12th Tamil Quarterly Exam 2026 - Nilgiris District Question Paper and Answer Keys


12th Tamil Quarterly Exam 2026 - Nilgiris District Question Paper and Answer Keys

நீலகிரி மாவட்டம் [16.09.2026] 12 P | Reg. No.: ____________

காலாண்டுத் தேர்வு - 2026

12-ஆம் வகுப்பு — பொதுத்தமிழ்
நேரம் : 3.00 மணி மதிப்பெண்கள் : 90
பகுதி - I மதிப்பெண்கள் : 14
பலவுள் தெரிக (அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க) (14 × 1 = 14)
1. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்:
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறித்துவமும் தமிழும்
2. பிழையான தொடரைக் கண்டறிக:
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
3. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே:
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
4. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் _______
அ) சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) ஞாலத்தின் மாணப் பெரிது
இ) தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) நன்மை கடலின் பெரிது
5. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க:
அ) செற்றார் — 1) மகிழ்ச்சி
ஆ) கிளை — 2) காடு
இ) உவகை — 3) பகைவர்
ஈ) கானம் — 4) உறவினர்
அ) 2, 4, 1, 3
ஆ) 3, 2, 4, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 3, 4, 1, 2
6. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுடன் பொருந்துவதைத் தேர்க:
அ) தேவையான இடங்களில் இடைவெளிவிடாமல் எழுதுவது.
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுவது
இ) நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுவது
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
7. 'நுந்தை' — இலக்கணக்குறிப்பு தருக:
அ) இடைக்குறை
ஆ) மரூஉ
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
8. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழைமேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
9. FIELD STUDY — இணையான தமிழ்ச்சொல் தேர்க:
அ) கவின்கலைகள்
ஆ) கள ஆய்வு
இ) கல்வெட்டு ஆய்வு
ஈ) ஆராய்ச்சி
10. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் கொடியில் இருந்த சின்னம்:
அ) யானை
ஆ) மீன்
இ) வில்
ஈ) புலி
11. "திருவல்லிக்கேணி" ஆற்றின் தற்போதைய பெயர்:
அ) காவிரி
ஆ) பாலாறு
இ) கொற்றவை
ஈ) கூவம்
12. "உரிமைத்தாகம்" சிறுகதையின் ஆசிரியர்:
அ) உத்தமசோழன்
ஆ) பூமணி
இ) சிற்பி
ஈ) தண்டி
13. 'செம்பரிதி' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
அ) ஒளிப்பறவை
ஆ) சர்ப்பயாகம்
இ) நிலவுப்பூ
ஈ) சூரியநிழல்
14. பசுக்கள் _______
அ) குளிரால் நடுங்கின
ஆ) மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) மேய்ச்சலை மறந்தன
ஈ) கன்றுகளைத் தவிர்த்தன
பகுதி - II மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 2 = 6)
15. தண்டியலங்காரம் — குறிப்பு வரைக.
16. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
17. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
18. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' — விளக்கம் தருக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 2 = 4)
19. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
20. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
21. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு விடை தருக: (7 × 2 = 14)
22. பகுபத உறுப்பிலக்கணம் தருக:   அ) விளங்கி   (அல்லது)   ஆ) சாய்ப்பான்
23. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக: அலை, அளை, அழை
24. புணர்ச்சி விதி தருக:   அ) அருங்கானம்   (அல்லது)   ஆ) ஆங்கவற்றுள்
25. உவமைத் தொடரைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக:   அ) உள்ளங்கை நெல்லிக்கனி போல   (அல்லது)   ஆ) கிணற்றுத்தவளை போல
26. 'திருவளர்ச்செல்வன்', 'திருவளர்செல்வன்' — இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
27. பொருள் தருக:   அ) ஏமம்   |   ஆ) திரு
28. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்."
29. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக: வானம், பற, நிலவு, தொடு
30. தமிழாக்கம் தருக:
1) The limits of my language are the limits of my world.
2) Knowledge of languages is the doorway to wisdom.
பகுதி - III மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8)
31. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
32. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
33. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.
34. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8)
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விவரி.
36. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
37. சிலம்பு கழி நோன்பு — விளக்குக.
38. புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 4 = 12)
39. அ) பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) "சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் / ஏமப் புணையைச் சுடும்" — இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
40. இலக்கிய நயம் பாராட்டுக:
"வெட்டி யடிக்குது மின்னல் கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது கொட்டி யிடிக்குது மேகம் - கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் எட்டுத்திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!" — பாரதியார்
41. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்தெழுதுக:
அ) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை   (அல்லது)   ஆ) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
42. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக:
அ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
ஆ) குமரன் வீடு பார்த்தேன்.
இ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்?
ஈ) காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
பகுதி - IV மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: (3 × 6 = 18)
43. அ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் வழி விவரி.
(அல்லது)
ஆ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
44. அ) நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது — விவரி.
45. அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீவிர் அறிந்த மொழிப்பற்று மற்றும் சமூகப்பற்றினை விவரி.
(அல்லது)
ஆ) 'உரிமைத்தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
பகுதி - V மதிப்பெண்கள் : 6
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக (அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக): (4 + 2 = 6)
46. அ) 'குகனொடும்...' எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல். (4 மதிப்பெண்கள்)
ஆ) 'மகற்கு' என முடியும் திருக்குறள். (2 மதிப்பெண்கள்)
நீலகிரி மாவட்டம் [16.09.2026]

காலாண்டுத் தேர்வு - 2026

12-ஆம் வகுப்பு — தமிழ் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு
மொத்த மதிப்பெண்கள் : 90
பகுதி - I : பலவுள் தெரிக (மதிப்பெண்கள்: 14)
1. ஈ) கிறித்துவமும் தமிழும்
2. இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
3. ஆ) உயர்திணை, அஃறிணை
4. இ) தெய்வத்துள் வைக்கப்படும்
5. ஈ) 3, 4, 1, 2
6. இ) நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுவது
7. ஆ) மரூஉ
8. இ) மழைத்துளிகள்
9. ஆ) கள ஆய்வு
10. அ) யானை
11. ஈ) கூவம்
12. ஆ) பூமணி
13. இ) நிலவுப்பூ
14. ஈ) கன்றுகளைத் தவிர்த்தன
பகுதி - II (குறுவினாக்கள்)
பிரிவு - 1 (செய்யுள்)
15. தண்டியலங்காரம்: அணி இலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்களுள் ஒன்று தண்டியலங்காரம். இந்நூலின் ஆசிரியர் தண்டி. இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
16. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகள்: இராமன் சுக்ரீவனைச் சந்தித்த போது, நண்பனாக ஏற்று "இனி நான் கூற ஏதும் இல்லை; விண்ணிலும் மண்ணிலும் உன் பகைவர் என் பகைவர்; உன் நண்பர்கள் என் நண்பர்கள்; உன் கிளையினர் என் கிளையினர்; அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்; நீ என் இன்னுயிர் நண்பனாவாய்" என்று கூறினான்.
17. செல்வம் இருப்பதற்கான வழி: ஒருவருடைய செல்வம் குறையாமல் இருப்பதற்கான வழி எதுவென்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாமல் வாழ்தலாகும்.
18. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது: பெய்த மழையால் நகர மாசுகள் அகற்றப்பட்டன. மழை விலகி, தீடீரென வெளிப்பட்ட சூரிய வெளிச்சத்தால் புதுப்பொலிவு பெறுகிறது நகரம். இதனை 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாய் விளங்குகிறது' என்கிறார் கவிஞர்.
பிரிவு - 2 (உரைநடை)
19. சங்ககாலத் தாய்வழிச் சமூகத்தில் பெண்கள் பெற்ற உரிமைகள்: திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்ந்தாள். குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்குப் பெண்களே உரியவர்களாயினர். குடும்பத்தின் சொத்துவளங்களும் செல்வங்களும் பெண்களுக்குரியதாகச் சேர்ந்தன.
20. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்: 1869-இல் உருவாக்கப்பட்டது. 'காலின் மெக்கன்சியின்' தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. அரிய ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் என்பன போன்ற பெரும் வரலாற்றுத் தொகுப்புகள் இங்குப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
21. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்': கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முதல் நூல் 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்'. தமிழ்ச் சமூகம் தன் அழகுக் கலைச் செல்வங்களை மறந்து, தன் பெருமை அறியாச் சமூகமாக இருந்த நிலையினைக் கண்டு மயிலை சீனி. வேங்கடசாமி இந்நூலை எழுதினார்.
பிரிவு - 3 (இலக்கணம், மொழிப்பயிற்சி)
22. பகுபத உறுப்பிலக்கணம்: விளங்கி = விளங்கு + இ (விளங்கு - பகுதி; இ - வினையெச்ச விகுதி). (அல்லது) சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆன் (சாய் - பகுதி; ப் - சந்தி; ப் - எதிர்கால இடைநிலை; ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி).
23. மயங்கொலிச் சொற்கள்: அளையுள் இருந்த பாம்பைப் பிடிக்க, அலைந்து திரிந்த பாம்பாட்டியை அழைத்து வந்தேன்.
24. புணர்ச்சி விதி: அருங்கானம் = அருமை + கானம் (விதி: ஈறுபோதல், இனமிகல்). (அல்லது) ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் (விதி: உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே).
25. உவமைத் தொடர்: அ) அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடித்து வெற்றிப்படியில் காலடி பதிக்கும் நாடுகளால், அகிம்சைக் கொள்கையின் பெருமை உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகப் புலப்படுகிறது. (அல்லது) ஆ) ஏட்டுக்கல்வியோடு மட்டுமே வாழும் மாணவர்கள் கிணற்றுத் தவளை போல உலகியல் அறிவு இல்லாமல் வாழ்கிறார்கள்.
26. சரியான தொடர்: திருவளர் செல்வன். காரணம்: 'வளர்செல்வன்' என்பது வினைத்தொகை. 'வினைத்தொகைச் சொல்லுக்கு இடையில் வல்லினம் மிகாது' என்பது இலக்கண விதி.
27. பொருள் தருக: அ) ஏமம் — பாதுகாப்பு  |  ஆ) திரு — செல்வம்
28. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுதல்: மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
29. நான்கு சொற்கள் தொடர்: வானத்தில் பறப்போம்; பறந்து நிலவைத் தொடுவோம்.
30. தமிழாக்கம்: அ) எனது மொழியின் எல்லையே எனது உலகின் எல்லையாகும். ஆ) மொழியறிவு என்பது அறிவின் நுழைவாயிலாகும்.
பகுதி - III (சிறுவினாக்கள்)
பிரிவு - 1 (செய்யுள்)
31. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம்:
* இடம்: ஜலாலுத்தீன் ரூமியின் 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது (மொழிபெயர்ப்பு: என். சத்தியமூர்த்தி).
* விளக்கம்: விருப்பு வெறுப்பின்றி நம்மை வந்தடையும் வக்கிரம், அவமானம், வஞ்சனை முதலானவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொன்றும் தொலைதூரத்திலிருந்து நமக்கு வழிகாட்டுவதற்காகவே அனுப்பப்படுகின்றன.
32. சினத்தால் வரும் கேடுகள்: சினத்தாலேயே தீமையான விளைவுகள் ஏற்படுவதால் யாரிடத்திலும் சினம் கொள்வதை மறந்துவிட வேண்டும். சினத்தைவிட அழிக்கின்ற பகை வேறு இல்லை. ஒருவன் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்; அப்படிக் காக்காவிட்டால் கொண்ட சினம் அவனையே அழித்துவிடும்.
33. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகள்: இராமன் வேடனாகிய குகனிடம் நட்புப் பாராட்டி ஐந்தாம் உடன்பிறந்தானாக ஏற்றான். கிட்கிந்தையில் சுக்ரீவனை "உன் சுற்றம் என் சுற்றம்; நீ என் இன்னுயிர் துணைவன்" எனக் கூறி ஆறாம் உடன்பிறந்தானாக ஏற்றான். சீதையைக் கவர்ந்து வந்தது தவறு எனக் கூறித் தன்னிடம் அடைக்கலம் புகுந்த வீடணனை ஏழாம் உடன்பிறந்தானாக ஏற்றான்.
34. வாடைக்காலத்தில் கோவலர்கள் பாதுகாப்பு தேடிய முறை: உலகம் குளிருமாறு பெய்த புதிய பெருமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருகியது. ஆயர்கள் எருமை, பசு, ஆடு நிரைகளை மேடான நிலங்களில் மேய விட்டனர். பலருடன் கூடி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றியும் பற்கள் நடுங்கின; தலையில் சூடிய காந்தள் மாலைகள் கசங்கின.
பிரிவு - 2 (உரைநடை)
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள்: கி.பி. 3 முதல் கி.பி. 9 வரை ஆட்சி புரிந்த மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் வரலாறுகளை எழுதினார். சங்ககால மூவேந்தர்கள், கொங்கு, துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர், இலங்கை குறித்த அரசியல், பண்பாட்டு வரலாற்று ஆய்வு நூல்களையும் தந்தார்.
36. சென்னையின் பண்பாட்டு அடையாளங்கள்: இந்தோ-சாரசனிக் கட்டடக் கலையில் உருவான மத்திய தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம், உயர் நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டடம் முதலியன.
37. சிலம்பு கழி நோன்பு: மணமான பின் தலைவன் தலைவியை அவனது இல்லத்திற்கு அழைத்து வரும்போது, தலைவியின் தாய் அவளது காலில் பிறந்த வீட்டில் அணிந்திருந்த சிலம்பினை நீக்கிப் புதிய அணிகலன்களை அணிவித்துச் செய்யும் சடங்கே சிலம்பு கழி நோன்பாகும்.
38. மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம்: புயல் காரணமாக அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சீரமைக்கக் கோரி உரிய அனுப்புநர், பெறுநர், பொருள், விளிப்பு மற்றும் முறையான விண்ணப்ப அமைப்புடன் கூடிய கடிதம்.
பிரிவு - 3 (அணி, நயம், மொழிப்பயிற்சி)
39. அ) பொருள் வேற்றுமை அணி: இருவேறு பொருள்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறிப் பின்னர் அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி. கதிரவனுக்கும் தமிழுக்கும் உள்ள இருளகற்றும் ஒற்றுமையைக் கூறி, தமிழ் தன்னேரில்லாதது எனப் பிரித்துக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.
(அல்லது) ஆ) ஏகதேச உருவக அணி: குறளில் சுற்றத்தை ஏமப் புணையாக (பாதுகாப்புத் தெப்பமாக) உருவகம் செய்த வள்ளுவர், உலக வாழ்க்கையைக் கடலாக உருவகப்படுத்தாமல் விட்டதால் ஏகதேச உருவக அணி ஆயிற்று.
40. இலக்கிய நயம்: பாரதியாரின் புயல்/மழைப் பாடல். மையக்கருத்து (மின்னல், கடல் அலைகள், மேகம் ஒன்று கூடிப் பேரிரைச்சலுடன் கொட்டும் மழை); எதுகை (வெட்டி, கொட்டி, சட்ட, எட்டு); மோனை (வெட்டி, வீரா; எட்டு, எங்ஙனம்); சுவை (வீரச்சுவை / வியப்பு).
41. பழமொழி விளக்கம் & நிகழ்வு: அ) 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' (ஊரணி தூர்வார ஊர் மக்கள் கூடிப் பணியாற்றி நீர்நிலையை மீட்ட கதை)  |  ஆ) 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' (பிறர் குறைகளை மட்டுமே கண்ட கண்டிப்பான மனிதர் உறவுகளையும் நட்பையும் இழந்த கதை).
42. வேற்றுமை உருபுகளைச் சேர்த்தல்:
அ) சான்றோர்க்கு மதிப்பு கொடுத்தால் வாழ்வில் உயரலாம்.
ஆ) குமரனை வீட்டில் பார்த்தேன்.
இ) மாறனின் பேச்சுத்திறனை யாரால் வெல்ல முடியும்?
ஈ) காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
பகுதி - IV : நெடுவினாக்கள் (மதிப்பெண்கள்: 18)
43. அ) செய்ந்நன்றியறிதல் (திருக்குறள்): முன்னுரை; கைம்மாறு கருதாத உதவி விண்ணுலகையும் மண்ணுலகையும் விடப் பெரியது; தக்க காலத்தில் செய்த உதவி உலகைவிடப் பெரியது; பயன் எதிர்பாராத உதவி கடலைவிடப் பெரியது; தினைத்துணை உதவியைப் பனைத்துணையாகப் போற்றுதல்; செய்ந்நன்றியைக் கொன்றவர்க்கு உய்வில்லை; முடிவுரை.
(அல்லது) ஆ) சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதை நயம்: செந்நிறப் பூக்காடாய் மாலையில் மறையும் சூரியன்; உழைப்பாளர்களின் தோள் வியர்வை; சங்கத்தில் வீற்றிருந்த தமிழின் தொன்மை; தமிழ்க் குயிலாய், சீறும் சிங்கமாய் எழும் புத்துணர்ச்சி அழைப்பு.
44. அ) வியந்து பார்த்த நகரம் (கட்டுரை): முன்னுரை; மதுரை நகரின் தொன்மை; கட்டட அமைப்பு; சங்க கால மதுரை; கலாச்சாரம், உணவு, திருவிழாக்கள்; முடிவுரை.
(அல்லது) ஆ) குடும்ப அமைப்பு முறை: குடும்பம் என்னும் அடிப்படை அலகு; தாய்வழிக் குடும்பம்; தந்தைவழிக் குடும்பம்; தனிக்குடும்பம் மற்றும் கூட்டுக் குடும்பக் கட்டமைப்பு.
45. அ) பாரதியின் கடிதம்: தம்பி நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம்; மொழிப்பற்று (தமிழ்நாட்டை உயர்த்தல், தாய்மொழியில் பேசுதல், அறிவியல் கலைகளைத் தமிழில் வளர்த்தல்); சமூகப்பற்று (பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமத்துவம்).
(அல்லது) ஆ) 'உரிமைத்தாகம்' சிறுகதை: முத்தையனின் குடும்பச் சூழல்; வெள்ளைச்சாமியின் நிலை; நிலத்தை மீட்க அண்ணன் காட்டும் பேருள்ளம், பாசம்; பங்காருசாமியின் வஞ்சகத்தை முறியடித்தல்; உடன்பிறப்பு நெறி.
பகுதி - V : மனப்பாடப்பகுதி (மதிப்பெண்கள்: 6)
46. அ) கம்பராமாயணப் பாடல் (4 மதிப்பெண்கள்):
"குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்; புகல்அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை."
— கம்பர்
ஆ) திருக்குறள் (2 மதிப்பெண்கள்):
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
— திருவள்ளுவர்

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url