12th Tamil Quarterly Exam 2026 - Virudhunagar District Question Paper


12th Tamil Quarterly Exam 2026 - Virudhunagar District Question Paper

விருதுநகர் மாவட்டம் V12T | Reg. No.: ____________

காலாண்டுப் பொதுத் தேர்வு - செப்டம்பர் 2026

வகுப்பு 12 — பொதுத்தமிழ்
கால அளவு: 3.00 மணிநேரம் மதிப்பெண்கள் : 90
பகுதி - I மதிப்பெண்கள் : 14
அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். (14 × 1 = 14)
1. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
அ) நீர்நிலைகள்
ஆ) மழைத்துளிகள்
இ) மழை மேகங்கள்
ஈ) சூரிய ஒளிக்கதிர்
2. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு:
அ) மத்த விலாசம்
ஆ) அஞ்சிறைத் தும்பி
இ) திசை எட்டும்
ஈ) தமிழ்நாட்டு வரலாறு
3. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க:
அ) வசம்பு
ஆ) மணத்தக்காளியிலைச்சாறு
இ) கடுக்காய்
ஈ) மாவிலைக்கரி
4. 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒரு / சக்தி பிறக்குது மூச்சினிலே' — என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது:
அ) தனிக் குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தந்தைவழிச் சமூக முறை
ஈ) தாய்வழிச் சமூக முறை
5. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க:
அ) செற்றார் — 1) மகிழ்ச்சி
ஆ) கிளை — 2) காடு
இ) உவகை — 3) பகைவர்
ஈ) கானம் — 4) உறவினர்
அ) 2, 4, 3, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 4, 1, 3
6. 'செம்பரிதி...' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம்
ஈ) சூரியநிழல்
7. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க:
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.
ஆ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்.
இ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்.
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்.
8. கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம் துணி சார்ந்ததாகவே இருந்தது.
அ) கூற்று சரி, காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று தவறு, காரணம் தவறு.
ஈ) கூற்று சரி, காரணம் சரி.
9. வையகமும் வானகமும் ஆற்றலரிது — எதற்கு?
அ) காலத்தினால் செய்த நன்றி
ஆ) தினைத்துணை நன்றி
இ) பயன் தூக்கார் செய்த உதவி
ஈ) செய்யாமல் செய்த உதவி
10. 'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்:
அ) நகுலன்
ஆ) அய்யப்ப மாதவன்
இ) பிரமிள்
ஈ) சிற்பி
11. பொருத்துக:
1. கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல் — அ) 2000 ரூபாய்
2. பந்தயம் வைத்து வாகனம் ஓட்டுதல் — ஆ) 25000 ரூபாய்
3. காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டுதல் — இ) 5000 ரூபாய்
4. 18 வயது முழுமையடையாதவர் வாகனத்தை இயக்கினால் அவரின் பெற்றோருக்கு — ஈ) 1000 ரூபாய்
அ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
ஆ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
ஈ) 1-ஈ, 2-அ, 3-இ, 4-ஆ
12. திருக்குறள் முதன் முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு:
அ) 1812
ஆ) 1822
இ) 1813
ஈ) 1814
13. 'உயர்ந்தோர்' — இலக்கணக் குறிப்பு தருக:
அ) வினையெச்சம்
ஆ) வினையாலணையும் பெயர்
இ) ஈறுகெட்ட பெயரெச்சம்
ஈ) தொழிற்பெயர்
14. 'நகை' என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று:
அ) கொடை
ஆ) பிணி
இ) பேதைமை
ஈ) செல்வம்
பகுதி - II மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக: (3 × 2 = 6)
15. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' — விளக்கம் தருக.
16. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
17. மாதவியின் நாட்டிய நிகழ்வில் ஒலித்த இசைக்கருவிகளைப் பட்டியலிடுக.
18. 'முயல்வாருள் எல்லாம் தலை' என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்: (2 × 2 = 4)
19. "விரிபெரு தமிழர் மேன்மை / ஓங்கிடச் செய்வ தொன்றே / உயிர்ப்பணியாக் கொண்டோன்" — யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
20. புக்கில், தன்மனை — சிறு குறிப்பு எழுதுக.
21. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும்: (7 × 2 = 14)
22. புணர்ச்சி விதி தருக:   செம்பருதி   (அல்லது)   அருங்கானம்
23. பகுபத உறுப்பிலக்கணம் தருக:   கலங்கி   (அல்லது)   தொழுதனர்
24. பொருத்தமான வேற்றுமை உருபு சேர்த்து முறையான தொடராக ஆக்குக:
சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
25. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக:
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
26. வல்லினமெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"குழந்தைகள் பெற்றோர்களை தமது நண்பர்கள் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்."
27. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக:
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
28. உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக: கிணற்றுத்தவளை போல
29. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக: குழந்தை, நட, தளிர்நடை, விழு
30. பொருள்கோள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
பகுதி - III மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக: (2 × 4 = 8)
31. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? — குறள் வழி விளக்குக.
32. "செம்பருதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் / செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்" — தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
33. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.
34. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக: (2 × 4 = 8)
35. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
36. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
37. சென்னை 'அறிவின் நகரம்' என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
38. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடை தருக: (3 × 4 = 12)
39. இலக்கிய நயம் பாராட்டுக: (மையக்கருத்துடன் மூன்று நயங்களைச் சுட்டுக.)
"பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்." — நாமக்கல் கவிஞர்
40. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக:
அ) எறும்பு ஊரக் கல்லும் தேயும்.   (அல்லது)   ஆ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
41. அ) ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை / பண்பும் பயனும் அது" — இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
42. உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக வரவேற்புரை எழுதுக.
43. தமிழாக்கம் தருக:
"Wangari Maathai was conferred a Nobel Prize in 2004 because of the outstanding success in guiding Kenyan women to plant more than thirty million trees. She has transformed the lives of tens of thousands of women through sustainable social forestry schemes."
பகுதி - IV மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: (3 × 6 = 18)
44. அ) சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் — இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
(அல்லது)
ஆ) அரங்கின் அமைப்பைச் சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக.
45. அ) மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.
(அல்லது)
ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது — எவ்வாறு? விளக்குக.
46. அ) 'உரிமைத் தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
(அல்லது)
ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
பகுதி - V மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் எழுதுக: (4 + 2 = 6)
47. அ) 'சிறகிலிருந்து....' எனத் தொடங்கும் காவியம் — புதுக்கவிதை. (4 மதிப்பெண்கள்)
ஆ) 'மிகும்' என முடியும் குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url