திருப்பத்தூர் மாவட்டம் | 10 - STD
காலாண்டுத் தேர்வு - 2026
தமிழ்
நேரம்: 3:00 மணி
மதிப்பெண்கள்: 100
பகுதி-I
மதிப்பெண்கள்: 15
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (15 × 1 = 15)
1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
2. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' — தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே:
அ) பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய
ஈ) பாடல்; கேட்டவர்
3. திருக்குறளின் அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஒன்பது
4. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில் பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
5. 'தா' என்ற வேர்ச்சொல்லின் விளித்தொடர் எது?
அ) தந்த அரசர்
ஆ) அரசே தருக!
இ) தந்து சென்றார்
ஈ) அரசர் தந்தார்
6. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க:
அ) கொண்டல் - 1. மேற்கு | ஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்கு | ஈ) தென்றல் - 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
7. காசிக்காண்டம் என்பது _______
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
8. "மாசற விசித்த வார்புறு வள்பின்" — இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) பரிபாடல்
ஆ) புறநானூறு
இ) திருவிளையாடற் புராணம்
ஈ) நற்றிணை
9. 'சிறிய வயதில் இந்த மரத்தில் நாம் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்' — இத்தொடர் எவ்வகை வழுவமைதி?
அ) இட வழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி
10. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது:
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
11. "இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்..." — இத்தொடருக்குப் பொருத்தமான தலைப்பைத் தேர்க:
அ) உயிர்ப்பின் ஏக்கம்
ஆ) வனத்தின் நடனம்
இ) நீரின் சிலிர்ப்பு
ஈ) மொட்டின் வருகை
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக:
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
12. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடிமோனையைத் தேர்க:
அ) கருவளர் - உருஅறி
ஆ) விசும்பில் - கருவளர்
இ) உருஅறி - உந்துவளி
ஈ) ஊழியும் - ஊழியும்
13. 'வாரா' — இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு:
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) அடுக்குத்தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
14. 'ஊழ்' என்பதன் பொருள் தருக:
அ) வானம்
ஆ) முறை
இ) யுகம்
ஈ) குளிர்ந்த மழை
15. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
அ) மேகம்
ஆ) பரிபாடல்
இ) காலக்கணிதம்
ஈ) நறுந்தொகை
பகுதி-II
மதிப்பெண்கள்: 18
பிரிவு 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். [வினா எண்: 21 கட்டாயமாக விடையளிக்கவும்] (4 × 2 = 8)
16. விடைக்கேற்ற வினாக்கள் அமைக்கவும்:
அ) பிள்ளைத்தமிழில் பத்துப் பருவங்கள் உள்ளன.
ஆ) 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை 1942ஆம் ஆண்டு ராகுல் சாங்கிருத்யாயன் இந்தி மொழியில் எழுதினார்.
17. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
18. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
19. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.
20. வடமொழிக் கதைகளைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்ட காப்பியங்கள் யாவை?
21. “பல்லார்” எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
23. தொழிற்பெயர்களின் பொருளுக்கு ஏற்ப தொடர்களை முழுமை செய்க:
அ) காற்றின் மெல்லிய _______ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான _______ பூக்களை மாலையாக்குகிறது. (தொடுதல், தொடுத்தல்)
ஆ) காட்டு விலங்குகளைத் _______ தடை செய்யப்பட்டுள்ளது; செய்த தவறுகளைத் _______ திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)
24. 'தண்ணீர் குடி', 'தயிர்க்குடம்' ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
25. பகுபத உறுப்பிலக்கணம் தருக: கிளர்ந்த
26. கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) கொடு - கோடு |
ஆ) மலை - மாலை
27. படிப்போம்; பயன்படுத்துவோம் (கலைச்சொற்கள் தருக):
அ) Wealth |
ஆ) Consonant
28. எண்ணுப்பெயர்களைக் கண்டுபிடித்துத் தமிழ் எண்களில் எழுதுக:
அ) எறும்புந்தன் கையால் எண்சாண்.
ஆ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
பகுதி III
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள்: அத்தி மலர், ஆல மலர், பலா மலர். பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை... இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்."
அ) கரடிகள் மரத்தின் மீதேறி பறித்து உண்ணும் பூக்கள் எவை?
ஆ) மலரில் சில எளியவை ஆகக் காரணங்கள் யாவை?
இ) கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?
31. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். [வினா எண்: 34 கட்டாயமாக விடையளிக்கவும்] (2 × 3 = 6)
32. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
33. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "புண்ணியப் புலவீர்..." — எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம் பாடல்.
(அல்லது)
ஆ) "தென்னன் மகளே..." எனத் தொடங்கும் அன்னை மொழியே பாடல்.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 × 3 = 6)
35. "வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்." — அடிக்கோடிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.
36. "நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் / நச்சு மரம்பழுத் தற்று" — இக்குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
37. பின்வரும் குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க:
"கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு"
பகுதி IV
மதிப்பெண்கள்: 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 × 5 = 25)
38. அ) நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள "பெரியாரைத் துணைக்கோடல்" என்னும் அதிகாரத்தில் உள்ள கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
39. அ) மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (சிறுமி ஒருத்தி கையில் உணவுக் கிண்ணத்துடன் பசியோடு வரும் நாய் குட்டிக்கு உணவளிக்கும் காட்சி)
41. மதுரை மாவட்டம், மருதம் நகர், நக்கீரர் தெருவிலுள்ள 18ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் சண்முகத்தின் மகன் அன்பரசன், அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர், தம்மை அன்பரசனாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
42. அ) தமிழில் மொழிபெயர்க்கவும்:
"Translation is an art in itself. No one can do that easily. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the target language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages."
(அல்லது)
ஆ) புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
பகுதி V
மதிப்பெண்கள்: 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
44. அ) 'புதிய நம்பிக்கை' கதை வழியாக நீங்கள் அறியும் கருத்துகளை விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
45. அ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
(குறிப்பு: நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்)
(அல்லது)
ஆ) 'மொழிபெயர்ப்புக் கல்வி' என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:
(குறிப்பு: முன்னுரை - மொழிபெயர்ப்பு நூல்கள் - எட்டுத்திக்கும் கலைச்செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் - மொழிபெயர்ப்பும் கல்வியே - மொழிபெயர்ப்பின் பயன்கள் - முடிவுரை)