புதுக்கோட்டை மாவட்டம்
தேர்வு எண் : ____________
காலாண்டுத் தேர்வு - 2026
XII - தமிழ்
காலம் : 3.00 மணி
மதிப்பெண் : 90
பகுதி - 1
மதிப்பெண்கள் : 14
குறிப்பு: 1) அனைத்து வினாக்களுக்கும் விடைதருக. 2) ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். (14 × 1 = 14)
1. ச.த.சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்?
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறித்தவமும் தமிழும்
2. "மீண்டுமந்தப் பழமை நலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமை நலம் என்பது —
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது | 2) பொதிகையில் தோன்றியது | 3) வள்ளல்களைத் தந்தது
அ) 1 மட்டும் சரி
ஆ) 1, 2 இரண்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 1, 3 இரண்டும் சரி
3. 'செம்பரிதி.....' எனத்தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம்
ஈ) சூரியநிழல்
4. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர் நிலைகள்
5. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் — காரணம்:
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ, ஆ, இ அனைத்தும்
6. 'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்:
அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ) குறுந்தொகை
ஈ) புறநானூறு
7. "தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்" — அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு:
அ) உரிச்சொல் தொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) இடைச்சொல் தொடர்
8. தமிழில் திணைப்பாகுபாடு _______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்குறிப்பு
ஈ) எழுத்துக்குறிப்பு
9. 'முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான்' — இவ்வடிகளில் கம்பர் 'ஓர் மூலம் இல்லான்' என்று யாரைக் கூறுகிறார்?
அ) சுக்ரீவன்
ஆ) இலக்குவன்
இ) இராமன்
ஈ) குகன்
10. ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' என்று கூறும் நூல்?
அ) குறுந்தொகை
ஆ) நெடுநல்வாடை
இ) தண்டி
ஈ) கம்பராமாயணம்
11. 'இன்று' என்ற கவிதைக் குறும்படத்தை இயக்கியவர்:
அ) நக்கீரர்
ஆ) அய்யப்பமாதவன்
இ) கம்பர்
ஈ) மயிலையார்
12. சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்:
அ) பதிற்றுப்பத்து
ஆ) கம்பராமாயணம்
இ) திருக்குறள்
ஈ) நாலடியார்
13. சிற்பி பாலசுப்பிரமணியம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்?
அ) நிலவுப்பூ
ஆ) நெடுநல்வாடை
இ) குறுந்தொகை
ஈ) ஒரு கிராமத்து நதி
14. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
அ) நான்கு
ஆ) எட்டு
இ) இரண்டு
ஈ) ஐந்து
பகுதி - 2
மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
குறிப்பு: எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 2 = 6)
15. அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
16. மறக்கக்கூடியது, மறக்கக்கூடாதது எவற்றை என வள்ளுவர் கூறுகிறார்?
17. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' — விளக்கம் தருக.
18. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
குறிப்பு: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 2 = 4)
19. இந்தோ-சாரசனிக் கட்டடக் கலை — குறிப்பு வரைக.
20. மயிலையாரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்த இதழ்கள் யாவை?
21. புக்கில், தன்மனை — சிறு குறிப்பு வரைக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
குறிப்பு: எவையேனும் ஏழனுக்கு விடை தருக. (7 × 2 = 14)
22. உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக:
உள்ளங்கை நெல்லிக்கனி போல (அல்லது) எலியும் பூனையும் போல
23. கலைச்சொல் தருக: அ) Hardware ஆ) Culture
24. மயங்கொலிச் சொற்களைத் தொடர் அமைத்து எழுதுக: தலை, தளை, தழை
25. நான்கு சொற்களைக் கொண்டு தொடர் அமைக்க: குழந்தை, நட, தளிர்நடை, விழு
26. இலக்கணக் குறிப்பு தருக: 1) வளைஇ 2) செற்றவர்
27. உறுப்பிலக்கணம் தருக. (ஏதேனும் ஒன்று): 1) உயர்ந்தோர் | 2) பொலிந்தான்
28. புணர்ச்சி விதி கூறுக. (ஏதேனும் ஒன்றிற்கு மட்டும்): அ) அருங்கானம் | ஆ) ஆங்கவற்றுள்
29. சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இரு தொடர்களாக்குக:
அ) முன் |
ஆ) கொண்டு
30. 'திருவளர்செல்வன்', 'திருவளர்ச் செல்வன்' — இதில் எது சரியானது? ஏன்?
பகுதி - 3
மதிப்பெண்கள் : 28
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
குறிப்பு: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
31. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
32. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
33. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
34. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினை விளக்கி எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
குறிப்பு: எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
35. நாரண துரைக்கண்ணன் கூறும் மயிலையார் பற்றிய உருவ விவரிப்பைக் கூறுக.
36. சென்னை அறிவின் நகரம் — விளக்குக.
37. தாயும், தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்கு செய்யும் உதவிகள் யாவை?
38. 'மணந்தகம்' — விளக்குக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
குறிப்பு: எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 4 = 12)
39. அ) நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) ஏகதேச உருவக அணி — விளக்குக.
40. மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக:
"வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!" — பாரதியார்
41. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக:
1) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்
2) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன
3) காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்
4) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்
42. தமிழாக்கம் தருக:
1) A new language is a new life.
2) If you want people to understand you, speak their language.
3) Knowledge of languages is the doorway to wisdom.
4) The limits of my language are the limits of my world.
பகுதி - 4
மதிப்பெண்கள் : 18
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (3 × 6 = 18)
43. அ) நெடுநல் வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
(அல்லது)
ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
44. அ) மயிலையார் ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதை சான்றுடன் நிறுவுக.
(அல்லது)
ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனிதச் சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது — எவ்வாறு? விளக்குக.
45. அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
(அல்லது)
ஆ) சொல்லோவியங்கள் (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளியாசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரலை உருவாக்குக.
பகுதி - 5
மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. (4 + 2 = 6)
46. அ) "துன்பு உளதெனின்..." — எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக. (4 மதிப்பெண்கள்)
ஆ) "...நன்று" — என முடியும் திருக்குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)