10th Science Slow Learner Study Material | Minimum Learning Guide

Pass your board exams easily! Download the simplified Class 10 Science slow learner study material featuring easy notes, basic diagrams, and

Preparing for your board exams doesn't have to feel overwhelming or stressful. This specialized Class 10 Science Slow Learner Study Material is carefully curated to filter out complex details and focus strictly on the core basics. We have broken down the syllabus into easy-to-understand definitions, highly repetitive exam questions, and simple diagram guides across Physics, Chemistry, and Biology. Use this minimum learning guide to eliminate exam anxiety, build your confidence, and secure passing marks comfortably.


10th Science Slow Learner Study Material | Minimum Learning Guide

10-ஆம் வகுப்பு - அறிவியல்

மெல்லக் கற்போர் கையேடு (Slow Learners Study Material)
1. இயக்க விதிகள்
சுருக்கமாக விடையளி

1. நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
(i) ஓய்வு நிலைமம் (ii) இயக்க நிலைமம் (iii) திசை நிலைமம்

2. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
(i) ஒத்த இணைவிசைகள் (ii) மாறுபட்ட இணைவிசைகள்

3. 5 N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள் எதிரெதிர் திசையில் ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன. தொகுபயன் மதிப்பு யாது? எத்திசையில் அது செயல்படும்?
15 N - 5 N = 10 N

4. நிறை - எடை, இவற்றை வேறுபடுத்துக?
நிறை எடை
அலகு - கிலோகிராம் அலகு - நியூட்டன்
ஸ்கேலார் அளவு வெக்டார் அளவு

5. இரட்டையின் திருப்புத்திறன் வரையறு?
M = F × S, SI அலகு Nm

6. திருப்புத்திறன் தத்துவம் வரையறு?
F1 × d1 = F2 × d2 • இடஞ்சுழி திருப்புத்திறன் = வலஞ்சுழி திருப்புத்திறன்

7. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு?
F = ma, விசை = நிறை × முடுக்கம்

8. பெரிய வாகனங்களில் திருகுமறைகளை சுழற்றி நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு பயன்படுவது ஏன்?
அதிக திருப்பு விசையினால்

9. கிரிகெட் விளையாட்டில் மேலிருந்து பந்தினை பிடிக்கும் போது, வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
மோதல் காலத்தை அதிகரித்து, கணத்தாக்கு விசையை குறைக்க

10. விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
அவரது தோற்ற எடை சுழி

விரிவாக விடையளி

1. நிலைமத்தின் வகைகளை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக?
(i) ஓய்வு நிலைமம் (ii) இயக்க நிலைமம் (iii) திசை நிலைமம்

2. விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி மூலம் தருவி?
F = ma, விசை = நிறை × முடுக்கம்

3. பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.
புவியின் நிறை, ஆரம் கணக்கிட

4. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு?
(i) நியூட்டனின் முதல் விதி (ii) இரண்டாம் விதி (iii) மூன்றாம் விதி

5. பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. சூத்திரத்தை தருவிக்க.
G = 6.674 × 10-11 N m2 kg-2

6. ராக்கெட் ஏவுதலை விளக்குக.
(i) நியூட்டன் மூன்றாம் விதி (ii) உந்த அழிவின்மை விதியில் இயங்குகிறது

7. உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க?
பொருளில் செயல்படும் மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாது

2. ஒளியியல்
சுருக்கமாக விடையளி

1. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
μ = c / v

2. ஸ்நெல் விதியைக் கூறுக.
sin i / sin r = μ2 / μ1

3. நிறப்பிரிகை வரையறை?
வெள்ளொளி ஏழு வண்ணமாக பிரிவது

4. ராலே சிதறல் விதியைக் கூறுக.
S ∝ 1 / λ4

5. குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக
குவிலென்சு குழிலென்சு
குவிக்கும் விரிக்கும்
மெய் பிம்பம் மாய பிம்பம்

6. விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்வது

7. குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே வைக்கப்படும் போது பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக.
(பொருள் F மற்றும் 2F-க்கு இடையே வைக்கப்படும் போது பிம்பம் 2F-க்கு அப்பால் பெரிய மெய் மற்றும் தலைகீழ் பிம்பமாக உருவாகிறது.)

8. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
(i) விழிக்கோளம் நீள்வது (ii) விழிலென்சு குவியதூரம் குறைவது

9. வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
நீலம் அதிக சிதறல் அடையும்

10. போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?
சிவப்பு நீண்ட தொலைவு பயணிக்கும்

விரிவாக விடையளி

1. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
(i) ஒளி ஒரு ஆற்றல் (ii) நேர்க்கோட்டில் செல்லும்

2. கிட்டப்பார்வை தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக
கிட்டப்பார்வை தூரப்பார்வை
விழிக்கோளம் நீளும் விழிக்கோளம் சுருங்கும்
குவியத்தூரம் குறைவு குவியத்தூரம் அதிகம்

3. எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள் யாவை?
(i) கடிகாரம் பழுது பார்க்க (ii) ஆபரணங்கள் செய்ய

4. குவி லென்சின் பயன்கள் இரண்டினை எழுதுக
(i) ஒளிப்பட கருவி (ii) தூரப்பார்வை குறை சரிசெய்ய

5. தொலைநோக்கியின் பயன்களை கூறுக
வான் பொருட்களை ஒளிப்படம் எடுக்க

6. குழி லென்சின் பயன்கள் இரண்டினை எழுதுக
(i) வாகன முன் விளக்கு (ii) கிட்டப்பார்வை குறை சரிசெய்ய

7. லென்சின் திறன் வரையறு
P = 1 / f

8. கூட்டு நுண்ணோக்கி அமைப்பையும் செயலும் விளக்குக.
இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது.

3. வெப்ப இயற்பியல்
சுருக்கமாக விடையளி

1. ஒரு கலோரி வரையறு
1 g நீரின் வெப்பத்தை 1°C உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு

2. நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு - வேறுபடுத்துக
நீள் வெப்ப விரிவு பரப்பு வெப்ப விரிவு
நீளம் அதிகமாகும் பரப்பு அதிகமாகும்
நீளத்தில் மாற்றம் பரப்பில் மாற்றம்

3. பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
SI அலகு K-1

4. பாயில் விதியைக் கூறுக
P ∝ 1 / V, அழுத்தம் பருமனுக்கு எதிர்த்தகவு

5. பரும விதியைக் கூறுக.
V ∝ T, பருமன் வெப்பநிலைக்கு நேர்தகவு

6. இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு - வேறுபடுத்துக.
இயல்பு வாயு நல்லியல்பு வாயு
கவர்ச்சி விசை உண்டு கவர்ச்சி விசை இல்லை
அவகாட்ரோ விதிக்கு உட்படாது அவகாட்ரோ விதிக்கு உட்படும்

7. உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
SI அலகு K-1

8. தோற்ற வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
SI அலகு K-1

விரிவாக விடையளி

1. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.?
PV = RT

2. திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விளக்குக:
உண்மை வெப்ப விரிவு = L3 - L2
தோற்ற வெப்ப விரிவு = L3 - L1

7. அணுக்களும் மூலக்கூறுகளும்
I. சுருக்கமாக விடையளி

1. ஒப்பு அணுநிறை - வரையறு
சராசரி அணுநிறை / (C-12 அணு நிறையில் 1/12 பங்கு நிறை)

2. அணுக்கட்டு எண் - வரையறு.
மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை

3. வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு?
HCl, HF

4. வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
S.T.P-யில் ஒரு மோல் வாயு 22.4 லி பருமனை ஆக்கிரமிக்கும்.

II. நெடு வினாக்கள்

1. 0.18 கி நீர் துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை கணக்கிடு.
6.023 × 1021

2. மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக: 27 கி அலுமினியம்
27 / 27 = 1

3. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
(i) அணு பிளக்க கூடியது (ii) ஆக்கவோ அழிக்கவோ முடியாது

4. ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.
ஒப்பு மூலக்கூறு நிறை = 2 × ஆவி அடர்த்தி

8. தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
I. சுருக்கமாக விடையளி.

1. துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.
நீரேறிய பெரிக் ஆக்சைடு

2. இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.
ஈரக்காற்று, நீர், ஆக்சிஜன்

3. ஊது உலையில் உருக்கிப்பிரித்தலை விவரி.
மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன: (i) கீழ்ப்பகுதி (ii) நடுப்பகுதி (iii) மேற்பகுதி

9. கரைசல்கள்
III. சுருக்கமாக விடையளி.

1. கரைசல் - வரையறு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் ஒருபடித்தான கலவை

2. இருமடிக்கரைசல் என்றால் என்ன?
இரண்டு கூறுகளைக் கொண்டது (எ.கா: உப்பு நீர்)

3. கனஅளவு சதவீதம் - வரையறு.
கனஅளவு சதவீதம் = [கரைபொருளின் கனஅளவு / (கரைபொருளின் கனஅளவு + கரைப்பானின் கனஅளவு)] × 100

4. நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
நீர்க்கரைசல் நீரற்ற கரைசல்
நீர் உள்ளது நீர் இல்லை
எ.கா: நீரில் கரைக்கப்பட்ட சர்க்கரை எ.கா: கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

5. குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?
அதிக ஆக்சிஜன் கரைந்துள்ளது

6. நீரேறிய உப்பு - வரையறு.
படிக நீரை கொண்ட அயனிச்சேர்மங்கள்

7. ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவை அடையாளம் காண்க:
அ) அடர் சல்பியூரிக் அமிலம் ஆ) காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட் இ) சிலிக்கா ஜெல் ஈ) கால்சியம் குளோரைடு உ) எப்சம் உப்பு.
ஈரம் உறிஞ்சிகள் ஈரம் உறிஞ்சிக் கரைபவை
அடர் சல்பியூரிக் அமிலம், சிலிக்கா ஜெல், கால்சியம் குளோரைடு எப்சம் உப்பு, காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
IV. நெடு வினாக்கள்

1. குறிப்பு வரைக: அ) தெவிட்டிய கரைசல்    ஆ) தெவிட்டாத கரைசல்.
அ) மேலும் கரைக்க இயலாத கரைசல்
ஆ) தெவிட்டிய கரைசலை விட குறைவான கரைபொருள் கொண்டது

2. கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக.
வெப்பநிலை, அழுத்தம்

3. i) MgSO4·7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது?
நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.
ii) கரைதிறன் - வரையறு
கரைதிறன் = (கரைபொருளின் நிறை / கரைப்பானின் நிறை) × 100

4. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?
ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள்
இயற்பியல் நிலையை இழப்பதில்லை இயற்பியல் நிலையை இழக்கிறது
படிக திண்மங்கள் படிக உருவற்ற திண்மங்கள்
12. தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
I. சுருக்கமாக விடையளி

1. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அமைவது

2. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
CO2

3. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
கிளைக்காலிசிஸ்

4. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
நொதித்தல்

5. இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
மேல்தோலுக்கும், கீழ்தோலுக்கும் இடையே உள்ள தளத்திசு

6. ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
F1 தலை • தண்டு • F0 அடிப்பகுதி

7. மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
(i) புறத்தோல் (ii) தளத்திசு (iii) வாஸ்குலார் திசு

8. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
கார்போஹைட்ரேட் தயாரித்தலே ஒளிச்சேர்க்கை; இது பசுங்கணிகத்தில் நடைபெறுகிறது.

9. சுவாச ஈவு என்றால் என்ன?
வெளியிடும் CO2 அளவு / எடுக்கப்படும் O2 அளவு

10. ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
CO2 ஆனது ஒடுக்கமடைகிறது

11. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
CO2 + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன்

IV. நெடு வினாக்கள்
1. வேறுபாடு தருக: ஒரு விதையிலைத் தாவரவேர் மற்றும் இரு விதையிலைத் தாவர வேர்
ஒரு விதையிலைத் தாவரவேர் இரு விதையிலைத் தாவர வேர்
பலமுனை சைலம் நான்குமுனை சைலம்
(எ.கா) சோளம் (எ.கா) அவரை
2. வேறுபாடு தருக: காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்
காற்றுள்ள சுவாசம் காற்றில்லா சுவாசம்
ஆக்ஸிஜன் உதவியால் ஆக்ஸிஜன் இல்லாத
தாவரங்கள் ஈஸ்ட்
13. உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

1. அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது? தோல்

2. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக: 2033 / 1023

3. அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன? 11

4. முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது? வெட்டும் பல், முன் கடவாய் பல் இடையே உள்ள இடைவெளி

5. இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை? நுரையீரல்

6. அட்டையின் தொண்டைப்பகுதி எந்தக் கருவியாகச் செயல்படுகிறது? உறிஞ்சும் கருவி

7. CNS - ன் விரிவாக்கம் என்ன? மைய நரம்பு மண்டலம்

8. முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைவு எனப்படுகிறது? பல்வேறு வகை பற்கள் காணப்படுவதால்

9. அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது? Y வடிவ காயத்தை ஏற்படுத்தி

10. முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன்? காற்று எளிதாகச் செல்ல

11. அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக. தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.

VII. விரிவான விடையளி

1. அட்டையின் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? இரத்த உடற்குழி மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.

2. அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக. 1) வளைதல் இயக்கம் 2) நீந்துதல் இயக்கம்

3. முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து விளக்குக. ஓரிணை விந்தகங்கள், நாளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

14. தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
V. ஒரு வார்த்தையில் விடையளி

1. மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்காலான பாதுகாப்பு உறையின் பெயர்: பெரிகார்டியம்

2. மனித இரத்தத்தில் உள்ள RBC-யின் வடிவம்: இருபுறமும் குழிந்த தட்டு வடிவம்

3. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்? ஹீமோகுளோபின் என்ற நிறமி இருப்பதால்

4. எவ்வகையான செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன? பிளாஸ்மா, புரதம், இரத்த செல்கள்

5. இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது? கரோனரி தமனி

VI. சிறு வினா

2. கூட்டிணைவு என்றால் என்ன? நீர் மூலக்கூறுகளிடையே உள்ள ஈர்ப்பு விசை

5. மனித இதயத்தின் அமைப்பு: மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.

6. மனிதர்களின் சுற்றோட்டமானது இரட்டைச் சுற்றோட்டம் என அழைக்கப்படுகிறது ஏன்? இரத்தமானது உடலை ஒருமுறை சுற்றிவர இதயத்தின் வழியே இருமுறை செல்வதால்

7. இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன? இதய வால்வுகள் மூடுவதால் உண்டாகின்றன

8. இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன? (i) இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்த

9. Rh காரணியைக் கண்டறிந்தவர் யார்? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது? லேண்ட்ஸ்டீனர் மற்றும் வீனர். ரீசஸ் குரங்கிலிருந்து கண்டறியப்பட்டதால்

10. தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
தமனி சிரை
வழங்கும் குழாய்கள் பெறும் குழாய்கள்
இளஞ்சிவப்பு சிவப்பு / அடர் சிவப்பு

11. சைனோ ஆரிக்குலார் கணு 'பேஸ் மேக்கர்' என்று ஏன் அழைக்கப்படுகிறது?
இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுவதால்

VIII. விரிவான விடையளி

2. நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக.
நீரானது இலைத்துளை வழியாக ஆவியாக வெளியேறுவது

3. இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
(i) சுவாச வாயுக்களைக் கடத்துகிறது

4. சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக.
சிஸ்டோல் டையஸ்டோல்
மிகை அழுத்தம் குறை அழுத்தம்
15. நரம்பு மண்டலம்

1. பின் மூளையின் பாகங்கள் யாவை? சிறுமூளை, பான்ஸ், முகுளம்

2. மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை? டியூரா மேட்டர், அரக்னாய்டு உறை, பையா மேட்டர்

3. கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சைச் செயலுக்கு எடுத்துக்காட்டு தருக? ஹார்மோனியம் வாசித்தல்

4. நரம்பு மண்டலத்திற்கும் நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்கும் இடையே இணைப்பாகச் செயல்படும் உறுப்பு எது? ஹைப்போதலாமஸ்

5. அனிச்சை வில் என்பதை வரையறு: நரம்பு செல்லில் நடைபெறும் தூண்டல் துலங்கல் பாதை

6. வேறுபடுத்துக: இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்
இச்சைச் செயல் அனிச்சைச் செயல்
நம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. நம் கட்டுப்பாட்டுக்கு உட்படாது.
மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது தண்டுவடத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது

7. நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி: சைட்டான், டெண்ட்ரைட்டுகள், ஆக்சான்

8. மூளையின் அமைப்பையும் பணிகளையும் விளக்குக: முன் மூளை, நடு மூளை, பின் மூளை

9. தண்டுவடத்தின் அமைப்பினை விவரி: தண்டுவடமானது குழல் போன்ற அமைப்பு

10. நியூரான்கள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன? (i) ஒருமுனை (ii) இருமுனை (iii) பலமுனை நியூரான்கள்

16. தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

1. தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன் எது? ஜிப்ரல்லின்கள்.

2. மனிதர்களில் அவசர கால நிலைகளை எதிர்கொள்ள சுரக்கும் ஹார்மோன் எது? அட்ரினலின், நார் அட்ரினலின்

3. செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா தருக. செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள் — எ.கா: 2,4-D

4. "போல்டிங்" என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்? ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும்போது தண்டு நீட்சியடைவது

5. அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக: உதிர்தல் நிகழ்வை ஊக்குவிக்கிறது.

6. வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை? ஹார்மோன்கள்.

7. நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
நாளமுள்ளச் சுரப்பி நாளமில்லாச் சுரப்பி
நாளங்கள் உண்டு நாளங்கள் இல்லை
நொதிகளை சுரக்கும் ஹார்மோன்களை சுரக்கும்

8. தைராய்டு ஹார்மோன்கள் ஏன் "ஆளுமை ஹார்மோன்கள்" என்று அழைக்கப்படுகின்றன? ஆளுமை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.

9. எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது? குறைவால் ஏற்படும் விளைவு: தைராய்டு ஹார்மோன் — எளிய காய்டர்.

11. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக. ஜிப்ரல்லினால் தாவரம் நீட்சியைத் தூண்டும் (எ.கா: மக்காச்சோளம்).

17. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

1. உலக மாதவிடாய் சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? மே 28

2. மூவிணைவு - வரையறு? இரண்டாம் நிலை உட்கருவுடன் ஆண் கேமிட் இணைவது

3. கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன? குழந்தை பிறந்த பின் முதல் 2 முதல் 3 நாட்களுக்குள் சுரக்கப்படும் பால்

4. மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது? நாப்கின்களை முறையாக மாற்றுவதன் மூலமாக

5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும்:
A - எக்ஸைன்
B - இன்டைன்
C - உற்பத்தி செல்
D - உடல் உட்கரு

6. பூக்கும் தாவரங்களில் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை வகைகள்: 1. தன் மகரந்தச்சேர்க்கை 2. அயல் மகரந்தச்சேர்க்கை


10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment