12th Tamil Quarterly Exam 2026 - Salem District Question Paper


12th Tamil Quarterly Exam 2026 - Salem District Question Paper

சேலம் மாவட்டம் (Salem) QSM | 12094

காலாண்டுத் தேர்வு - 2026

12-ஆம் வகுப்பு — பொதுத் தமிழ்
காலம் : 3.00 மணி மதிப்பெண்கள் : 90
பகுதி - I மதிப்பெண்கள் : 14
குறிப்பு: 1. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 2. கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளுள் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் எழுதவும். (14 × 1 = 14)
1. 'செம்பரிதி...' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம்
ஈ) சூரியநிழல்
2. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு / சக்தி பிறக்குது மூச்சினிலே" என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது:
அ) தனிக் குடும்பமுறை
ஆ) விரிந்த குடும்பமுறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தைவழிச் சமூகமுறை
3. தமிழில் திணைப் பாகுபாடு _______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட் குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க் குறிப்பு
ஈ) எழுத்துக் குறிப்பு
4. ணகர, னகர ஒற்றுகளை அடுத்து முறையே _______ மெய் எழுத்துக்கள் வராது.
அ) ண், ன்
ஆ) ற், ட்
இ) ட், ண்
ஈ) ர், ழ்
5. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞரைத் தேர்க: "கவிஞர்: ஈற்றிரு எழுத்தால் அணிகலன் செய்யலாம்"
அ) தமிழ்ஒளி
ஆ) கோதை
இ) புதுமைப்பித்தன்
ஈ) கவிமணி
6. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
அ. செற்றார் — 1) மகிழ்ச்சி
ஆ. கிளை — 2) காடு
இ. உவகை — 3) பகைவர்
ஈ. கானம் — 4) உறவினர்
அ) 2, 4, 3, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 2, 4, 1
7. "அடைமழை பெய்த அடுத்த நாள் / படைபடையாய் வந்ததாம் / பரங்கி நாட்டு விமானம் / எதிரி சுடாமலேயே / இறகொடிந்து இறந்ததாம்" — எது?
அ) ஈசல்
ஆ) பட்டாம்பூச்சி
இ) தும்பி
ஈ) வெட்டுக்கிளி
8. "தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்" — அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு:
அ) உரிச்சொல் தொடர்
ஆ) வினைத்தொகை
இ) இடைச்சொல் தொடர்
ஈ) பண்புத்தொகை
9. நெடுநல்வாடை பற்றித் தவறான கூற்றைத் தேர்க:
அ) பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
ஆ) 188 அடிகளைக் கொண்டது
இ) வெண்பாவால் இயற்றப்பட்டது
ஈ) நக்கீரரால் இயற்றப்பட்டது
10. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க:
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
இ) நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
11. கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம் துணி சார்ந்ததாகவே இருந்தது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் சரி
12. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்:
அ) மறைந்து போன தமிழ் நூல்கள்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஈ) தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
13. 'இன்று' என்ற கவிதைக் குறும்படத்தை வெளியிட்டவர்:
அ) என். சத்திய மூர்த்தி
ஆ) சிற்பி பாலசுப்பிரமணியம்
இ) உத்தம சோழன்
ஈ) அய்யப்பமாதவன்
14. பூமணிக்கு 2014-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த புதினம்:
அ) வெக்கை
ஆ) பிறகு
இ) அஞ்ஞாடி
ஈ) கொம்மை
பகுதி - II மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை எழுதுக. (3 × 2 = 6)
15. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
16. 'நெடுநல்வாடை' — நூல் பெயரின் பொருள் சிறப்பினை எழுதுக.
17. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
18. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதுக. (2 × 2 = 4)
19. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
20. புக்கில், தன்மனை — சிறு குறிப்பு எழுதுக.
21. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை எழுதுக. (7 × 2 = 14)
22. திருவளர்ச்செல்வன், திருவளர்செல்வன் — இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
23. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இரு வேறு தொடர்களை அமைக்க:   அ) முன்   |   ஆ) கொண்டு
24. புணர்ச்சி விதி எழுதுக (ஏதேனும் ஒன்று):   அ) அருங்கானம்   (அல்லது)   ஆ) இனநிரை
25. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம் உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையை அகற்றி பல நல்லவனவற்றை கற்று கொடுக்கும்."
26. தமிழாக்கம் தருக:   அ) Matriarchy   |   ஆ) Hardware
27. உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக:
அ) கிணற்றுத்தவளை போல   (அல்லது)   ஆ) அச்சாணி இல்லாத தேர் போல
28. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக:
அ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
ஆ) காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
29. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) அலை, அளை, அழை   (அல்லது)   ஆ) விலை, விளை, விழை
30. பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக (ஏதேனும் ஒன்று):   அ) பொலிந்தான்   (அல்லது)   ஆ) விம்முகின்ற
பகுதி - III மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
குறிப்பு: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதுக. (2 × 4 = 8)
31. "நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து / உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்" — இக்கவிதையின் அடி, "தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரவனே" என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
32. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
33. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
34. பின்வரும் இருபாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக:
"பழையன கழிதலும் புதியன புகுதலும் / வழுவல கால வகையினானே." — நன்னூல்
"மீண்டுமந்த பழமை நலம் புதுக்குதற்கு / மெய்சிலிர்க்கத் தமிழ்க் குயிலே! கூவி வா, வா!" — சிற்பி பாலசுப்பிரமணியம்
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
குறிப்பு: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதுக. (2 × 4 = 8)
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் இலக்கிய ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
37. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் — விளக்கம் எழுதுக.
38. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
குறிப்பு: எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை எழுதுக. (3 × 4 = 12)
39. பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.
40. தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பம் எழுதுக.
41. கூதிர்ப் பாசறைத் துறையைச் சான்றுடன் விளக்குக.
42. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக (ஏதேனும் ஒன்று):
அ) சருகு, விழு, மண், அலை   |   ஆ) குதிரை, வேகம், ஓடு, தாவு
இ) குழந்தை, நட, தளிர்நடை, விழு   |   ஈ) வானம், பற, நிலவு, தொடு
43. இலக்கிய நயம் பாராட்டுக: (மையக்கருத்து எழுதி, ஏற்புடைய மூன்று நயங்களைச் சுட்டி எழுதுக)
"பெற்றெடுத்த தமிழ்த் தாயைப் பின்னால் தள்ளி பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் உலகத்தில் தமிழ் மொழிக்கு நிகரும் உண்டோ கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக்காட்டித் தெற்றென நம் அகக் கண்ணைத் திறந்துவிட்ட தெய்வக்கவி பாரதி ஓர் ஆசான் திண்ணம்" — நாமக்கல் கவிஞர்
பகுதி - IV மதிப்பெண்கள் : 18
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக. (3 × 6 = 18)
44. அ) சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் — இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
(அல்லது)
ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
45. அ) நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) 'சொல்லோவியங்கள்' என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை எழுதுக.
46. அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
(அல்லது)
ஆ) 'உரிமைத்தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
பகுதி - V மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் எழுதுக: (4 + 2 = 6)
47. அ) "துன்பு..." எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல். (4 மதிப்பெண்கள்)
ஆ) "...படும்" என முடியும் திருக்குறள். (2 மதிப்பெண்கள்)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Post a Comment