12th Physics Second Midterm 2026 Question Paper - Pudhukottai District (Tamil Medium)


புதுக்கோட்டை மாவட்டம் 12 | 12-இயற்பியல்-2

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026

XII — இயற்பியல்
காலம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி - 1 10 × 1 = 10
குறிப்பு: 1) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2) ஏற்புடைய விடையைத் தேர்த்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. 10 cm நீளமுடைய தண்டு ஒன்று, 10 cm குவியத்தூரம் கொண்ட குழி ஆடியின் முதன்மை அச்சில் வைக்கப்பட்டுள்ளது. தண்டின் ஒரு முனை குழி ஆடியின் முனையிலிருந்து 20 cm தொலைவில் இருந்தால் கிடைக்கும் பிம்பத்தின் நீளம் என்ன?
அ) 2.5 cm
ஆ) 5 cm
இ) 10 cm
ஈ) 15 cm
2. தட்டைக் குவிலென்ஸ் ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 cm மேலும் அதன் ஒளிவிலகல் எண் 1.5. குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம்
அ) 5 cm
ஆ) 10 cm
இ) 15 cm
ஈ) 20 cm
3. ஒளிவிலகல் எண் 1.47 கொண்ட இருபுற குவிலென்ஸ் ஒன்று திரவம் ஒன்றில் மூழ்கி, சமதள கண்ணாடித் தகடு போன்று செயல்படுகிறது எனில், திரவத்தின் ஒளிவிலகல் எண் எவ்வாறு இருக்க வேண்டும்?
அ) ஒன்றை விடக் குறைவு
ஆ) கண்ணாடியை விடக் குறைவாக
இ) கண்ணாடியை விட அதிகமாக
ஈ) கண்ணாடிக்குச் சமமாக
4. யங் இரட்டைப் பிளவு ஆய்வில், பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், பிளவுகளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்?
⚠ குறிப்பு: மூல PDF-இல் வினாக்கள் 5–8 காணப்படவில்லை. நேரடியாக வினா 9-க்குத் தாவுகிறது.
9. வெப்ப ஆற்றலை உட்கவர்வதால், எலக்ட்ரான்கள் உமிழப்படுவது ______ உமிழ்வு எனப்படும்.
அ) ஒளிமின்
ஆ) புல
இ) வெப்ப அயனி
ஈ) இரண்டாம் நிலை
10. ஒளிமின் விளைவுப் பரிசோதனையில் நிறுத்து மின்னழுத்தம் 81 V எனில் வெளிவிடப்படும் எலக்ட்ரான்களின் பெரும இயக்க ஆற்றல்
அ) 1.3 × 10−17 J
ஆ) 3 × 10−17 J
இ) 1.3 × 10−17 J
ஈ) 1.368 × 10−17 J
பகுதி - 2 5 × 2 = 10
குறிப்பு: ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 18)
11. மேகங்கள் ஏன் வெண்மை நிறமாகக் காட்சியளிக்கின்றன?
12. ஸ்நெல் சாளரம் என்றால் என்ன?
13. புரூஸ்டர் விதியைக் கூறு.
14. ஓரியல் மூலங்கள் என்றால் என்ன?
15. கிட்டப்பார்வை என்றால் என்ன? அக்குறைபாட்டை எவ்வாறு சரிசெய்யலாம்?
16. ஒளிமின் விளைவு என்றால் என்ன?
17. நிறுத்து மின்னழுத்தம் வரையறு.
18. பின்வரும் நேர்வுக்கு உந்தம் மற்றும் டி பிராய் அலைநீளத்தைக் கணக்கிடுக.
நெடுஞ்சாலையில் 50 m s−1 வேகத்தில் இயங்கும் 4000 kg நிறை கொண்ட கார்.
பகுதி - 3 5 × 3 = 15
குறிப்பு: ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 26)
19. கண்ணாடிப் பட்டகம் ஒன்றின் வழியாகப் பாயும் ஒளியின் பக்கவாட்டு இடப்பெயர்ச்சிக்கான சமன்பாட்டைப் பெறுக.
20. மாறுநிலைக்கோணம் மற்றும் முழு அக எதிரொளிப்பு என்றால் என்ன?
21. குறுக்கீட்டு விளைவுக்கும் விளிம்பு விளைவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
22. படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?
23. போலராய்டின் பயன்களைத் தருக.
24. எலக்ட்ரானின் டி பிராய் அலைநீளத்திற்கான சமன்பாட்டினைப் பெறுக.
25. ஒளி உமிழ்வு மின்கலத்தின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை விளக்குக.
26. ஃபிளிண்ட் கண்ணாடியால் செய்யப்பட்ட முப்பட்டகத்தின் வழியே செல்லும் சிவப்பு, பச்சை மற்றும் ஊதா ஒளிகளின் ஒளிவிலகல் எண்கள் முறையே 1.613, 1.620 மற்றும் 1.632 ஆகும். இம்மதிப்புகளைக் கொண்டு பிளிண்ட் முப்பட்டகத்தின் நிறப்பிரிகை திறனைக் காண்க.
பகுதி - 4 3 × 5 = 15
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
27. அ) ஒற்றைக் கோளகப்பாபில் ஏற்படும் ஒளிவிலகலுக்கான சமன்பாட்டைப் பெறுக.
(அல்லது)
ஆ) யங் இரட்டைப்பிளவு ஆய்வு அமைப்பை விளக்கி, பாதை வேறுபாட்டிற்கான கோவையைப் பெறுக.
28. அ) முப்பட்டகம் ஒன்றின் திசைமாற்றக் கோணத்திற்கான சமன்பாட்டை வருவித்து, அதிலிருந்து முப்பட்டகம் செய்யப்பட்டுள்ள பொருளின் ஒளிவிலகல் எண்ணைக் காண்பதற்கான கோவையை வருவி.
(அல்லது)
ஆ) தகுந்த விளக்கங்களுடன் ஐன்ஸ்டீனின் ஒளிமின் சமன்பாட்டைப் பெறுக.
29. அ) ஹைஜென்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் ஒளிவிலகல் விதிகளை நிரூபி.
(அல்லது)
ஆ) எலக்ட்ரானின் அலை இயல்பினை விவரிக்கும் டேவிசன் — ஜெர்மர் சோதனையை சுருக்கமாக விவரி.

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url