Tsi10T | தென்காசி மாவட்டம்
காலாண்டுப் பொதுத் தேர்வு, செப்டம்பர் - 2026
வகுப்பு 10 — தமிழ்
காலம்: 3.00 மணி
மதிப்பெண்கள்: 100
குறிப்பு: i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - I
மதிப்பெண்கள்: 15
உரிய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் எழுதுக. (15 × 1 = 15)
1. "கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது" — தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
அ) பாடிய : கேட்டவர்
ஆ) பாடல் : பாடிய
இ) கேட்டவர் : பாடிய
ஈ) பாடல் : கேட்டவர்
2. "சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் / என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்று முழங்கியவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) ச. சச்சிதானந்தன்
இ) பாவாணர்
ஈ) கா. அப்பாத்துரையார்
3. கட்டுரையைப் படித்து ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார் — இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்
அ) ஐ, ஆல்
ஆ) ஆல், கு
இ) ஐ, கு
ஈ) கு, இன்
4. நன்மொழி, சிவப்புச் சட்டை பேசினார் — இச்சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு முறையே
அ) பண்புத்தொகை, வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை, அன்மொழித்தொகை
இ) வினைத்தொகை, உவமைத்தொகை
ஈ) வினைத்தொகை, பண்புத்தொகை
5. "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே / வேளாண்மை என்னும் செருக்கு" — இக்குறட்பாவில் இடம்பெறும் அடி எதுகைச் சொற்களைத் தேர்க.
அ) தாளாண்மை - தகைமைக்கண்
ஆ) தாளாண்மை - வேளாண்மை
இ) தகைமைக்கண் - தங்கிற்றே
ஈ) தாளாண்மை - தங்கிற்றே
6. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க:
அ) வளிமிகின் வலி இல்லை — 1) கண்ணதாசன்
ஆ) கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கும் — 2) இளங்கோவடிகள்
இ) வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் — 3) மதுரை இளநாகனார்
ஈ) நதியில் விளையாடி கொடியில் தலை சீவி — 4) ஐயூர் முடவனார்
அ) அ-4, ஆ-3, இ-1, ஈ-2
ஆ) அ-3, ஆ-1, இ-4, ஈ-2
இ) அ-4, ஆ-3, இ-2, ஈ-1
ஈ) அ-3, ஆ-4, இ-1, ஈ-2
7. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ — இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை:
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
8. காசிக்காண்டம் என்பது
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
9. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _______ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _______
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
10. இரவீந்திரநாத் தாகூர் _______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை _______ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காள
ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு
ஈ) தெலுங்கு, ஆங்கில
11. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது —
அ) இட வழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக:
"விதிமுறை கதலி பூகம் கவரிவால் விதானம் தீபம்
புதியதோர் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல்
கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேற் கற்றோர் சூழ
மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி"
12. இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்:
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) திருவிளையாடற் புராணம்
ஈ) தேம்பாவணி
13. 'கதலி' என்பதன் பொருள்:
அ) கமுகு
ஆ) வாழை
இ) கொடி
ஈ) இருக்கை
14. பொற் சேக்கை — பிரித்து எழுதுக:
அ) பொ + சேக்கை
ஆ) பொர் + சேக்கை
இ) பொன் + சேக்கை
ஈ) பொற்சேர் + கை
15. அடி எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக:
அ) விதிமுறை, விதானம்
ஆ) கதிர்மணி, கற்றோர்
இ) கதிர்மணி, மதிபுனை
ஈ) புதியதோர், புனைந்த
பகுதி - II
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி. 21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (4 × 2 = 8)
16. விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) உலகத்திலே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.
ஆ) முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.
17. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
18. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
19. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்யவேண்டியது யாது?
20. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
21. 'தரும்' என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. (5 × 2 = 10)
22. 'பலகை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
23. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக:
அ) கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
ஆ) ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
24. கொடுக்கப்பட்ட இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) சிறு - சீறு |
ஆ) இயற்கை - செயற்கை
25. கலைச்சொற்கள் தருக: அ) Hospitality ஆ) Human Resource
26. "வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்" — இத்தொடர் கால வழுவமைதி ஆனது எவ்வாறு?
27. பழமொழிகளை நிறைவு செய்க:
அ) ஒரு பானை _______ |
ஆ) உப்பிட்டவரை _______
28. பகுபத உறுப்பிலக்கணம் தருக: 'கிளர்ந்த'
பகுதி - III
மதிப்பெண்கள்: 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க. (2 × 3 = 6)
29. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
30. இன்மையிலும் விருந்தோம்பல் குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகிறேன். இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகிறேன். இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மைதானே! இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன். இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்."
அ) இந்தியாவின் முதுகெலும்பு எது?
ஆ) வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலத்தைக் குறிப்பிடுக.
இ) இந்தியாவிற்குத் தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க. 34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (2 × 3 = 6)
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
33. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "மாற்றம் எனது..." எனத் தொடங்கும் காலக்கணிதம் பாடல்.
(அல்லது)
ஆ) "புண்ணியப் புலவீர்..." எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணப் பாடல்.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க. (2 × 3 = 6)
35. படிக் காட்டினார், கேட்டுப் பாடினர், கேட்ட பாடல், சிறுவினாக்களைக் கேட்டார், எழுதுபவருக்குப் பரிசு — இச்சொற்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.
36. "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் / கோலொடு நின்றான் இரவு" — இக்குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
37. பின்வரும் குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக:
"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"
பகுதி - IV
மதிப்பெண்கள்: 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. (5 × 5 = 25)
38. அ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக:
"கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
புவியில் யானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!" — கண்ணதாசன்
(அல்லது)
ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
39. அ) மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்றுக் 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (மனிதர் ஒருவர் முகக்கவசம் மற்றும் முதுகில் பிராணவாயு உருளையுடன் நிற்கும் காட்சி)
41. வீட்டு எண். 63, தென்றல்நகர், தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் எழிலரசனின் மகள் சுடர்விழிக்காக கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
42. அ) வானொலி அறிவிப்பைக் கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக:
1. புயலின்போது வெளியே செல்ல மாட்டேன்.
2. ________________________________________
3. ________________________________________
4. ________________________________________
5. ________________________________________
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers' fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant."
பகுதி - V
மதிப்பெண்கள்: 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்க. (3 × 8 = 24)
43. அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
44. அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
(அல்லது)
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று தருக:
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
(குறிப்புகள்: நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்)
(அல்லது)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று தருக:
(குறிப்புகள்: முன்னுரை - விசும்பின் துளியும் பசும்புல் தலையும் - காற்று மாசு - பசுமையைக் காப்போம் - மரம் நமக்கு வரம் - மழைநீர் உயிர்நீர் - முடிவுரை)