ஈரோடு மாவட்டம்
12 R | Reg. No.: ____________
காலாண்டுத் தேர்வு - 2026
12-ஆம் வகுப்பு — தமிழ்
நேரம் : 3.00 மணி
மதிப்பெண்கள் : 90
குறிப்பு : விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I
மதிப்பெண்கள் : 14
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (14 × 1 = 14)
1. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" — என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது:
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
2. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு:
அ) மத்த விலாசம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சிறைத் தும்பி
ஈ) திசை எட்டும்
3. தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர்?
அ) காவியதர்சனம்
ஆ) தண்டி
இ) தொல்காப்பியர்
ஈ) மயிலை சீனி. வேங்கடசாமி
4. இடையின மெய்கள் எவை?
அ) வ், ழ்
ஆ) ஞ், ண்
இ) ப், ற்
ஈ) ட், ண்
5. தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை:
அ) 246
ஆ) 216
இ) 18
ஈ) 12
6. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
7. கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் சரி
8. தமிழில் திணைப்பாகுபாடு _______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக்குறிப்பு
9. நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்?
அ) தொல்காப்பியர்
ஆ) கம்பர்
இ) நக்கீரர்
ஈ) உத்தமசோழன்
10. கடலின் பெரியது...
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ) தினையளவு செய்த உதவி
ஈ) காலம் கடந்து செய்த உதவி
11. குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்:
அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ) குறுந்தொகை
ஈ) புறநானூறு
12. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க:
அ) செற்றார் — 1) மகிழ்ச்சி
ஆ) கிளை — 2) காடு
இ) உவகை — 3) பகைவர்
ஈ) கானம் — 4) உறவினர்
அ) 2, 4, 3, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 2, 4, 1
13. சரியான வினைத்தொகைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
அ) மேடு பள்ளம்
ஆ) உற்றாருறவினர்
இ) கத்துகடல்
ஈ) பேசிய படி
14. 'திணை' என்ற சொல்லின் பொருள்:
அ) புன்செய்
ஆ) ஓலைப்பெட்டி
இ) சிறிய நிலப்பரப்பு
ஈ) திண்ணை
பகுதி - II
மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. (3 × 2 = 6)
15. அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் இரண்டினை எழுதுக.
16. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' — விளக்கம் தருக.
17. ஞாலத்தின் பெரியது எது?
18. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக. (2 × 2 = 4)
19. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
20. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை — குறிப்பு வரைக.
21. புக்கில், தன்மனை — சிறுகுறிப்பு வரைக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக. (7 × 2 = 14)
22. இலக்கணக் குறிப்பு தருக: அ) வெங்கதிர் (அல்லது) ஆ) வளைஇ
23. உறுப்பிலக்கணம் தருக: அ) கலங்கி (அல்லது) ஆ) தந்தனன்
24. புணர்ச்சி விதி தருக: அ) ஆங்கவற்றுள் (அல்லது) ஆ) புதுப்பெயல்
25. உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக:
அ) தாமரை இலை நீர்போல (அல்லது) ஆ) எலியும் பூனையும்போல
26. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக: தழை, தளை, தலை
27. சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களாக ஆக்குக: முன்
28. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
29. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
30. தமிழாக்கம் தருக: அ) Software ஆ) Habitat
பகுதி - III
மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக. (2 × 4 = 8)
31. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
32. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
33. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
34. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக. (2 × 4 = 8)
35. தாய்வழிக் குடும்பம் பற்றி பக்தவத்சல பாரதி கூறும் கருத்துகளை விவரி.
36. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விவரிக்க.
37. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
38. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவிகள் யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. (3 × 4 = 12)
39. இலக்கிய நயம் பாராட்டுக: (மையக்கருத்தோடு ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக)
"வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா !" — பாரதியார்
40. வாகைத்திணையைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
கூதிர்ப்பாசறைத் துறையைச் சான்றுடன் விளக்குக.
41. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை / பண்பும் பயனும் அது" — இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
(அல்லது)
ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக.
42. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக:
அ) முயற்சி திருவினையாக்கும் (அல்லது) ஆ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
43. தட்டச்சர் பணி வேண்டி ஒரு விண்ணப்பம் எழுதுக.
பகுதி - IV
மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (3 × 6 = 18)
44. அ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.
(அல்லது)
ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
45. அ) மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர் என்பதனைச் சான்றுகளுடன் விவரி.
(அல்லது)
ஆ) குடும்பம் என்ற சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது — எவ்வாறு? விளக்குக.
46. அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப் பற்று ஆகியவற்றை விவரிக்க.
(அல்லது)
ஆ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
பகுதி - V
மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. (4 + 2 = 6)
47. அ) "துன்பு உளதுஎனின் அன்றோ..." எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல். (4 மதிப்பெண்கள்)
ஆ) 'அது' என முடியும் திருக்குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)