திண்டுக்கல் மாவட்டம்
பதிவு எண்: ____________
காலாண்டுத் தேர்வு - 2026
வகுப்பு : 12 — பொதுத்தமிழ்
காலம் : 3.00 மணி
மொத்த மதிப்பெண்கள் : 90
அறிவுரைகள்: (1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும், அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: விடைகள் தெளிவாகவும், குறிப்பிட்ட அளவினதாகவும், சொந்தநடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I
மதிப்பெண்கள் : 14
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (14 × 1 = 14)
1. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய முதல் நூல்:
(அ) பௌத்தமும் தமிழும்
(ஆ) இசுலாமும் தமிழும்
(இ) சமணமும் தமிழும்
(ஈ) கிறித்துவமும் தமிழும்
2. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது —
(அ) மழைத்துளிகள்
(ஆ) சூரிய ஒளிக்கதிர்
(இ) மழை மேகங்கள்
(ஈ) நீர்நிலைகள்
3. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க:
(1) செற்றார் — (i) மகிழ்ச்சி
(2) கிளை — (ii) காடு
(3) உவகை — (iii) பகைவர்
(4) கானம் — (iv) உறவினர்
(அ) (1)-(iii), (2)-(i), (3)-(iv), (4)-(ii)
(ஆ) (1)-(iii), (2)-(iv), (3)-(i), (4)-(ii)
(இ) (1)-(iv), (2)-(iii), (3)-(ii), (4)-(i)
(ஈ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
4. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று சரி, காரணம் சரி
(இ) கூற்று தவறு, காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு, காரணம் சரி
5. கடலின் பெரியது எது?
(அ) உற்ற காலத்தில் செய்த உதவி
(ஆ) செய்யாமல் செய்த உதவி
(இ) தினையளவு செய்த உதவி
(ஈ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
6. தற்காலிகத் தங்குமிடம் எது?
(அ) தன்மனை
(ஆ) புக்கில்
(இ) நும்மனை
(ஈ) தம்மனை
7. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒரு / சக்தி பிறக்குது மூச்சினிலே" — என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது:
(அ) தந்தைவழிச் சமூகமுறை
(ஆ) விரிந்த குடும்ப முறை
(இ) தாய்வழிச் சமூகமுறை
(ஈ) தனிக்குடும்ப முறை
8. பிழையான தொடரைக் கண்டறிக:
(அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
(ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
(இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
(ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
9. "ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை" என்றவர்:
(அ) வ.சுப. மாணிக்கம்
(ஆ) பாரதிதாசன்
(இ) பாரதியார்
(ஈ) வ.உ.சிதம்பரனார்
10. முழுமையான பொருள் உணர்த்தும் தொடரைத் தேர்க:
(அ) இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.
(ஆ) பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
(இ) காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய, இலக்குவனும் புறப்பட்டான்.
(ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய, இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
11. 'மறத்தல் வெகுளியை யார்மாட்டும்' — அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு:
(அ) தொழிற்பெயர்
(ஆ) வினைத்தொகை
(இ) பெயரெச்சம்
(ஈ) வினையெச்சம்
12. தண்ணீரும் மழையும் இல்லாமல் பயிர் பச்சையாய் இருக்கிறது; பாக்கு வெற்றிலை போடாமல் வாய் சிவப்பாய் இருக்கிறது — அது என்ன?
(அ) நெல்
(ஆ) ஈசல்
(இ) கிளி
(ஈ) மாதுளை
13. "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" — இவ்வடி இடம்பெற்றுள்ள நூல்:
(அ) தொல்காப்பியம்
(ஆ) குறுந்தொகை
(இ) ஐங்குறுநூறு
(ஈ) பதிற்றுப்பத்து
14. சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள்:
(அ) பூஜ்யங்களின் சங்கிலி, வயிறுகள்
(ஆ) வெக்கை, ஒளிப்பறவை
(இ) ஒரு கிராமத்து நதி, அஞ்ஞாடி
(ஈ) நிலவுப்பூ, அறுப்பு
பகுதி - II
மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 2 = 6)
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. 'பகையும் உளவோ பிற?' — பொருளை எழுதுக.
17. எதிர்பாராத விருந்தாளிகளாக ஜலாலுத்தீன் ரூமி எவற்றை உருவகப்படுத்துகிறார்?
18. விடியல், வனப்பு — இரு சொற்களையும் ஒருங்கே அமைத்து ஒரு தொடர் எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 2 = 4)
19. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்களுள் நான்கினை எழுதுக.
20. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
21. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு விடை தருக. (7 × 2 = 14)
22. 'முடிந்தால் தரலாம்', 'முடித்தால் தரலாம்' — இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க.
23. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக: அலை, அளை, அழை (அல்லது) கிளி, கிலி
24. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக: (அ) அருங்கானம் | (ஆ) இனநிரை
25. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக: (அ) கலங்கி | (ஆ) பொலிந்தான்
26. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்."
27. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடி:
(கோதை, சூடாமணி, கவிமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)
(அ) தமிழறிஞர்; முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.
(ஆ) முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்துத் தமிழ் மாதம்.
28. உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக: தாமரை இலை நீர்போல
29. கலைச்சொல்லாக்கம் தருக: i) Matriarchy ii) Habitat
[குறிப்பு: செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா — பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக்குக: (அ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்]
30. கீழ்க்காணும் சொல்லுருபைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்கள் அமைக்க: முதல்
பகுதி - III
மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
31. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
32. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
33. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர்வழி நின்று விளக்குக.
34. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. சென்னை 'அறிவின் நகரம்' என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
37. சென்னையின் தொன்மை குறித்து விளக்குக.
38. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் — விளக்குக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 4 = 12)
39. (அ) பொருள் வேற்றுமை அணியைச் சான்று தந்து விளக்குக.
(அல்லது)
(ஆ) "நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது / அன்றே மறப்பது நன்று" — இக்குறட்பாவில் பயின்று வரும் அணியைச் சுட்டி விளக்குக.
40. (அ) வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
(ஆ) கூதிர்ப்பாசறைத் துறையைச் சான்று தந்து விளக்குக.
41. 'சொல்லோவியங்கள்' என்னும் கவிதை நூல், உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்குக.
42. இலக்கிய நயம் பாராட்டுக: (மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களையும் எழுதுக.)
"பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க
ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக்காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்." — நாமக்கல் கவிஞர்
43. கீழ்க்காணும் பத்தியைப் படித்து நான்கு வினாக்களை உருவாக்குக:
"மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே."
பகுதி - IV
மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (3 × 6 = 18)
44. (அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
(ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
45. (அ) மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.
(அல்லது)
(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது — எவ்வாறு? விளக்குக.
46. (அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
(அல்லது)
(ஆ) தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பமும் தன் விவரக் குறிப்பும் எழுதுக.
பகுதி - V
மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. (4 + 2 = 6)
47. (அ) "துன்பு உளது....." எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக. (4 மதிப்பெண்கள்)
(ஆ) "வையத்துள்....." எனத் தொடங்கும் குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)
12th tamil quartarly exam paper