12th Tamil Quarterly Exam 2026 - Sivaganga District Answer Key


12th Tamil Quarterly Exam 2026 - Sivaganga District Answer Key

பள்ளிக் கல்வித்துறை — சிவகங்கை மாவட்டம்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு காலாண்டுப் பொதுத்தேர்வு - செப்டம்பர் 2026

பொதுத்தமிழ் — அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு மற்றும் மதிப்பீட்டு நெறிமுறைகள்
கால அளவு: 3.00 மணி மொத்த மதிப்பெண்கள்: 90
விடைத்தாள் மதிப்பிடும் போது ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய பொதுத் தேர்வு வழிமுறைகள்:
  1. நீலம் அல்லது கருப்பு மையினால் எழுதப்பட்டுள்ள விடைகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
  2. விடைகள் சொந்த நடையில் தெளிவாக அமைந்து தொடர்ப் பிழை, சொற்பிழை, எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
  3. எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை, இலக்கணப் பிழை ஒவ்வொன்றிற்கும் கால் (1/4) மதிப்பெண் வீதம் குறைத்து, அவ்வாறு குறைக்கும் மதிப்பெண்கள் எக்காரணம் கொண்டும் வினாவிற்குரிய மொத்த மதிப்பெண்ணில் நான்கில் ஒரு பங்கிற்கு (1/4) மேல் மிகாமல் இருத்தல் வேண்டும்.
  4. மதிப்பெண் வழங்கப்படுகின்ற ஒவ்வொரு சரியான கருத்திற்கும் தனித்தனியே சரியிட்டுக் (✓) குறியிடுதல் வேண்டும். தவறான விடைகளைக் (X) குறியிட்டும், தொடர்ப் பிழைகளை அடிக்கோடிட்டும், ஒற்றுப் பிழைகளைக் (^) குறியிட்டுக் காட்டியும் மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்.
  5. பகுதி-I பலவுள் தெரிவு வினாக்களில், கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்வு குறியீட்டுடன் (Option code) விடையினையும் சேர்த்து எழுதினால் மட்டுமே மதிப்பெண் வழங்குதல் வேண்டும்.
  6. வினா எண் குறிப்பிடாத விடைகளுக்கோ அல்லது தவறான வினா எண் இட்ட விடைகளுக்கோ மதிப்பெண்கள் வழங்குதல் கூடாது.
பகுதி - I (அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க) 14 × 1 = 14 மதிப்பெண்கள்
வினா எண் சரியான விடைக்குறிப்பு மதிப்பெண்
1இ) அடிஎதுகை, சீர்மோனை1
2இ) அஞ்சிறைத்தும்பி1
3அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்1
4இ) 19621
5இ) மழைத்துளிகள்1
6ஆ) உயர்திணை, அஃறிணை1
7ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி1
8ஆ) மலர்ச்சி1
9ஈ) தந்தைவழிச் சமூகமுறை1
10இ) 25,6001
11ஆ) கணிதம்1
12அ) நகுலன்1
13அ) குறுந்தொகை1
14இ) நன்னூல்1
பகுதி - II (குறுவினாக்கள்) மொத்த மதிப்பெண்கள்: 24
பிரிவு - 1 (செய்யுள்) | எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 2 = 6 மதிப்பெண்கள்)
வினா எண் விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் பகிர்வு மதிப்பெண்
15 * மாலையில் மலைக்குப்பின் மறையும் செந்நிறக் கதிரவன்; அந்திப்பொழுதில் செந்நிறப் பூக்காடு போல் சிவந்த வானம். (1)
* தொழிலாளர்களின் உழைத்துச் சிவந்த கைகள்; தொழிலாளர்களின் தோள்மீது துளிர்த்திருக்கும் வியர்வைத் துளிகள். (1)
2
16 * இனநிரை = இனம் + நிரை (1)
* விதி: 'மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்' (இனம் + நிரை → இன + நிரை = இனநிரை) (1)
2
17 * ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு.
(நான்கு உணர்ச்சிகளையும் குறிப்பிட்டிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
2
18 பிறருடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலே ஒருவருடைய செல்வம் குறையாமல் இருப்பதற்கான வழியாகும்.
("படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்" குறள் கருத்து)
2
பிரிவு - 2 (உரைநடை) | எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 2 = 4 மதிப்பெண்கள்)
வினா எண் விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் பகிர்வு மதிப்பெண்
19 * காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869-இல் சென்னையில் உருவாக்கப்பட்டது. (1)
* இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் வரலாற்றுத் தொகுப்புகளைக் கொண்டது. (1)
2
20 * புக்கில்: தற்காலிகத் தங்குமிடத்தைப் புறநானூறு 'புக்கில்' எனக் குறிப்பிடுகிறது. (1)
* தன்மனை: திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம் 'தன்மனை' என வழங்கப்பட்டுள்ளது. (1)
2
21 * தமிழ் நூல்கள்: நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம். நீதி நூல்கள்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி. (1)
* கணித வாய்ப்பாடுகள்: கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம். (1)
2
பிரிவு - 3 (இலக்கணம், மொழிப்பயிற்சி) | எவையேனும் ஏழனுக்கு விடை தருக: (7 × 2 = 14 மதிப்பெண்கள்)
வினா எண் விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் பகிர்வு மதிப்பெண்
22 உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக:
அ) அச்சாணி இல்லாத தேர் போல: வறுமையால் இரவியின் கல்வி பாதியில் நின்றதும் அவன் வாழ்க்கை அச்சாணி இல்லாத தேர் போல உடைந்து போனது. (2)
(அல்லது)
ஆ) உள்ளங்கை நெல்லிக்கனி போல: என் தமிழாசிரியர் நடத்திய இலக்கணம் எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல எளிதாக விளங்கியது. (2)
(பொருத்தமான வேறு தொடர் எழுதியிருப்பினும் முழு மதிப்பெண் வழங்கலாம்)
2
23 மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) (கலை, களை, கழை): தம் வறுமையைக் களைய கழைக்கூத்தாடி கயிற்றில் ஏறிப் பல கலைகளை நிகழ்த்தினான். (2)
(அல்லது)
ஆ) (தலை, தளை, தழை): தோட்டத்தில் உள்ள தழைகளை இரண்டு மூன்று தளைகளாக்கித் தலையில் வைத்து சுமந்து சென்றேன். (2)
(பொருத்தமான வேறு தொடர் எழுதியிருப்பினும் முழு மதிப்பெண் வழங்கலாம்)
2
24 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம் உண்மையானவற்றைத் தெரிந்து கொண்டு அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்றுக் கொடுக்கும்."
(முறையாக வல்லின மெய்களை மாற்றியமைத்திருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
2
25 பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து தொடராக்குக:
அ) காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
2
26 * சரியான தொடர்: திருவளர்செல்வன் (1)
* காரணம்: வினைத்தொகைச் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகாது (1).
2
27 சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்கள் அமைத்தல்:
அ) அவன் முன்வந்து கூறினான். (1) / அவன்முன் வந்து கூறினான். (1)
(அல்லது)
ஆ) அவன்தானே செய்து விட்டான். (1) / அவன் தானே செய்து விட்டான். (1)
2
28 பகுபத உறுப்பிலக்கணம்:
அ) சாய்ப்பான்: சாய் + ப் + ப் + ஆன். சாய் - பகுதி; ப் - சந்தி; ப் - எதிர்கால இடைநிலை; ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி. (2)
(அல்லது)
ஆ) கலங்கி: கலங்கு + இ. கலங்கு - பகுதி; இ - வினையெச்ச விகுதி. (2)
2
29 புணர்ச்சி விதி தருக:
அ) வெங்கதிர்: வெம்மை + கதிர்
விதி 1: "ஈறுபோதல்" → வெம் + கதிர் (1)
விதி 2: "முன்னின்ற மெய் திரிதல்" (ம் → ங்) = வெங்கதிர் (1)
(அல்லது)
ஆ) அருங்கானம்: அருமை + கானம்
விதி 1: "ஈறுபோதல்" → அரு + கானம் (1)
விதி 2: "இனமிகல்" (ங்) = அருங்கானம் (1)
2
30 அ) Matriarchy — தாய்வழிச் சமூகம் (1)
ஆ) Habitat — வாழிடம் (1)
2
பகுதி - III (சிறுவினாக்கள்) மொத்த மதிப்பெண்கள்: 24
பிரிவு - 1 (செய்யுள்) | எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8 மதிப்பெண்கள்)
வினா எண் விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் பகிர்வு மதிப்பெண்
31 தண்டியலங்கார உரைமேற்கோள் பாடல் விளக்கம்:
* நூல் குறிப்பு: ஆசிரியர் தண்டி எழுதிய 'தண்டியலங்காரம்' என்ற அணி இலக்கண நூலின் உரையில் இடம்பெற்றுள்ளது. (2)
* பொருள்: ஒலி எழுப்புகின்ற நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒளிர்கின்ற கதிரவன். (1)
* விளக்கம்: மக்களால் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி புற இருளை அகற்றுவது ஒன்று (கதிரவன்). பொதிகை மலையில் தோன்றிச் சான்றோரால் தொழப்பட்டு மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது இன்னொன்று (தமிழ்). இவ்விரண்டில் ஒன்று ஒளிரும் பரிதி, மற்றொன்று தனக்கு நிகரில்லாத செந்தமிழ். (1)
4
32 நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் கூதிர்கால வருணனை:
* கோவலர்கள் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது. (1)
* தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலையுடைய ஆயர்கள் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேய விட்டனர். (1)
* பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் ஆயர்களது பற்கள் நடுங்கின. (1)
* குளிர் மிகுதியால் ஆயர்கள் சூடிய நீண்ட இதழ்களை உடைய காந்தள் மலர்மாலை கசங்கியது. விலங்குகளும் பறவைகளும் இயல்பு மறந்தன; மலையையே குளிரச் செய்தது நள்ளிரவு. (1)
4
33 கம்பராமாயணம் — இராமனின் உடன்பிறப்பு நெறி:
* தயரதனின் புதல்வர்களான இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கணன் ஆகிய நால்வரும் உடன் பிறந்தவர்கள். வேடுவர் தலைவன் குகனுடன் சேர்ந்து ஐவராயினர். (1)
* கிட்கிந்தையில் சந்தித்த கதிரவனின் மகன் சுக்ரீவனுடன் சேர்ந்து இராமனின் உடன்பிறந்தவர்கள் அறுவராயினர். (1)
* இராவணனின் செயலால் இலங்கையை விட்டு இராமனிடம் அடைக்கலம் புகுந்த வீடணனோடு சேர்ந்து உடன் பிறந்தவர்கள் எழுவராயினர். (1)
* இதனால் கானக வாழ்விற்கு இராமனை அனுப்பிய தயரதன் புதல்வர்களைக் கூடுதலாகப் பெற்றுப் பெருமையடைகிறான். (1)
4
34 சினத்தால் ஏற்படும் கேடுகள் (திருக்குறள் வழி):
* முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தை விட நமக்கு வேறு பகை இல்லை. (1)
* ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் காக்க வேண்டும்; காக்காவிடின் சினம் அவனையே அழித்துவிடும். (1)
* சினம் தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். (1)
* தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் மறந்துவிடல் வேண்டும். (1)
4
பிரிவு - 2 (உரைநடை) | எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8 மதிப்பெண்கள்)
வினா எண் விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் பகிர்வு மதிப்பெண்
35 மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள்:
* 1950-களில் கி.பி. 3 முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு மன்னர்களைப் பற்றிய வரலாற்று ஆய்வில் ஈடுபட்டார்.
* மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் பற்றித் தமிழில் முதல் ஆய்வு நூல் எழுதினார்.
* சங்க கால மூவேந்தர்கள், கொங்கு, துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த அரசியல், பண்பாட்டு வரலாறுகளைப் பதிவு செய்தார்.
* இருண்ட காலம் எனக் கூறப்பட்ட களப்பிரர் காலத்தை விரிவாக ஆராய்ந்து 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' என்னும் புதிய கண்ணோட்ட நூலை வெளியிட்டார்.
(எவையேனும் ஐந்து குறிப்புகள் இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
4
36 சென்னையின் கல்வி வளர்ச்சிக்குத் துணைநின்ற கல்வி நிறுவனங்கள்:
* 1812 - சென்னை கோட்டைக் கல்லூரி; 1837 - கிறிஸ்தவக் கல்லூரி.
* 1840 - பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி); 1857 - சென்னைப் பல்கலைக்கழகம்.
* 1914 - பெண்களுக்கான இராணி மேரி கல்லூரி; இந்தியரால் தொடங்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி.
* மருத்துவக் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கவின் கலைக் கல்லூரி மற்றும் 19-ஆம் நூற்றாண்டு அச்சுப்பரவல், நாளிதழ்கள் சென்னையின் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.
(எவையேனும் எட்டு குறிப்புகள் இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
4
37 குடும்ப அமைதிக்கு ஒரு மாணவனுடைய பங்களிப்பு:
* அன்றாட வேலைகளையும் வீட்டுப் பணிகளையும் தாமே செய்து முடித்தல்.
* ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பைப் பெருக்குதல்; வீண் வம்புகளைத் தவிர்த்தல்.
* பெற்றோருக்கு வேலைப்பளுவைக் குறைக்க உதவுதல்; அமைதியான சூழலை உருவாக்குதல்.
* மின்சாதனப் பொருட்களைக் கவனமாகக் கையாளுதல்; குடும்ப நலனில் பொறுப்புடன் செயல்படுதல்.
(எவையேனும் எட்டு குறிப்புகள் பொருத்தமாக இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
4
38 பண்டைக்காலப் பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் எழுத்து முறைகள்:
* பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவர்; உபாத்தியாயர் தரையில் எழுத அதன் மேல் விளம்புவர்.
* மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி எனப் பல வகை எழுத்தாணிகள் இருந்தன.
* மணலே சிலேட்டு, பனையேடே புத்தகம்; எழுத்தாணியே பேனா.
* சுவடிகளில் மை தடவிப் படித்தல், கணினியில் தட்டச்சு செய்யும் தற்கால முறை வரை ஏற்பட்ட மாற்றங்கள்.
(எவையேனும் எட்டு குறிப்புகள் இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
4
பிரிவு - 3 (அணி இலக்கணம், இலக்கிய நயம், நடைமுறைப் பயிற்சி) | எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 4 = 12 மதிப்பெண்கள்)
வினா எண் விடைக்குறிப்பு மற்றும் மதிப்பெண் பகிர்வு மதிப்பெண்
39 அ) வேற்றுமை அணி:
* அணி இலக்கணம்: இரு வேறு பொருள்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி, பின்னர் அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி எனப்படும். (2)
* சான்று: "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி..." (தண்டியலங்கார உரைப்பாடல்)
* பொருள்: மலையில் தோன்றுதல், இருளைப் போக்குதல் ஆகியவற்றில் கதிரவனும் தமிழும் ஒன்று. (1)
* பொருத்தம்: தமிழையும் கதிரவனையும் ஒப்புமைப்படுத்தி, முடிவில் தமிழ் 'தன்னேரில்லாதது' என வேறுபடுத்திக் காட்டுவதால் வேற்றுமை அணி ஆயிற்று. (1)
(அல்லது)
ஆ) ஏகதேச உருவக அணி:
* அணி இலக்கணம்: கவிஞர் தாம் கூறவந்த இரு பொருள்களில் ஒன்றை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (2)
* சான்று: "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்"
* பொருத்தம்: சுற்றத்தைத் தெப்பமாக (புணையாக) உருவகம் செய்த வள்ளுவர், உலக வாழ்க்கையைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணி ஆயிற்று. (2)
4
40 இலக்கிய நயம் பாராட்டுக:
* மையக்கருத்து: தமிழ் மொழியின் பெருமை, கவிஞனின் புலமை, தமிழின் ஒப்புயர்வற்ற உயர்வு. (1)
* அணி நயம்: உருவக அணி / உயர்வு நவிற்சி அணி. (1)
* சந்த நயம் / பாவகை: எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம், அகவலோசை. (1)
* சுவை நயம்: பெருமிதச்சுவை (வீரச்சுவை). (1)
(மையக்கருத்துடன் மோனை, எதுகை, இயைபு உள்ளிட்ட நயங்கள் சரியாக எழுதப்பட்டிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
4
41 பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு அமைத்து எழுதுதல்:
* பழமொழி விளக்கம் (2)
* பொருத்தமான வாழ்க்கை நிகழ்வு (கதை) (1)
* நீதி / முடிவுரை (1)
(வாழ்க்கை நிகழ்வின்றி கருத்து மட்டும் எழுதியிருப்பின் 2 மதிப்பெண்கள் வழங்கலாம்)
4
42 சொற்களைக் கொண்டு தொடர் அமைத்தல் / சொல் வகை:
i) அ. விண்மீன் இரவில் ஒளிர்ந்தது; ஒளிர்வுடன் எரிகல் விழுந்தது. (1)
    ஆ. குழந்தை நடந்த தளிர் நடையில் கீழே விழுந்தது. (1)
ii) அ. ஈசல் (1)   |   ஆ. கிளி (1)
4
43 தமிழாக்கம் (Translation):
1. என் மொழியின் எல்லையே என் உலகின் எல்லை. (1)
2. மக்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்களுடைய மொழியில் பேசுங்கள். (1)
3. மொழி அறிவானது ஞானத்தின் நுழைவாயில். (1)
4. ஒரு புதிய மொழி ஒரு புதிய வாழ்க்கை. (1)
4
பகுதி - IV (நெடுவினாக்கள் — அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க) 3 × 6 = 18 மதிப்பெண்கள்
வினா எண் விடைக்குறிப்பு மற்றும் மதிப்பீட்டு நெறிமுறைகள் மதிப்பெண்
44 அ) சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 'இளம் தமிழே' கவிதை நயம்:
* சூரிய மறைவு காட்சி: மேற்கு மலையில் சூரியன் மறைய, வானமெல்லாம் செந்நிறப் பூக்காடாய்க் காட்சி தருதல்.
* தொழிலாளர் உழைப்பு: சிவந்த கைகளையும் தோள்மேல் வியர்வைத் துளிகளையும் போற்றிப் பாட செந்தமிழே துணை.
* பழமை வளம்: மூன்று சங்கங்கள், பாண்டியன் அவை, பாரி முதலான கடையெழு வள்ளல்கள் தமிழை வளர்த்த வரலாறு.
* புத்துணர்ச்சி அழைப்பு: தமிழ்க் குயிலாய்க் கூவி, கூண்டினை உடைத்துப் பொதிகைத் தென்றலில் தோன்றிய சிங்கமெனப் பாய்ந்து வா என அழைத்தல்.
(ஏதேனும் பத்து குறிப்புகளை உள்ளடக்கி விரிவாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
(அல்லது)
ஆ) நன்றியறிதல் குறித்துத் திருவள்ளுவர் உரைக்கும் கருத்துகள்:
* உதவி செய்யாதவருக்குச் செய்யும் உதவிக்கு விண்ணும் மண்ணும் ஈடாகாது. (1)
* காலத்தினால் செய்த உதவி சிறிதாயினும் உலகத்தை விடப் பெரியது. (1)
* பயன் தூக்கார் செய்த உதவி கடலை விடப் பெரியது. (1)
* தினைத்துணை உதவியைப் பனைத்துணையாகக் கொண்டு போற்றுவர் பெரியோர். (1)
* செய்த நன்மையை மறப்பது நன்றன்று; தீமையை உடனே மறப்பது நன்று. (1)
* எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை. (1)
6
45 அ) பண்டைத் தமிழரின் குடும்ப அமைப்பு முறை:
* 'குடும்பு' என்றால் கூடி வாழுதல்; இல், மனை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுதல்.
* புக்கில், தன்மனை, மணந்தகம்: முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டம் மணந்தகம்.
* தாய்வழிச் சமூகம்: தாய் தலைமை ஏற்றல், குலத் தொடர்ச்சி தாயால் அமைதல் (இவள் மகன்), சொத்துக்கள் பெண்களுக்குச் செல்லுதல்.
* தந்தைவழிச் சமூகம்: ஆண் மையக் குடும்பம், சிலம்பு கழி நோன்பு, 'மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' (குறுந்தொகை).
* தனிக்குடும்பம் & விரிந்த குடும்பம்: மகனை நடுவணாகக் கொண்டு வாழ்ந்த தனிக்குடும்பம் மற்றும் பெற்றோருடன் வாழும் விரிந்த குடும்பம்.
(ஏதேனும் பத்து குறிப்புகளைத் தலைப்பிட்டு எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
(அல்லது)
ஆ) பண்டைக்காலத்துக் கல்வி முறை (உ.வே.சா. கட்டுரை வழி):
* குருகுலம், கணக்காயர், மன்றம், திண்ணைப் பள்ளிக்கூடங்கள், மடங்கள்; பள்ளி என்ற சொல்லின் பொதுத்தன்மை.
* ஐந்தாம் பிராயத்தில் அக்ஷராப்பியாசம்; ஏட்டில் மஞ்சள் பூசி வாசித்தல்; முறை வைப்பு, சட்டாம்பிள்ளை முறை.
* சுவடிகளில் மை தடவுதல் (மையாடல் விழா); வசம்பு, மஞ்சள், ஊமத்தஞ்சாறு கூட்டிய குளிர்ச்சி மை.
* மனனப் பயிற்சி நூல்கள் (நிகண்டு, நன்னூல், கணித வாய்ப்பாடுகள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன்).
* எழுத்தாணி வகைகள் (மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி); ஆசிரியரின் சட்டம்; மூன்று ஆண்டுகள் ஓதற்பிரிவு.
(ஏதேனும் பத்து குறிப்புகளை விரிவாக எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
6
46 அ) 'உரிமைத்தாகம்' அல்லது ஒற்றுமையே வலிமை கதைக்கரு:
1. முன்னுரை மற்றும் கதை மாந்தர்கள் அறிமுகம்.
2. பாகம் பிரித்ததோடு பிரிந்த சகோதரர்கள் இடையே நிலவிய மனவருத்தம்.
3. நிலத்தைக் காப்பாற்ற ஒன்றிணைதல்; கடன் தீர்க்கும் அண்ணனின் பேருள்ளம்.
4. அன்னை குணம் கொண்ட அண்ணி; 'தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்ற உணர்வுடன் நில உரிமையை மீட்டல்; முடிவுரை.
(பொருத்தமான உட்தலைப்புகளுடன் விரிவாகக் கதையினை எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
(அல்லது)
ஆ) பொதுநலம் / தன்னம்பிக்கை வலியுறுத்தும் கதை:
1. முன்னுரை: 'ஊர் கூடித் தேர் இழுப்போம்' என்ற சமூக ஒற்றுமை
2. குழந்தைப் பயிர்களைக் காக்கும் குணமுடைய தலைமைப் பண்பு
3. தீர்வினைத் தேடும் அறிவும் அக்கறையும் மிகுந்த செயல்பாடுகள்
4. பொதுநலம் மிக்க பண்பாளன் மற்றும் தளராத தன்னம்பிக்கை; முடிவுரை.
(தலைப்பிட்டு நயம்பட தொகுத்து வழங்கியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்)
6
பகுதி - V (அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக) 4 + 2 = 6 மதிப்பெண்கள்
வினா எண் செய்யுள் வரிகள் மற்றும் ஆசிரியப் பெயர் மதிப்பெண்
47 அ) கம்பராமாயணப் பாடல்:
"துன்பு உளதுஎனின் அன்றோ சுகம்உளது ? அது அன்றிப் பின்பு உளது; இடைமன்னும் பிரிவுஉளது எனஉன்னேல்; முன்பு உளெம் ஒருநால்வேம்; முடிவுஉளது எனஉன்னா அன்புஉள; இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்."
— கம்பர்
(சரியான சீர் அமைப்புடன் அடிபிறழாமல் முழுமையாக எழுதியிருப்பின் 4 மதிப்பெண்கள் வழங்குக. பிழைகள் இருப்பின் விதிப்படி மதிப்பெண் குறைக்க)

ஆ) திருக்குறள்:
"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்."
— திருவள்ளுவர்
(குறள் வெண்பா சீர் பிரித்து அடிபிறழாமல் எழுதியிருப்பின் 2 மதிப்பெண்கள் வழங்குக)
4
+
2
(6)
மதிப்பீட்டாளர் கையொப்பம் கண்காணிப்பாளர் கையொப்பம் தலைமை மதிப்பீட்டாளர் கையொப்பம்

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url