12th Tamil Quarterly Exam 2026 - Chennai District Question Paper


12th Tamil Quarterly Exam 2026 - Chennai District Question Paper

சென்னை மாவட்டம் (Chennai District) தேர்வு எண் : [ A | 1 | 2 | 3 | ___ ]

காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026 - 27

வகுப்பு: 12 — தமிழ்
நேரம் : 3.00 மணி மொத்த மதிப்பெண்கள் : 90
அறிவுரைகள் : 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின், அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: விடைகள் தெளிவாகவும், குறிப்பிட்ட அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I மதிப்பெண்கள் : 14
குறிப்பு : அ) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. ஆ) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். (14 × 1 = 14)
1. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால், மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்:
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறித்துவமும் தமிழும்
2. 'செம்பரிதி....' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம்
ஈ) சூரிய நிழல்
3. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க:
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
4. நெடுநல்வாடை _______ அடிகளை உடையது.
அ) 188
ஆ) 288
இ) 338
ஈ) 488
5. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
6. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென — அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தருக:
அ) வினைத்தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
7. 'யார்?', 'எது?' ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே:
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரைவுத்திணை, உயர்திணை
8. பொருத்துக:
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் — 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி — 2. ஞாலத்தின் மாணப்பெரிது
இ) சினம் — 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினாற் செய்த நன்றி — 4. நன்மை கடலின் பெரிது
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 3, 4, 1
9. "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" — என்று குறிப்பிட்ட நூல்:
அ) நற்றிணை
ஆ) அகநானூறு
இ) குறுந்தொகை
ஈ) கலித்தொகை
10. கம்பரது காலம்:
அ) 11 -ஆம் நூற்றாண்டு
ஆ) 12 -ஆம் நூற்றாண்டு
இ) 13 -ஆம் நூற்றாண்டு
ஈ) 14 -ஆம் நூற்றாண்டு
11. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது:
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
12. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" — என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது:
அ) தனிக்குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தைவழிச் சமூகமுறை
13. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நூலகம்:
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) உ.வே.சா நூலகம்
இ) அண்ணா நூற்றாண்டு நூலகம்
ஈ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
14. அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை:
அ) 5
ஆ) 4
இ) 3
ஈ) 6
பகுதி - II மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
II. எவையேனும் மூன்றனுக்கு விடை தருக: (3 × 2 = 6)
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. "நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது" — விளக்குக.
17. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
18. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 2 = 4)
19. "விரிபெரு தமிழர் மேன்மை / ஓங்கிடச் செய்வ தொன்றே / உயிர்ப்பணியாக் கொண்டோன்" — யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
20. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
21. சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு விடை தருக: (7 × 2 = 14)
22. இலக்கணக்குறிப்பு தருக:   அ) வெங்கதிர்   (அல்லது)   ஆ) உளது
23. பகுபத உறுப்பிலக்கணம் தருக:   அ) கலங்கி   (அல்லது)   ஆ) தந்தனன்
24. புணர்ச்சி விதி தருக:   அ) ஆங்கவற்றுள்   (அல்லது)   ஆ) செம்பரிதி
25. கலைச்சொல் தருக:   Fine Arts   (அல்லது)   Habitat
[குறிப்பு : காதுகேளாதோருக்கான மாற்று வினா — குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்: 1. தமிழறிஞர்; முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம். 2. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ்மாதம். (கோதை, தமிழ்ஒளி, மறைமலை அடிகள்)]
26. உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக:
அ) கிணற்றுத்தவளை போல   (அல்லது)   ஆ) அச்சாணி இல்லாத தேர் போல
27. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) கலை, களை, கழை   (அல்லது)   ஆ) அலை, அளை, அழை
28. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக:
"ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்."
29. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக:
அ) காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
ஆ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
30. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க:
"மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்."
பகுதி - III மதிப்பெண்கள் : 24
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
III. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக: (2 × 4 = 8)
31. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
32. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? — குறள் வழி விளக்குக.
33. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" — இடஞ்சுட்டிப் பொருள் தருக.
34. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக: (2 × 4 = 8)
35. மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. சென்னை "அறிவின் நகரம்" என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
37. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் — விளக்கம் தருக.
38. மணந்தகம் — விளக்குக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக: (3 × 4 = 12)
39. அ) பொருள் வேற்றுமை அணி — விளக்குக.
(அல்லது)
ஆ) கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக:
"சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் / ஏமப் புணையைச் சுடும்"
40. அ) வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.
(அல்லது)
ஆ) கூதிர்ப் பாசறைத் துறையைச் சான்றுடன் விளக்குக.
41. இலக்கிய நயம் பாராட்டுக: (மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக)
"முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள் கூட்டி சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவி கூட்டி அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி" — கண்ணதாசன்
42. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க:   அ) முன்   |   ஆ) தானே
43. தமிழாக்கம் தருக:
1. Learning is a treasure that will follow its owner everywhere.
2. The limits of my language are the limits of my world.
3. A new language is a new life.
4. If you want people to understand you, speak their language.
[செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா — கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்: "மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை... மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர்..." — வினாக்கள்: அ) மனம் எதனால் வளர்ந்து அமைந்தது? ஆ) மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் கருவி எது? இ) மொழிக்கு ஆசிரியராக உள்ளவர் யார்? ஈ) பெற்ற தாயின் முதல் வேட்கை யாது?]
பகுதி - IV மதிப்பெண்கள் : 18
IV. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: (3 × 6 = 18)
44. அ) சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் — இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
(அல்லது)
ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
45. அ) மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதைச் சான்றுடன் நிறுவுக.
(அல்லது)
ஆ) புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.
46. அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
(அல்லது)
ஆ) 'உரிமைத்தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
பகுதி - V மதிப்பெண்கள் : 6
V. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக: (4 + 2 = 6)
47. அ) "துன்பு உளது..." எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக. (4 மதிப்பெண்கள்)
ஆ) "மகற்கு" என முடியும் திருக்குறளை அடிபிறழாமல் எழுதுக. (2 மதிப்பெண்கள்)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Post a Comment