SVG | சிவகங்கை மாவட்டம்
Reg. No.: ____________
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026
வகுப்பு-10 — தமிழ்
காலம் : 3.00 மணி
மதிப்பெண்கள்: 100
பகுதி - I
மதிப்பெண்கள்: 15
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (15 × 1 = 15)
1. 'எந்தமிழ்நா' என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் + நா
2. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது .....
அ) இடவழுவமைதி
ஆ) பால்வழுவமைதி
இ) திணைவழுவமைதி
ஈ) காலவழுவமைதி
3. வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது:
அ) குலைப்பெயர்வகை
ஆ) மணிப்பெயர்வகை
இ) கிளைப்பெயர்வகை
ஈ) இனப்பெயர்வகை
4. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது:
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவமஉருபு
ஈ) உரிச்சொல்
5. 'வடித்த கஞ்சி' என்பது ....... தொடர்வகை.
அ) அடுக்குத்தொடர்
ஆ) பெயரெச்சத்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) எழுவாய்த்தொடர்
6. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது:
அ) சுட்டி
ஆ) கிண்கிணி
இ) குழை
ஈ) சூழி
7. காசிக்காண்டம் என்பது ....
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசிநகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசிநகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசிநகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
8. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் _______ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் _______
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
9. இரவீந்திரநாத் தாகூர் _______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை _______ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம்
ஆ) வங்காள, ஆங்கில
இ) வங்காள, தெலுங்கு
ஈ) தெலுங்கு, ஆங்கில
10. ஒரு விரலைக் காட்டிச் 'சிறியதோ? பெரியதோ?' என்று கேட்டல்:
அ) வினாவழு
ஆ) விடைவழு
இ) மரபு வழு
ஈ) திணைவழு
11. நன்மொழி என்பது .......
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத் தொகை
பாடலைப் படித்து விடை தருக:
"பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட"
12. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் .....
அ) பரிபாடல்
ஆ) மலைபடுகடாம்
இ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
ஈ) காசிக்காண்டம்
13. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகை சொற்கள் யாவை?
அ) பைம்பொ, பட்ட
ஆ) பைம்பொ, கம்பி
இ) கம்பி, கட்டிய
ஈ) கம்பி, விதம்பொதி
14. குண்டலமும், குழைகாதும் — இலக்கணக்குறிப்பு தருக.
அ) எண்ணும்மை
ஆ) உம்மைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) அடுக்குத்தொடர்
15. இப்பாடலின் ஆசிரியர்....
அ) கீரந்தையார்
ஆ) குமரகுருபரர்
இ) நப்பூதனார்
ஈ) பாவாணர்
பகுதி - II
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. (வினா எண் 21-வது கட்டாயமாக விடையளிக்கவும்) (4 × 2 = 8)
16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி.
ஆ) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்.
17. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
18. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
19. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
20. "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" — இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
21. 'பல்லார்....' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களை எழுதுக:
அ) ஆடு |
ஆ) பழம்
23. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க:
அ) விதி - வீதி |
ஆ) வளி - வாளி
24. கலைச்சொல் தருக: அ) Discussion ஆ) Culture
25. உணவு குறித்த பழமொழிகள் இரண்டினைக் குறிப்பிடுக.
26. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க: (சுட்டல், சுடுதல்)
காட்டு விலங்குகளைச் _______ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் _______ திருந்த உதவுகிறது.
27. வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக: வெண்டைக்காய் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
28. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:
அ) இருக்கும்போது உருவமில்லை — இல்லாமல் உயிரினம் இல்லை
ஆ) பழமைக்கு எதிரானது — எழுதுகோலில் பயன்படும்
பகுதி - III
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
30. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான் 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்."
அ) விருந்தினர் என்போர் யாவர்?
ஆ) 'விருந்தே புதுமை' என்று கூறியவர் யார்?
இ) இவ்வுரைப் பகுதிக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. (34ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்) (2 × 3 = 6)
32. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடும் நயத்தை விளக்குக.
33. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) 'விருந்தினனாக ஒருவன்' எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) 'புண்ணியப் புலவீர்' எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணம் பாடலை எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 × 3 = 6)
35. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பார்த்துப் பெருமையாகக் கூறினார். இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
36. பின்வரும் குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக:
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்"
37. உவமை அணியை விளக்குக.
பகுதி - IV
மதிப்பெண்கள் : 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. (5 × 5 = 25)
38. அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் விளக்குக.
(அல்லது)
ஆ) ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
39. அ) உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டிப் பொதுநூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (மரத்தின் ஓவியத்தைக் காட்சிப்படுத்தி வெட்டவெளியில் ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் காட்சி)
41. திண்டுக்கல் மாவட்டம், அழகாபுரி வட்டத்தைச் சேர்ந்த கதவு இலக்க எண் 46, கம்பர் தெருவைச் சேர்ந்த குமரன் மகள் இலக்கியா இளநிலை உதவியாளர் பணி வேண்டி விண்ணப்பிக்கிறார். தேர்வர் தன்னை இலக்கியாவாகப் பாவித்துத் தன்விவரப் பட்டியலை நிரப்புக.
42. அ) மொழிபெயர்க்க:
"Translation is an art in itself. No one can do that easily. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the target language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages."
(அல்லது)
ஆ) பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் நடந்துகொள்ளும் முறைகளைப் பட்டியலிடுக.
பகுதி - V
மதிப்பெண்கள் : 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
44. அ) "கற்கை நன்றே கற்கை நன்றே / பிச்சை புகினும் கற்கை நன்றே" என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
(அல்லது)
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டைக் 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி கொண்டு விளக்குக.
45. அ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக:
(குறிப்புகள்: முன்னுரை - தமிழகம் தந்த தவப்புதல்வர் - நாட்டுப்பற்று - மொழிப்பற்று - பொதுவாழ்வில் தூய்மை - எளிமை - மக்கள் பணியே மகத்தான பணி - முடிவுரை)