10th Tamil Quarterly Exam 2026 - Thoothukudi District Question Papers


10th Tamil Quarterly Exam 2026 - Thoothukudi District Question Papers
தூத்துக்குடி மாவட்டம் Reg. No.: ____________

காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026

வகுப்பு-10 — தமிழ்
காலம் : 3.00 மணி மதிப்பெண்கள்: 100
பகுதி - அ மதிப்பெண்கள்: 15
உரிய விடையைக் குறியீட்டுடன் தேர்ந்தெடுத்து எழுதுக. (15 × 1 = 15)
1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
2. பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் ஊரின் நடுவில் _______ பழுத்தது போன்றதாகும்.
அ) நச்சு மரம்
ஆ) பலாமரம்
இ) வாழைமரம்
ஈ) பாக்குமரம்
3. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
4. பொதுவாழ்வில் _______ கூடாது; _______இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. — தொழிற்பெயரின் பொருளைப் புரிந்து கொண்டு தொடரினை முழுமை செய்க.
அ) அன்பு காட்டல், படித்தல்
ஆ) நடித்தல், படித்தல்
இ) நடித்தல், நடிப்பு
ஈ) அன்பு காட்டல், விளையாடுதல்
5. செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் சூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3: இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கிறேன்.
அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
6. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிப்பது...
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
7. வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய கடவுள்:
அ) திருமால்
ஆ) முருகன்
இ) பெருமாள்
ஈ) சிவன்
8. 'குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்...' — தொடரினைப் படித்து ஏற்ற தலைப்பினை எடுத்தெழுதுக.
அ) மொட்டின் வருகை
ஆ) மிதக்கும் வாசம்
இ) உயிர்ப்பின் ஏக்கம்
ஈ) வனத்தின் நடனம்
9. 'மகிழுந்து வருமா?' என்பது _______
அ) விளித்தொடர்
ஆ) எழுவாய்த்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) பெயரெச்சத் தொடர்
10. இரவீந்திரநாத் தாகூர் _______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை _______ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம்
ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு
ஈ) தெலுங்கு, ஆங்கில
11. 'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி' — இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.
அ) ஆயிரம், ௧000
ஆ) எட்டு, அ
இ) நான்கு, ௪
ஈ) ஐந்து, ௫
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடைதருக:
"ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும் நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்த லாலே ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா"
12. 'நீபவனம்' என்பதன் பொருள்:
அ) நீண்டவனம்
ஆ) கடம்பவனம்
இ) பாலைவனம்
ஈ) பூஞ்சோலை
13. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) பரஞ்சோதிமுனிவர்
ஆ) குலசேகர ஆழ்வார்
இ) செய்குதம்பிப் பாவலர்
ஈ) இளங்கோவடிகள்
14. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) கம்பராமாயணம்
ஆ) திருவிளையாடற்புராணம்
இ) நீதிவெண்பா
ஈ) சிலப்பதிகாரம்
15. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைத் தேர்க:
அ) ஓங்கு, பணைசூழ்
ஆ) நீங்குவம், அல்லேம்
இ) ஓங்கு, தீங்கு
ஈ) ஆங்கு, இடத்தில்
பகுதி - II மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (21வது வினா கட்டாய வினா) (4 × 2 = 8)
16. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
17. விடைக்கேற்ற வினா அமைக்க:
அ) தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது.
ஆ) தேவநேயப் பாவாணர் உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவிய தலைவராக இருந்தார்.
18. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
19. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
20. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
21. 'பல்லார்' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (5 × 2 = 10)
22. கீழ்க்காணும் பாடலின் பிழைகளைத் திருத்தி எழுதுக:
"தேனிலே ஊரிய செந்தமிழின் — சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் — நிதம்
ஓதி யுனாந்தின் புருவோமே"
23. கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) தான் - தாம்   |   ஆ) சிறு - சீறு
24. பழமொழிகளை நிறைவு செய்க:
அ) அளவுக்கு _______   |   ஆ) உப்பிட்டவரை _______
25. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களை எழுதுக:
அ) புல்   |   ஆ) பழம்
26. படிப்போம்; பயன்படுத்துவோம் (கலைச்சொற்கள் தருக):   அ) Multimedia    ஆ) Tornado
27. பகுபத உறுப்பிலக்கணம் தருக: அமர்ந்தான்
28. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:
அ) இருக்கும்போது உருவமில்லை — இல்லாமல் உயிரினம் இல்லை
ஆ) பழமைக்கு எதிரானது — எழுதுகோலில் பயன்படும்
பகுதி - III மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (2 × 3 = 6)
29. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
30. பல்துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். பழங்காலத்தில் கடல் கடந்த பயணங்கள் அனைத்தும் காற்றால் இயக்கப்பட்ட பாய்மரக்கப்பல்களால் தான் நிகழ்ந்தன. காற்றின் ஆற்றலை, 'வளிமிகின் வலி இல்லை' என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார். இது போன்றே மதுரை இளநாகனார் கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்."
அ) உலகம் குறித்துத் தொல்காப்பியர் கூறுவது யாது?
ஆ) கடல் கடந்த பயணங்கள் பழங்காலத்தில் எவ்வாறு நிகழ்ந்தன?
இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (வினா எண் 34க்கு கட்டாயமாக விடையளிக்கவும்) (2 × 3 = 6)
32. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
33. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) 'புண்ணியப்...' எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணப் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) 'தென்னன்...' எனத் தொடங்கி '...வாழ்த்துவமே' என முடியும் அன்னை மொழியே பாடலை எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (2 × 3 = 6)
35. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
36. "மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்." — பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
37. "வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் / கோலொடு நின்றான் இரவு" — இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
பகுதி - IV மதிப்பெண்கள் : 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. (5 × 5 = 25)
38. அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
39. அ) மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குப் புகார்க்கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (மனிதர் ஒருவர் முகக்கவசம் மற்றும் முதுகில் செடியுடன் கூடிய பிராணவாயு உருளையைச் சுமந்து நிற்கும் காட்சி)
41. மதுமதி தன் தந்தை குமரகுருபரனிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினாள். அவரும் மதுமதியிடம் ₹500 ரூபாயும், '25, முத்தமிழ்நகர், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்' என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற மதுமதியாகத் தேர்வர் தன்னைக் கருதி கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) 'பள்ளியில் நான், வீட்டில் நான்' என்னும் தலைப்புகளில் நீங்கள் பள்ளியிலும் வீட்டிலும் நடந்து கொள்ளும் முறைகளைப் பட்டியலிடுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"Translation is an art in itself. No one can do that easily. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the target language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages."
பகுதி - V மதிப்பெண்கள் : 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொழி - பிற மொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துகள் - பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை — மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
ஆ) 'புயலிலே ஒரு தோணி' கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணிபடும் பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
45. அ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
(குறிப்புகள்: நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு - நூல் ஆசிரியர்)
(அல்லது)
ஆ) முன்னுரை - உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் - உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் - சுழன்றும் ஏர்பின்னது உலகம் - முடிவுரை — மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'உழவுத்தொழில்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

நூலக உறுப்பினர் படிவம்
மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய / கிளை / ஊர்ப்புற நூலகம்
உறுப்பினர் சேர்க்கை அட்டை
அட்டை எண் : ____________ உறுப்பினர் எண்: ____________
1. பெயர்: __________________________________________________
2. தந்தை பெயர்: __________________________________________________
3. பிறந்த தேதி: __________________________________________________
4. வயது: __________________________________________________
5. படிப்பு: __________________________________________________
6. தொலைபேசி எண்: __________________________________________________
7. அஞ்சல் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்): __________________________________________________
  __________________________________________________

நான் ____________ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. ____________, சந்தா தொகை ரூ. ____________ ஆக மொத்தம் ரூ. ____________ ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம் : ____________
நாள் : ____________
தங்கள் உண்மையுள்ள,

____________________
(உறுப்பினர் கையொப்பம்)

பிணைப்பாளர் உறுதிமொழி

திரு / திருமதி / செல்வி / செல்வன் ________________________ அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்றளிக்கிறேன்.

அலுவலக முத்திரை
பிணைப்பாளர் கையொப்பம் : ____________________
(பதவி மற்றும் அலுவலகம்) : ____________________
(மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி / மாநகராட்சி / ஒன்றிய / பேரூராட்சி உறுப்பினர்கள்)

10th Std Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Std Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

10th Std Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment