10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th Std Tamil - Pothukatturaigal | Mr. V.K. Vasu
Padasalai.co.in Provides a clear and special Guidance for all 10th Students. Padasalai.co.in Provides last 10 years of 10th Standard Tamil Study Materials, Question Papers and Answer Keys( Previous year Question Papers & Answer Keys). This time our team has taken a keen effort to provide more study materials in order to help the Students. So we have covered the maximum and we are sure that we will instantly update more study materials for 10th Public Exams.
Dear Students we had shared some Tamil Guides and Study Materials for 10th Standard. To download that Click the Text named "CLICK TO DOWNLOAD". If you have any problem in downloading any materials, you can comment below and if you want to upload any materials from your side in order to help the students, you can mail your materials to padasalai.co@gmail.com
Bookmark this page using the keyboard shortcut Ctrl + D to refer to this page and check your results and other exam-related updates. All the Best!
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி, குருவராஜப்பேட்டை & அரசினர் உயர்நிலைப் பள்ளி, தணிகைப்போளூர்
முன்னுரை: படிப்பால் உயர்ந்தோர், உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும், கல்விக்கண்திறந்தவர் என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர் பற்றிக் காண்போமா?
பிறப்பும் இளமையும்: விருதுபட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மாள் தம்பதியரின் குமாரனாக 15-7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்: சுதந்திரப்போராட்டக் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார். 1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின், முழுநேர ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார்.
தூய்மையும் எளிமையும்: பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட காமராசர், "இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத் தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே. இவர்களுக்கு உதவலாமே" என்று ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர அடி நிலத்தைக்கூட வாங்கிவைத்திருக்காத உத்தமராக, எளிமையானவராகத் திகழ்ந்தவர் காமராஜர்.
மக்கள் பணியே மகத்தான பணி: 1954 இல் முதல்வராகப் பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள் அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி நேரம் உழைத்தார். காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில் விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்.
முடிவுரை: 'கல்விக் கண் திறந்த காமராசர்' எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது "ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன். மக்களின் துயரத்தை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய ஒப்பற்ற தலைவர் இவரே.
முன்னுரை: நமது சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா? அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விசும்பின் துளியும் பசும்புல் தலையும்: மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு. வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. "விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது" - என்கிறார் வள்ளுவர். வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக உள்ளன. அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப் படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காற்று மாசு: மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு, வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர், காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி, காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம்.
பசுமையைக் காப்போம்: சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், குளிர்சாதனபெட்டி பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.
மரமும் மழையும் வரமும் உயிரும்: ஒவ்வொரு மரமும் பல்லாயிரம் உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம். 'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி'. ஆகையால், பசியின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும், நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.
முடிவுரை: இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். மாசில்லா உலகம்; நோயில்லா பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்.
முன்னுரை: தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில் புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
உழவுத் தொழிலும் உழவர்களும்: உழவுத்தொழில் உழுதல், சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல், களையெடுத்தல், பாதுகாத்தல், அறுவடை செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.
தமிழர் வாழ்வில் உழவு: பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது. உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு, சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர்.
இலக்கியங்களில் உழவுத் தொழில்: உழவர்கள் உழுத உழவினை 'நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்' என்கிறது சங்க இலக்கியம். 'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது புறநானூறு. 'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
உழவின் சிறப்பு: உழவு அனைத்துத் தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது. தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும். 'உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம்.
உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்: உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.
முடிவுரை: 'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.
முன்னுரை: தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். தமிழர் பண்பாட்டில் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது விருந்தோம்பல். சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலனைப் பிரிந்த துயரைவிட விருந்தோம்ப இயலாததால் ஏற்பட்ட துயர் மிகவும் வருத்துவதாகக் கூறுகிறாள்.
விருந்து குறித்துக்கூறும் தமிழ் இலக்கியங்கள்: உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாதவர்களே விருந்தினர். "விருந்தே புதுமை" என்கிறது தொல்காப்பியம். விருந்தோம்பல் எனும் தனி அதிகாரத்தையே கொண்டுள்ளது திருக்குறள். "உண்டாலம்ம இவ்வுலகம்" என்கிறது புறநானூறு. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்று நற்றிணை கூறுகிறது. விருந்தினரை ஏழடிவரை நடந்து வழியனுப்ப வேண்டும் என்பதை, "காலின் ஏழடி பின்சென்று.." என்ற பாடலில் கூறுகிறது பொருநராற்றுப்படை. என்றெல்லாம் இலக்கியங்கள் விருந்தோம்பலைப்பற்றி உரைக்கின்றன.
தமிழர் பண்பாட்டில் விருந்து: இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே. முகம் வேறுபடாமல் முக மலர்ச்சியோடு விருந்தினரைத் தமிழர் வரவேற்று உபசரிப்பர். தனித்து உண்ணாமையே தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிட்டு, அவர்கள் திரும்பிச் செல்லும்போது ஏழடி பின்சென்று வழியனுப்பி வைப்பர்.
தமிழர் உணவு முறை: ஐவகை நிலங்களுக்கேற்ப தமிழர்கள் விருந்து அளித்தனர். நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர். தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. ஊறுகாய், இனிப்பு, காய்கறி, கீரை, கூட்டு, முருங்கை சாம்பார், வேப்பம்பூ ரசம், பாயாசம், அப்பளம் போன்றவற்றை அவ்வாழை இலையில் வைத்து விருந்து போற்றினர்.
விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டின் மகுடம்: மருந்தே ஆயினும் விருந்தோடு உண்டனர் தமிழர். திருமணத்தை உறுதி செய்தல், திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள், புதுமனை புகுவிழா போன்ற இல்ல விழாக்களில் மிகுதியான விருந்தினரை வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர்.
முடிவுரை: காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக் கூடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன. பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினரை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்புவதுவரை திருமண ஏற்பாட்டாளர்களே செய்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். விருந்தோம்பலின் உன்னதத்தை உணர்த்தும் பாடங்கள் மற்றும் கதைகளைப் பள்ளி பாடநூல்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
முன்னுரை: மனிதன் தனியானவன் அல்லன்; இவன் சமூக கடலின் ஒரு துளி. தமிழர் சங்ககாலத்தில் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டு வாழ்ந்தனர். தமிழனின் அறவாழ்வு சிறந்து விளங்கியமை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
அறம்: நல்ல பண்பாட்டை உணர்த்துவது அறமாகும். இது நீதி வழுவாத தன்மையைக் குறிக்கும். தருமம், புண்ணியம், ஒழுக்கம், நோன்பு, தவம் அனைத்தும் அறத்தைக் குறிக்கும். வணிகத்தில் அறம்: அறம் செய்வதில் வணிக நோக்கம் கூடாது. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்" என்கிறார், ஏணிச்சேரி முடமோசியார்.
அரசியலில் அறம்: மன்னனின் கொடுங்கோலும் வெண்கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்தே தண்டனை வழங்கினர். "நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும், அறனும், காத்தலும் அமைச்சர் கடமை" என்கிறது மதுரைக்காஞ்சி. "அறம்கண்ட நெறிமான் அவையம்" என்கிறது புறநானூறு. போர் புரியும்போது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறுவர், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போரிடாதது அறமாகக் கருதப்பட்டது. இது தமிழரின் போற்றுதலுக்குரிய அறத்தில் ஒன்றாகும்.
அறத்தான் வருவதே இன்பம்: வீரமும் கொடையும் தமிழர்களின் இரு கண்களாகக் கருதப்பட்டன. ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதையே உண்மையான மகிழ்ச்சியாகக் கருதினர். 'செல்வத்துப் பயனே ஈதல்' என்கிறது புறநானூறு. ஆற்றுப்படை இலக்கியங்களும் பதிற்றுப்பத்தும் கொடைச் சிறப்பினைப் பாடுகின்றன.
அறவாழ்வே பண்பாட்டின் உச்சம்: வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூட பாராமல் கொடுப்பவன் பெருஞ்சாத்தன். வள்ளலின் பொருள் இரவலனின் பொருளாகக் கருதப்பட்டது. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவனாக விளங்கியவன் அதியன். மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் பேகன். இவ்வாறு பிறருக்கு உதவுதலைச் சிறந்த அறமாகக் கொண்டிருந்தமை பண்பாட்டின் உச்சமாகும்.
அறம் என்பதே மனிதம்: பிறர் நோயும் தம் நோயாகக் கருதுதல், பிறரைத் துன்புறுத்தாச் சொற்களைப் பேசுதல், இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டு விடுதல் போன்ற பண்புகளே மனிதப் பண்பாகும். மனிதப் பண்பிற்கும், அறத்திற்கும் பெரிய வேறுபாடில்லை என்றே கூறலாம். மனிதப் பண்பு நிறைந்து உள்ளவரிடத்தில் அறப்பண்பும் மிகுதியாகக் காணப்படும்.
முடிவுரை: இவ்வாறு இலக்கியம் மூலமும் பிறர் சொல்லக் கேட்டும் தாமே சிந்தித்தும் அறம் அறிந்து செயல்பட்டு மனிதம் காப்போம். அறமிகு மானுடம் தழைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
முன்னுரை: ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும். கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?
மொழிபெயர்ப்பும் தொடக்கமும்: 'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்: 'மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்' என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.
மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்: மொழிபெயர்ப்பு எல்லாக் காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர்கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது. மொழிபெயர்ப்பு இல்லாமல் உலகம் இல்லை; வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பினால் வளர்ச்சி அடைந்துள்ளன.
மொழிபெயர்ப்பு ஒரு பயன்கலை: வேற்று மொழி படைப்புகளால் புதுவகையான சிந்தனைகளும் மொழிக் கூறுகளும் பரவுகின்றன. உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அடையும் பயன்கலையாக மொழிபெயர்ப்பு விளங்குகிறது.
எட்டுதிக்கும் செல்வீர்: எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு நிறுவனங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
மொழிபெயர்ப்புக் கல்வி: மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி ஓருலகர் எனுந்தன்மை பெறலாம்.
முடிவுரை: 'உலக நாகரிக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்' எனும் மு.கு. ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.
முன்னுரை: ''தமிழே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை, பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச் சூட்டியுள்ளனர். தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய்த் திகழ்வதற்கு அதுவும் ஒரு பெருங்காரணமாகும். சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.
கன்னித்தமிழ்: தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் தொடங்கி, தற்கால உரைநடை மற்றும் துளிப்பா வரை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இலக்கிய வடிவங்களில், பல்வேறு பொருட்களைக் கொண்டு, எண்ணிலடங்கா நூல்களை இயற்றி, தமிழன்னைக்குச் சூட்டி, தமிழ் மொழியைக் கன்னித்தமிழாய் வைத்திருப்பதற்குத் தமிழராகிய நாம் பெருமைப்பட வேண்டும்.
தமிழன்னைக்கு எழில் சேர்க்கும் சிற்றிலக்கிய வடிவங்கள்: தமிழகத்தில், நாயக்கர் ஆண்ட காலப்பகுதியை சிற்றிலக்கிய காலம் என்பர். ஏனெனில், அக்கால கட்டத்திலேயே சிற்றிலக்கிய வடிவங்கள் பல உருவாகி, நூல்கள் தோன்ற ஆரம்பித்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை பிள்ளைத்தமிழ், சதகம், பரணி, கலம்பகம், உலா, அந்தாதி, கோவை முதலான சிற்றிலக்கிய வடிவங்கள் ஆகும்.
* பிள்ளைத்தமிழ்: கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பருவத்திற்குப் பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழ். ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது. குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மற்றும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஒப்பற்ற பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் ஆகும்.
* சதகம்: நூறு பாடல்கள் கொண்ட நூலுக்குச் சதகம் என்று பெயர். மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனைப் போற்றிப் பாடும் கருத்துகள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.
* பரணி: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது. போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர் நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.
* கலம்பகம்: 18 உறுப்புகளைக் கொண்டு, அகம் புறம் என இரண்டும் கலந்து பாடுவது கலம்பகம் ஆகும். பல்வேறு பாவினங்கள் கலந்துபாடுவது கலம்பகம். கலம்பகம் என்பதில், கலம் என்பது பன்னிரண்டையும், பகம் என்பது ஆறையும் குறிக்கும். நந்திக்கலம்பகம் முதற் கலம்பகம் ஆகும்.
* உலா: மன்னர்கள் உலா வரும்போது ஏழு பருவ மகளிரும், அவரைக் கண்டு அவர் மீது பற்று கொண்டு மயங்குவதாகப் பாடுவது உலா. இதனைத் தொல்காப்பியம் "ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப" என்று குறிப்பிடுகிறது. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கயிலாய ஞான உலா தமிழில் தோன்றிய முழுமை பெற்ற முதல் உலா நூலாகும்.
* அந்தாதி: அந்தம் + ஆதி = அந்தாதி. ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும்.
* கோவை: ஒரு பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது கோவை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை நூலாகும்.
முடிவுரை: "வீறுடை செம்மொழி தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும்.
முன்னுரை: தமிழர் அறிவியலை நான்காம் தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழரின் விண்ணியல் அறிவாகும். இன்றளவில் நிகழ்த்தப்பெறும் பல விண்ணியல் ஆய்வுகளுக்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க இயலாது.
தமிழன் அறிவியலின் முன்னோடி: தமிழர் பழங்காலத்தில் தங்கள் வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக் கொண்டவர்கள். சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன. பெருவெடிப்புக் கொள்கையை பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று:
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி"
எனத்தொடங்கும் பரிபாடலில் புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தார். ஆனால் 1300 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால் வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்.
நமது கடமை: அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான கோள் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
முடிவுரை: "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.
நூல் தலைப்பு: அன்று இந்தியாவை அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள். காந்திதேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள். இந்தியாவின் அடையாளமாக தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த "கனவெல்லாம் கலாம்" என்ற நூலாகும். இதுவே இந்நூலின் தலைப்புமாகும்.
நூலின் மையப் பொருள்: இந்நூலாசிரியர் மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்துள்ளார். அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய நூல் "கனவெல்லாம் கலாம்".
வெளிப்படும் கருத்து: மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை.
நூல் கட்டமைப்பு: நூலாசிரியர் இந்நூலில், 1. காணிக்கை கட்டுரைகள், 2. இரங்கல் செய்திகள், 3. கவிதை மாலை, 4. கலாம் அலைவரிசை, 5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை கலாம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே.
சிறப்புக் கூறு: பொதுவாக தொகுப்பு நூலை உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.
நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்.
முன்னுரை: குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்கு தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.
அறிவிப்பு: மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தவுடன், அங்கே எந்தெந்த அரங்குகள் எங்கெங்கே அமைக்கப்பட்டுள்ளன? துறைசார்ந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கி மூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.
அமைப்பு: பொருட்காட்சியின் தொடக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம். அங்கே ஓரிடத்தில் பொருட்காட்சியின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அந்த வரைபடம் பொருட்காட்சி அமைப்பை மக்களுக்கு எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது. மேலும் பொருட்காட்சியின் அமைப்பு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
சிறு அங்காடிகள்: பொருட்காட்சியில் விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள், சமையல் கலன்கள், நெகிழிப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.
நிகழ்த்தப்பட்ட கலைகள்: பொருட்காட்சியின் உள்ளே இருந்த பொழுதுபோக்கு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது நிகழ்கலை ஆகும். அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது.
பேச்சரங்கம்: இலக்கிய விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் வகையில், பொருட்காட்சியில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். பொருட்காட்சிக்கு வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர். நானும் என் குடும்பத்தினரும் கூட பேச்சி அரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு வந்தோம்.
அரசின் நலத்திட்டங்கள்: பொருட்காட்சிக்கு முத்தாய்ப்பாக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துறைவாரியான அரங்குகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின. அந்த அரங்குகளில் அந்தந்த துறைசார்ந்த ஊழியர்கள் அவர்களது பணிகளையும், மக்களுக்காக அவர்கள் ஆற்றும் சேவைகளையும் விளக்கும் வகையில் அந்த அரங்குகளை அமைத்து இருந்தனர்.
முடிவுரை: இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம். கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.
முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர். அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
சாலை விதிகள்: சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்: சிவப்பு வண்ண விளக்கு "நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு "தயாராக இரு" என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு "புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். போக்குவரத்து காவல் துறையினரின் கட்டளையை மீறி நாம் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது. சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது. மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும். பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.
முடிவுரை: "சாலைவிதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.
முன்னுரை: நான் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமேசுவரத்தில் ஜைனுலாப்தீன் மரைக்காயர்-ஆஷியம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தேன். என் வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
இளமைக்காலம்: என்னுடைய பள்ளிப் படிப்பை இராமேசுவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி மூலம் தொடங்கினேன். அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டிருந்தேன். பத்திரிகை விற்பனை செய்து என்னுடைய உறவினருக்கு உதவி செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை என் படிப்புக்காகச் செலவு செய்தேன். பள்ளிப் பருவத்தில் கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதுவே பின்னாளில் நான் விமானத்தை வடிவமைக்கத் தூண்டுகோலாக இருந்தது.
கல்லூரிப்படிப்பு: 1954 ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். 1955ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியல் படிப்பை முடித்தேன்.
விமான வடிவமைப்பு: எம்.ஐ.டியில் படித்து முடித்த பின் உள்நாட்டு தொழில்நுட்ப அறிஞர்களின் உதவியுடன் உள்நாட்டில் கிடைத்த பொருள்களைக் கொண்டு நந்தி என்ற விமானத்தை வடிவமைத்து அதை இயக்கியும் காட்டினேன்.
பணி: 1983 ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகராகவும் பொறுப்பேற்றேன்.
சாதனைகள்: இந்தியாவில் முதல்முறையாக 1974ஆம் ஆண்டு "சிரிக்கும் புத்தர்" என்ற திட்டத்தில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்ந்தது. அத்திட்டத்தில் பங்கேற்ற 60 விண்வெளி பொறியியல் அறிஞர்களில் நானும் ஒருவனாக இருந்தது எனக்குப் பெருமை அளிக்கிறது. 1980ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்எல்வி-3 என்ற ஏவுகணையைப் பயன்படுத்தி ரோகிணி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினேன். 1998 ஆம் ஆண்டு "ஆபரேஷன் சக்தி" என்ற திட்டத்தின் மூலம் பொக்ரான் அணு வெடிப்புச் சோதனையில் முக்கிய பங்காற்றினேன். 2002 முதல் 2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் இருந்து உள்ளேன்.
முடிவுரை: நான் அறிவியல் மீது பற்று கொண்டிருந்த அளவுக்கு, தாய்மொழி மீதும் பற்று கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள் ஆகும். மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதில் எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது, "கனவு காண்பதை சிந்தனை வடிவம் ஆக்குங்கள், பின் செயலாற்ற முனையுங்கள்".
பத்தாம் வகுப்பு தமிழ் — துணைப்பாடக் கட்டுரைகள்
வெண்மதி: என்ன கயல்விழி! தமிழ் நாளிதழ் படிக்கிறாயா?
கயல்விழி: நாளிதழ் தான். ஆனால், தமிழ் நாளிதழ் இல்லை.
வெண்மதி: ஏன் தமிழ் படிக்கத் தெரியாதா அல்லது படிக்க விருப்பம் இல்லையா?
கயல்விழி: அப்படி ஒன்றும் இல்லை! நான் தமிழ் நன்றாகப் பேசுவேன். தமிழ் படிக்க விருப்பம் உள்ளது. ஆனால், படிக்கத் தெரியாது.
வெண்மதி: மிகவும் எளிமையான மொழி. தமிழைப் பேசுவது எவ்வளவு மிக எளிமையோ, அதேபோன்று படிப்பதும் மிகவும் எளிமையானது.
கயல்விழி: அப்படியா?
வெண்மதி: தமிழைப் படிக்கக் கற்பதற்கு உரைநடை மிகவும் துணை புரியும்.
கயல்விழி: உரைநடை என்றால் என்ன என்று எனக்குக் கூற முடியுமா?
வெண்மதி: நீங்களும் நானும் பேசிக்கொண்டிருப்பதற்குப் பெயர் உரையாடல். இதையே எழுதினால் உரைநடை.
கயல்விழி: ஆகா, அருமை!
வெண்மதி: அதுமட்டுமல்லாமல், உரைநடை மிகவும் சுவையுடையது. அதில், பல சுவைமிக்க நயங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
கயல்விழி: அதைப் பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்களேன்!!
வெண்மதி: உரைநடை வளர்ச்சி அளவிடற்கரியது. சிறுகதை, புதினம், கட்டுரை போன்றவை உரைநடை வடிவங்களே ஆகும். மேலும் நம் உணர்வுகளை வெளிப்படுத்தக் கருவியாக உள்ளது உரைநடை.
கயல்விழி: செய்யுளில் உள்ளது போன்று உரைநடையில் இலக்கிய நயம் உள்ளதா?
வெண்மதி: உள்ளது. உரையாசிரியர்கள் பலர் எதுகை மோனை சொற்களைப் பயன்படுத்தி உரை எழுதியுள்ளனர்.
கயல்விழி: உரைநடைக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள் என்னென்ன? என்று கூறுங்களேன்.
வெண்மதி: உவமை, ஒன்பான் சுவை, நயங்கள், எடுத்துக்காட்டுகள், பழமொழிகள் போன்றன உரைநடையின் அணிகலன்கள் ஆகும்.
கயல்விழி: வீரமாமுனிவர், ஜி.யு.போப் போன்றோர் உரைநடைக்குச் சேவையாற்றியுள்ளதை நான் அறிவேன்.
வெண்மதி: மிகச் சரியாகச் சொன்னாய். இருவருமே தமிழின் இனிமையைக் கற்றுணர்ந்து உரைநடை வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர்கள் ஆவர்.
கயல்விழி: தமிழ்மொழி அறியாதவர்களே தமிழைக் கற்று நூல்கள் இயற்றும் போது, எனக்கு தமிழ் பேசத் தெரியும். கற்பது கடினம் இல்லை. இன்றே எனக்கு தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடு. நானும் கற்கிறேன்.
வெண்மதி: மிக்க மகிழ்ச்சி! கற்றுக் தருகிறேன்.
கயல்விழி: மிக்க நன்றி வெண்மதி!!
முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும் ஒன்று. நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது. ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம்.
விடாது பெய்த மழை: கடுமையான வெயில் மறைந்து, இமை நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் மழை பெய்தது. கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள கயிறுகளை இறுக்கிக் கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இடி முழக்கம், மின்னல் ஒளி, அதேசமயம் விரைவும் பளுவும் கப்பலையும் உலுக்கியது.
தள்ளாடிய கப்பல் (தொங்கான்): மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று கலந்தது. பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்" என்று கத்துகிறான். பாண்டியன் எழுந்தான். இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின. கப்பல் தள்ளாடியது. மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின.
பயணிகளின் தவிப்பு: மாலுமிகள் நீரை இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைத்தனர். கப்பலின் இருபுறமும் தேயிலைப் பெட்டிகளும், புகையிலைச் சிப்பங்களும் மிதந்தன. பாண்டியன் கடலைப் பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட நேரம் தொடர்ந்தது. கப்பல் தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது. புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தைக் கேட்டான். அதற்குக் கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையைப் பார்க்கலாம் இனி பயமில்லை என்றார்.
கரையைக் காணுதல்: ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு கடலாக மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன. அடுத்த நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூரக்கப்பல்கள் கரை முழுவதும் நின்றிருந்தன.
முடிவுரை: சுமத்ரா பயணிகள் துடுப்புப் படகில் இறங்கிப்போய் நடை பாலத்தில் ஏறி நடந்து சுங்க அலுவலகத்திற்குச் சென்று பயண அனுமதிச் சீட்டினை நீட்டினர். "தமிரோ?" என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார். "யா மஸ்தா" என்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளைச் சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார்.
முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக இருக்கும். பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல். அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி. அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.
அன்னமய்யாவும், இளைஞனும்: அன்னமய்யா, சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். "இவன் துறவியோ? பரதேசியோ?" என்ற ஐயத்தை மனதில் கொண்டு, அருகில் சென்று பார்த்தார். அருகில் சென்று பார்த்து அவன் ஓர் இளைஞன் என்பதை உறுதி செய்து கொண்டார். அவனது முகம் பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த இளைஞரிடம் போய் அருகில் நின்று பார்த்தார். அந்த வாலிபன் "குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?" என்று கேட்டான். அன்னமய்யா “அருகிலிருந்து நீச்சுத்தண்ணி வாங்கி வரவா?" என்று கேட்டார். அந்த இளைஞன் பதில் ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான்.
இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள் கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும், ஊறுகாயும் இருந்தது. ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை "மடக் மடக்" என்று உறிஞ்சிக் குடித்தான். உறிஞ்சியபோது அவனுக்குக் கண்கள் சொருகின. மிடறு மற்றும் தொண்டை வழியாக இறங்குவது சுகத்தை அளித்ததை முகம் சொல்லியது. அவனுள் ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது.
அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ, அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும் குழந்தையைப் பார்ப்பது போல, அந்த இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா.
அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன் எழுந்தவுடன், "எங்கிருந்து வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?" என்று அன்னமய்யா கேட்டார். அதற்கு அந்த இளைஞன் "மிக நீண்ட தொலைவில் இருந்து வருகிறேன்" என்று கூறிவிட்டு, "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டான். அதற்கு "அன்னமய்யா" என்றார். இளைஞன் அந்தப்பெயரை இதற்குள் திரும்பத்திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டான். "எவ்வளவு பொருத்தமான பெயர்?" என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அந்த இளைஞன் தன்னுடைய சொந்தப் பெயர் ”பரமேஸ்வரன்” என்றும், புதுப் பெயர் "மணி" என்றும் அன்னமய்யாவிடம் கூறினான்.
சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். அனைவரும் அந்த இளைஞனிடம் அன்பாகப் பேசி, அந்த உணவை உண்ணச் செய்தனர். இளைஞன் உணவை உண்டு விட்டு மீண்டும் உறங்கினான்.
முடிவுரை: "தானத்தில் சிறந்தது அன்னதானம்" என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினார். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.
பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நான் முதல்நிலையில் தேர்வு பெற்றேன். அடுத்ததாக மாநில அளவிலான போட்டியிலும் நான் முதலிடத்தில் தேர்வு பெற்றேன். அதன் விளைவாக, அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உடன் விண்வெளிப்பயணம் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் நாளை தொலைபேசி மூலமாக அறிவித்தனர். நானும் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கும் மட்டுமே விண்வெளிப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தனர். நான் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.
நாங்கள் இருவரும் விண்வெளிக்கு விண்கலம் மூலம் சென்றோம். நாங்கள் சென்ற விண்கலம் ஏவுகணையின் முனையில் பொருத்தப்பட்டிருந்தது. ஏவுகணை புறப்படும் போது எனக்குப் புதுவிதமான அனுபவம் கிடைத்தது. நாங்கள் ஏறிய சிறிது நேரத்தில் விண்கலம் விண்வெளியை அடைந்தது. புவியீர்ப்பு விசையற்ற இடத்திற்குச் சென்று விட்டோம்.
அவருடைய கண்டுபிடிப்பான "ஹாக்கிங் கதிர்வீச்சு பற்றி" விளக்கும் படி கேட்டேன். ஒரு விண்மீனின் ஆயுள் காலம் முடியும்போது, அது சுருங்கத் தொடங்குவதால், அதனுடைய ஈர்ப்பாற்றல் அதிகமாகிக் கொண்டே செல்வது பற்றியும், அதன் ஈர்ப்பு எல்லைக்குள் செல்லும் எதுவுமே தப்பி வர முடியாது எனவும் எனக்குப் புரியும்படி விளக்கினார். பின்னர் அவரது ஆய்வு முடிவுகளான கருந்துளையின் ஈர்ப்பு எல்லையில் வெளிப்படும் கதிர் வீச்சுகள் பற்றிக் கூறினார்.
கருந்துளை என்றால் கருப்பாக இருக்கும் என்று நான் எண்ணியிருந்தேன்; ஆனால் அவர் கருந்துளை என்றால் என்ன? என்பதைப் பற்றி தெளிவான விளக்கத்தைக் கொடுத்தார். கருந்துளையில் இருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும், அணுத்துகள்களும் கசியத் தொடங்கி வெடித்து மறைந்துவிடும் என்று கூறினார். கற்பனை இலக்கியம் படைப்பவர்களின் கற்பனைகளையெல்லாம் மிஞ்சுவதாக அவர் சொன்ன விளக்கங்கள் இருந்தன. "கருந்துளை பற்றிய உண்மைகளை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்து கொள்ள முயல்கிறது" என்று கூறினார்.
தலைவிதி பற்றிய அவர் கூறிய கருத்து, என்னை மிகவும் சிந்திக்க வைத்தது: "தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது" என்று கூறிய அவர், விதிதான் தீர்மானிக்கிறது என்றால், சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்து கடக்கிறார்கள்? என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல இயலவில்லை. பல அறிவியல் உண்மைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் பூமியை நோக்கி வரும் போது, தன்னம்பிக்கை உள்ள ஒரு நபராக உத்வேகத்துடன் திரும்பி வந்தேன். அவரிடமிருந்து பிரிய மனமில்லாமல் விடை பெற்று வந்தேன்.
இந்த நிகழ்வு, "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து / ஆள்வினை இன்மை பழி" என்ற திருக்குறளை எனக்கு நினைவுபடுத்தியது. ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்ட ஸ்டீபனின் சாதனைகள் அளப்பரியவை.
முன்னுரை: வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான் வரலாறு ஆகிறார்கள். கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத் தோன்றி, எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரைப் பற்றி இங்கு காண்போம்.
மேரியின் குடும்பச்சூழல்: மேரியின் குடும்பத்தினருக்குப் பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள். ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள். உணவு தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள்.
மேரிக்கு நடந்த துன்பம்: மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், ஒரு மாளிகைக்குச் செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில் படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்து, அதைப் புரட்டத் தொடங்குகிறாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள், ”நீ அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாது" என்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில் பேசினர். அந்த நிகழ்வு மேரியின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிடுகிறது.
மேரியின் மனநிலை: அந்த நாள் முழுவதும் அவள் துயரத்துடன் இருந்தாள். "நான் படிக்க வேண்டும். நான் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ளப் போகிறேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டாள். பள்ளிக்குச் செல்ல விரும்பும் எண்ணத்தைப் பற்றி தனது தந்தையிடம் கூறினாள். "இங்கே நமக்கென்று பள்ளிக்கூடம் இல்லையே?" என்று அவர் கூறினார்.
தூண்டுகோல் - மிஸ் வில்சன்: ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து நின்றாள். பிறகு பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு அனைவரையும் அவசரப்படுத்தினாள். தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள். குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.
சிறப்பாகக் கல்விகற்ற மேரி: மேரி நாள்தோறும் தன் இலட்சியத்தைச் சுமந்து பள்ளிக்குச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக் கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது. மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி படிக்க உதவினார்.
முடிவுரை: மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும். உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள்; இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள்.
முன்னுரை: ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத் தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்றபோது, அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.
அனுமார்: நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல் வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயரக் குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான்.
அனுமாரின் நெருப்பாட்டம்: திடீரென்று மேளமும், நாகசுரமும் வேகமாக ஒலிக்கத் தொடங்கின. எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம் திகைத்து, பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி, அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார். அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அழகுவின் உதவி: சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது. கீழே புரண்ட வாலை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள். அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாலை அழகு இடத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு சென்றான். சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது.
அழகுவின் ஆட்டம்: அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை, முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார் போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார். அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில் சாய்ந்து கொண்டு, "பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு" என்றார். அவனும் நன்றாக ஆடினான்.
அனுமார் அடைந்த மகிழ்ச்சி: அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான். அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு, "பேஷ் பேஷ் உடனே பிடிச்சுகிட்டியே” என்றார். அனுமார் அம்பு போல அவன் முன் பாய்ந்தார். அழகு அனுமாரின் கை இடுக்கில் புகுந்து வெளியே சென்றான். பாய்ந்த வேகத்தில் கீழே விழப் போன அனுமார் தரையில் கையூன்றி சமாளித்து நின்று, வெறுமை நிறைந்த மனதோடு இவனைத் திரும்பிப் பார்த்தார்.
முடிவுரை: "என்னலே, எனக்கே பாச்சா காட்டுற? பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன. அழகு, அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன் ஆட்டத்தில் மூழ்கியவனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆடிக்கொண்டிருந்தான்.
முன்னுரை: விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர். அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர். சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப் பற்றி இங்கு காண்போம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி: இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது. 1954 இல் இவருக்கு "தாமரையணி" விருதும், 1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும் கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.
பாலசரசுவதி: இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள “சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார். கல்கத்தாவிலும், காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன கண மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.
இராஜம் கிருஷ்ணன்: சமூகச் சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை “சேற்றில் மனிதர்கள்", "வேருக்கு நீர்" எனும் புதினங்களாகவும் எழுதியுள்ளார்.
கிருஷ்ணம்மாள்: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” என்ற அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்.
மதுரை சின்னப்பிள்ளை: இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும் இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர். வயதானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து, அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண் அரசின் "பெண் ஆற்றல்" விருதையும், தமிழக அரசின் "அவ்வை" விருதையும், தூர்தர்ஷனின் பொதிகை விருதையும் பெற்றவர்.
முடிவுரை: “பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால், அந்த நாடு அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். இந்திய சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர் என்பதற்கு இவர்களே சான்றுகளாகத் திகழ்கின்றனர்.
ஆசிரியர் : இன்று மாணவர்கள் வகுப்பில் கொக்கு, கோழி, உப்பு இவற்றைப் பற்றியும் இவற்றைப் போன்று திகழும் மாணவர்கள் பற்றியும் நாடகமாக நடிக்கவிருக்கிறார்கள்.
அழகன் : நான் நேற்று நூலகத்தில், இராமானுஜர் பற்றிய நூல் ஒன்றைப் படித்தேன். அதில், கொக்கு, கோழி, உப்பு ஆகியவற்றைப் பற்றிக் கூறியிருந்தார்.
தென்றல் : அப்படியா? கொக்கு என்ன செய்யும்? காலமறிந்து, வாய்ப்பிற்காகக் காத்திருந்து வாய்ப்பு கிடைத்ததும் உடனே செயல்படும். “கொக்கொக்க கூம்பும் பருவத்து...." என்றும், "ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு" என்றும் நமது இலக்கியங்கள் கூறியுள்ளன.
அழகன் : சரியாகச் சொன்னாய்.
வேல்விழி : கோழியைப் பற்றி நான் சொல்லட்டுமா? கோழி எப்போது பார்த்தாலும் குப்பையைக் கிளறிக்கொண்டே இருக்கும். அதைத் தவிர அதற்கு வேறு என்ன வேலை உள்ளது? குப்பையைக் கிளறி கிளறி அதன் உணவை உண்ணும்.
அழகன் : ஆமாம் ஆமாம்.. "உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்றெல்லாம் கூறுவார்கள். நாம் உண்ணும் உணவிற்கு உப்புதான் சுவையைச் சேர்க்கிறது என்பதை உணர்த்தும் பழமொழிகள் தான் இவை.
தென்றல் : கொக்கு, கோழி, உப்பு இவைகளைப் போன்று மாணவர்களும் ஒவ்வொரு வகையில் உள்ளனர்.
ஆசிரியர் : மாணவர்களே! இன்று எதைப் பற்றி விவாதம் நடைபெறுகிறது?
மூவரும் : நேற்று நூலகத்திற்குச் சென்றபோது கொக்கு, கோழி, உப்பு ஆகியவற்றின் இயல்பைப் படித்தோம். அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம் ஐயா.
ஆசிரியர் : அப்படியா? என்ன தெரிந்து கொண்டீர்கள்?
வேல்விழி : கொக்கு, காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும். கோழி குப்பையைக் கிளறினாலும் தனக்குத் தேவையான உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை மட்டுமே உணர முடியும். ஆகியவற்றைத் தெரிந்து கொண்டோம் ஐயா.
தென்றல் : இவை போன்றே மூன்று விதமான மாணவர்கள் இருப்பதைப் பற்றி எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள் ஐயா.
ஆசிரியர் : சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி அரிய செயல்களைச் செய்யும் மாணவர்கள் கொக்கைப் போன்றவர்கள். தனக்கு ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து, அதிலுள்ள நன்மைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் மாணவர்கள் கோழியைப் போன்றவர்கள். எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனக்கான முத்திரையைப் பதிப்பவர்கள் உப்பைப் போன்றவர்கள்.
மூவரும் : ஆகா! அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி! இனிமேல் நாங்களும் கொக்கு, கோழி, உப்பு ஆகியவற்றை போல் இருப்பதற்கு முயற்சி செய்வோம் ஐயா.
முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத்தக்கதாகும். மனிதநேயம் நலிந்து வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம் அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில், கு.அழகிரிசாமி தனது "ஒருவன் இருக்கிறான்" என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.
குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது. சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு கடையில் வேலை செய்தவன் ஆறுமுகம். வீரப்பன் கட்டிட மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி.
நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமியை ஒருவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.
கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன் உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமிக்காக தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும் எழுதியிருந்தான். கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால் பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இது மனிதநேயத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை; மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின் பக்கத்து வீட்டு நபரையும் மனம் மாறச் செய்தது.
ஆறுமுகம் : குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம். வீரப்பன் அளவிற்கு குப்புசாமியிடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.
முடிவுரை: "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் / மண்புக்கு மாய்வது மன்". பண்புடையவர்களால்தான் இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும் ஆவர்.
Related 10th Tamil Study Materials
10th Tamil - Important 2,3,5 Marks Study Materials | Mr. P. Muthamilselvan - Preview & Download
10th Tamil - Important 2,5 Mark Questions | Mr. M. Krishnamoorthy - Preview & Download
10th Tamil - Unit 1-9 Book Back Questions & 2 Marks | Mr. G.J. Antony Prakash - Preview & Download
10th Tamil - One Marks Test Question Papers | Mr. M. Sivakumar - Preview & Download
10th Tamil - Unit Test 2 Question Paper with Answer Key (Madurai District) | Mr. J. Antony Prakash - Preview & Download
10th Tamil - Unit 6-9 Model Question Paper | Mr. Yugamithran - Preview & Download
10th Tamil - Unit 1-5 Important Questions | Mr. Karuppasamy - Preview & Download
10th Tamil - Important Short Questions Unit 1-3 | Mr. S. Jeyaselvan - Preview & Download
10th Tamil - Study Material | Mr. S. Settu Madharsha - Preview & Download
10th Tamil - Important Short Questions Unit 6-9 | Mr. S. Jeyaselvan - Preview & Download
10th Tamil - Pre Quarterly Exam 2021 - Model Question Paper | Mr. P. Muthamil Selvan - Preview & Download
10th Tamil - One Marks Study Materials | Mrs. G. Malini - Preview & Download
10th Tamil - 2,3,5 Marks Study Materials - Part 1 | Mrs. G. Malini - Preview & Download
10th Tamil - 2,3,5 Marks Study Materials - Part 2 | Mrs. G. Malini - Preview & Download
10th Tamil - One Marks Grammar Study Materials | Mrs. G. Malini - Preview & Download
10th Tamil - 5 Marks Study Materials | Mrs. G. Malini - Preview & Download
10th Tamil - Letter Writing, Essay Study Materials | Mrs. G. Malini - Preview & Download
Tenth / SSLC / 10th - Tamil Study Materials (2020-2021 Reduced Syllabus)
10th Tamil - Reduced Syllabus - Unit 1 Model Question Paper | Mr. Yugamithran - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - One Marks Questions & Answers | Mrs. G. Malini - Preview & Download
10th Tamil - All Important Questions | Mr. S. Arockiam - Preview & Download
10th Tamil - All Units - Slip Test Questions | Mrs. Bala Ganessan - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Unit 6-9 - One Mark Questions | Mrs. Bala Ganessan - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Slow Learners Guide | Mr. S. Settu Madharsha - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Slow Learners Study Materials | Mrs. Bala Ganesan - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Unit 1 Monthly Test Question Papers | Mr. S. Settu Madharsha - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - 2,3,5 Marks Questions | Mrs. G. Malini - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Slow Learners Guide | Mr. S. Settu Madharsha - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Slow Learners Study Materials | Mrs. Bala Ganesan - Preview & Download
10th Tamil - All Important Questions | Mr. S. Arockiam - Preview & Download
10th Tamil - All Units - Slip Test Questions | Mrs. Bala Ganessan - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Unit 6-9 - One Mark Questions | Mrs. Bala Ganessan - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Unit 1 Model Question Paper | Mr. Yugamithran - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - One Marks Questions & Answers | Mrs. G. Malini - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Slow Learners Guide | Mr. S. Settu Madharsha - Preview & Download
10th Tamil - Reduced Syllabus - Slow Learners Study Materials | Mrs. Bala Ganesan - Preview & Download
Tenth / SSLC / 10th - Tamil Study Materials
10th Tamil - Pothukatturaigal | Mr. V.K. Vasu - Preview & Download
10th Tamil - Sudaroli Guides | Dr. Karthi Suresh - Preview & Download
10th Tamil - Unit 1 Study Materials | Mr. Rishikeshwaran M - Preview & Download
10th Tamil - Important Questions for Iyal 1, 2 | Mr. S. Jayaselvan - Preview & Download
10th Tamil - Important Questions for Iyal 3, 4, 5 | Mr. S. Jayaselvan - Preview & Download
10th Tamil - One Mark Questions with Answers | Mrs. K. Malini - Preview & Download
10th Tamil - Work Sheet | Mrs. K. Malini - Preview & Download
10th Tamil - Sura Guide | Sura Publications - Preview & Download
10th Tamil - Question Bank | IDEAL Guide - Preview & Download
10th Tamil - Drill Book | Suriya Guide - Preview & Download
10th Tamil - Penguin Guide 2020-2021 - Preview & Download
10th Tamil - Full Guide 2020 - 2021 | Surya Guides - Preview & Download
10th Tamil - Workbook Guide 2020 - 2021 | Surya Guides - Preview & Download
10th Tamil - Iyal 3, 4 Study Materials - Preview & Download
10th Tamil - Important Study Materials | Mr. R. Rajesh - Preview & Download
10th Tamil - Unit 1 Important Study Materials | Mr. S. Muthusami - Preview & Download
10th Tamil - Dolphin Guide / Notes | Dolphin Publications - Preview & Download
10th Tamil - Study Material | Mr. V. Manikandan - Preview & Download
10th Tamil - Study Material | GHSSjpp - Preview & Download
10th Tamil - Unit 9 One Marks Study Materials | Mr. R. Venkatesan - Preview & Download
10th Tamil - Worksheets Study Material 1-4 | Mr. D. Baskaran - Preview & Download
10th Tamil - Revision Test Model Question Paper | Mr. V. Bharathiraja - Preview & Download
10th Tamil - Study Material | Way To Success - Preview & Download
10th Tamil - Unit 1 - One Mark Questions | Mr. M. Ruban - Preview & Download
10th Tamil - Memory Poems Collection | Mr. R. Satheesh Kumar - Preview & Download
10th Tamil - Public Exam 2020 - Model Question Paper | Ideal Guide - Preview & Download
10th Tamil - One Mark Question Paper | Mr. M. Sivakumar - Preview & Download
10th Tamil - Unit 6,7,8 Model Question Paper | Mr. M. Bernad - Preview & Download
10th Tamil - Unit 1,2 Model Question Paper | Mr. M. Bernad - Preview & Download
10th Tamil - Unit 1 to 6 Model Question Paper | Miss. Poovi - Preview & Download
10th Tamil - Unit 1 to 9 Question Paper | Mr. Bharathi - Preview & Download
10th Tamil - Unit 1 to 5 Model Question Paper | Mr. S. Muthusamy - Preview & Download
10th Tamil - Unit Test 9 Question Paper | Mr. P. Poovi - Preview & Download
10th Tamil - Slow Learners Study Material | Mr. R. Balakrishnan - Preview & Download
10th Tamil - Unit 6,7,8 Study Materials | Mr. M. Bernat Prasanna - Preview & Download
10th Tamil - Unit Test 1-3 Question Papers | Mr. Kaali - Preview & Download
10th Tamil - Unit 4,5 Slip Test Question Papers | Mr. Muthamil Selvan - Preview & Download
10th Tamil - Poem Question | Mrs. C. Rathika, Nalandha - Preview & Download
10th Tamil Paper 1 - Slow Learners Study Materials | Mr. S. Settu Madharsha - Preview & Download
10th Tamil - Sura Guide 2019 - 2020 - Preview & Download
10th Tamil Paper 1 - Memory Poems with Questions | Mr. S. Balamurugan - Preview & Download
10th Tamil - Memory Poems | Mr. K. Kannan - Preview & Download
10th Tamil - Lesson 1 One Marks | Ms. A. Buvaneshwari - Preview & Download
10th Tamil - Unit 1 Full Study Material | SVB - Preview & Download
10th Tamil - Memory Poems Study Material | Mr. P. Muthamilselvan - Preview & Download
10th Tamil - Guide (Sample Pages) | Dolphin - Preview & Download
10th Tamil - Unit 1 to 3 One Marks | Mrs. A. Buveneswari - Preview & Download
10th Tamil - Unit 4 & 5 One Marks Study Materials | Mrs. A. Buvaneshwari - Preview & Download
10th Tamil - 1m, 2m, and 3 marks Questions Study Materials | Mrs. Malini Seetha - Preview & Download
10th Tamil - Worksheets | Mrs. Malini Seetha - Preview & Download
10th Tamil - Question Bank | Mr. G. Vasu - Preview & Download
10th Tamil - Memory Poem Study Materials | Way To Success - Preview & Download
10th Tamil - Errors Corrected Study Materials | Way To Success - Preview & Download
10th Tamil - Exam Tips | Way To Success - Preview & Download
10th Tamil - Five Mark Questions Study Materials | Way To Success - Preview & Download
10th Tamil - Important Five Marks Study Materials | Way To Success - Preview & Download
10th Tamil - Important Study Materials | Way To Success - Preview & Download
10th Tamil - Slow Learners Study Materials | Way To Success - Preview & Download
10th Tamil - Text Book Study Materials | Way To Success - Preview & Download
10th Tamil - Unit 1 Study Materials | Way To Success - Preview & Download
10th Tamil - Important Study Materials | Mr. G. Vasu - Preview & Download
10th Tamil - Sample Study Materials | Sura Guide - Preview & Download
10th Tamil - Important Study Materials | Mr. G. Kamalanathan - Preview & Download
10th Tamil - Important Study Materials | Mr. C. Soma Sundaram - Preview & Download
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys
