12th Tamil Quarterly Exam 2026 - Thoothukudi District Question Papers


12th Tamil Quarterly Exam 2026 - Thoothukudi District Question Papers

தூத்துக்குடி மாவட்டம் பதிவு எண்: ____________

காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026

வகுப்பு - 12 — பொதுத்தமிழ்
கால அளவு : 3.00 மணி நேரம் மொத்த மதிப்பெண்கள் : 90
பகுதி - I மதிப்பெண்கள் : 14
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: (14 × 1 = 14)
1) 'செம்பரிதி'... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சூரிய நிழல்
ஈ) சர்ப்ப யாகம்
2) 'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) புறநானூறு
இ) திருக்குறள்
ஈ) குறுந்தொகை
3) தமிழில் திணைப்பாகுபாடு _______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட் குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க் குறிப்பு
ஈ) எழுத்துக் குறிப்பு
4) "இவற்றை வாயிலுக்கே சென்று வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
5) பொருந்தாத சொல்லைத் தேர்க:
அ) உறுப்பினர்
ஆ) குழுவினர்
இ) இயக்குனர்
ஈ) ஊரினர்
6) கம்பர் தாம் இயற்றிய இராமாயணத்திற்கு இட்ட பெயர்
அ) கம்பராமாயணம்
ஆ) இராம நாடகம்
இ) இராமாயணம்
ஈ) இராமாவதாரம்
7) கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம் துணி சார்ந்ததாகவே இருந்தது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் சரி
8) 'Habitat' என்பதன் தமிழ்ச்சொல்
அ) பண்பாடு
ஆ) வாழிடம்
இ) பழக்கம்
ஈ) உறவு முறை
9) சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் கொண்டிருந்த சின்னம்
அ) வில்
ஆ) புலி
இ) மீன்
ஈ) யானை
10) பொருத்துக:
அ) அன்பும் அறனும் — 1. பண்புத்தொகை
ஆ) நன்கலம் — 2. ஆகுபெயர்
இ) மறத்தல் — 3. எண்ணும்மை
ஈ) உலகு — 4. தொழிற்பெயர்
அ) 2, 1, 4, 3
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 1, 4, 2, 3
11) 'கடகம்' என்ற சொல்லின் பொருள்
அ) விதைப்பெட்டி
ஆ) ஓலைப்பெட்டி
இ) உடல்
ஈ) திண்ணை
12) பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
ஆ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது
இ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகின்றன
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
13) 'கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை இயக்கியவர்
அ) உத்தம சோழன்
ஆ) புதுமைப் பித்தன்
இ) நெல்லையப்பர்
ஈ) பூமணி
14) கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) தினையளவு செய்த உதவி
இ) பயனை ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
ஈ) செய்யாமல் செய்த உதவி
பகுதி - II மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 2 = 6)
15) கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16) இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
17) 'மஸ்னவி' — சிறுகுறிப்பு வரைக.
18) செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவர் உரைப்பன யாவை?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 2 = 4)
19) 'தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
20) சென்னையின் பழமை மற்றும் அறிவுப்புரட்சியின் அங்கமாக விளங்கும் நூலகங்கள் எவை?
21) சங்ககாலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு விடை தருக: (7 × 2 = 14)
22) பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
23) உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக: அச்சாணி இல்லாத தேர் போல
24) கீழ்க்காணும் சொல்லுருபைப் பிரித்தும் சேர்த்தும் இரு வேறு தொடர்களை அமைக்க: முன்
25) ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக:   அ) கலங்கி   |   ஆ) பொலிந்தான்
26) ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக:   அ) அருங்கானம்   |   ஆ) தனியாழி
27) மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக: கலை, களை, கழை
28) கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் அமைக்க: குதிரை, வேகம், ஓடு, தாவு
29) மரபுப் பிழைகளை நீக்குக: பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
30) 'முடிந்தால் தரலாம்', 'முடித்தால் தரலாம்' — இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க.
பகுதி - III மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8)
31) வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
32) 'ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்' — இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
33) சினத்தினால் வரும் கேட்டினைக் கூறுக.
34) குகனோடு ஐவராகி வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8)
35) மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36) தாயும், தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
37) சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து எழுதுக.
38) பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் — விளக்குக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 4 = 12)
39) அ) ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை / பண்பும் பயனும் அது" — இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
40) இலக்கிய நயம் பாராட்டுக: (மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக)
"முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள் கூட்டி சொற்சங்க மாகச் சுவை மிகுந்த கவிகூட்டி அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி!" — கண்ணதாசன்
41) பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக:
அ) வாய்மையே வெல்லும்   (அல்லது)   ஆ) ஆனைக்கும் அடி சறுக்கும்
42) அ) வாகைத்திணையைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) கூதிர்ப்பாசறைத் துறையைச் சான்றுடன் விளக்குக.
43) தமிழாக்கம் தருக:
1. Learning is a treasure that will follow its owner everywhere.
2. If you want people to understand you, speak their languages.
3. A new language is a new life.
4. Look before you leap.
பகுதி - IV மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: (3 × 6 = 18)
44) அ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.
(அல்லது)
ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
45) அ) நீவிர் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது — எவ்வாறு? விளக்குக.
46) அ) 'உரிமைத் தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
(அல்லது)
ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரி.
பகுதி - V மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. (4 + 2 = 6)
47) அ) 'குகனொடும்'... எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல். (4 மதிப்பெண்கள்)
ஆ) 'மிகும்' என முடியும் திருக்குறள். (2 மதிப்பெண்கள்)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url