கோயம்புத்தூர் மாவட்டம்
12 | 26XIILT-1
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026
12-ஆம் வகுப்பு — தமிழ்
நேரம் : 3.00 மணி
மதிப்பெண்கள் : 90
பகுதி - I
மதிப்பெண்கள் : 14
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (14 × 1 = 14)
1. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு:
அ) மத்தவிலாசம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சிறைத் தும்பி
ஈ) திசை எட்டும்
2. கடலின் பெரியது...
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ) தினையளவு செய்த உதவி
ஈ) காலத்தினால் செய்த உதவி
3. கம்பர் இராமாயணத்திற்குச் சூட்டிய பெயர்:
அ) இராமாவதாரம்
ஆ) இராமகாதை
இ) இராமன்கதை
ஈ) இராமசரிதம்
4. 'யார்?', 'எது?' ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே:
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத் திணை, உயர் திணை
5. பிழையான தொடரைக் கண்டறிக:
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
6. "செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம்
ஈ) சூரியநிழல்
7. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் — காரணம்:
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ, ஆ, இ - அனைத்தும்
8. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" — என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது:
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
9. பொருத்துக:
அ) அன்பும் அறனும் — (1) பண்புத்தொகை
ஆ) நன்கலம் — (2) ஆகுபெயர்
இ) மறத்தல் — (3) எண்ணும்மை
ஈ) உலகு — (4) தொழிற்பெயர்
அ) 2, 1, 4, 3
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 1, 4, 2, 3
10. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞரைக் கண்டறிக:
"முன்னெழுத்து அரசன் ; பின்னெழுத்து தமிழ் மாதம்"
அ) அம்பை
ஆ) கோதை
இ) சூடாமணி
ஈ) தமிழ்ஒளி
11. பொருந்தாததைத் தேர்க:
அ) சிலம்புகழி நோன்பு – திருமணச் சடங்கு
ஆ) புக்கில் – தற்காலிகத் தங்குமிடம்
இ) மணந்தகம் – இல்லறத்தின் இறுதிக்கட்டம்
ஈ) குடும்பு – கூடிவாழ்தல்
12. பூமணி எழுதிய புதினங்கள்:
அ) கொம்பை, வாய்க்கால்
ஆ) வாய்க்கால், வயிறுகள்
இ) கொம்மை, நொறுங்கல்கள்
ஈ) வாய்க்கால், நொறுங்கல்கள்
13. "குடும்பம்" என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்:
அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ) குறுந்தொகை
ஈ) புறநானூறு
14. கூற்று : ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் பச்சையப்பன் கல்லூரி.
காரணம் : இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்டது பச்சையப்பன் கல்லூரி.
அ) கூற்று தவறு, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் சரி
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
பகுதி - II
மதிப்பெண்கள் : 24
பிரிவு - அ (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 2 = 6)
15. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
16. ஞாலத்தின் பெரியது எது?
17. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது — விளக்கம் தருக.
18. "முன்னம் ஓர்நாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்" — யார், யாரைப் பற்றிக் கூறியது?
பிரிவு - ஆ (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 2 = 4)
19. "தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்" நூல் பற்றிக் குறிப்பு வரைக.
20. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை — குறிப்பு வரைக.
21. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
பிரிவு - இ (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு விடை தருக. (7 × 2 = 14)
22. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
23. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான் ; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்."
24. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
கலை, களை, கழை (அல்லது) தலை, தளை, தழை
25. உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக: கிணற்றுத் தவளை போல
26. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக: அ) அருங்கானம் (அல்லது) ஆ) செல்லிடத்து
27. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக: அ) வியந்து (அல்லது) ஆ) கலங்கி
28. கலைச்சொல்லாக்கம் தருக: அ) Hardware ஆ) Culture
29. திருவளர்ச்செல்வன், திருவளர்செல்வன் — இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
30. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க:
"மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்."
பகுதி - III
மதிப்பெண்கள் : 24
பிரிவு - அ (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
31. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் / செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்" — இத்தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
32. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
33. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
34. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு - ஆ (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
35. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
36. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
37. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
38. மணந்தகம் — விளக்குக.
பிரிவு - இ (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 4 = 12)
39. அ) நிரல் நிறை அணியைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் / ஏமப் புணையைச் சுடும்" — இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
40. தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பம் எழுதுக.
41. இலக்கிய நயம் பாராட்டுக: (மையக் கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்கள் மட்டும்)
"வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரைகொண்டு விண்ணையிடிக்குது ;
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா !" — பாரதியார்
42. தமிழாக்கம் தருக:
1. Learning is a treasure that will follow its owner everywhere.
2. A new language is a new life.
3. The limits of my language are the limits of my world.
4. Knowledge of languages is the doorway to wisdom.
43. வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக.
பகுதி - IV
மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (3 × 6 = 18)
44. அ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.
(அல்லது)
ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
45. அ) நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது — எவ்வாறு? விளக்குக.
46. அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
(அல்லது)
ஆ) புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.
பகுதி - V
மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. (4 + 2 = 6)
47. அ) "துன்பு உளது எனின்..." எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக. (4 மதிப்பெண்கள்)
ஆ) 'மிகும்' என முடியும் குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)