10th Science Quarterly Exam 2025 | Important Questions Bank

Prepare effectively for your mid-year boards check! Access the most important Class 10 Science Quarterly Exam 2025 questions, numericals, and diagrams

The Quarterly Exam is the first major milestone of the academic year, testing your mastery over a massive chunk of the syllabus. This curated bank of Class 10 Science Quarterly Exam 2025 Important Questions compiles high-yield problems that frequently appear in mid-year papers. Aligned with the latest exam weightage across physics, chemistry, and biology, these questions focus on core definitions, critical balancing equations, and fundamental diagrams to help you streamline your revision and secure top marks.


10th Science Quarterly Exam 2025 | Important Questions Bank

STATE BOARD
10th Science TM - Quarterly Exam 2025 Important Questions
2 Marks :-

1) நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

2) விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?

3) அணுக்கட்டு எண் வரையறு.

4) சரியா? தவறா (தவறு எனில் கூற்றினை திருத்துக):
அ) இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.
ஆ) மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணுநிறையைச் சார்ந்தது.

5) சுவாச ஈவு என்றால் என்ன?

6) சைனோ ஆரிக்குலார் கணு பேஸ் மேக்கர் என்று ஏன் அழைக்கப்படுகிறது.

7) & 8) பொருத்துக:
அ) நிசில் துகள்கள்
ஆ) ஹைப்போதலாமஸ்
இ) சிறுமூளை
ஈ) ஸ்வான் செல்கள்
9) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D பாகங்களை அடையாளம் காணவும் (படம்: மகரந்தத்துகள்).

10) ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?

11) 12 கூலும் மின்னூட்டம் 5 விநாடி நேரம் ஒரு மின்விளக்கின் வழியாக பாய்கிறது, எனில் அதன் வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

12) திருப்புத்திறன் தத்துவம் வரையறு.

13) அணுக்கட்டு எண் - வரையறு.

14) இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.

15) கீழ்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக:
1) திரவத்தில் வாயு
2) திரவத்தில் திண்மம்
3) திண்மத்தில் திண்மம்
4) வாயுவில் வாயு

16) முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.

17) "போல்டிங்" என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?

18) இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?

19) 5 Ω மின்தடை கொண்ட மின்சூடேற்றி ஒரு மின்மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவை காண்க.

20) நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

21) நிறப்பிரிகை வரையறு.

22) பாயில் விதியைக் கூறுக.

23) ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு என்னவாகும்?

24) வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?

25) நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? உதாரணம் தருக.

26) ஒளிச்சேர்க்கையின் போது இருள்வினைக்கு முன்பு ஏன் ஒளிவினை நடைபெற வேண்டும்?

27) CNS-ன் விரிவாக்கம் என்ன?

28) இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?

4 Marks :-

1) ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.

2) ஓம் விதி வரையறு.

3) அ) A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது O2 உடன் 800°C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக்கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப் பயன்படும். A மற்றும் B என்ன?

4) அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.

5) நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக.

6)
அ) ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
ஆ) வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
7)
அ) மூவிணைவு வரையறு.
ஆ) ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளைக் கூறுக.

8) அல்லோசோம்கள் என்றால் என்ன?

9) கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்:
(i) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
(ii) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
(iii) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
(iv) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
கூற்று : பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுகிறது.
காரணம் : இது பிற நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்துகிறது.

10) கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.

11) நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

12)
அ) H2O-ன் மூலக்கூறு நிறையைக் காண்க.
ஆ) மரபு ரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் எதிர்க்குறியிலும், இடஞ்சுழித் திருப்புத்திறன் நேர்க்குறியிலும் குறிக்கப்படுகிறது.

13) பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.

14) குறிப்பு வரைக:
அ) தெவிட்டிய கரைசல்
ஆ) தெவிட்டாத கரைசல்

15) ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?

16) ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?

17) ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.

18) இரத்தத்தின் பணிகளை பட்டியலிடுக.

19) கோடிட்ட இடங்களை நிரப்புக:
அ) ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் _______ லிருந்து கிடைக்கிறது.
ஆ) செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை _______ ஆகும்.

20) கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க. (Ca=40, C=12, O=16)

21)
அ) இடது வெண்ட்ரிக்கிள் சுவரானது மற்ற அறைகளின் சுவர்களை விட தடிமனாக இருப்பது ஏன்?
ஆ) CNS-ன் விரிவாக்கம் என்ன?

22) ஒரு தூய நெட்டை தாவரமானது (TT) தூய குட்டைத் தாவரத்துடன் (tt) கலப்பு செய்யப்படுகிறது. இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறை தாவரங்கள் எவ்வகை தன்மையுடையவை என்பதை விளக்குக.

23) 100W மின்திறனுள்ள ஒரு மின்விளக்கு தினமும் 5 மணி நேரம் பயன்படுகிறது. இதுபோல நான்கு 60W மின்விளக்கு தினமும் 5 மணி நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னாற்றலை கிலோவாட் மணி அலகில் கணக்கிடுக.

24) சூசனின் தகப்பனார் மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப்பின், அவரது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழிமுறைகளை கூறுக?

25) பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும், இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாயப்படுத்துக.

26) 10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும் அதன் தன்மையும் கண்டறிக.

27) கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகளை பற்றி குறிப்பு வரைக.

28)
i) ஸ்நெல் விதியை கூறுக.
ii) குவிலென்சு மற்றும் குழிலென்சு வேறுபடுத்துக.
29)
i) 27 கி நிறையுள்ள அலுமினியத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கையை கண்டறிக.
ii) CO2 கார்பன்டைஆக்ஸைடின் மூலக்கூறு நிறையை கணக்கிடு.

30) ஒளியின் பண்புகளை (ஏதேனும் நான்கு) கூறுக.

31) ராக்கெட் ஏவுதலை விளக்குக.

32) கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.

33)
i) மின்தடைஎண் மற்றும் மின்கடத்து எண் ஆகியவற்றை வேறுபடுத்துக.
ii) மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.

34) உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகள் யாவை?

35) காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.

36)
i) இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக (ஏதேனும் 2 மட்டும்).
ii) மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை?

37) ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.

38)
i) கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன?
ii) ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?

39) 180 கி நீரில், 45 கி சோடியம் குளோரைடைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.

40) ஒரு உலோகம் A-யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2, 8, 18, 1 ஆகும். A ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து C மற்றும் D-யை உருவாக்கும். D யானது வாயுநிலை சேர்மம் எனில் A, B, C மற்றும் D எவை?

7 MARKS :- (தேவையான இடங்களில் படம் வரையவும்)
1)
(i) ராக்கெட் ஏவுதலை விளக்குக.
(ii) குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக.
2)
(i) பாயில் விதியைக் கூறு.
(ii) வானம் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?
(iii) மின்னோட்டம் என்றால் என்ன?
(iv) LED என்பதன் விரிவாக்கம் தருக.
3)
(i) நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
(ii) எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும்? ஏன்?
4)
(i) இரும்பு துருப்பிடித்தலுக்கான இரு காரணங்கள் கூறுக.
(ii) ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?
(iii) ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவைகளை அடையாளம் காண்க: அடர் சல்பியூரிக் அமிலம், காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட், சிலிக்கா ஜெல், கால்சியம் குளோரைடு, எப்சம் உப்பு.
5)
(i) ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
(ii) காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் வேறுபடுத்துக.
(iii) முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைவு எனப்படும்?
6)
(i) மின்னோட்டம் என்றால் என்ன?
(ii) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
(iii) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிட முடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?
7)
(i) உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.
(ii) வானம் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது?
8)
(i) ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.
(ii) இரசக்கலவை என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டு தருக.
9)
(i) MgSO4·7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது?
(ii) கரைதிறன் - வரையறு.
(iii) நீரேறிய உப்பு வரையறு.
10)
i) பூக்கும் தாவரங்களில் நடைபெறும் பால் இனப்பெருக்கத்தின் நிகழ்வுகளை எழுதுக.
ii) முதல் நிகழ்வின் வகைகளைக் கூறுக.
iii) அந்நிகழ்வின் நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக.
11)
i) மோல் வரையறு.
ii) நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
12)
i) பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தைச் சேர்ப்பதன் நோக்கம் என்ன?
ii) அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன் இன்னும் ஒரு பொருள் மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?
13) வேறுபாடு தருக:
i) ஒரு விதையிலைத் தாவர வேர் மற்றும் இருவிதையிலைத் தாவர வேர்
ii) காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்
14)
i) முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தை படம் வரைந்து விளக்குக.
ii) போல்டிங் (bolting) என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?
15)
i) நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
ii) விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி மூலம் விவரி.
16)
i) கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக.
ii) வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
17)
i) நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி.
ii) அனிச்சை வில் என்பதை வரையறு.
18)
i) உந்த மாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.
ii) நிறப்பிரிகை வரையறு.
19)
i) ஜூல் வெப்பவிதி வரையறு.
ii) நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த உலோகக் கலவை மின்சார வெப்பமேற்றும் சாதனமாக பயன்படுத்தப்படுவது ஏன்?
iii) ஒரு மின் உருகு இழை எவ்வாறு மின்சாதனங்களை பாதுகாக்கிறது?
20)
i) நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
ii) அவகாட்ரோ விதியைக் கூறு.
21)
i) ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?
ii) தாமிரத்தின் பயன்களைக் கூறு.
22)
i) சிஸ்டோல், டையஸ்டோல் இவற்றை வேறுபடுத்துக.
ii) நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி.
23)
i) டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது?
ii) டி.என்.ஏ. வின் உயிரியல் முக்கியத்துவம் யாது?
24) (i) இரத்தத்தின் பணிகளை விளக்குக.

10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment