QTJ
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் - 2026
10-ஆம் வகுப்பு — தமிழ்
காலம்: 3.15 மணி
மதிப்பெண்கள்: 100
பகுதி - I
மதிப்பெண்கள்: 15
குறிப்பு: (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். (15 × 1 = 15)
1. பரிபாடல் அடியில் 'விசும்பில் இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது _______
அ) சுட்டி
ஆ) கிண்கிணி
இ) குழை
ஈ) சூழ
3. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள் என்பவை முறையே குறிப்பிடுவது:
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) சருகும் சண்டும்
ஈ) தாளும் ஓலையும்
4. மகிழுந்து வருமா? என்பது _______
அ) விளித் தொடர்
ஆ) எழுவாய்த் தொடர்
இ) வினையெச்சத் தொடர்
ஈ) பெயரெச்சத் தொடர்
5. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது:
அ) இடவழுவமைதி
ஆ) பால்வழுவமைதி
இ) திணைவழுவமைதி
ஈ) காலவழுவமைதி
6. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _______ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _______
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
7. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
8. 'சிறிய ஆகப்பெரியோன் தெரியின்' என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
அ) திருவள்ளுவர்
ஆ) கீரந்தையார்
இ) அதிவீரராம பாண்டியர்
ஈ) மாணிக்கவாசகர்
9. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்:
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
10. சினையில் இருந்து பிரிவது:
அ) போத்து
ஆ) குச்சி
இ) கிளை
ஈ) சினை
11. காசிக்காண்டம் என்பது _______
அ) காசிநகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசிநகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசிநகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசிநகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக:
"புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!"
12. பாடலின் ஆசிரியரைத் தேர்க.
அ) பரஞ்சோதி முனிவர்
ஆ) இளங்கோவடிகள்
இ) கம்பர்
ஈ) கண்ணதாசன்
13. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயரைத் தேர்ந்தெடுக்க:
அ) காலக்கணிதம்
ஆ) கம்பராமாயணம்
இ) தேம்பாவணி
ஈ) காசி காண்டம்
14. அடி எதுகை சொற்களைத் தேர்க:
அ) இகழ்ந்தால் - என் மனம்
ஆ) வளமார் - வாக்குமூலம்
இ) புகழ்ந்தால் - இகழ்ந்தால்
ஈ) இகழ்ந்தால் - இறந்த
15. கவிஞரின் வாக்குமூலம் எது?
அ) மனம்
ஆ) கவிதை
இ) தீர்ப்பு
ஈ) உடல்
பகுதி - II
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
குறிப்பு: எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21-வது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். (4 × 2 = 8)
16. "மண்ணுஞ்சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" — இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
17. விடைகளுக்கு ஏற்ற வினாக்கள் அமைக்க:
அ) ஒரு நாட்டின் நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது.
ஆ) மேகம் நம் கூரையாக இருக்கிறது.
18. தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
19. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.
20. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
21. 'பல்லார்...' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
குறிப்பு: எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. "வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்" — இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
23. தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க: கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்
24. பசுமையான _______ ஐக் கண்ணுக்கு நல்லது. (காணுதல் / காட்சி) — அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக.
25. பகுபத உறுப்பிலக்கணம் தருக: 'பதிந்து'
26. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக: ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட நாள் பெற்றார்.
27. கலைச்சொற்கள் தருக: அ) Homograph ஆ) House warming
(குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: அ) மா__ [அறிவின் மறுபெயர்] ஆ) கு____தி [சிவப்பு நிறத்தில் இருக்கும்])
28. தொடரைப் படித்து ஏற்ற தலைப்பைத் தருக: "இரவின் இருள் அமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சுவிடும், கசகசத்த உயிரினங்கள்..."
பகுதி - III
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
குறிப்பு: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
30. "புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது" — இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்:
"மொழிபெயர்ப்பு இல்லாவிடில் பல படைப்பாளிகள் உலக அளவில் கவனம் பெற்றிருக்க முடியாது. இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் உலக அளவில் உரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்."
அ) படைப்பாளிகள் உலக அளவில் கவனம் பெறக் காரணம் யாது?
ஆ) கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
இ) யாருடைய கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் விருது கிடைத்திருக்கும்?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
குறிப்பு: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 34-க்குக் கட்டாயமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
33. வைத்தீஸ்வரன்கோயில் முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
34. அடி பிறழாமல் எழுதுக:
அ) "கொள்வோர் கொள்க..." எனத் தொடங்கி "...நாட்டின் சட்டம்" வரையிலான காலக்கணிதம் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) "புண்ணிய புலவீர்..." எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணப் பாடலை எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
குறிப்பு: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 × 3 = 6)
35. அறிந்தது அறியாதது, புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது — இச்சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
36. உவமையணியைச் சான்றுடன் விளக்குக.
37. பின்வரும் குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக:
"நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று"
பகுதி - IV
மதிப்பெண்கள்: 25
குறிப்பு: பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 × 5 = 25)
38. அ) மேகங்கள் குறித்த நாகூர் ரூமியின் கருத்துக்களைத் தொகுத்தெழுதுக.
(அல்லது)
ஆ) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்களை விளக்குக.
39. அ) மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாப் போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக்கண்டு கவினுறக் கவிதை எழுதுக: (சிறுமி ஒருவர் உணவுக் கிண்ணத்திலிருந்து நாய் குட்டிக்கு பரிவுடன் உணவளிக்கும் காட்சி)
41. அமுதன் தன் தந்தை மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் அமுதனிடம் ₹300/- ரூபாயும் '15, காந்தி நகர், செந்துறை, அரியலூர் மாவட்டம்' என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்று அமுதனாகத் தேர்வர் தன்னைக் கருதி நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) இளையதலைமுறை பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இன்றைய உணவுப் பழக்கம் குறித்த சமூக அக்கறையுடனான உங்கள் கருத்தை எழுதுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"The Golden Sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flower's fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant."
[செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக: "தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு..."]
பகுதி - V
மதிப்பெண்கள்: 24
குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
44. அ) 'பாய்ச்சல்' கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
(அல்லது)
ஆ) மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையான 'புதிய நம்பிக்கை' குறித்து விவரிக்க.
45. அ) தமிழின் இலக்கிய வளம் - கல்விமொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை — மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழி நடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - நூல் ஆசிரியர் — மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு நீவீர் படித்த நூலுக்கு மதிப்புரை எழுதுக.
காலாண்டுத் தேர்வு - செப்டம்பர் 2026
10-ஆம் வகுப்பு — தமிழ் விடைக்குறிப்பு
பகுதி - I விடைகள்
| 1. ஆ. வான்வெளியில் பேரொலியில் |
9. அ. இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது |
| 2. ஆ. கிண்கிணி |
10. அ. போத்து |
| 3. இ. சருகும் சண்டும் |
11. இ. காசிநகரத்தின் பெருமைப்பாடும் நூல் |
| 4. ஆ. எழுவாய்த்தொடர் |
12. ஈ. கண்ணதாசன் |
| 5. இ. திணைவழுவமைதி |
13. அ. காலக்கணிதம் |
| 6. ஈ. மன்னன், இறைவன் |
14. இ. புகழ்ந்தால், இகழ்ந்தால் |
| 7. இ. எம் + தமிழ் + நா |
15. ஆ. கவிதை |
| 8. ஈ. மாணிக்கவாசகர் |
|
பகுதி - II விடைகள்
16) சிலப்பதிகாரம், மணிமேகலை
17) அ. ஒரு நாட்டின் நாட்டுவளம் எதை உருவாக்குகிறது? | ஆ. எது நம் கூரையாக இருக்கிறது?
18) கொண்டல் - கிழக்கு, கோடை - மேற்கு, வாடை - வடக்கு, தென்றல் - தெற்கு
19) நடுநிலைமையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்ட வேண்டும்.
20) கிண்கிணி, சிலம்பு, அரைவடம், சுட்டி, குண்டலம், குழை
21) "பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்."
22) உறுதித்தன்மை காலவழுவமைதி
23) சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்
24) காட்சி, காணுதல்
25) பதிந்து: பதி + த் (ந்) + த் + உ
• பதி — பகுதி | த் — சந்தி ('ந்' ஆனது விகாரம்) | த் — இறந்தகால இடைநிலை | உ — வினையெச்ச விகுதி
26) ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட நாள் பெற்றார்.
27) அ. ஒப்பெழுத்து ஆ. புதுமனை புகுவிழா
28) பொருத்தமான தலைப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பகுதி - III விடைகள்
29) மொழிபெயர்ப்பு இல்லையெனில் ஊடகங்களின் வளர்ச்சி இல்லை. தொலைக்காட்சி, வானொலி, இதழ்கள் ஆகியன மொழிபெயர்ப்பால் வளர்கின்றன. மொழிபெயர்ப்பால் புதுவகை சிந்தனைகள் உருவாகின்றன.
30) நெல் நாற்று நட்டேன்; வாழைக்கன்று வாங்கினேன்; தென்னம்பிள்ளை வளர்ந்துள்ளது; பனை மடலியைக் கண்டேன்.
31) அ) மொழிபெயர்ப்பு ஆ) இரவீந்திரநாத் தாகூர் இ) பாரதியார்
32) தமிழன்னை தாய்மொழி; அழகார்ந்த மொழி; பழமைக்குப் பழமையானது; புதுமைக்குப் புதுமையானது; திருக்குறளின் பெருமையாய் விளங்குவது.
33) கால்கள் — கிண்கிணிச் சிலம்பு ஆடியது; இடை — அரைஞாண், அரைவடம் ஆடியது; நெற்றி — பொட்டு, வட்டிச்சுட்டி ஆடியது; காது — குழை, குண்டலம் ஆடியது; தலை உச்சி — முத்துக்கள் ஆடியது.
34)
"கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!"
35) அறிதல் - அறியாமை, புரிதல் - புரியாமை, தெரிதல் - தெரியாமை
36) உவமையணி: ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணி.
சான்று: "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் / கோலொடு நின்றான் இரவு."
37) அலகிட்டு வாய்பாடு:
| சீர் |
அசை |
வாய்பாடு |
| நச்/சப் | நேர் நேர் | தேமா |
| ப/டா/த/வன் | நிரை நிரை | கருவிளம் |
| செல்/வம் | நேர் நேர் | தேமா |
| ந/டு/ஊ/ருள் | நிரை நேர் நேர் | புளிமாங்காய் |
| நச்/சு | நேர் நேர் | தேமா |
| ம/ரம்/பழுத் | நிரை நிரை | கருவிளம் |
| தற்று | நேர்பு | காசு |
பகுதி - IV & V வழிகாட்டல் விடைகள்
38) அ) மேகங்கள் துணிச்சலானவை; கருணைகொண்டு சூரியனை மறைக்கும்; தாகத்தைத் தீர்க்கும்; அற்புதமானவை, மென்மையானவை.
ஆ) ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பைத் தரும்; உயிரினும் மேலாகப் போற்றிக் காக்க வேண்டும்; ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும்; ஒழுக்கம் தவறுதலால் பழி வந்து சேரும்.
39) முறைப்படியான கடிதக் கட்டமைப்பு (அனுப்புநர், பெறுநர், விளித்தல், செய்தி, கையொப்பம், முகவரி) அமைந்திருக்க வேண்டும்.
40) படத்தின் கருத்தை வெளிப்படுத்தும் நயமிக்க கவிதை வரிகளுக்கு மதிப்பெண்.
41) பெயர்: அமுதன் | தந்தை: மாணிக்கமணி | முகவரி: 15, காந்தி நகர், செந்துறை, அரியலூர் மாவட்டம் | சந்தா: ₹300/-
42) தகுந்த சமூக சிந்தனைக் கருத்துக்களுக்கு / ஆங்கில மொழிபெயர்ப்புக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
43, 44, 45) முன்னுரை, உட்தலைப்புகள், முடிவுரை எனத் தெளிவான கட்டமைப்போடு எழுதப்படும் விரிவான விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தயாரிப்பு: எஸ். ஜெயசெல்வன், பாணாதுறை மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம். | தொடர்புக்கு: 9443740120