10th Tamil Second Midterm 2026 Question Paper - Erode District


ஈரோடு மாவட்டம் 10 | தமிழ்

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026

வகுப்பு 10 — தமிழ்
நேரம் : 1.30 மணி மதிப்பெண்கள் : 50
பிரிவு - I 6 × 1 = 6
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
1. "மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ" - இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை
ஆ) பச்சை
இ) பழுப்பு
ஈ) நீலம்
2. "நாடகக்கலைமை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
அ) ந. முத்துசாமி
ஆ) பம்மல் சம்பந்த முதலியார்
இ) சங்கரதாஸ் சுவாமிகள்
ஈ) தி. ச. சண்முகம்
3. சித்திரை, வைகாசி மாதங்களை ______ காலம் என்பர்.
அ) முதுவேனில்
ஆ) பின்பனி
இ) முன்பனி
ஈ) இளவேனில்
4. "முடக்கத்தான்" என்னும் கொடி எந்தத் திணைக்கு உரியது?
அ) உழிஞைத்திணை
ஆ) தும்பைத்திணை
இ) வாகைத்திணை
ஈ) நொச்சித்திணை
5. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம. பொ. சி கருதியது
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
6. "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
பகுதி II (பிரிவு - 1) 3 × 2 = 6
எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (வினா எண் 11க்கு கட்டாயமாக விடையளிக்கவும்)
7. விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) ம. பொ. சி-யின் தந்தையார் பொன்னுசாமி, தாயார் சிவகாமி ஆவர்.
ஆ) தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ம. பொ. சிவஞானம்.
8. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம. பொ. சி என்பதற்குச் சான்று தருக.
9. புறத்திணைகளில் எதிர்த்திணைகளை அட்டவணைப்படுத்துக.
10. சரயு நதி பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
11. 'செயல்' என முடியும் குறள்.
பிரிவு - II 3 × 2 = 6
எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.
12. தனிச்சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக:
அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
13. படிப்போம் பயன்படுத்துவோம்:
அ) Storyteller
ஆ) Discourse
14. நாள்காட்டியில் புதன் கிழமை ஒன்றாம் தேதி எனில், அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை என்ன தேதி எனக் கண்டு அதற்குரிய தமிழெண்களை எழுதுக.
15. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:
அ) வெயிலில் அலையாதே, உடல் ______
ஆ) ______ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
பகுதி - III 3 × 3 = 9
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.
16. "தலையைக்கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
17. அலகிட்டு வாய்பாடு தருக:
கருவியும் காலமும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
18. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
19. 'தூசும் துகிரும்' எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
பகுதி - IV 3 × 5 = 15
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்.
20. அ) வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
(அல்லது)
ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
21. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
22. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
23. 4, கணபதி நகர், உஆ காலனி, தாராசரம் என்னும் முகவரியில் வசிக்கும் சண்முகவேல் என்பவரின் மகள் செந்தாமரை, தாராசரம், கும்பகோணம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னைச் செந்தாமரையாகக் கருதி, கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.
பகுதி - V 1 × 8 = 8
ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளிக்க.
24. அ) போராட்டக் கலைஞர் - பேச்சுக்கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக்கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
(அல்லது)
ஆ) குறிப்புகள் கொண்டு ஒரு பக்க அளவில் "மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்" என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
25. அ) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுச் கதையைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
ஆ) சாலைப் பாதுகாப்பு என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.

10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url