12th Tamil Quarterly Exam 2026 - Thiruvannamalai District Question Paper



QTJ | திருவண்ணாமலை மாவட்டம்

காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026

12-ஆம் வகுப்பு — தமிழ்
காலம் : 3.00 மணி மதிப்பெண்கள் : 90
பகுதி - I மதிப்பெண்கள் : 14
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (14 × 1 = 14)
1. பொருத்தி விடை தேர்க:
அ) அவன், அவள், அவர் — 1) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் — 2) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் — 3) தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம் — 4) பதிலிப் பெயர்கள்
அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 1, 2
2. பொருள்கோள் _______ வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஏழு
ஈ) எட்டு
3. 'வையகமும் வானகமும் ஆற்றல் அரிது' எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி
இ) திணைத்துணை நன்றி
ஈ) காலத்தினால் செய்த நன்றி
4. ச.த.சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்:
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறித்துவமும் தமிழும்
5. 'ஒரு கிராமத்து நதி' என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.........
அ) கவிக்கோ அப்துல் ரகுமான்
ஆ) சிற்பி பாலசுப்பிரமணியம்
இ) அய்யப்ப மாதவன்
ஈ) கவிப்பேரரசு வைரமுத்து
6. 'வியர்வை வெள்ளம்' — இச்சொல்லுக்கான இலக்கணக் குறிப்பைத் தேர்க:
அ) வினையெச்சம்
ஆ) பண்புத்தொகை
இ) உருவகம்
ஈ) உவமைத்தொகை
7. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே / அஃறிணை என்மனார் அவரல பிறவே" — இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்:
அ) நன்னூல்
ஆ) அகத்தியம்
இ) தொல்காப்பியம்
ஈ) இலக்கண விளக்கம்
8. கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் சரி
9. 'தந்தனன் தாதை தன்னைத் தடக் கையான் எடுத்துச் சார்வான்' — தொடரில் உள்ள 'தடக் கையான்' என்னும் சொல்லுக்கான இலக்கணக் குறிப்பு:
அ) உரிச்சொல் தொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) இடைச்சொல் தொடர்
10. 'இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக' என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது:
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
11. 'Matriarchy' — இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்க:
அ) தந்தைவழிச் சமூகம்
ஆ) தாய்வழிச் சமூகம்
இ) தனிக்குடும்பம்
ஈ) வாழிடம்
12. கீழ்க்காண்பவர்களுள் வேடுவர் தலைவன் யார்?
அ) குகன்
ஆ) சவரி
இ) சடாயு
ஈ) சுக்ரீவன்
13. ஏட்டுச் சுவடிகளிலிருந்து திருக்குறள் முதன் முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு ...
அ) 1812
ஆ) 1912
இ) 2012
ஈ) 2022
14. 'நெடுநல்வாடை' என்னும் நூலை எழுதியவர்:
அ) இடைக்காடனார்
ஆ) அய்யப்ப மாதவன்
இ) நக்கீரர்
ஈ) பெருங்கௌசிகனார்
பகுதி - II மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 2 = 6)
15. "விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிச் செய்வதொன்றே உயிர்ப் பணியாகக் கொண்டோன்" — யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
16. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
17. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
18. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவர் உரைப்பன யாவை?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 2 = 4)
19. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
20. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை — குறிப்பு வரைக.
21. சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக. (7 × 2 = 14)
22. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
23. உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக: கிணற்றுத் தவளை போல
24. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக: (தலை, தளை, தழை)
25. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுருபைப் பிரித்தும் சேர்த்தும் இரு வேறு தொடர்களை அமைக்க: (முன்)
26. பகுபத உறுப்பிலக்கணம் தருக: கலங்கி (அல்லது) பொலிந்தான்
27. பிரித்துப் புணர்ச்சி விதி கூறுக: வானமெல்லாம் (அல்லது) அருங்கானம்
28. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்."
29. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு தொடர் அமைக்க: குதிரை, வேகம், ஓடு, தாவு
30. சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி — இவற்றுள் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.
பகுதி - III மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
31. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்" — இத்தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
32. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பு தேடினர்?
33. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? — குறள் வழி விளக்குக.
34. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" — இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
37. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழ்நிலையில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
38. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் — விளக்கம் எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 8)
ஏதேனும் இரண்டனுக்கு விடை எழுதுக. (2 × 4 = 8)
39. அ) "சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் / ஏமப் புணையைச் சுடும்" — இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியைச் சுட்டிப் பொருள் விளக்குக.
(அல்லது)
ஆ) நிரல் நிறை அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
40. இலக்கிய நயம் பாராட்டுக: (மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக)
"பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்." — நாமக்கல் கவிஞர்
41. அ) குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடித்து எழுதுக:
அ) தமிழறிஞர்: முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்
ஆ) தாய்மொழி: ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்
இ) சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்
ஈ) முன்னெழுத்து அரசன் ; பின்னெழுத்து தமிழ் மாதம்
(தமிழ் ஒளி, அம்பை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)
(அல்லது)
ஆ) வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.
42. அ) 'தமிழின் சிறப்பு' (அல்லது) 'வறுமை' என்ற தலைப்பில் எட்டு வரிக்கு மிகாமல் கவிதை எழுதுக.
(அல்லது)
ஆ) பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக:
1) குமரன் வீடு பார்த்தேன்.
2) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
3) காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்
4) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
43. தமிழாக்கம் தருக:
1) A new language is a new life.
2) Knowledge of language is the doorway to wisdom.
3) The limits of my language are the limits of my world.
4) Health is wealth.
[செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக: "ஐந்து கோடி தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது... நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும். இவ்வாறு வ.சு.ப. மாணிக்கம் கூறுகிறார்." — அ) தமிழகத்தில் எத்தனை கோடி மக்கள் வாழ்கிறார்கள்? ஆ) ஒரு மாமாங்கத்தில் எத்தனை நூற்படிகள் விற்கப்படுகின்றன? இ) எத்தகைய பழக்கத்தை மக்களிடம் சொல்ல வேண்டும்? ஈ) இவை யாருடைய கருத்து?]
பகுதி - IV மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (3 × 6 = 18)
44. அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
(அல்லது)
ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுரை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.
45. அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப் பற்று ஆகியவற்றை விவரிக்க.
(அல்லது)
ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது — எவ்வாறு? விளக்குக.
46. அ) தட்டச்சர் பணி வேண்டி மருதம் பதிப்பகத்தார்க்குத் தன் விவரக் குறிப்புடன் விண்ணப்பம் வரைக.
(அல்லது)
ஆ) 'உரிமைத் தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
பகுதி - V மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. (4 + 2 = 6)
47. அ) "ஓங்கலிடை..." எனத் தொடங்கும் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல். (4 மதிப்பெண்கள்)
ஆ) "மிகும்" என முடியும் திருக்குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url