12th Tamil Quarterly Exam 2026 - Sivagangi District Question Paper


12th Tamil Quarterly Exam 2026 - Sivagangi District Question Paper

SVG | சிவகங்கை மாவட்டம் Reg. No.: 11 2319

காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026

பன்னிரண்டாம் வகுப்பு — பொதுத்தமிழ்
நேரம் : 3.00 மணி மதிப்பெண்கள் : 90
குறிப்பு: 1. விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
2. வினாத்தாளின் அச்சுப் பதிவைச் சரிபார்த்துக் கொள்ளவும். தெளிவின்மை இருப்பின் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
பகுதி - I மதிப்பெண்கள் : 14
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (14 × 1 = 14)
1. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேரிலாத தமிழ்" — இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களைத் தேர்வு செய்க.
அ) அடிமோனை, அடிஎதுகை
ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிஎதுகை, சீர்மோனை
ஈ) சீர்எதுகை, அடிமோனை
2. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் எது?
அ) மத்த விலாசம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சறைத் தும்பி
ஈ) திசை எட்டும்
3. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
4. தமிழ் எழுத்தாளர் சங்கம் மயிலையாரைப் பாராட்டிக் கேடயம் வழங்கிய ஆண்டு:
அ) 1960
ஆ) 1961
இ) 1962
ஈ) 1963
5. 'நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது' என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
6. 'யார்?', 'எது?' ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே:
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
7. கடலின் பெரியது எது?
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ) தினையளவு செய்த உதவி
ஈ) தகுதியறிந்து செய்த உதவி
8. 'சிறியோரை இகழ்தல் இலமே' என்பது அந்நற்பண்பின் _______
அ) வளர்ச்சி
ஆ) மலர்ச்சி
இ) முதிர்ச்சி
ஈ) தொடர்ச்சி
9. 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒரு சத்தி பிறக்குது மூச்சினிலே' — என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது:
அ) தனிக்குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தைவழிச் சமூக முறை
10. சூஃபி தத்துவப் படைப்பான 'மஸ்னவி' _______ பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அ) 26,500
ஆ) 25,500
இ) 25,600
ஈ) 26,600
11. 'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை:
அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வேளாண்மை
12. 'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்:
அ) நகுலன்
ஆ) பிரமிள்
இ) அய்யப்ப மாதவன்
ஈ) சிற்பி
13. 'மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' எனக் கூறும் நூல்:
அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) கலித்தொகை
ஈ) ஐங்குறுநூறு
14. 'வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும்' எனக் கூறும் நூல்:
அ) தொல்காப்பியம்
ஆ) நிகண்டு
இ) நன்னூல்
ஈ) ஆத்திசூடி
பகுதி - II மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 2 = 6)
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
17. செல்வம் நிலைத்திருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
18. 'புக்கில்', 'தன்மனை' — சிறுகுறிப்பு எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 2 = 4)
19. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்துச் சிறுகுறிப்பு எழுதுக.
20. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
21. 'குழிமாற்று' முறை குறித்துக் குறிப்பு வரைக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு விடை தருக. (7 × 2 = 14)
22. உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக:
அ) அச்சாணி இல்லாத தேர் போல   (அல்லது)   ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல
23. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) கலை, களை, கழை   (அல்லது)   ஆ) தலை, தளை, தழை
24. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம் உண்மையானவற்றை தெரிந்து கொண்டு அறியாமையினை அகற்றி பல நல்லெனவற்றை கற்று கொடுக்கும்."
25. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக ஆக்குக :
காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
26. 'திருவளர்ச்செல்வன்', 'திருவளர்செல்வன்' — இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
27. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க:
அ) முன்   (அல்லது)   ஆ) தானே
28. பகுபத உறுப்பிலக்கணம் தருக:
அ) சாய்ப்பான்   (அல்லது)   ஆ) கலங்கி
29. புணர்ச்சி விதி தருக:
அ) இனநிரை   (அல்லது)   ஆ) வெங்கதிர்
30. கலைச்சொல் தருக:   i) Matriarchy    ii) Habitat
பகுதி - III மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
31. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
32. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
33. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.
34. சினத்தால் வரும் கேடுகளைக் கூறுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. சென்னை "அறிவின் நகரம்" என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
37. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில், குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
38. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 4 = 12)
39. அ) பொருள் வேற்றுமை அணியை விளக்குக.
(அல்லது)
ஆ) கீழ்க்காணும் திருக்குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக:
'சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் / ஏமப் புணையைச் சுடும்'
40. பின்வரும் செய்யுள் பகுதியின் இலக்கிய நயம் பாராட்டுக: (மையக்கருத்துடன் எவையேனும் மூன்று நயங்களை எழுதுக)
"பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக்காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வக் கவி பாரதி ஓர் ஆசான் திண்ணம்!" — நாமக்கல் கவிஞர்
41. பின்வரும் பழமொழிகளுள் ஒன்றை வாழ்க்கை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி எழுதுக:
அ) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை   (அல்லது)   ஆ) எறும்பு ஊரக் கல்லும் தேயும்
42. i) கீழ்க்காணும் நான்கு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) விண்மீன், ஒளிர், எரி, விழு   (அல்லது)   ஆ) குழந்தை, நட, தளிர்நடை, விழு
ii) புதிருக்கேற்ற விடையைக் கண்டறிக:
அ) அடைமழை பெய்த அடுத்த நாள் படைபடையாய் வந்ததாம் பாங்கி நாட்டு விமானம்; எதிரி சுடாமலேயே இறகொடிந்து இறந்ததாம் — அது என்ன?
ஆ) தண்ணீரும் மழையும் இல்லாமல் பயிர் பச்சையாய் இருக்கிறது; பாக்கு வெற்றிலை போடாமல் வாய் சிவப்பாய் இருக்கிறது — அது என்ன?
43. தமிழாக்கம் தருக:
1. The limits of my language are the limits of my world.
2. If you want people to understand you, speak their language.
3. Knowledge of language is the doorway to wisdom.
4. A new language is a new life.
பகுதி - IV மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்க. (3 × 6 = 18)
44. அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
ஆ) 'செய்ந்நன்றியறிதலே அறம்' என்பதை வாயுறை வாழ்த்தின் (திருக்குறள்) துணை கொண்டு நிறுவுக.
45. அ) 'குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது' — எவ்வாறு? விளக்குக.
(அல்லது)
ஆ) பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் - மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்துரைக்க.
46. அ) 'உரிமைத் தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
(அல்லது)
ஆ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலனை விவரிக்க.
பகுதி - V மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. (4 + 2 = 6)
47. அ) 'துன்பு உளது...' எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக. (4 மதிப்பெண்கள்)
ஆ) 'மிகும்' என முடியும் திருக்குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url