Prepare effectively for your SSLC Tamil exam with this 10th Tamil Test Question Paper 1 from Padasalai. This model test paper follows the latest Tamil Nadu state board syllabus and includes a variety of question types—poetry, prose, grammar, and writing skills—to help students practice and improve their scores. Ideal for unit tests, quarterly exams, and public exam revision, the PDF can be downloaded free for classroom or self-study use.
ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
தமிழ் — வகுப்பு: 10
காலம்: 3 மணி
மதிப்பெண்கள்: 100
பகுதி - I
மதிப்பெண்கள்: 15
அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: (15 × 1 = 15)
1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது:
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் —
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
4. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே —
அ) பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய
ஈ) பாடல்; கேட்டவர்
5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது:
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
6. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில் பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
7. செய்தி 1 — ஒவ்வோர் ஆண்டும் சூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 — காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 — இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
8. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க:
அ) கொண்டல் — 1. மேற்கு
ஆ) கோடை — 2. தெற்கு
இ) வாடை — 3. கிழக்கு
ஈ) தென்றல் — 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
9. 'மகிழுந்து வருமா?' என்பது:
அ) விளித்தொடர்
ஆ) எழுவாய்த்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) பெயரெச்சத்தொடர்
10. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது —
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
11. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க: (12 - 15)
"விசும்பில் ஊழி ஊழி செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழி ஊழியும்"
12. விசும்பு என்பதன் பொருள்:
அ) வானம்
ஆ) யுகம்
இ) முறை
ஈ) பூமி
13. 'ஊழி ஊழி' — இலக்கணக்குறிப்பு:
அ) வினைத்தொகை
ஆ) அடுக்குத்தொடர்
இ) பண்புத்தொகை
ஈ) பெயரெச்சம்
14. இப்பாடல் ஆசிரியர் யார்?
அ) வள்ளுவர்
ஆ) கீரந்தையார்
இ) பாவாணர்
ஈ) பாரதியார்
15. இப்பாடல் இடம்பெற்ற நூல்:
அ) பரிபாடல்
ஆ) குறுந்தொகை
இ) நற்றிணை
ஈ) கலித்தொகை
பகுதி - II
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க — (கட்டாய வினா எண்: 21) (4 × 2 = 8)
16. 'பலகை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
17. விடைக்கேற்ற வினா அமைக்க:
அ) ஒரு நாட்டின் வளமும் அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையது என்கிறார் பாவாணர்.
ஆ) தமிழ்மொழி உலகின் மிக மூத்த மொழியாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் திகழ்கிறது.
18. 'கட்டுரை படித்தான்' — இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தி விரித்து எழுதுக.
19. தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
20. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
21. 'கண்' என முடியும் குறட்பாவினை எழுதுக. (கட்டாய வினா)
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க: (5 × 2 = 10)
22. 'நச்சப்படாதவன் செல்வம்' — இச்சொல்லுக்குப் பொருள் தருக.
23. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக: i) தேன் | ii) விளக்கு
24. கூட்டுநிலைப் பெயரெச்சம் என்றால் என்ன?
25. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக: அ) தான் - தாம் | ஆ) விதி - வீதி
26. பகுபத உறுப்பிலக்கணம் தருக: i) உரைத்த
27. கலைச்சொல்லாக்கம் தருக: i) Wealth | ii) Baby Shower
28. தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க: i) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
பகுதி - III
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க: (2 × 3 = 6)
29. பல்துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
30. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
31. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
"குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாடல் இங்குப் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குழந்தையாகக் கருதிப் பாடுவர்."
i) குமரகுருபரர் இயற்றிய நூல் எது?
ii) சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
iii) பிள்ளைத்தமிழ் யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடுவர்?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க — (கட்டாய வினா எண்: 34) (2 × 3 = 6)
32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
33. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் ஐந்து இளம்பயிர் வகைகளின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
34. "மாற்றம் எனது..." எனத் தொடங்கும் காலக்கணிதம் பாடல் எழுதுக. (கட்டாய வினா)
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க: (2 × 3 = 6)
35. உவமையணி என்றால் என்ன? சான்று தருக.
36. எடுத்துக்காட்டு உவமையணி என்றால் என்ன? சான்று தருக.
37. அலகிட்டு வாய்ப்பாடு தருக:
"நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் / நச்சு மரம்பழுத் தற்று."
பகுதி - IV (பிரிவு - 4)
மதிப்பெண்கள்: 25
எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்க: (5 × 5 = 25)
38. ஒழுக்கமுடைமை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
39. அ) நூலக வசதி வேண்டிப் பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.
(அல்லது)
ஆ) மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்றுக் 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
40. காட்சிக்கு ஏற்ற கவிதை எழுதுக (இயல்-3).
41. கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புக.
42. மொழிபெயர்க்க:
"The Golden Sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twittering their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers' fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant."
பகுதி - V (பிரிவு - V)
மதிப்பெண்கள்: 24
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்: (3 × 8 = 24)
43. அ) "நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது" என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
44. அ) 'புயலிலே ஒரு தோணி' கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
(அல்லது)
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவர்தம் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக:
(குறிப்புகள்: நூலின் தலைப்பு — நூலின் மையப்பொருள் — மொழிநடை — கருத்து — நூலின் நயம் — நூல் கட்டமைப்பு — சிறப்புக் கூறு — நூல் ஆசிரியர்)