10th Tamil Second Midterm 2026 Question Paper & Answer Keys - Thanjor District


தஞ்சாவூர் மாவட்டம் 10-2MTT TAM

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026

10 ஆம் வகுப்பு — தமிழ்
காலம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி I 7 × 1 = 7
(I) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(II) நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுள் விடையினையும் சேர்த்து எழுதுக.
1. சித்திரை வைகாசி மாதங்களை ______ காலம் என்பர்.
அ) முதுவேனில்
ஆ) பின்பனி
இ) முன்பனி
ஈ) இளவேனில்
2. திருக்குறள் அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
3. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா. பொ. சி கருதியது
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
4. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானை கோக்கிள்ளி நாடு, இத்தொடர்களில் குறிப்பிடுகின்ற நாடுகள் முறையே,
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு
ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
5. கூற்று 1 : போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
II. பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (6, 7) விடை தருக.
"வண்ணமும் சுண்ணமும் தண்ணறும் சாந்தும்
பூவும் புகையும் மேலிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்"
6. இப்பாடல் இடம் பெற்ற நூலின் பெயரைத் தேர்க.
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) கணக்கணிதம்
ஈ) முத்தொள்ளாயிரம்
7. வண்ணமும் சுண்ணமும் - இலக்கண குறிப்பு தருக.
அ) எண்ணும்மை
ஆ) உவமைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) அன்மொழித்தொகை
பகுதி II (பிரிவு - 1) 3 × 2 = 6
குறிப்பு : எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்கவும். 12-வது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்.
8. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
9. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
10. கலைஞரின் கதை வசனங்களில் சமூகக் கருத்துக்களைப் பேசிய படங்களைப் பட்டியலிடுக.
11. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ - இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
12. செயற்கை - எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பகுதி II (பிரிவு - 2) 2 × 2 = 4
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை அளிக்கவும்.
13. கீழ் வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருள்களைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப் பூச் செடியைப் பார்த்த வாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
14. புறத்தினைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
15. தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை —
ஆ) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து —
(சோறு, கற்கள், கரு, எழுத்து)
16. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
பகுதி III 9 மதிப்பெண்கள்
குறிப்பு: ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண். 19வது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்.
17. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளில் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.
18. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
19. அ) தண்டலை - எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) அள்ளல் - எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடலை எழுதுக.
பகுதி IV 9 மதிப்பெண்கள்
குறிப்பு : ஏதேனும் ஒரு வினாவுக்கு மட்டும் விடை அளிக்கவும்.
20.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.
- இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம் பெற்றுள்ளதை விளக்குக.
21.
அஞ்சம் அறியான் அமைவில் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
- இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு எழுதுக.
பகுதி V 12 மதிப்பெண்கள்
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடை தருக.
22. அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) வரலாற்றைத் தாங்கிய கல்வெட்டுகளைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களைப் பட்டியலிடுக.
23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
24. தஞ்சாவூர் மாவட்டம், முல்லை நகர், 225, அய்யம்பேட்டையில் வசிக்கும் தமிழ் வேந்தனின் மகள் இளவேனில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேல்நிலை வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியலை முதன்மை பாடமாகக் கொண்ட பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை இளவேனிலாக பாவித்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புக.
பகுதி VI 12 மதிப்பெண்கள்
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடை தருக.
25. அ) போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரை கலைஞர் - இயற்றமிழ் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
(அல்லது)
ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
26. அ) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டு கதையைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
தஞ்சாவூர் மாவட்டம் விடைக்குறிப்பு

ANSWER KEY — 10 ஆம் வகுப்பு தமிழ்

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026
Part I — விடைகள் 7 × 1 = 7
1) ஈ. இளவேனில்
2) இ. நான்கு
3) ஈ. சிலப்பதிகாரம்
4) இ. சேர நாடு, சோழநாடு
5) ஈ. கூற்று 1 மற்றும் 2 சரி
6) ஆ. சிலப்பதிகாரம்
7) அ. எண்ணும்மை
Part II — விடைகள் பிரிவு 1 & 2
8) சோலைகள், செண்பகக்காடு, பொய்கைகள், புது வயல்கள், தடங்கள்
9) புத்தகம் வாங்க போதிய பணம் இல்லாததால் பழைய புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்குவார். உணவுக்கு வைத்திருக்கும் பணத்தில் புத்தகம் வாங்குவார்.
10) மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப்பார்
11) அள்ளல் - சேறு; பழனம் - வயல்
12) செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து / இயற்கை அறிந்து செயல்
13) உழவர்கள் வயலில் உழுதனர். நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாரே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
14) வெட்சி - கரந்தை; வஞ்சி - காஞ்சி; நொச்சி - உழிஞை
15) அ. கரு; ஆ. எழுத்து
16) தஞ்சம் - நேர், நேர் - தேமா; எளியர் - நிரை, நேர் - புளிமா; பகைக்கு - நிரைபு - பிறப்பு
Part III — விடைகள் 9 மதிப்பெண்கள்
17) தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பரவலாக்கினார் - கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தினார்.
18) பகைவர்கள் அஞ்சும் வேலினைக் கொண்ட சேர நாடு அச்சம் மிகுந்தது - யானைப் படைகளை உடைய சோழ நாடு நெல் வளமும் வீரமும் மிக்கது - வெண்கொற்றக் குடையை உடைய பாண்டிய நாடு முத்து வளம் மிக்கது.
19) அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ / வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் / கைச்சிறகால் பார்ப்பெடுக்கும் கவ்வை உடைத்தேரா / நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
Part IV — விடைகள் 9 மதிப்பெண்கள்
20) வஞ்சப்புகழ்ச்சியணி - புகழ்வதுபோலப் பழிப்பதும் பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி.
21) அஞ்சும் - நேர், நேர் - தேமா; அறியான் - நிரை, நேர் - புளிமா; அமைவிலன் - நிரை, நிரை - கருவிளம்; ஈகலான் - நேர், நிரை - கூவிளம்; தஞ்சம் - நேர், நேர் - தேமா; எளியர் - நிரை, நேர் - புளிமா; பகைக்கு - நிரைபு - பிறப்பு.
Part V & VI — விடைகள் 12 மதிப்பெண்கள் ஒவ்வொன்றும்
22) அ) கடிதம்: அனுப்புநர் முகவரி, பெறுநர் (நாளிதழ் ஆசிரியர், தினத்தமிழ், சென்னை), பொருள் (நாளிதழில் கட்டுரை வெளியிட வேண்டி), வணக்கம், உடல்பகுதி, இப்படிக்கு, உறைமேல் முகவரி.
23) பொருத்தமான காட்சி எழுதியிருப்பின் மதிப்பெண்.
24) படிவம்: பெயர் (த. இளவேனில்), பிறந்ததேதி (16-03-2011), தேசிய இனம் (இந்தியன்), தந்தை பெயர் (தமிழ் வேந்தன்), முகவரி (131, தமிழ் நகர், அய்யம்பேட்டை), கடைசியாகப் படித்த வகுப்பு (10), பயின்ற பள்ளி (அரசு உயர்நிலைப்பள்ளி, அய்யம்பேட்டை), தேர்வின் பெயர் (10 அரசுபொதுத்தேர்வு), பதிவெண்/ஆண்டு (12345678 / மார்ச் 27), மதிப்பெண்கள் (தமிழ் 90, ஆங்கிலம் 90, கணிதம் 90, அறிவியல் 90, சமூக அறிவியல் 90, கூடுதல் 450/500), சேர விரும்பும் பாடப்பிரிவு (கணிதம், உயிரியல்), தாய்மொழி (தமிழ்).
25) அ) போராட்டக் கலைஞர் - போராட்டப் பண்புடன் வளர்ந்தவர். இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியவர். பேச்சுக் கலைஞர் - இளம்வயதில் நட்பு எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். நாடகக் கலைஞர் - இவர் எழுதிய முதல் நாடகம் பழநியப்பன், பிற நாடகங்கள் - வெள்ளிக்கிழமை உள்ளிட்ட பல. திரை கலைஞர் - எம்.ஜி.ஆர் நடித்த ராஜகுமாரி படத்திற்கு முழுவசனம் எழுதினார். இயற்றமிழ் - எழுதிய புதினம் ரோம்புரிபாண்டியன், சிறுகதை புகழேந்தி, அணில் குஞ்சு.
26) பொருத்தமான விடையிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url