VNR10T | விருதுநகர் மாவட்டம்
காலாண்டு பொதுத் தேர்வு - செப்டம்பர் - 2026
வகுப்பு 10 — தமிழ்
கால அளவு: 3.00 மணி
மதிப்பெண்கள்: 100
பகுதி - I
மதிப்பெண்கள்: 15
I. அனைத்து வினாக்களுக்கும் விடையளி : (15 × 1 = 15)
1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பிடுவது:
(அ) குலைப்பெயர் வகை
(ஆ) மணிப்பெயர் வகை
(இ) கிளைப்பெயர் வகை
(ஈ) இலைப்பெயர் வகை
2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது.......
(அ) சுட்டி
(ஆ) கிண்கிணி
(இ) குழை
(ஈ) சூழி
3. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க:
(அ) கொண்டல் - 1. மேற்கு | (ஆ) கோடை - 2. தெற்கு
(இ) வாடை - 3. கிழக்கு | (ஈ) தென்றல் - 4. வடக்கு
(1) 1, 2, 3, 4
(2) 3, 1, 4, 2
(3) 4, 3, 2, 1
(4) 3, 4, 1, 2
4. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
(அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது
(ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
(இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்
(ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
5. 'மகிழ்ந்து வருமா?' என்பது _______
(அ) விளித்தொடர்
(ஆ) எழுவாய்த் தொடர்
(இ) வினையெச்சத்தொடர்
(ஈ) பெயரெச்சத் தொடர்
6. திருக்குறளில் அறத்துப்பாலில் _______ அதிகாரங்கள் உள்ளன.
(அ) 70
(ஆ) 38
(இ) 25
(ஈ) 133
7. நன்மொழி என்பது _______
(அ) பண்புத் தொகை
(ஆ) உவமைத் தொகை
(இ) அன்மொழித் தொகை
(ஈ) உம்மைத் தொகை
8. "ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்று கூறியவர்:
(அ) மு.கு.ஜகந்நாதர்
(ஆ) தொல்காப்பியர்
(இ) மணவை முஸ்தபா
(ஈ) இரவீந்திரநாத் தாகூர்
9. பரிபாடல் அடியில் விசும்பில், இசையில் ஆகிய சொற்கள் குறிப்பிடுவது?
(அ) வானத்தையும் பாட்டையும்
(ஆ) வான்வெளியில், பேரொலியில்
(இ) வானத்தில், பூமியையும்
(ஈ) வானத்தையும் பேரொலியையும்
10. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது:
(அ) இடவழுவமைதி
(ஆ) பால் வழுவமைதி
(இ) திணை வழுவமைதி
(ஈ) கால வழுவமைதி
11. "காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்" — இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது:
(அ) இலையும் சருகும்
(ஆ) தோகையும் சண்டும்
(இ) தாளும் ஓலையும்
(ஈ) சருகும் சண்டும்
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக:
"தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடு உயர்வு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்"
12. இப்பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க:
(அ) பரிபாடல்
(ஆ) கம்பராமாயணம்
(இ) பெரியபுராணம்
(ஈ) சிலப்பதிகாரம்
13. பாடலின் ஆசிரியரைத் தேர்க:
(அ) சேக்கிழார்
(ஆ) கீரந்தையார்
(இ) கம்பர்
(ஈ) இளங்கோவடிகள்
14. 'தண்பெயல்' என்ற சொல்லின் பொருளைத் தேர்க:
(அ) தன்னுடைய
(ஆ) வெள்ளத்தில் மூழ்கி
(இ) குளிர்ந்த மழை
(ஈ) செறிந்து திரண்டு
15. அடி எதுகைச் சொற்களைத் தேர்க:
(அ) மீண்டும் - ஈண்டி
(ஆ) உள்ளுறை - வெள்ளம்
(இ) ஊழியும் - ஊழியும்
(ஈ) உள்முறை - உள்ளீடு
பகுதி - II
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
II. எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (21-ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்.) (4 × 2 = 8)
16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
(அ) உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார் தொல்காப்பியர்.
(ஆ) 'நாடும் மொழியும் நமது இரு கண்கள்' என்கிறார் மகாகவி பாரதியார்.
17. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
18. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கூறுகிறது?
19. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
20. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
21. 'தரும்' என முடியும் 'ஆள்வினை உடைமை' என்ற அதிகாரத்தில் உள்ள திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
III. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. பிழைகளைத் திருத்தி எழுதுக:
"தேணிலே ஊறிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதமம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே"
23. பகுபத உறுப்பிலக்கணம் தருக: உரைத்த
24. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க:
(அ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
(ஆ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
25. 'பலகை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
26. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
(அ) சிலை - சீலை |
(ஆ) சிறு - சீறு
27. "வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்" — இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
28. படிப்போம்; பயன்படுத்துவோம் (கலைச்சொற்கள் தருக):
(அ) Discussion -
(ஆ) Translation -
பகுதி - III
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
IV. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
30. இன்மையிலும் விருந்தோம்பல் குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்திகளை எழுதுக.
31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகிறேன். இவ்வாறு மழைப்பொழிவைத் தருகிறேன். இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மைதானே! இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கு மிகுதியாக இருக்கிறேன். இந்தியாவிற்கு தேவையான எழுபது விழுக்காடு மழையினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கிறேன்."
(அ) இந்தியாவின் முதுகெலும்பு எது?
(ஆ) வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம் எது?
(இ) இந்தியாவிற்குத் தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 34க்கு கட்டாயமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
32. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
33. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக:
(அ) 'விருந்தினனாக' எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடல்.
(அல்லது)
(ஆ) 'மாற்றம்' எனத் தொடங்கி 'அட்சய பாத்திரம்' என முடியும் 'காலக்கணிதம்' பாடல்.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
VI. எவையேனும் இரண்டு வினாக்களுக்குச் சுருக்கமாக விடையளி. (2 × 3 = 6)
35. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது. இவை அனைத்தையும் யாம் அறிவோம்.' — இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
36. "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு" — இக்குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
37. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பகுதி - IV
மதிப்பெண்கள்: 25
VII. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 × 5 = 25)
38. (அ) ஆள்வினை உடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
(ஆ)
"மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலை பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரைநகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே"
— கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க.
39. (அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
(ஆ) மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (சிறுமி ஒருத்தி கையில் உணவுக் கிண்ணத்துடன் பசியோடு வரும் நாய் குட்டிக்கு உணவளிக்கும் காட்சி)
41. விருதுநகர் மாவட்டம், இலட்சுமி நகர், கம்பர் தெருவில் உள்ள எண் 25 இல் குடியிருக்கும் கண்ணனின் மகன் பூங்குழலி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறான். அவர் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் தம்மைப் பூங்குழலியாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.
42. (அ) மொழிபெயர்க்க:
"Translation is an art in itself. No one can deny that. A translation should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e., both the target language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages."
(அல்லது)
(ஆ) புயலின்போது நீங்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எழுதுக.
பகுதி - V
மதிப்பெண்கள்: 24
VIII. அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. (அ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
(அல்லது)
(ஆ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
44. (அ) 'பிரும்மம்' கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
(அல்லது)
(ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விளக்குக.
45. (அ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக:
பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த நூலுக்கான மதிப்புரை எழுதுக. (குறிப்புகள்: நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்)
(அல்லது)
(ஆ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.