திருப்பத்தூர் மாவட்டம்
காலாண்டுத் தேர்வு - 2026
12 - ஆம் வகுப்பு — தமிழ்
நேரம்: 3:00 மணி
மதிப்பெண்கள்: 90
பகுதி - I
மதிப்பெண்கள்: 14
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- (14 × 1 = 14)
1. 'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்
(அ) தொல்காப்பியம்
(ஆ) திருக்குறள்
(இ) குறுந்தொகை
(ஈ) புறநானூறு
2. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது....
(அ) வக்கிரம்
(ஆ) அவமானம்
(இ) வஞ்சனை
(ஈ) இவை அனைத்தும்
3. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
(அ) பௌத்தமும் தமிழும்
(ஆ) இசுலாமும் தமிழும்
(இ) சமணமும் தமிழும்
(ஈ) கிறித்துவமும் தமிழும்
4. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
(அ) சூரிய ஒளிக்கதிர்
(ஆ) மழை மேகங்கள்
(இ) மழைத்துளிகள்
(ஈ) நீர்நிலைகள்
5. கடலின் பெரியது
(அ) உற்ற காலத்தில் செய்த உதவி
(ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
(இ) தினையளவு செய்த உதவி
(ஈ) செய்யாமல் செய்த உதவி
6. "செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
(அ) ஒளிப்பறவை
(ஆ) நிலவுப்பூ
(இ) சர்ப்பயாகம்
(ஈ) சூரியநிழல்
7. 'பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென' — அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க:
(அ) வினைத்தொகை
(ஆ) உரிச்சொல் தொடர்
(இ) இடைச்சொல் தொடர்
(ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
8. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
(அ) மத்த விலாசம்
(ஆ) தமிழ்நாட்டு வரலாறு
(இ) அஞ்சிறைத் தும்பி
(ஈ) திசை எட்டும்
9. 'திருவல்லிக்கேணி ஆறு' என்று அழைக்கப்பட்ட ஆறு
(அ) கூவம் ஆறு
(ஆ) கொற்றலையாறு
(இ) அடையாறு
(ஈ) பாலாறு
10. பொருத்துக:
அ) அன்பும் அறனும் — 1) பண்புத் தொகை
ஆ) நன்கலம் — 2) ஆகுபெயர்
இ) மறத்தல் — 3) எண்ணும்மை
ஈ) உலகு — 4) தொழிற்பெயர்
(அ) 2, 1, 4, 3
(ஆ) 3, 1, 4, 2
(இ) 4, 2, 3, 1
(ஈ) 1, 4, 2, 3
11. 'வம்சமணி தீபிகை' என்ற நூலை எழுதியவர்
(அ) பாரதியார்
(ஆ) பரலி. சு. நெல்லையப்பர்
(இ) கவி கேசரி சாமி தீட்சிதர்
(ஈ) இளசை மணி
12. எழுதும்போது ஏற்படும் பிழைகளை _______ வகைப்பாட்டில் பிரிக்கலாம்?
(அ) மூன்று
(ஆ) ஐந்து
(இ) நான்கு
(ஈ) இரண்டு
13. 'வெள்ளம்' என்று பொருள் தரும் சொல்
(அ) பனிப்ப
(ஆ) ஏறுடை
(இ) நீடு இதழ்
(ஈ) ஆர்கலி
14. தம்மனை, நும்மனையை எடுத்துக் கூறும் சங்க இலக்கிய நூல்
(அ) பதிற்றுப்பத்து
(ஆ) அகநானூறு
(இ) புறநானூறு
(ஈ) கலித்தொகை
பகுதி - II
மதிப்பெண்கள்: 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி:- (3 × 2 = 6)
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' — விளக்கம் தருக.
17. சினத்தை ஏன் காக்க வேண்டும்?
18. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி:- (2 × 2 = 4)
19. புக்கில், தன்மனை — சிறு குறிப்பு எழுதுக.
20. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை பற்றிக் குறிப்பு வரைக.
21. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு மட்டும் விடையளி:- (7 × 2 = 14)
22. 'முடிந்தால் தரலாம்', 'முடித்தால் தரலாம்' — இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க.
23. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக: (அ) கலங்கி | (ஆ) தந்தனன்
24. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக: (அ) அருங்கானம் | (ஆ) இனநிரை
25. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இரு வேறு தொடர்களை அமைக்க: தானே
26. கலைச் சொல்லாக்கம் தருக: (அ) MUSEUM (ஆ) NUCLEAR FAMILY
27. 'திருவளர்ச் செல்வன்', 'திருவளர் செல்வன்' — இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
28. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
29. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக: விலை, விளை, விழை
30. உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக:
(அ) தாமரை இலை நீர் போல (அல்லது) (ஆ) எலியும் பூனையும் போல
பகுதி - III
மதிப்பெண்கள்: 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி: (2 × 4 = 8)
31. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
32. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
33. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
34. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக:- (2 × 4 = 8)
35. மணந்தகம் — விளக்குக.
36. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
37. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
38. இல்வாழ்வின் பயனாக சங்ககால மக்கள் கருதுவன யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக:- (3 × 4 = 12)
39. (அ) "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை / பண்பும் பயனும் அது" — இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
(அல்லது)
(ஆ) ஏகதேச உருவக அணி — விளக்குக.
40. இலக்கிய நயம் பாராட்டுக (மையக் கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக):
"வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!" — பாரதியார்
41. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக:
1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
2. போட்டி வெற்றி பெற்றது கலைச் செல்வி பாராட்டுகள் குவிந்தன.
3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
4. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
42. (அ) வாகைத்திணையைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
(ஆ) கூதிர்ப் பாசறை துறையைச் சான்றுடன் விளக்குக.
43. தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பம் வரைக.
பகுதி - IV
மதிப்பெண்கள்: 18
அனைத்து வினாக்களுக்கும் விடையளி: (3 × 6 = 18)
44. (அ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
(அல்லது)
(ஆ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
45. (அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது — எவ்வாறு? விளக்குக.
(அல்லது)
(ஆ) மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதனைச் சான்றுடன் நிறுவுக.
46. (அ) 'உரிமைத் தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
(அல்லது)
(ஆ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
பகுதி - V
மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. (4 + 2 = 6)
47. (அ) "குகனொடும் ஐவர்..." எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக. (4 மதிப்பெண்கள்)
(ஆ) "நன்று" என முடியும் குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)