12th Tamil Quarterly Exam 2026 - Tenkasi District Question Paper


12th Tamil Quarterly Exam 2026 - Tenkasi District Question Paper

தென்காசி மாவட்டம் Tsi12T

காலாண்டுப் பொதுத் தேர்வு - செப்டம்பர் 2026

வகுப்பு 12 — பொதுத்தமிழ்
கால அளவு: 3.00 மணிநேரம் மதிப்பெண்கள்: 90
அறிவுரைகள்: 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும், அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: விடைகள் தெளிவாகவும், குறிப்பிட்ட அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I மதிப்பெண்கள்: 14
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்: (14 × 1 = 14)
1) அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்
அ) இலக்கண விளக்கம்
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) முத்துவீரியம்
2) பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
3) ''மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது  |  2) பொதிகையில் தோன்றியது  |  3) வள்ளல்களைத் தந்தது
அ) 1 மட்டும் சரி
ஆ) 1, 2 இரண்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 1, 3 இரண்டும் சரி
4) சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 1812
ஆ) 1837
இ) 1857
ஈ) 1914
5) பொருத்தி விடை தேர்க:
அ) அவன், அவள், அவர் — 1. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் — 2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் — 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம் — 4. பதிலிப் பெயர்கள்
அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 1, 2
6) கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
அ) கூற்று சரி, காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று தவறு, காரணம் தவறு.
ஈ) கூற்று சரி, காரணம் சரி.
7) கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ) தினையளவு செய்த உதவி
ஈ) செய்யாமல் செய்த உதவி
8) பொருத்துக:
அ) அன்பும் அறனும் — 1. பண்புத்தொகை
ஆ) நன்கலம் — 2. ஆகுபெயர்
இ) மறத்தல் — 3. எண்ணும்மை
ஈ) உலகு — 4. தொழிற்பெயர்
அ) 2, 1, 4, 3
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 1, 4, 2, 3
9) 'என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்' என்ற அடி இடம்பெற்ற நூல் எது?
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) குறுந்தொகை
10) பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்.
இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்.
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்.
11) 'கம்பர்' தம் நூலுக்கு இட்ட பெயர்
அ) கம்பராமாயணம்
ஆ) வால்மீகி ராமாயணம்
இ) சீறாப்புராணம்
ஈ) இராமாவதாரம்
12) 'குடும்பம்' என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ) குறுந்தொகை
ஈ) புறநானூறு
13) பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க:
அ) செற்றார் — 1. மகிழ்ச்சி
ஆ) கிளை — 2. காடு
இ) உவகை — 3. பகைவர்
ஈ) கானம் — 4. உறவினர்
அ) 3, 2, 4, 1
ஆ) 2, 4, 3, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 4, 1, 3
14) "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
பகுதி - II மதிப்பெண்கள்: 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 2 = 6)
15) விடியல், வனப்பு — இருசொற்களையும் ஒருங்கே அமைத்து ஒரு தொடர் எழுதுக.
16) நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது — விளக்கம் தருக.
17) மறக்கக்கூடாதது, மறக்கக்கூடியது எவற்றை?
18) இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 2 = 4)
19) 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
20) இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை — குறிப்பு வரைக.
21) சங்க காலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு விடை தருக: (7 × 2 = 14)
22) உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக:
அ) அச்சாணி இல்லாத தேர் போல   (அல்லது)   ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல
23) பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
24) பொருத்தமான வேற்றுமையுருபுகளைச் சேர்த்து முறையான தொடராக்குக:
காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
25) கலைச்சொல்லாக்கம் தருக:   அ) Museum    ஆ) Matriarchy
26) ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக:   அ) விளங்கி   |   ஆ) பொலிந்தான்
27) ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக:   அ) வெங்கதிர்   |   ஆ) இனநிரை
28) வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்."
29) மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) விலை, விளை, விழை   (அல்லது)   ஆ) கலை, களை, கழை
30) குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்:
(கோதை, தமிழ் ஒளி, மறைமலை அடிகள், புதுமைப்பித்தன்)
அ) தாய்மொழி; ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்.
ஆ) சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம்.
பகுதி - III மதிப்பெண்கள்: 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8)
31) 'ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்' — இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
32) "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
33) எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? குறள்வழி விளக்குக.
34) குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8)
35) மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36) சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
37) தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
38) பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் — விளக்கம் எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 4 = 12)
39) கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக:
''சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் / ஏமப் புணையைச் சுடும்''
(அல்லது)
நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக.
40) வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
கூதிர்ப்பாசறை துறையைச் சான்றுடன் விளக்குக.
41) இலக்கிய நயம் பாராட்டுக: (பாடலின் மையக்கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக)
"பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க ஊற்றெடுத்த அன்புரையால் உலுங்க நீக்க உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்துவிட்ட தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்." — நாமக்கல் கவிஞர்
42) தமிழாக்கம் தருக:
1) A new language is a new life.
2) Learning is a treasure that will follow its owner everywhere.
3) Knowledge of languages is the doorway to wisdom.
4) If you want people to understand you, speak their language.
43) மாதிரி தன் விவரப் படிவம் எழுதுக.
[செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: "தமிழ்" என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது... — வினாக்கள்: அ) பிங்கல நிகண்டு தமிழைப் பற்றி நூற்பாவில் குறிப்பிடுவதைக் கூறுக. ஆ) தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை? இ) தேவாரத்தில் 'தமிழ்' என்ற சொல் தரும் பொருள் யாது? ஈ) தமிழ்மாலை என்று தமிழைப் புகழும் நூல் எது?]
பகுதி - IV மதிப்பெண்கள்: 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: (3 × 6 = 18)
44) அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
45) அ) நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் "ஆராய்ச்சிப் பேரறிஞர்" என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.
46) அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலத்தை விவரிக்க.
(அல்லது)
ஆ) 'உரிமைத்தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
பகுதி - V மதிப்பெண்கள்: 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக: (4 + 2 = 6)
47) அ) ''துன்பு உளது எனின்...'' எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக. (4 மதிப்பெண்கள்)
(அல்லது)
ஆ) 'மிகும்' என முடியும் குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url