10th Tamil Quarterly Exam 2026 - Trichy District Question Paper


10th Tamil Quarterly Exam 2026 - Trichy District Question Paper
திருச்சி மாவட்டம் 043

காலாண்டு பொதுத்தேர்வு - 2026

பத்தாம் வகுப்பு (X) — தமிழ்
நேரம் : 3.00 மணி மதிப்பெண்கள் : 100
பகுதி - I மதிப்பெண் : 15
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: (15 × 1 = 15)
1. 'தேர்ப்பாகன்' — இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.
அ) வினைத்தொகை
ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை
இ) பண்புத்தொகை
ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது:
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
3. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
4. 'மகிழுந்து வருமா?' என்பது —
அ) எழுவாய்த்தொடர்
ஆ) விளித்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) பெயரெச்சத்தொடர்
5. காசிக்காண்டம் என்பது —
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
6. இரவீந்திரநாத் தாகூர் _______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை _______ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம்
ஆ) வங்காள, ஆங்கிலம்
இ) வங்காள, தெலுங்கு
ஈ) தெலுங்கு, ஆங்கில
7. 'ஓரெழுத்தில் சோலை - இரண்டெழுத்தில் வனம்' — என்ற புதிருக்கான விடையைத் தேர்க:
அ) வீடு
ஆ) தோடு
இ) நாடு
ஈ) காடு
8. 'கண்ணன் வந்தான்' — இத்தொடர்:
அ) தொடர்மொழி
ஆ) தனிமொழி
இ) பொதுமொழி
ஈ) விளித்தொடர்
9. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _______ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _______
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
10. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
அ) யாம்
ஆ) நீவிர்
இ) அவர்
ஈ) நாம்
11. "நாற்றிசையும் செல்லாத நாடில்லை" / "ஐந்துசால்பு ஊன்றிய தூண்" — இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க:
அ) நான்கு, ஐந்து (ச, ரு)
ஆ) மூன்று, நான்கு (ங, ச)
இ) ஐந்து, ஏழு (ரு, எ)
ஈ) நான்கு, ஆறு (ச, சா)
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளி:
"செம்பொ னடிச்சிறு கிண்கிணியொடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்"
12. இப்பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க:
அ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
ஆ) திருவிளையாடற் புராணம்
இ) காலக்கணிதம்
ஈ) காசிக்காண்டம்
13. பாடலின் ஆசிரியரைத் தேர்க:
அ) கண்ணதாசன்
ஆ) அதிவீரராம பாண்டியர்
இ) குமரகுருபரர்
ஈ) பரஞ்சோதி முனிவர்
14. 'பண்டி' என்ற சொல்லின் பொருள் :
அ) தலை
ஆ) வயிறு
இ) காது
ஈ) நெற்றி
15. 'ஆடுக' — இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க:
அ) வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) வேற்றுமைத்தொகை
ஈ) வியங்கோள் வினைமுற்று
பகுதி - II மதிப்பெண் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளி. (வினா எண் 21 - கட்டாய வினா) (4 × 2 = 8)
16. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும்:
அ) காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது கிண்கிணி.
ஆ) நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.
18. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
19. "மன்னுஞ் சிலம்பே ! மணிமே கலைவடிவே! / முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" — இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
20. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
21. 'கண்' என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
குறிப்பு : எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி. (5 × 2 = 10)
22. பிழைகளைத் திருத்தி எழுதுக:
"தேணிலே ஊரிய செந்தமிழின் சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே"
23. பழமொழிகளை நிறைவு செய்க:
அ) உப்பில்லாப் _______   |   ஆ) உப்பிட்டவரை _______
24. பகுபத உறுப்பிலக்கணம் தருக: கிளர்ந்த
25. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது; 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
26. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் — இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
27. கலைச்சொற்கள் தருக:   அ) House Warming    ஆ) Human Resource
[குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா — விடுபட்ட எழுத்துகளை நிரப்புக:
அ) இ__கு (பறவையிடம் இருப்பது)  |  ஆ) ப__கு (நீரில் செல்வது)]
28. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) சிறு - சீறு   |   ஆ) மடு - மாடு
பகுதி - III மதிப்பெண் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
30. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"விருந்தோம்பல் பற்றி தமிழ் இலக்கியங்கள் நிறையவே வலியுறுத்துகின்றன. இவற்றின் மூலம் விருந்தோம்பல் தமிழரின் தனித்த பண்பாக இருப்பது உணர்த்தப்படுகிறது. விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்."
அ) விருந்தினர் என்பவர் யார்?
ஆ) தமிழரின் தனித்த பண்பாக இருப்பது எது?
இ) 'விருந்தே புதுமை' என்று கூறியவர் யார்?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (வினா எண் 34 - கட்டாய வினா) (2 × 3 = 6)
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) 'மாற்றம்' எனத் தொடங்கும் காலக்கணிதம் பாடல்.
(அல்லது)
ஆ) 'விருந்தினனாக' — எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடல்.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. (2 × 3 = 6)
35. "வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துக்களை எழுத வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்." — அடிக்கோடிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.
36. "நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் / நச்சு மரம்பழுத் தற்று" — இக்குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக.
37. பின்வரும் குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க:
"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு"
பகுதி - IV மதிப்பெண் : 25
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 × 5 = 25)
38. அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
(அல்லது)
ஆ) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
39. அ) மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (சிறுமி ஒருத்தி கையில் உணவுக் கிண்ணத்துடன் பசியோடு வரும் நாய் குட்டிக்கு உணவளிக்கும் காட்சி)
41. திருச்சி மாவட்டம், அண்ணா நகர், பாரதியார் தெருவிலுள்ள 27 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் தமிழரசனின் மகள் இலக்கியா, அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கைப்பந்து விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர், தம்மை இலக்கியாவாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.
42. அ) சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புயல் பற்றிய அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்கள் ஐந்தினை எழுதுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"Translation is an art in itself. No one can do that easily. A Translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the target language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages."
[செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா — உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர். உண்பவரின் மனமறிந்து உணவு வகைகளைப் பரிமாறுவர்." — வினாக்கள்: i) தமிழர் பண்பாட்டில் எதற்கு தனித்த இடமுண்டு? ii) யாருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது? iii) நம் மக்கள் வாழை இலையின் எந்தப் பயன்களை அறிந்திருந்தனர்? iv) உண்பவரின் எந்த நிலையை அறிந்து உணவு பரிமாறுவர்? v) இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினைத் தருக.]
பகுதி - V மதிப்பெண்கள் : 24
VIII. அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) நாட்டுவளமும், சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
44. அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
(அல்லது)
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45. அ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி, 'சாலைப் பாதுகாப்பு' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக:
(குறிப்புகள்: முன்னுரை - சாலை விதிகள் - ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் - விபத்துகளுக்கான காரணங்கள் - தேவையான விழிப்புணர்வு - நம் கடமை - முடிவுரை)

10th Std Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Std Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

10th Std Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment