12th Chemistry Second Midterm 2026 Question Paper - Pudhukottai District (Tamil Medium)


புதுக்கோட்டை மாவட்டம் 12 | 12-வேதியியல்-1

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு - 2026

XII — வேதியியல்
காலம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி - 1 10 × 1 = 10
குறிப்பு: 1) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2) ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. IUPAC வழிமுறைகளின்படி, [Co(en)2(ONO)Cl]Cl என்ற அணைவுச் சேர்மத்தின் பெயர்
அ) குளோரோபிஸ் எத்திலின் டை அமீன் நைட்ரிடோகோபால்ட் (III) குளோரைடு
ஆ) குளோரிடோபிஸ் (ஈத்தேன்-1, 2 டை அமீன்) நைட்ரோ-க-0 கோபால்ட் (III) குளோரைடு
இ) குளோரிடோபிஸ் (ஈத்தேன்-1, 2 டை அமீன்) நைட்ரோ-க-0 கோபால்ட் (II) குளோரைடு
ஈ) குளோரிடோபிஸ் (ஈத்தேன்-1, 2 டை அமீன்) நைட்ரிடோ-க-0 கோபால்ட் (III) குளோரைடு
2. கீழ்கண்டவற்றுள் எந்தக் கொள்கை அணைவுச் சேர்மங்களின் நிறம் மற்றும் காந்தப் பண்பினைப் பற்றித் தெளிவாக விளக்குகிறது?
அ) வெர்னர் கொள்கை
ஆ) இணைதிறன் பிணைப்புக் கொள்கை
இ) படிக புலக் கொள்கை
ஈ) அவகேட்ரோ கொள்கை
3. இரும்பின் மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம் பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மறுதலை சாத்தியமற்றது ஏனெனில்
அ) இரும்பை விட ஜிங்க் லேசானது
ஆ) இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலை பெற்றுள்ளது
இ) இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
ஈ) இரும்பை விட ஜிங்க், அதிக எதிர்குறி மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது
4. ஃபாரடே மாறிலி என வரையறுக்கப்படுகிறது
அ) 1 எலக்ட்ரானால் சமந்து செல்லப்படும் மின்னூட்டம்
ஆ) 1 மோல் எலக்ட்ரான்களால் சமந்து செல்லப்படும் மின்னூட்டம்
இ) ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்
ஈ) 6.023 எலக்ட்ரான்களால் சமந்து செல்லப்படும் மின்னூட்டம்
5. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
அ) பால்மம் - புகை
ஆ) களி - வெண்ணெய்
இ) நுரைப்பு - பனிமுட்டம்
ஈ) கலக்கப்பட்ட கிரீம் - கூழம் கரைசல்
6. ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில்
அ) ΔH அதிகரிக்கிறது
ஆ) ΔS அதிகரிக்கிறது
இ) ΔG அதிகரிக்கிறது
ஈ) ΔS குறைகிறது
7. அனிலீன் + பென்சோயில் குளோரைடு →NaOH C6H5NHCOC6H5 இந்த வினையானது
அ) ஃப்ரீடல் கிராப்ட் வினை
ஆ) HVZ வினை
இ) ஸ்காட்டன் பௌமான் வினை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
8. பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலினாக மாற்றுகிறது
அ) Sn / HCl
ஆ) ZnHg / NaOH
இ) Zn / NH4Cl
ஈ) இவை அனைத்தும்
9. இன்சுலின் ஹார்மோன் என்பது வேதியியலாக ஒரு
அ) கொழுப்பு
ஆ) ஸ்டீராய்டு
இ) புரதம்
ஈ) கார்போஹைட்ரேட்
10. எந்த வைட்டமின் குறைபாட்டால் வலிப்பு நோய் உருவாகிறது?
அ) வைட்டமின் A
ஆ) வைட்டமின் B6
இ) வைட்டமின் B12
ஈ) வைட்டமின் C
பகுதி - 2 5 × 2 = 10
குறிப்பு: எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 17)
11. மருத்துவத் துறையில் பயன்படும் அணைவுச் சேர்மங்களிற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. மேலும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த அணைவுச் சேர்மங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
12. தன் இழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக.
13. பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.
14. கார்பைலமீன் வினையை எழுதுக?
15. செல்லில் காணப்படும் RNAவின் வகைகள் யாவை?
16. நொதிகள் வரையறு.
17. 25°C வெப்பநிலையிலுள்ள 0.1M காப்பர் சல்பேட் கரைசலில் காப்பர் மின்முனை மூழ்க வைக்கப்பட்டுள்ளது. காப்பரின் மின்முனை மின்னழுத்தத்தைக் கணக்கிடுக. (குறிப்பு: E°Cu / Cu2+ = 0.34V)
பகுதி - 3 5 × 3 = 15
குறிப்பு: எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 24)
18. இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.
20. மின்பகுளிக் கடத்துத்திறன் அளவிடுதல் DC மின்னோட்டத்திற்கு பதிலாக AC மின்னோட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஏன்?
21. கரைப்பான் விரும்பும் கூழ்மங்கள், கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களவிட அதிக நிலைப்புத் தன்மை வாய்ந்தவை. ஏன்?
22. CH3NO2 வாய்பாட்டிற்கு இரண்டு மாற்றியங்கள் உள்ளன. இவ்விரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துவாய்?
23. புரதங்களின் இயல்பிழத்தல் பற்றி குறிப்பு வரைக.
24. கீழ்கண்டவற்றை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
1) N, N-டை எத்தில் அமீனிலிருந்து அனிலின்
2) N-நைட்ரோசோ டை எத்திலமீன்
பகுதி - 4 3 × 5 = 15
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
25. அ) வெர்னர் கொள்கையின் கோட்பாடுகளைக் கூறுக.
(அல்லது)
ஆ) டேனியல் மின்கல அமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.
26. அ) வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) நைட்ரோ பென்சீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
1) 1, 3, 5 - ட்ரைநைட்ரோ பென்சீன்
2) ஆர்த்தோ மற்றும் பாரா நைட்ரோ பினால்
3) m - நைட்ரோ அனிலின்
27. அ) α-D(+) குளுக்கோகை பைரனோஸின் அமைப்பை வரைக.
(அல்லது)
ஆ) 1) DNA மற்றும் RNAக்கு இடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.
2) ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்களுக்கிடையே உள்ள இரண்டு வேறுபாடுகளை தருக.

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url