10th Tamil Second Midterm 2026 Question Paper - Tenkasi District


தென்காசி மாவட்டம் Tsi10T

இரண்டாம் இடைப் பருவத் தேர்வு - 2026

வகுப்பு 10 — தமிழ்
நேரம் : 1.30 மணி மதிப்பெண்கள் : 50
11-11-2026
அ. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 8 × 1 = 8
1. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இதில் குறிப்பிடப்படாத நிறம்
அ) கருமை
ஆ) பச்சை
இ) பழுப்பு
ஈ) நீலம்
2. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?
அ) பெரிய கத்தி
ஆ) இரும்பு ஈட்டி
இ) வில்லும் அம்பும்
ஈ) உழைத்ததால் கிடைத்த ஊதியம்
3. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) குறிஞ்சி - 1) மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
ஆ) முல்லை - 2) செந்நெல், வெண்ணெல்
இ) மருதம் - 3) மலைநெல், தினை
ஈ) நெய்தல் - 4) வரகு, சாமை
அ) 4, 2, 3, 1
ஆ) 3, 1, 4, 2
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 3, 1, 2
4. இருந்தாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
5. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு, மண், ஏர், மாடு
ஆ) மண், மாடு, ஏர், உழவு
இ) உழவு, ஏர், மண், மாடு
ஈ) ஏர், உழவு, மாடு, மண்
6. "மாலவன் குணம் போனென்னை வேகன் குணமாவது எங்களுக்கு வேண்டும்" - மாலவன் குணமும் வேலவன் குணமும் குறிப்பவை முறையே
அ) திருப்பதியும் திருத்தணியம்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருக்கெந்துரும்
ஈ) திருப்பரங்குணமும் பழனியும்
7. "பகர்வனர் திருகு நகர வீதியும் / பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் / கட்டு நூண்வினைக் காருகர் இருக்கையும் / தூகம் துகிரும் ஆரமும் அகிலும்" - காருகர் - பொருள் தருக.
அ) உழவர்
ஆ) நெய்பவர்
இ) பொற்கொல்லர்
ஈ) காவலர்
8. இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
அ) பூக்களும் சந்தனமும்
ஆ) பூக்களும் அகிலும்
இ) அகிலும் சந்தனமும்
ஈ) பட்டும் சந்தனமும்
ஆ. எவையேனும் ஆறனுக்கு விடை தருக. (16 கட்டாய வினா) 6 × 2 = 12
9. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
10. 'கரப்பிடும்பை இல்லார்' - இத்தொடரின் பொருள் கூறுக.
11. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
12. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
13. புறத்தினைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
14. பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
அ) வரப் போகிறேன்     ஆ) கொஞ்சம் அதிகம்
15. கலைச்சொல் தருக.
அ) Screenplay     ஆ) Rebellion
16. "ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது வறுமையே" என்னும் பொருள் அமைந்த திருக்குறளை எழுதுக.
இ. எவையேனும் நான்கனுக்கு விடை தருக. (17 கட்டாய வினா) 4 × 3 = 12
17. அடிமாறாமல் எழுதுக.
'தண்டலை மயில்கள் ஆட' எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்.
(அல்லது)
'தூசும் துகிரும்' எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
18. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகள் இரண்டினை எழுதுக.
19. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
20. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
21.
"தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்"
- இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை விளக்குக.
22. கீழ்க்காணும் குறளை அலகிட்டு வாய்பாடு எழுதுக.
எ.க. தணிந் தீர் யாதல்
ஈ. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 2 × 5 = 10
23. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
(அல்லது)
ஆ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
24. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
(படம்: ஐந்து பெண்கள் தலைகளில் பொருட்களைச் சுமந்து செல்லும் காட்சி)
(படத்தில் உள்ள உரை): சிறப் போர்வு, பிறாம் மொட்டை மேல், வல்லவம், சொல் காத்து மேல
உ. விரிவான விடையளிக்க. 1 × 8 = 8
25. அ) நாட்டுவிழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
(அல்லது)
ஆ) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url