பகுதி - 1
7 × 1 = 7
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
I. ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை
ஆ) பச்சை
இ) பழுப்பு
ஈ) நீலம்
2. முல்லை நில மக்களின் உணவுப் பொருள்கள் ________
அ) வெண்பெல், வரகு
ஆ) மலைபெல், திணை
இ) வரகு, சாமை
ஈ) மீன், செந்பெல்
3. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே ________
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சோ நாடு
இ) சேர நாடு, சோழ நாடு
ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
4. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது ________
அ) திருக்குறள்
ஆ) புறநாளூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
5. சுருளி மலை என்பது ________
அ) நெடுவேள் குன்றம்
ஆ) திருமால் குன்றம்
இ) திருப்பரங்குன்றம்
ஈ) நெடுங்குன்றம்
6. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது ________
அ) புறநானூறு
ஆ) புறப்பொருள்
இ) புறத்தினை
ஈ) புறப்பாட்டு
7. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் தான் கலைஞர் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. இந்தொடருக்கான வினா எது?
அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?
ஈ) யாருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது?
பகுதி - 2
5 × 2 = 10
II. எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 14)
8. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்
முல்லைப் பூச் செடியைப் பார்த்தவர்
பரதவர் கடலுக்குச் சென்றனர்
9. விடைகளுக்கேற்ற வினா தருக.
அ) கரகாட்டமும் காவடியாட்டமும் மரபார்ந்த கலைவடிவங்கள் ஆகும்.
ஆ) முத்தொள்ளாயிரம் வெண்பாவால் எழுதப்பட்ட நூலாகும்.
10. பாசவர், வாளவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வலிகாகள் யாவர்?
11. பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை? கலைசொல் தருக.
12. கலைசொல் தருக.
1) Screen play
2) Agreement
13. பொருந்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
(அவிழும், கவிழும், தயங்கும், தங்கும்)
மலை முகட்டில் மேகம் ________ அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் ________
14. "பொருளல்லவை" - எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பகுதி - 3
3 × 3 = 9
III. ஏதேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 18)
15. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
16. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
17.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்
- இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை விளக்குக.
18. "தண்டலை" எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
(அல்லது)
"தூசும் துகிரும்" எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
பகுதி - 4
2 × 5 = 10
IV. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
19. அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில், 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்கு சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
20. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
21. மொழிப்பெயர்க்க.
Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutham region was fit for cultivation, as it had the most fertile lands. The prosperity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.
பகுதி - 5
2 × 5 = 10
V. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
22. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளை, இக்கால வணிக வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
(அல்லது)
ஆ) பேரோட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
23. அ) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தை குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.
(அல்லது)
ஆ) எம்.எஸ். சுப்புலெட்சமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.