது)
ஆ) 'பாய்ச்சல்' கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டு, கதையைச் சுருக்கி எழுதுக.
10th Study Materials
10th Std Study Materials
10th Tamil Study Materials
10th English Study Materials
10th Maths Study Materials
10th Science Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys
Important Links
10th Syllabus
10th Lesson Plans
10th Monthly Test & Unit Test
Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table