10th Tamil Guide & Question Bank

10th Tamil Guide & Question Bank

10th Tamil Guide & Question Bank

Padasalai.co.in Provides a clear and special Guidance for all 10th Students. Padasalai.co.in Provides last 10 years of 10th Standard Tamil Study Materials, Question Papers and Answer Keys( Previous year Question Papers & Answer Keys). This time our team has taken a keen effort to provide more study materials in order to help the Students. So we have covered the maximum and we are sure that we will instantly update more study materials for 10th Public Exams.

Dear Students we had shared some Tamil Guides and Study Materials for 10th Standard. To download that Click the Text named "CLICK TO DOWNLOAD". If you have any problem in downloading any materials, you can comment below and if you want to upload any materials from your side in order to help the students, you can mail your materials to padasalai.co@gmail.com

Bookmark this page using the keyboard shortcut Ctrl + D to refer to this page and check your results and other exam-related updates. All the Best!

10th தமிழ் — புதிய பாடத்திட்டம்

தமிழ் உரை & வினாவங்கி

வினாத்தாள் அடிப்படையிலான உரை | மீத்திறன் மாணவர்களுக்கான கூடுதல் வினாக்கள் | மெல்ல மலரும் மொட்டுகளுக்கான எளிய விடைகள்
அரசு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) மாதிரி வினாத்தாள்கள் & விடைக்குறிப்பு
For Orders: 9944991847, 9865315131, 99444 88077
பகுதி - I : பாடநூல் பலவுள் தெரிக (இயல் 1, 2, 3, 4, 9)
இயல் - 1

1. 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது..
அ. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்  |  ஆ. பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ. ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்  |  ஈ. வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
விடை: அ. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள் — இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது..
அ. இலையும் சருகும்  |  ஆ. தோகையும் சண்டும்  |  இ. தாளும் ஓலையும்  |  ஈ. சருகும் சண்டும்
விடை: ஈ. சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
அ. எந்+தமிழ்+நா  |  ஆ. எந்த+தமிழ்+நா  |  இ. எம்+தமிழ்+நா  |  ஈ. எந்தம்+தமிழ்+நா
விடை: இ. எம்+தமிழ்+நா

4. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' — தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே:
அ. பாடிய; கேட்டவர்  |  ஆ. பாடல்; பாடிய  |  இ. கேட்டவர்; பாடிய  |  ஈ. பாடல்; கேட்டவர்
விடை: ஈ. பாடல்; கேட்டவர்

5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை:
அ. குலை வகை  |  ஆ. மணி வகை  |  இ. கொழுந்து வகை  |  ஈ. இலை வகை
விடை: ஆ. மணி வகை

இயல் - 2

6. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் / உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" — பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ. உருவகம், எதுகை  |  ஆ. மோனை, எதுகை  |  இ. முரண், இயைபு  |  ஈ. உவமை, எதுகை
விடை: ஆ. மோனை, எதுகை

7. செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
அ. செய்தி 1 மட்டும் சரி  |  ஆ. செய்தி 1, 2 ஆகியன சரி  |  இ. செய்தி 3 மட்டும் சரி  |  ஈ. செய்தி 1, 3 ஆகியன சரி
விடை: ஈ. செய்தி 1, 3 ஆகியன சரி

8. "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்  |  ஆ. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ. கடல் நீர் ஒலித்தல்  |  ஈ. கடல் நீர் கொந்தளித்தல்
விடை: அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

9. பெரிய மீசை சிரித்தார் — வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ. பண்புத்தொகை  |  ஆ. உவமைத்தொகை  |  இ. அன்மொழித்தொகை  |  ஈ. உம்மைத்தொகை
விடை: இ. அன்மொழித்தொகை

10. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க:
அ. கொண்டல் — 1. மேற்கு | ஆ. கோடை — 2. தெற்கு | இ. வாடை — 3. கிழக்கு | ஈ. தென்றல் — 4. வடக்கு
அ. 1, 2, 3, 4  |  ஆ. 3, 1, 4, 2  |  இ. 4, 3, 2, 1  |  ஈ. 3, 4, 1, 2
விடை: ஆ. 3, 1, 4, 2

இயல் - 3

11. பின்வருவனவற்றுள் முறையான தொடர்....
அ. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
விடை: இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

12. "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது:
அ. புத்தூர்  |  ஆ. மூதூர்  |  இ. பேரூர்  |  ஈ. சிற்றூர்
விடை: ஈ. சிற்றூர்

13. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது:
அ. வேற்றுமை உருபு  |  ஆ. எழுவாய்  |  இ. உவம உருபு  |  ஈ. உரிச்சொல்
விடை: அ. வேற்றுமை உருபு

14. காசிக்காண்டம் என்பது.....
அ. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  |  ஆ. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  |  ஈ. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
விடை: இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

15. 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.....
அ. நிலத்திற்கேற்ற விருந்து  |  ஆ. இன்மையிலும் விருந்து  |  இ. அல்லிலும் விருந்து  |  ஈ. உற்றாரின் விருந்து
விடை: ஆ. இன்மையிலும் விருந்து

இயல் - 4

16. 'உனதருளே பார்ப்பன் அடியேனே'....... யாரிடம் யார் கூறியது?
அ. குலசேகராழ்வாரிடம் இறைவன்  |  ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்
இ. மருத்துவரிடம் நோயாளி  |  ஈ. நோயாளியிடம் மருத்துவர்
விடை: ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்

17. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க:
தலைப்பு: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
அ. தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆ. குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ. தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ. குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடை: அ. தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இயல் - 8 & 9

39. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்:
அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது  |  ஆ. என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ. இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்  |  ஈ. என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
விடை: அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

40. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்:
அ. அகவற்பா  |  ஆ. வெண்பா  |  இ. வஞ்சிப்பா  |  ஈ. கலிப்பா
விடை: அ. அகவற்பா

41. "இவள் தலையில் எழுதியதோ / கற்காலம்தான் எப்போதும்..." இவ்வடிகளில் கற்காலம் என்பது........
அ. தலைவிதி  |  ஆ. பழைய காலம்  |  இ. ஏழ்மை  |  ஈ. தலையில் கல் சுமப்பது
விடை: ஈ. தலையில் கல் சுமப்பது

42. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது...
அ. அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்  |  ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ. அறிவியல் முன்னேற்றம்  |  ஈ. வெளிநாட்டு முதலீடுகள்
விடை: ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

43. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று வேண்டினார்:
அ. கருணையன் எலிசபெத்துக்காக  |  ஆ. எலிசபெத் தமக்காக
இ. கருணையன் பூக்களுக்காக  |  ஈ. எலிசபெத் பூமிக்காக
விடை: அ. கருணையன் எலிசபெத்துக்காக

44. வாய்மையே மழைநீராகி — இத்தொடரில் வெளிப்படும் அணி..........
அ. உவமை  |  ஆ. தற்குறிப்பேற்றம்  |  இ. உருவகம்  |  ஈ. தீவகம்
விடை: இ. உருவகம்

45. "கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்" — இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
அ. தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
ஆ. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ. அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்.
ஈ. அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
விடை: ஆ. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

பலவுள் தெரிக — கூடுதல் வினா விடை (இயல் 1 & 2)

1. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்: அ) தமிழழகனார் ஆ) இளங்குமரனார் இ) சச்சிதானந்தன் ஈ) பாவாணர் — விடை: ஈ

2. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர்: அ) சச்சிதானந்தன் ஆ) பெருஞ்சித்திரனார் இ) பாவாணர் ஈ) எழில்முதல்வன் — விடை: இ

3. "சாகும்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்றவர்: அ) இரா. இளங்குமரனார் ஆ) சச்சிதானந்தன் இ) தமிழழகனார் ஈ) திரு.வி.க. — விடை: ஆ

4. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்: அ) பெருஞ்சித்திரனார் ஆ) பாவாணர் இ) தமிழழகனார் ஈ) இரா. இளங்குமரனார் — விடை: ஈ

5. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு, முதல் மொழி: அ) சென்னை, தமிழ் ஆ) தமிழ்நாடு, தமிழ் இ) சிங்கப்பூர், மலையாளம் ஈ) மலேசியா, தமிழ் — விடை: ஈ

6. தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி முறையே அமைந்த சொற்கள்: அ) கண், எட்டு, படம் பார்த்தனர் ஆ) எட்டு, கண், பாடினான் இ) தாமரை, பாடம் படித்தேன், பாடல் ஈ) கண், ஓடிப் பார்த்தேன், தாமரை — விடை: ஈ

7. செய்யுளிசை அளபெடையில் முதல், இடை, கடையில் அளபெடுத்தல் முறையே அமைந்த சொற்கள்: அ) நல்ல படாஅ பறை, ஓஒதல் வேண்டும், உறாஅர்க்கு உறுநோய் ஆ) ஓஒதல் வேண்டும், நல்லபடாஅ பறை, உறாஅர்க்கு உறுநோய் இ) உறாஅர்க்கு, நல்லபடாஅ பறை, ஓஒதல் வேண்டும் ஈ) ஓஒதல் வேண்டும், உறாஅர்க்கு உறுநோய், நல்ல படாஅ பறை — விடை: ஈ

8. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர்: அ) ச. அகத்தியலிங்கம் ஆ) ராபர்ட் கால்டுவெல் இ) திரு.வி.க ஈ) பாவாணர் — விடை: ஆ

9. கூலம் என்றழைக்கப்படும் மணிவகை: அ) அவரை, உளுந்து ஆ) கடலை, அவரை இ) அவரை, துவரை ஈ) நெல், கம்பு — விடை: ஈ

10. இரண்டு பொருள்படப் பாடும் இரட்டுறமொழிதல் அணியின் மற்றொரு பெயர்: அ) உருவகம் ஆ) உவமை இ) தற்குறிப்பேற்றம் ஈ) சிலேடை — விடை: ஈ

11. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது: அ) தொழிற்பெயர் ஆ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் இ) முதனிலைத் தொழிற்பெயர் ஈ) வினையாலணையும் பெயர் — விடை: ஈ

12. (i) உலகம் ஐம்பூதங்களால் ஆனது — இக்கூற்று தொல்காப்பியர் கூற்று. (ii) வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் — இக்கூற்று இளங்கோவடிகள் கூற்று. அ) இரண்டும் தவறு ஆ) (i) சரி, (ii) தவறு இ) (i) தவறு, (ii) சரி ஈ) (i), (ii) இரண்டும் சரி — விடை: ஈ

13. ஹிப்பாலஸ் பருவக்காற்றைக் கண்டுபிடித்தவர்: அ) வெண்ணிகுயத்தியார் ஆ) ஹிப்பாலஸ் இ) கரிகால்பெருவளவன் ஈ) இளங்கோவடிகள் — விடை: ஆ

14. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் _______ தெரிவித்துள்ளது: அ) சபை ஆ) மத்திய அரசு இ) ஆணையம் ஈ) சிறுவர் நிதியம் — விடை: ஈ

15. குளோரோபுளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு, ஒரு இலட்சம் _______ மூலக்கூறுகளைச் சிதைத்துவிடுகிறது: அ) காற்று ஆ) குளோரோபுளோரோ இ) புளோரோகுளோரோ ஈ) ஓசோன் — விடை: ஈ

16. நறுவீ என்பதன் பொருள்: அ) மலர்ந்த மலர் ஆ) தேன் போன்ற மலர் இ) மலராத மொட்டு ஈ) நறுமணமுடைய மலர்கள் — விடை: ஈ

17. விரிச்சி கேட்டல் பொருள்: அ) விரிவாகக் கேட்டல் ஆ) இறைவனிடம் கேட்டல் இ) படித்துக் கேட்டல் ஈ) நற்சொல் கேட்டல் — விடை: ஈ

18. உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் உள்ள இடம்: அ) சென்னை ஆ) பஞ்சாப் இ) கொல்கத்தா ஈ) புதுதில்லி — விடை: ஈ

19. சார்க் அமைப்பில் இல்லாத நாடுகள்: அ) இந்தியா, இலங்கை ஆ) அமெரிக்கா, ரஷ்யா இ) வங்கதேசம், மியான்மர் ஈ) ஓமன், மாலத்தீவுகள் — விடை: ஆ

20. கப்பித்தான், தொங்கான் பொருள் முறையே: அ) கப்பல், தலைமை மாலுமி ஆ) தலைமை மாலுமி, கப்பல் இ) கப்பல், கப்பல் ஈ) தலைமை மாலுமி, தலைமை மாலுமி — விடை: ஆ

21. "பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" என்று கூறப்படும் இடம் உள்ள மாவட்டம்: அ) திருச்சி ஆ) பெரம்பலூர் இ) சேலம் ஈ) நாமக்கல் — விடை: ஈ

3. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை தருதல் — அட்டவணை (செய்யுள்)
இயல் செய்யுள் தலைப்பு ஆசிரியர் பெயர் நூல் தலைப்பு / தொகுப்பு பிற நூல்கள் & சிறப்புகள் பாடல் தொடக்கம்
இயல் 1 (i) அன்னைமொழியே பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இயற்பெயர்: துரைமாணிக்கம்) கனிச்சாறு (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப்பறவைகள், உலகியல் நூறு, பாவியக்கொத்து. உரை: திருக்குறள் மெய்ப்பொருளுரை. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்கள். அன்னை மொழியே... தென்னன் மகளே!... செந்தமிழே!... உந்தி உணர்வெழுப்ப...
இயல் 1 (ii) இரட்டுற மொழிதல் சந்தக்கவிமணி தமிழழகனார் (இயற்பெயர்: சண்முகசுந்தரம்) தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி - கழகப்பதிப்பு) பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். முத்தமிழ் துய்ப்பதால்...
இயல் 2 (i) காற்றே வா! மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைத் தொகுப்பு ('காற்று') குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி. சிறப்பு: நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்கொரு புலவன். சக்தி குறைந்து போய்... காற்றே வா... மகரந்தத் தூளைச்...
இயல் 2 (ii) முல்லைப்பாட்டு நப்பூதனார் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று (முல்லை நிலம், நல்லோர் விரிச்சி கேட்டல்) ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; 103 அடிகளைக் கொண்ட நூல். நனந்தலை உலகம்... சிறுதாம்பு தொடுத்த...
இயல் 3 (i) காசிக்காண்டம் அதிவீரராம பாண்டியர் (பட்டம்: சீவலமாறன்) காசிக்காண்டம் (இல்லொழுக்கம் கூறிய பகுதி) நற்றிணை, நைடதம், திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், லிங்க புராணம், வாயு சம்கிதை, வெற்றிவேற்கை (நறுந்தொகை). துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள் பாடும் நூல். விருந்தினனாக ஒருவன்...
இயல் 3 (ii) மலைபடுகடாம் பெருங்கௌசிகனார் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று (வேறுபெயர்: கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவன் நன்னன் என்ற குறுநில மன்னன்; மலையை யானையாக உருவகம் செய்து அதன் ஓசைகளை மதம் என விளக்கும் நூல். அன்று அவண் அசைஇ... நும்இல் போல நில்லாது...
இலக்கணக்குறிப்பு விளக்கம் & தொடை நயங்கள் கண்டறிதல்
தொகை வகை இலக்கண விளக்கம் சான்றுகள்
1. பண்புத்தொகை பண்பை உணர்த்தும் மை விகுதி மறைந்து வருவது பண்புத்தொகை. மூதூர் (முதுமை+ஊர்), நன்மொழி (நன்மை+மொழி)
2. வினைத்தொகை முக்காலத்தையும் உணர்த்தி நிற்கும் வினை முன்னும் பெயர் பின்னும் வரும். உறுதுயர் (உற்றதுயர், உறுகின்ற துயர், உறும்துயர்), ஓடுநீர் (ஓடியநீர், ஓடுகின்ற நீர், ஓடும் நீர்)
3. உவமைத்தொகை உவம உருபுகள் மறைந்து வந்தால் உவமைத்தொகை (போல, போன்ற, அன்ன, போலும்). தாமரை முகம் (தாமரை போன்ற முகம்)
4. உம்மைத்தொகை 'உம்' என்ற உருபு மறைந்து வருவது உம்மைத்தொகை. இரவுபகல் (இரவும் பகலும்), காய்கனி (காயும் கனியும்)
5. வேற்றுமைத்தொகை வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) மறைந்து வந்து பொருள் தருவது. மரம் வெட்டினான் (மரத்தை வெட்டினான் - 2-ஆம் வேற்றுமைத்தொகை), கை தொழுது (கையால் தொழுது - 3-ஆம் வேற்றுமைத்தொகை)
6. வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை வேற்றுமை உருபு மட்டுமல்லாமல் அதன் பயனும் தொடரிடையே மறைந்து வருவது. மரப்பெட்டி (மரத்தால் ஆன பெட்டி: இதில் 'ஆல்' என்ற உருபும் 'ஆன' என்ற பயனும் மறைந்துள்ளதால் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை)
பாடல் அடி: "வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் / பூவும் புகையும் மேவிய விரையும் / பகர்வனர் திரிதரு நகர வீதியும் / பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் / கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"
சீர்மோனை: சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது (எ.கா: பூவும் புகையும்; ட்டினும் ருத்தி).
அடிமோனை: அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வருவது (எ.கா: கர்வனர் / ட்டினும்).
சீர்எதுகை: சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது (எ.கா: வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ்).
அடிஎதுகை: அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது (எ.கா: பட்டினும் / கட்டு).
பாடற்பகுதி சார் பலவுள் தெரிக வினாக்கள்
(i) அன்னை மொழியே
"அன்னை மொழியே, அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக்குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!"

1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்: அ) கனிச்சாறு ஆ) கொய்யாக்கனி இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம் — விடை: அ

2. இப்பாடல் ஆசிரியரின் பெயர்: அ) திருமூலர் ஆ) பாரதியார் இ) கம்பர் ஈ) பெருஞ்சித்திரனார் — விடை: ஈ

3. செந்தமிழ் - இலக்கணக்குறிப்பு: அ) வினைத்தொகை ஆ) எண்ணும்மை இ) பண்புத்தொகை ஈ) உம்மைத்தொகை — விடை: இ

4. முன்னைக்கும் முன்னை பொருள்: அ) கடமைக்கும் கடமை ஆ) உண்மைக்கும் உண்மை இ) புதுமைக்கும் புதுமை ஈ) பழமைக்கும் பழமை — விடை: ஈ

"தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!"

1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்: அ) சிலப்பதிகாரம் ஆ) திருக்குறள் இ) கனிச்சாறு ஈ) குண்டலகேசி — விடை: இ

2. இப்பாடலின் ஆசிரியர்: அ) கம்பர் ஆ) பாரதியார் இ) திரு.வி.க. ஈ) துரைமாணிக்கம் — விடை: ஈ

3. பாடலில் இடம்பெற்றுள்ள பெருங்காப்பியங்கள்: அ) சிலப்பதிகாரம் குண்டலகேசி ஆ) சிலப்பதிகாரம் மணிமேகலை இ) குண்டலகேசி மணிமேகலை ஈ) சீவகசிந்தாமணி குண்டலகேசி — விடை: ஆ

4. எண்தொகையே - பிரித்தெழுதுக: அ) எண்+தொகையே ஆ) என்+தொகையே இ) எள்+தொகையே ஈ) எட்டு+தொகையே — விடை: ஈ

(ii) இரட்டுற மொழிதல்
"முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு"

1. இப்பாடலின் ஆசிரியர்: அ) கவிராயர் ஆ) அழகனார் இ) தமிழழகனார் ஈ) கவிராயர் — விடை: இ

2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்: அ) தனிப்பாடல் திரட்டு ஆ) சங்கத்தமிழ் இ) தொடர்நிலை ஈ) திருக்குறள் — விடை: அ

3. முத்தமிழ் - விரித்தெழுதுக: அ) இயல், இசை, நாடகம் ஆ) பாடல், இசை, பண் இ) கூத்து, பாடல், பண் ஈ) நாடகம், பாடல், பண் — விடை: அ

4. முச்சங்கம் - பிரித்தெழுதுக: அ) முச்+சங்கம் ஆ) முதல்+சங்கம் இ) மூன்று+சங்கம் ஈ) முன்+சங்கம் — விடை: இ

(iii) முல்லைப்பாட்டு
"நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை"

1. இப்பாடலின் ஆசிரியர்: அ) ஔவையார் ஆ) நப்பூதனார் இ) நல்வேட்டனார் ஈ) பெருங்கௌசிகனார் — விடை: ஆ

2. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்: அ) மலைபடுகடாம் ஆ) பரிபாடல் இ) முல்லைப்பாட்டு ஈ) நற்றிணை — விடை: இ

3. நனந்தலை உலகம் இத்தொடரின் பொருள்: அ) சிறிய உலகம் ஆ) நனைந்த உலகம் இ) சுந்தும் உலகம் ஈ) அகன்ற உலகம் — விடை: ஈ

4. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்: அ) பாடு இமிழ், கோடு கொண்டு ஆ) கோடுகொண்டு, பெரும்பயல் இ) நனந்தலை, வலம்புரி ஈ) பொறித்த, பொழிந்த — விடை: அ

(iv) மலைபடுகடாம்
"நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்
மான விறல்வேள் வயிரியம் எனினே,
நும்இல் போல நில்லாது புக்கு
கிழவிர் போலக் கேளாது கெழீஇ
சேட்புலம்பு அகல இனிய கூறி
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்"

1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்: அ) குறிஞ்சிப்பாட்டு ஆ) முல்லைப்பாட்டு இ) சிலப்பதிகாரம் ஈ) மலைபடுகடாம் — விடை: ஈ

2. இப்பாடலின் ஆசிரியர்: அ) நப்பூதனார் ஆ) கீரந்தையார் இ) பெருங்கௌசிகனார் ஈ) கபிலர் — விடை: இ

3. பரூஉக்குறை இலக்கணக்குறிப்பு: அ) சொல்லிசை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை இ) செய்யுளிசை அளபெடை ஈ) உயிரளபெடை — விடை: இ

4. பொம்மல் பொருள்: அ) அரிசி ஆ) கம்பு இ) தினை ஈ) சோறு — விடை: ஈ

4. விடைக்கேற்ற வினா அமைத்தல்
மெல்ல மலரும் மொட்டுகளுக்கான வழிமுறைகள்: இறுதி எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் புள்ளியை நீக்கிவிட்டுத் துணைக்கால் மற்றும் வினாக்குறி (?) இடவும் (சென்றார் → சென்றாரா?, வேண்டும் → வேண்டுமா?); உயிர்மெய்யெழுத்தில் முடிந்தால் 'ஆ' அல்லது 'யா' சேர்க்கவும் (அடைந்தன → அடைந்தனவா?, தேவை → தேவையா?).

1. விடை: ஒரு நாட்டின் வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.
வினா: ஒரு நாட்டின் வளத்திற்குத் தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்குமா?

2. விடை: 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.
வினா: 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்ததுவா?

3. விடை: தொல்காப்பியர் உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார்.
வினா: உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது எனக் கூறியவர் யார்?

4. விடை: காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.
வினா: காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் எங்கு இடம்பெயர்ந்துவிட்டன?

5. விடை: இதழியலில், செயற்கை நுண்ணறிவு குறிப்பிடத்தகுந்த மாறுதல்களைச் செய்து வருகிறது.
வினா: இதழியலில் குறிப்பிடத்தகுந்த மாறுதல்களைச் செய்து வருவது எது?

6. விடை: பெரியார் அறிவியல் தொழில்நுட்பக்கழகம் 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
வினா: பெரியார் அறிவியல் தொழில்நுட்பக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

7. விடை: மொழிபெயர்த்தல் என்றத் தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.
வினா: மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார்?

8. விடை: போலச்செய்தல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது பொய்க்கால் குதிரையாட்டம்.
வினா: பொய்க்கால் குதிரையாட்டம் எந்தப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது?

9. விடை: புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கட மலையாகவும் தெற்கெல்லை குமரிமுனையாகவும் கூறப்பட்டுள்ளது.
வினா: புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன யாவை?

10. விடை: பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி.
வினா: பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது எது?

5. செய்யுள், உரைநடை குறுவினாக்கள் & கூடுதல் வினாக்கள்

1. "மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே! / முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" — இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

2. சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டிப் பிழைக்கான காரணத்தை எழுதுக:
சரியான தொடர்கள்: 'ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன', 'ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன'.
பிழையான தொடர்: 'ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன'.
பிழைக்கான காரணம்: ஒரு தாற்றில்தான் பல சீப்பு வாழைப்பழங்கள் இருக்கும்; சீப்பில் தாறு இருக்காது.

3. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
காலை நேரம் தொடர்வண்டியிலிருந்து கீழே இறங்கினார் கி.வா. ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அதற்கு, அவர் "காலையிலேயே மாலையும் வந்துவிட்டது" என்றார் (மாலை = மாலைப் பொழுது, பூமாலை).

4. உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.
• மலர்களில் புகுந்தால் மணமாகிறாய்! மனிதருள் புகுந்தால் விடமாகிறாய்!
• இயற்கையைக் காப்போம்! இனிய காற்றைச் சுவாசிப்போம்!

5. வசன கவிதை — குறிப்பு வரைக.
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது.

6. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்குக் கூறும் ஆறுதல் சொற்கள்:
"தம்பி அழாதே! பெற்றோர் வந்துவிடுவார்கள். நீ கேட்டதை வாங்கித் தருவார்கள்" என அன்போடு ஆறுதல் கூறுவேன்.

7. மாஅல் — பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக:
பொருள்: திருமால் (பேருருவம் எடுத்த திருமால்) | இலக்கணக்குறிப்பு: செய்யுளிசை அளபெடை.

8. தமிழ்ச்சொல் வளம் குறித்துக் கால்டுவெல் குறிப்பிடும் கருத்து:
"தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரிய சொற்களும் தமிழில் உள" என்கிறார் கால்டுவெல்.

9. சிலேடை (அ) இரட்டுறமொழிதல் என்றால் என்ன? வகைகள் யாவை?
இரண்டு + உற + மொழிதல் = இரட்டுறமொழிதல். ஒரு செய்யுளை இரு பொருள்படப் பாடுவது. வகைகள்: செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை.

10. காற்றின் ஆற்றல், வேகம் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?
ஆற்றல் — 'வளி மிகின் வலி இல்லை' (புறநானூறு - ஐயூர் முடவனார்).
வேகம் — 'கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது' (புறநானூறு - மதுரை இளநாகனார்).

11. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள்:
முல்லை நிலம்: வரகு, சாமை | மருத நிலம்: செந்நெல், வெண்ணெல்.

12. முல்லைப்பாட்டு நூல் குறிப்பு வரைக.
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; 103 அடிகளைக் கொண்டது; முல்லை நிலத்தைப் பாடியவர் நப்பூதனார்.

13. வீசுகின்ற திசையைப் பொருத்துக் காற்றின் பெயர்கள்:
கிழக்கு — கொண்டல்; மேற்கு — கோடை; வடக்கு — வாடை; தெற்கு — தென்றல்.

14. விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
தாம் எண்ணிய செயல் நன்மையில் முடியுமோ, தீமையில் முடியுமோ என ஐயுறும் பெண்கள் ஊருக்கு வெளியே சென்று தெய்வத்தைத் தொழுது அயலவர் பேசும் நற்சொல்லைக் கேட்டு நிற்பதே விரிச்சி கேட்டல் ஆகும்.

15. ஹிப்பாலஸ் பருவக்காற்று குறித்து எழுதுக.
கி.பி. முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் என்ற கிரேக்க மாலுமி பருவக்காற்றின் உதவியால் முசிறித் துறைமுகத்திற்கு நடுக்கடல் வழியாக விரைவாக வந்தடைந்தார். யவனர் வணிகம் பெருகியதால் அப்பருவக்காற்றுக்கு 'ஹிப்பாலஸ் பருவக்காற்று' எனப் பெயரிடப்பட்டது.

16. விருந்து பேணத் தலைவன் பணையம் வைத்தவை (புறநானூறு):
முதல் நாள் வந்த விருந்தினரை உபசரிக்கத் தனது பழைய வாளைப் பணையம் வைத்தான்; அடுத்த நாள் வந்த விருந்தினருக்காகக் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.

17. ஆற்றுப்படை என்றால் என்ன?
மன்னரிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் புலவர், வழியில் எதிர்ப்படும் மற்றொரு புலவரைப் பார்த்து "வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக" என ஆற்றுப்படுத்துவது (வழிகாட்டுவது) ஆற்றுப்படை ஆகும்.

18. கெடுப்பார் இலானுங் கெடுபவர் யார்? ஏன்?
குற்றம் கண்டபோது இடித்துரைக்கும் பெரியாரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகையின்றியும் தானே அழிவான்.

19. எதற்காக எழுதுகிறேன்? — ஜெயகாந்தன் வாக்கு:
"நமது அறியாமையால் பிறரை அவஸ்தைக்கு உட்படுத்தாமல் சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதுகிறேன்" என்றார்.

20. தேம்பாவணி பெயர்க்காரணம் தருக:
• தேம்பா + அணி = வாடாத மாலை
• தேன் + பா + அணி = தேன் போன்ற இனிய பாடல்களால் ஆன மாலை.

21. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்:
தேம்பாவணி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம், பரமார்த்தக் குரு கதை, சிற்றிலக்கியங்கள், உரைநடை மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள்.

6. இலக்கண வினாக்கள்

1. வேங்கை — தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக:
• வேம் + கை (தொடர்மொழி) = வேகின்ற கை
• வேங்கை (பொதுமொழி) = வேங்கை மரம்

2. இன்னிசை அளபெடை இலக்கணம் & சான்று:
"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் / வடுக்காண் வற்றாகும் கீழ்" — செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக நெடில் உயிரெழுத்துகள் நீண்டு ஒலிப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

3. தொகைச்சொற்களை விரித்துத் தொடரமைக்க:
• தண்ணீர் குடி = தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத்தொகை) — அவன் தண்ணீர் குடித்தான்.
• தயிர்க்குடம் = தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை) — அவன் தயிர்க்குடத்தை எடுத்தான்.

4. அடுக்குத்தொடர் ஆக்குக:
'சிரித்துப் பேசினார்' என்பது மகிழ்ச்சி காரணமாக 'சிரித்துச் சிரித்துப் பேசினார்' என வரும்.

5. எழுவாயுடன் தொடரும் பயனிலைகள்:
• பாரதியார் கவிஞர் — பெயர்ப் பயனிலை
• நூலகம் சென்றார் — வினைப் பயனிலை
• அவர் யார்? — வினாப் பயனிலை

6. குறள் வெண்பாவின் இலக்கணம்:
வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளாய் முதலடி அளவடியாகவும் (4 சீர்) இரண்டாம் அடி சிந்தடியாகவும் (3 சீர்) வரும்.

7. தீவக அணியின் வகைகள்:
1. முதல்நிலைத் தீவகம், 2. இடைநிலைத் தீவகம், 3. கடைநிலைத் தீவகம்.

8. நிரல்நிறை அணி இலக்கணம்:
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை / பண்பும் பயனும் அது" — சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி ஆகும்.

7 & 10. மொழித்திறன் பயிற்சி & பகுபத உறுப்பிலக்கணம்
சந்தக் கவிதைப் பிழை திருத்தம்:
"தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை
தேறும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே"
கூட்டப்பெயர்கள்:
கல் — குவியல்
புல் — கட்டு
பழம் — குலை
ஆடு — மந்தை
சாவி — கொத்து
எறும்பு — சாரை
யானை — கூட்டம்
வாழை — தோட்டம்
மாமரம் — தோப்பு
வாழைப்பழம் — தார்
பகுபத உறுப்பிலக்கணம்:
பொறித்த: பொறி + த் + த் + அ
பொறி - பகுதி, த் - சந்தி, த் - இறந்தகால இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி.
பொழிந்த: பொழி + த்(ந்) + த் + அ
பொழி - பகுதி, த் - சந்தி (ந் ஆனது விகாரம்), த் - இறந்தகால இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி.
வருக: வா(வரு) + க
வா - பகுதி ('வரு' எனக் குறுகியது விகாரம்), க - வியங்கோள் வினைமுற்று விகுதி.
தணிந்தது: தணி + த்(ந்) + த் + அ + து
தணி - பகுதி, த் - சந்தி (ந்-விகாரம்), த் - இடைநிலை, அ - சாரியை, து - படர்க்கை வினைமுற்று விகுதி.
மயங்கிய: மயங்கு + இன் + ய் + அ
மயங்கு - பகுதி, இன் - இறந்தகால இடைநிலை, ய் - உடம்படுமெய் சந்தி, அ - பெயரெச்ச விகுதி.
அறியேன்: அறி + ய் + ஆ + ஏன்
அறி - பகுதி, ய் - உடம்படுமெய், ஆ - எதிர்மறை இடைநிலை, ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.
11, 12, 13. உரைநடை, செய்யுள் சிறுவினாக்கள் & பத்தி வினாக்கள்

1. இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க:
1. நாற்று — நெல் நாற்று நட்டேன். 2. கன்று — வாழைக்கன்று வளமாக இருந்தது. 3. பிள்ளை — தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன். 4. வடலி — பனை வடலியைப் பாங்காக வளர்த்தேன். 5. பைங்கூழ் — பைங்கூழ் பசுமையாக இருந்தது.

2. நீர் தன்னைப் பற்றிப் பேசினால்... கற்பனைத் தலைப்புகள்:
1. முகில் நீரே உயிர்நீர், 2. பல பெயர்களில் நான், 3. திருக்குறளில் என் சிறப்பு வான்சிறப்பு, 4. சிவனின் சிகையிலே... நான், 5. குமரியைக் கொன்ற கொடியன் (குமரிக்கண்டம்), 6. எதிர்காலத்தில் என் நிலை.

3. சோலைக்காற்றும் மின்விசிறிக் காற்றும் — உரையாடல்:
சோலைக்காற்று: நண்பா நலமா?
மின்விசிறிக்காற்று: பிறர் கட்டுப்பாட்டில் இயங்கும் நான் எப்படி நலமாய் இருக்க முடியும்? இயற்கையைத் தடுத்தல்லவா என் வேலையைச் செய்கிறேன்; பூக்களில் உலவி நீரில் நீந்த ஆசைதான், ஆனால் மின்சாரம் இன்றேல் என்னால் இயங்கவும் இயலாது.
சோலைக்காற்று: நீ என்ன செய்வாய்? மனிதர்களின் நவீன அறைகளின் செயல் இது; கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்!

4. போரறம் பற்றிய பத்தி வினா-விடைகள்:
அ) போர் அறம் என்பது எவற்றைக் குறிக்கிறது? — வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
ஆ) ஆவூர் மூலங்கிழார் போர் அறம் குறித்துக் குறிப்பிடுவது யாது? — தம்மைவிட வலிமை குறைந்தவரோடு போர் செய்வது கூடாது என்கிறார்.
இ) யாருக்கெல்லாம் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும்? — பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும்.

5. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன:
மொழிச்சிறப்பு: செம்மை பெற்ற அன்னை மொழி; பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி; குமரிக்கண்டத்தில் நிலைத்து ஆட்சி செய்த பேரரசு.
இலக்கியச் சிறப்பு: பாண்டிய மன்னனின் மகள்; திருக்குறளின் பெருமைக்குரியவள்; பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களை அணிகலனாய்ப் பூண்டவள்.

6. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு:
தொழிற்பெயர் வினையை மட்டுமே உணர்த்தும்; காலம் காட்டாது; படர்க்கைக்கே உரியது (எ.கா: பாடுதல், படித்தல்). வினையாலணையும் பெயர் தொழிலைச் செய்யும் கருத்தாவை உணர்த்தும்; முக்காலமும் காட்டும்; மூவிடத்திற்கும் உரியது (எ.கா: பாடியவர், படித்தவர்).

16 & 32. செய்யுள், உரைநடை நெடுவினாக்கள் & கடிதங்கள்

1. மனோன்மணீயம் சுந்தரனார் & பெருஞ்சித்திரனார் தமிழ்த்தாய் வாழ்த்து ஒப்பீடு:
சுந்தரனார் கடலை ஆடையாகவும், தக்காணத்தை நெற்றியாகவும், தமிழகத்தைப் பொட்டாகவும் உருவகித்துத் தமிழின் இளமை வளத்தைப் போற்றுகிறார். பாவலரேறு அன்னை மொழி, நறுங்கனி, பாண்டியன் மகள், சிலம்பு, மணிமேகலை வடிவானவள் என இலக்கிய வளத்தால் போற்றுகிறார். இருவருமே தமிழைத் தாயாகவும், உலக மூத்த மொழியாகவும், காலத்தால் அழியாத நறுமணமிக்க மொழியாகவும் ஒருமுகப்பட்டுச் சிறப்பிக்கின்றனர்.

2. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்:
மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது திருமால் வானுக்கும் மண்ணுக்குமாகப் பேருருவம் கொண்டு எழுந்தது போலக் கார்மேகங்கள் மலையை வளைத்துப் பெருமழை பொழிந்தன. முதுபெண்டிர் நெல்லும் முல்லை மலரும் தூவி நற்சொல் கேட்டனர். கயிற்றில் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் தவிப்பதைக் கண்ட ஆயமகள், "தாய்மார் இப்போதே வந்துவிடுவர், வருந்தாதே" எனக் கூறிய நற்சொல்லைத் தலைவிக்கு உரைத்து ஆற்றுப்படுத்தினர்.

3. தமிழின் சொல்வளம் & புதிய சொல்லாக்கத் தேவை:
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தக்குடி" தமிழ். தாவரத்தின் அடி (தாள், தண்டு, கோல், கழி, கழை), இலை (தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு), கொழுந்து, பிஞ்சு எனத் தமிழில் தாவர உறுப்புகளுக்கே விரிவான சொல்வளம் உண்டு. நவீன அறிவியல், மருத்துவம், கணினித் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்கி நிலைநிறுத்தினால் மட்டுமே எதிர்காலத் தலைமுறைக்குத் தமிழ் அழியாமல் கொண்டு செல்லப்படும்.

4. விண்ணப்பக் கடிதம் — உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு:
அனுப்புநர்: அ. தமிழழகன், 15, வெற்றி நகர், தஞ்சாவூர். பெறுநர்: உணவுப் பாதுகாப்பு ஆணையர், சென்னை. பொருள்: தரமற்ற, கூடுதல் விலையுள்ள உணவு விடுதி மீது நடவடிக்கை எடுத்தல் சார்பு. தஞ்சாவூர் நூலகம் அருகில் உண்ட உணவால் நண்பனுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவச் சிகிச்சை பெற நேரிட்டதை விளக்கி, மருத்துவச் சான்று மற்றும் ரசீது இணைத்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல்.

5. தோழனுக்குப் பாராட்டு மடல்:
மாநில அளவிலான "மரம் இயற்கையின் வரம்" கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற தோழன் த. அமுதனுக்கு வாழ்த்து தெரிவித்து, "முயற்சி திருவினையாக்கும்" என்பதை மெய்ப்பித்துள்ளாய் எனப் பாராட்டி எழுதிய மடல்.

18 & 20. காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல் & நிற்க அதற்குத் தக
காட்சிக் கவிதைகள்:
வாசித்தல் (நூலகம்):
அறிவு ஊற்றின் பிறப்பிடமாம்!
அமுதாய்க் கிடைக்கும் நூலகமாம்!
ஏட்டுக் கல்வியை நேசித்து
ஏற்புடனே நாம் கற்றால்
நம்முடைய வாழ்க்கை புத்தகமாய்
நாளைய வரலாறு ஆகிடுமே!
காற்று (இயற்கை அழிவு):
இயற்கை அழிவின் வெளிப்பாடு!
உயிர்வளி இல்லா நிலைப்பாடு!
காற்றும் மாசாய் கிடக்குதைய்யா!
மரங்கள் வளர்ப்போம் நமக்காக!
உலகைக் காப்போம் சந்ததிக்காக!
நிற்க அதற்குத் தக:

இன்சொல் வழி: பிறர் மனம் மகிழும், அறம் வளரும், புகழ் பெருகும், நல்ல நண்பர்கள் சேருவர், அன்பு நிறையும். நான் இன்சொல் வழியையே தேர்ந்தெடுப்பேன்; என் நண்பனுக்கும் அதையே அறிவுறுத்துவேன்.

புயல் பாதுகாப்புச் செயல்கள் (வானொலி எச்சரிக்கை): 1. குடும்பத்தாரைப் பாதுகாப்பான தளப்பகுதிக்கு அழைத்துச் செல்வேன். 2. மின்சாதனங்கள், தொலைபேசிப் பயன்பாட்டைத் தவிர்ப்பேன். 3. புயலின்போது வெளியே செல்வதைத் தடுப்பேன். 4. முதலுதவிப் பெட்டி, குடிநீர், உலர் உணவுகளைத் தயார் நிலையில் வைப்பேன். 5. அரசு அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவேன்.

19 & 22. படிவங்கள் & பாநயம் பாராட்டுதல்
பணி வாய்ப்பு வேண்டி தன்விவரப் பட்டியல் (செல்வி):
1. பெயர்: செல்வி | 2. பாலினம்: பெண் | 3. பிறந்த தேதி: 07.04.1997 | 4. தந்தை: குமரன் | 5. முகவரி: 67, கம்பர் நகர், சைதாப்பேட்டை, சென்னை - 600 015 | 6. தாய்மொழி: தமிழ் | 7. பயின்ற மொழிகள்: ஆங்கிலம், பிரெஞ்சு | 8. கல்வித்தகுதி: பி.எஸ்.சி (கணினி அறிவியல்) | 9. தொழிற்தகுதி: தட்டச்சு.
உறுதிமொழி: மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதியளிக்கிறேன்.

பாநயம் பாராட்டுதல் — "தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே..." (கா. நமச்சிவாயர்):
• திரண்ட கருத்து: தேனைவிட இனிமையான, உடலிலும் உணர்விலும் ஒளிர்கின்ற, மாந்தர்க்கு இரு கண்களாய் விளங்கும் தனித்தமிழ் மொழியே தழைத்தோங்குவாய்.
• மோனை: தேனினும் / தென்னாடு; எதுகை: தேனினும் / ஊனினும்; இயைபு: மொழியே / மொழியே.
• அணி: தமிழின் சிறப்பு உயர்த்திப் பாடப்பட்டதால் உயர்வு நவிற்சி அணி. பா வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

34. பொதுக்கட்டுரைகள் — முழு உரைத் தொகுப்பு
1. சான்றோர் வளர்த்த தமிழ்
குறிப்புச்சட்டகம்: முன்னுரை - தென்னவர் வளர்த்த தமிழ் - சிற்றிலக்கியங்களின் சிறப்பு - தமிழ் வளர்த்த சான்றோர்கள் - தமிழ் மொழியின் தொன்மை - முடிவுரை
• முன்னுரை: "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" (பாரதியார்). மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையும் இளமையும் வாய்ந்தது தமிழ்.
• தென்னவர் வளர்த்த தமிழ்: முச்சங்கம் வைத்து வளர்த்த பாண்டியர்; அதிவீரராம பாண்டியரின் நைடதம்; மதுரையும் தமிழும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை.
• சிற்றிலக்கியங்கள்: பிள்ளைக்கவி முதல் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்கள்; பிள்ளைத்தமிழ், சதகம், பரணி, கலம்பகம், உலா, கோவை ஆகியவை தமிழன்னைக்கு அணி சேர்த்தவை.
• சான்றோர்கள் & தொன்மை: வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு. போப், வேதநாயகம் பிள்ளை, தாயுமானவர் உள்ளிட்ட சான்றோர்கள் தொண்டாற்றினர். "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக் குடி".
2. பேரறிஞர் அண்ணா
குறிப்புச்சட்டகம்: முன்னுரை - தமிழகம் தந்த தவப்புதல்வர் - நாட்டுப்பற்று - மொழிப்பற்று - பொதுவாழ்வில் தூய்மை - எளிமை - மக்கள் பணியே மகத்தான பணி - முடிவுரை
• பிறப்பு & ஆட்சி: 1909 செப்டம்பர் 15 காஞ்சிபுரத்தில் நடராஜன் - பங்காரு அம்மாள் மகனாகப் பிறப்பு. 1967-இல் முதல்வர் பொறுப்பேற்றுப் படி அரிசித் திட்டம், மதுவிலக்கு நடைமுறை.
• மொழிப்பற்று & தூய்மை: 'மெட்ராஸ்' என்ற பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றியமைத்தல்; இருமொழித் திட்டம்; 1968 உலகத் தமிழ் மாநாடு. "மறப்போம் மன்னிப்போம்", "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்", "மக்கள்தொண்டே மகேசன் தொண்டு" ஆகியவை அண்ணாவின் அழியாத வாசகங்கள்.
3. பாவேந்தர் பாரதிதாசன்
• பணிகள்: 37 ஆண்டுகள் தமிழாசிரியராய்ப் பணியாற்றித் தமிழ் உணர்வை ஊட்டினார். "எளிய நடையில் தமிழ்நூல்கள் எழுதிடவும் வேண்டும்" என முழங்கினார்.
• பெண்கல்வி & பெண்ணியம்: 'குடும்ப விளக்கு' மூலம் பெண்கல்வியின் மேன்மையையும், 'இருண்ட வீடு' மூலம் கல்வி இல்லாப் பெண்களின் நிலையையும் படம் பிடித்தார். "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" எனப் பாடிய புரட்சிக்கவிஞர்.

Related 10th Tamil Study Materials

10th Tamil - Important 2,3,5 Marks Study Materials | Mr. P. Muthamilselvan - Preview & Download

10th Tamil - Important 2,5 Mark Questions | Mr. M. Krishnamoorthy - Preview & Download

10th Tamil - Unit 1-9 Book Back Questions & 2 Marks | Mr. G.J. Antony Prakash - Preview & Download

10th Tamil - One Marks Test Question Papers | Mr. M. Sivakumar - Preview & Download

10th Tamil - Unit Test 2 Question Paper with Answer Key (Madurai District) | Mr. J. Antony Prakash - Preview & Download

10th Tamil - Unit 6-9 Model Question Paper | Mr. Yugamithran - Preview & Download

10th Tamil - Unit 1-5 Important Questions | Mr. Karuppasamy - Preview & Download

10th Tamil - Important Short Questions Unit 1-3 | Mr. S. Jeyaselvan - Preview & Download

10th Tamil - Study Material | Mr. S. Settu Madharsha - Preview & Download

10th Tamil - Important Short Questions Unit 6-9 | Mr. S. Jeyaselvan - Preview & Download

10th Tamil - Pre Quarterly Exam 2021 - Model Question Paper | Mr. P. Muthamil Selvan - Preview & Download

10th Tamil - One Marks Study Materials | Mrs. G. Malini - Preview & Download

10th Tamil - 2,3,5 Marks Study Materials - Part 1 | Mrs. G. Malini - Preview & Download

10th Tamil - 2,3,5 Marks Study Materials - Part 2 | Mrs. G. Malini - Preview & Download

10th Tamil - One Marks Grammar Study Materials | Mrs. G. Malini - Preview & Download

10th Tamil - 5 Marks Study Materials | Mrs. G. Malini - Preview & Download

10th Tamil - Letter Writing, Essay Study Materials | Mrs. G. Malini - Preview & Download

Tenth / SSLC / 10th - Tamil Study Materials (2020-2021 Reduced Syllabus)

10th Tamil - Reduced Syllabus - Unit 1 Model Question Paper | Mr. Yugamithran - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - One Marks Questions & Answers | Mrs. G. Malini - Preview & Download

10th Tamil - All Important Questions | Mr. S. Arockiam - Preview & Download

10th Tamil - All Units - Slip Test Questions | Mrs. Bala Ganessan - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Unit 6-9 - One Mark Questions | Mrs. Bala Ganessan - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Slow Learners Guide | Mr. S. Settu Madharsha - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Slow Learners Study Materials | Mrs. Bala Ganesan - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Unit 1 Monthly Test Question Papers | Mr. S. Settu Madharsha - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - 2,3,5 Marks Questions | Mrs. G. Malini - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Slow Learners Guide | Mr. S. Settu Madharsha - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Slow Learners Study Materials | Mrs. Bala Ganesan - Preview & Download

10th Tamil - All Important Questions | Mr. S. Arockiam - Preview & Download

10th Tamil - All Units - Slip Test Questions | Mrs. Bala Ganessan - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Unit 6-9 - One Mark Questions | Mrs. Bala Ganessan - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Unit 1 Model Question Paper | Mr. Yugamithran - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - One Marks Questions & Answers | Mrs. G. Malini - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Slow Learners Guide | Mr. S. Settu Madharsha - Preview & Download

10th Tamil - Reduced Syllabus - Slow Learners Study Materials | Mrs. Bala Ganesan - Preview & Download

Tenth / SSLC / 10th - Tamil Study Materials

10th Tamil - Pothukatturaigal | Mr. V.K. Vasu - Preview & Download

10th Tamil - Sudaroli Guides | Dr. Karthi Suresh - Preview & Download

10th Tamil - Unit 1 Study Materials | Mr. Rishikeshwaran M - Preview & Download

10th Tamil - Important Questions for Iyal 1, 2 | Mr. S. Jayaselvan - Preview & Download

10th Tamil - Important Questions for Iyal 3, 4, 5 | Mr. S. Jayaselvan - Preview & Download

10th Tamil - One Mark Questions with Answers | Mrs. K. Malini - Preview & Download

10th Tamil - Work Sheet | Mrs. K. Malini - Preview & Download

10th Tamil - Sura Guide | Sura Publications - Preview & Download

10th Tamil - Question Bank | IDEAL Guide - Preview & Download

10th Tamil - Drill Book | Suriya Guide - Preview & Download

10th Tamil - Penguin Guide 2020-2021 - Preview & Download

10th Tamil - Full Guide 2020 - 2021 | Surya Guides - Preview & Download

10th Tamil - Workbook Guide 2020 - 2021 | Surya Guides - Preview & Download

10th Tamil - Iyal 3, 4 Study Materials - Preview & Download

10th Tamil - Important Study Materials | Mr. R. Rajesh - Preview & Download

10th Tamil - Unit 1 Important Study Materials | Mr. S. Muthusami - Preview & Download

10th Tamil - Dolphin Guide / Notes | Dolphin Publications - Preview & Download

10th Tamil - Study Material | Mr. V. Manikandan - Preview & Download

10th Tamil - Study Material | GHSSjpp - Preview & Download

10th Tamil - Unit 9 One Marks Study Materials | Mr. R. Venkatesan - Preview & Download

10th Tamil - Worksheets Study Material 1-4 | Mr. D. Baskaran - Preview & Download

10th Tamil - Revision Test Model Question Paper | Mr. V. Bharathiraja - Preview & Download

10th Tamil - Study Material | Way To Success - Preview & Download

10th Tamil - Unit 1 - One Mark Questions | Mr. M. Ruban - Preview & Download

10th Tamil - Memory Poems Collection | Mr. R. Satheesh Kumar - Preview & Download

10th Tamil - Public Exam 2020 - Model Question Paper | Ideal Guide - Preview & Download

10th Tamil - One Mark Question Paper | Mr. M. Sivakumar - Preview & Download

10th Tamil - Unit 6,7,8 Model Question Paper | Mr. M. Bernad - Preview & Download

10th Tamil - Unit 1,2 Model Question Paper | Mr. M. Bernad - Preview & Download

10th Tamil - Unit 1 to 6 Model Question Paper | Miss. Poovi - Preview & Download

10th Tamil - Unit 1 to 9 Question Paper | Mr. Bharathi - Preview & Download

10th Tamil - Unit 1 to 5 Model Question Paper | Mr. S. Muthusamy - Preview & Download

10th Tamil - Unit Test 9 Question Paper | Mr. P. Poovi - Preview & Download

10th Tamil - Slow Learners Study Material | Mr. R. Balakrishnan - Preview & Download

10th Tamil - Unit 6,7,8 Study Materials | Mr. M. Bernat Prasanna - Preview & Download

10th Tamil - Unit Test 1-3 Question Papers | Mr. Kaali - Preview & Download

10th Tamil - Unit 4,5 Slip Test Question Papers | Mr. Muthamil Selvan - Preview & Download

10th Tamil - Poem Question | Mrs. C. Rathika, Nalandha - Preview & Download

10th Tamil Paper 1 - Slow Learners Study Materials | Mr. S. Settu Madharsha - Preview & Download

10th Tamil - Sura Guide 2019 - 2020 - Preview & Download

10th Tamil Paper 1 - Memory Poems with Questions | Mr. S. Balamurugan - Preview & Download

10th Tamil - Memory Poems | Mr. K. Kannan - Preview & Download

10th Tamil - Lesson 1 One Marks | Ms. A. Buvaneshwari - Preview & Download

10th Tamil - Unit 1 Full Study Material | SVB - Preview & Download

10th Tamil - Memory Poems Study Material | Mr. P. Muthamilselvan - Preview & Download

10th Tamil - Guide (Sample Pages) | Dolphin - Preview & Download

10th Tamil - Unit 1 to 3 One Marks | Mrs. A. Buveneswari - Preview & Download

10th Tamil - Unit 4 & 5 One Marks Study Materials | Mrs. A. Buvaneshwari - Preview & Download

10th Tamil - 1m, 2m, and 3 marks Questions Study Materials | Mrs. Malini Seetha - Preview & Download

10th Tamil - Worksheets | Mrs. Malini Seetha - Preview & Download

10th Tamil - Question Bank | Mr. G. Vasu - Preview & Download

10th Tamil - Memory Poem Study Materials | Way To Success - Preview & Download

10th Tamil - Errors Corrected Study Materials | Way To Success - Preview & Download

10th Tamil - Exam Tips | Way To Success - Preview & Download

10th Tamil - Five Mark Questions Study Materials | Way To Success - Preview & Download

10th Tamil - Important Five Marks Study Materials | Way To Success - Preview & Download

10th Tamil - Important Study Materials | Way To Success - Preview & Download

10th Tamil - Slow Learners Study Materials | Way To Success - Preview & Download

10th Tamil - Text Book Study Materials | Way To Success - Preview & Download

10th Tamil - Unit 1 Study Materials | Way To Success - Preview & Download

10th Tamil - Important Study Materials | Mr. G. Vasu - Preview & Download

10th Tamil - Sample Study Materials | Sura Guide - Preview & Download

10th Tamil - Important Study Materials | Mr. G. Kamalanathan - Preview & Download

10th Tamil - Important Study Materials | Mr. C. Soma Sundaram - Preview & Download

10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment