12th Tamil Important Questions & Study Material | Quarterly Exam Prep
Streamline your Quarterly Exam prep with these 12th Tamil important questions and study material. Focus on high-weightage prose, poetry, and grammar topics to boost your revision and exam confidence.
12th Quarterly Exam Question Papers and Answer Keys
12th Half Yearly Exam Question Papers and Answer Keys
12th Public Exam Question Papers and Answer Keys
12th First Revision Test Question Papers and Answer Keys
12th Second Revision Test Question Papers and Answer Keys
12th Third Revision Test Question Papers and Answer Keys
காலாண்டுத் தேர்வு – முக்கிய வினாக்கள் 2026 - 27
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
Anthropology - மானுடவியல் | Archaeology - தொல்லியல் | Research - ஆராய்ச்சி | Fine Arts - கவின்கலைகள் | Field Study - கள ஆய்வு | Epigraphy - கல்வெட்டியல்
அணி : பொருள் வேற்றுமை அணி
விளக்கம் : இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
பறவை படிவன வீழக் கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்.
திருக்குறள் - வாழ்வியல்:
இல்வாழ்க்கை:
1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. (நிரல்நிறை அணி)
2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
செய்ந்நன்றி அறிதல்:
1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது.
2. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
3. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
வெகுளாமை:
1. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
2. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்.
ஊழ்:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்.
1. விலை, விளை, விழை → கார் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.
கலைச் சொல் அறிவோம்:
Museum - அருங்காட்சியகம் | Archive - ஆவணக்காப்பகம் | Hardware - வன்பொருள் | Software - மென்பொருள் | Green Belt Movement - பசுமை வளாக இயக்கம்
பின்பு உளது; இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்' (1995)
பா வகை : கலி விருத்தம்
குகனோடும் ஐவர் ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை. (6507)
பா வகை : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Nuclear family - தனிக்குடும்பம் | Matriarchy - தாய்வழிச்சமூகம் | Culture - பண்பாடு | Habitat - வாழிடம்
உயர் - பகுதி, த் - சந்தி ; த் (ந்) ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி.
வியந்து = விய + த் (ந்) + த் + உ
விய - பகுதி, த் - சந்தி (ந் ஆனது விகாரம்), த் - இறந்தகால இடைநிலை, உ - வினையெச்ச விகுதி.
வெங்கதிர் = வெம்மை + கதிர் | விதி : 'ஈறுபோதல்' → வெம் + கதிர் | விதி : 'முன்னின்ற மெய் திரிதல்' → வெங்கதிர்.
உன்னையல்லால் = உன்னை + அல்லால் | விதி: இ ஈ ஐ வழி யவ்வும் → உன்னை + ய் + அல்லால் | விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே → உன்னையல்லால்.
செந்தமிழே = செம்மை + தமிழே | விதி: ஈறுபோதல் → செம் + தமிழே | விதி: முன்னின்ற மெய் திரிதல் → செந்தமிழே.
இனநிரை = இனம் + நிரை | விதி : 'மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்' → இனநிரை.
புதுப்பெயல் = புதுமை + பெயல் | விதி : 'ஈறுபோதல்' → புது + பெயல் | விதி: 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' → புதுப்பெயல்.
அருங்கானம் = அருமை + கானம் | விதி : ஈறு போதல் → அரு + கானம் | விதி : இனமிகல் → அருங்கானம்.
• அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்: தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம்.
• இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்; பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்; மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், மௌன மயக்கங்கள் முதலிய கவிதை நூல்களையும், இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.
• வரலாறு பற்றிக் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் வம்சமணி தீபிகை என்னும் நூலை 1879-இல் வெளியிட்டார்.
• 1856-இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.
• ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு 1812. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" எனப் பாரதியாரும், "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" எனப் பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
• உரிமைத்தாகம் என்ற இச்சிறுகதை 'பூமணி சிறுகதைகள்' என்னும் தொகுப்பில் உள்ளது. பூ. மாணிக்கவாசகம் என்ற தனது பெயரைச் சுருக்கிப் பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார். அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புகள். வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார். கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
| பால் | அதிகாரம் | இயல் | இயல்களின் பெயர்கள் |
|---|---|---|---|
| அறம் | 38 | 4 | பாயிரவியல் 4, இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1 |
| பொருள் | 70 | 3 | அரசியல் 25, அமைச்சியல் 32, ஒழிபியல் 13 |
| இன்பம் | 25 | 2 | களவியல் 07, கற்பியல் 18 |
• ஏகதேச உருவக அணி (குறள் எண்-18): ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும். இனத்தைத் தெப்பமாக உருவகம் செய்த வள்ளுவர், உலக வாழ்க்கையைக் கடலாக உருவகப்படுத்தவில்லை. எனவே இது ஏகதேச உருவக அணிக்குப் பொருத்தமாயிற்று.
• துறை: கூதிர்ப்பாசறை: போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு.
2. A new language is a new life.
3. If you want people to understand you, speak their language.
4. Knowledge of languages is the doorway to wisdom.
5. The limits of my language are the limits of my world.
எ.கா. விலை, விளை, விழை – கார் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.
2. மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
3. ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி! - கண்ணதாசன்.
2. வெட்டி யடிக்குது மின்னல்-கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது:
கொட்டி யிடிக்குது மேகம் -கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா- என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா! - பாரதியார்.
3. பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம். - நாமக்கல் கவிஞர்.
அனுப்புநர்: க.இனியன், 63, குறிஞ்சி நகர் முதல் தெரு, மதுரை.
பெறுநர்: வசந்தம் பதிப்பகம், திரு.வி.க நகர், மதுரை.
பொருள்: தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பித்தல் சார்பு.
ஐயா, தங்கள் அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பணிக்குத் தகுதியான நபர்கள் தேவை என 04.01.2025 அன்று வெளியான நாளிதழ் விளம்பரம் மூலம் அறிந்தேன். நான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தட்டச்சுத் தேர்வில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்குப் பணியாற்ற வாய்ப்பளித்தால், செம்மையாகவும் சிறப்பாகவும் பணியாற்றுவேன். எனது சான்றிதழ்களின் நகல்களைத் தங்களின் பார்வைக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன்.
இணைப்பு: 1. தன் விவரக் குறிப்பு 2. கல்விச் சான்றிதழ் 3. தட்டச்சு தேர்ச்சிச் சான்றிதழ் (தமிழ், ஆங்கிலம்).
இடம்: மதுரை | தேதி: 12.01.2026 | இப்படிக்கு: உண்மையுள்ள, இனியன்.
| தன் விவரப் படிவம் (மாதிரி) | |
|---|---|
| பெயர் | இனியன் |
| பிறந்த நாள் மற்றும் வயது | 09.08.2004 (21) |
| தந்தையின் பெயர் | கபிலன் |
| பாலினம் | ஆண் |
| அலைபேசி எண் | xxxxxxxxxx |
| நிரந்தர முகவரி | 25 தெற்கு தெரு, சோலையூர் அஞ்சல், நாமக்கல் மாவட்டம். |
| தொடர்பு முகவரி | 11, திருநகர் மேற்கு, மதுரை. |
| பிற தகுதிகள் | கணினி (வேர்டு, பவர்பாயிண்ட், போட்டோஷாப்) |
இடம்: மதுரை | தேதி: 12.01.2026 | கையொப்பம்: (இனியன்)
• இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக: தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்.
• எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணைநிற்கும் – இதனை வலியுறுத்திக் கட்டுரை எழுதுக.
• உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை எழுதுக.
12th Study Materials
12th Chemistry Study Materials
12th Computer Science Study Materials
12th Accountancy Study Materials
12th Economics Study Materials
12th Geography Study Materials
12th Statistics Study Materials
12th Business Maths Study Materials
12th Political Science Study Materials
12th Question Papers & Answer Keys
12th Quarterly Exam Question Papers and Answer Keys
12th Half Yearly Exam Question Papers and Answer Keys
12th Public Exam Question Papers and Answer Keys
12th First Revision Test Question Papers and Answer Keys
12th Second Revision Test Question Papers and Answer Keys
12th Third Revision Test Question Papers and Answer Keys
12th First Midterm Test Question Papers and Answer Keys
12th Second Midterm Test Question Papers and Answer Keys
