10th Tamil Quarterly Exam 2026 - Pudukottai District Question Papers


10th Tamil Quarterly Exam 2026 - Pudukottai District Question Papers

புதுக்கோட்டை மாவட்டம் தேர்வு எண்: ____________

காலாண்டுத் தேர்வு - 2026

பத்தாம் வகுப்பு — தமிழ்
காலம் : 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி - I மதிப்பெண்கள் : 15
I. குறிப்பு: அனைத்து வினாக்களுக்கும் விடைதருக. ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. (15 × 1 = 15)
1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது:
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
2. சேரமான் காதலி என்னும் புதினத்தை எழுதிய கவிஞர் பிறந்த ஊர் எது?
அ) சுந்தம்பட்டி
ஆ) சிறுகூடல்பட்டி
இ) கூமாபட்டி
ஈ) சிவந்தான்பட்டி
3. காசிக்காண்டம் என்பது _______
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
4. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும், பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும், பேரொலியையும்
5. காதில் அணியும் அணிகலனைக் குறிப்பது:
அ) சுட்டி
ஆ) கிண்கிணி
இ) குழை
ஈ) சூழி
6. 'மகிழுந்து வருமா?' என்பது _______
அ) விளித்தொடர்
ஆ) எழுவாய்த்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) பெயரெச்சத்தொடர்
7. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
8. ஊழியல் முப்பாலில் எந்தப் பகுப்பில் உட்பிரிவாக வருகிறது?
அ) அறத்துப்பால்
ஆ) பொருட்பால்
இ) இன்பத்துப்பால்
ஈ) துன்பத்துப்பால்
9. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
அ) யாம்
ஆ) அவர்
இ) நீவிர்
ஈ) நாம்
10. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது:
அ) திணை வழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) கால வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
11. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு _______ கலை என்று அழைக்கப்படுகிறது.
அ) திறன் கலை
ஆ) படைப்புக் கலை
இ) பயன் கலை
ஈ) உருவாக்க கலை
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக:
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
12. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) அதிவீரராம பாண்டியன்
ஆ) நப்பூதனார்
இ) கீரந்தையார்
ஈ) நல்லந்துவனார்
13. இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
அ) கலித்தொகை
ஆ) காசிக்காண்டம்
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
14. இப்பாடலில் உள்ள மோனைச் சொற்கள்:
அ) விசும்பில், ஊழி
ஆ) கரு வளர், இசையில்
இ) உரு அறிவாரா, உந்து வளி
ஈ) இசையில், ஊழியும்
15. 'விசும்பு' என்ற சொல்லின் பொருள்:
அ) வானம்
ஆ) காடு
இ) பூமி
ஈ) மழை
பகுதி - II மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
II. நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 21) (4 × 2 = 8)
16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) கிழக்கிலிருந்து காற்று வீசும் பொழுது கொண்டல் என அழைக்கப்படுகிறது.
ஆ) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.
17. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
18. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
19. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
20. "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" — இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?
21. "முயற்சி" — எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
III. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க:
அ) உப்பில்லாப் _______   |   ஆ) அளவுக்கு _______
23. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைத்து எழுதுக:
அ) இயற்கை - செயற்கை   |   ஆ) சிறு - சீறு
24. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க: (காற்று, புதுமை, காடு)
அ) பழமைக்கு எதிரானது — எழுதுகோலில் பயன்படும்
(அல்லது)
ஆ) ஓரெழுத்தில் சோலை — இரண்டெழுத்தில் வனம்
25. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க:
அ) கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
ஆ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
26. கலைச்சொற்கள் தருக:   அ) Multimedia    ஆ) Feast
27. 'பலகை' என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
28. பகுபத உறுப்பிலக்கணம் தருக: உரைத்த
பகுதி - III மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
IV. எவையேனும் இரண்டனுக்கு சுருக்கமாக விடையளிக்க. (2 × 3 = 6)
29. "புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது" — இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
30. பல்துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
31. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான் 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்."
அ) விருந்தினர் என்போர் யாவர்?
ஆ) விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?
இ) இவ்வுரைப் பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
V. இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும். (கட்டாய வினா 34) (2 × 3 = 6)
32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "புண்ணியப் புலவீர்..." எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணப் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) "விருந்தினனாக ஒருவன்..." எனத் தொடங்கும் காசிக்காண்டப் பாடலை எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
VI. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
35. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' — இவை அனைத்தையும் யாம் அறிவோம். இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
36. உவமையணியை எடுத்துக்காட்டுடன் விவரி.
37. "மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்." — பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
பகுதி - IV மதிப்பெண்கள் : 25
VII. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. (5 × 5 = 25)
38. அ) மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.
(அல்லது)
ஆ) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துக்களை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
39. அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) மாவட்ட அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (பூட்டப்பட்ட மனித முகங்களின் நடுவே ஒருவன் புத்தகத்தைத் திறந்து பூட்டைத் திறந்து படித்துச் சிரிக்கும் விழிப்புணர்வுக் காட்சி)
41. 89, குமரன் நகர், புதுக்கோட்டை 613610 என்ற முகவரியில் வசிக்கும் முருகன் என்பவரின் மகள் தமிழினி பத்தாம் வகுப்பு படித்தவர். அவர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். அதற்காகத் தன் தந்தையிடம் காப்புத் தொகை ரூபாய் நூறு மற்றும் சந்தா தொகை ரூபாய் ஐம்பதும் பெற்றுக் கொண்டு நூலகம் செல்கின்றார். (பிறந்த தேதி: 08-07-2005, அலைபேசி எண்: 7465236710). இந்நிலையைில் தேர்வர் தன்னைத் தமிழினியாகக் கருதி கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) மொழிபெயர்க்க:
"The golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start tweeting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flower's fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant."
(அல்லது)
ஆ) பள்ளியிலும், வீட்டிலும் நீ கடைபிடிக்கக்கூடிய நற்பண்புகளைப் பட்டியலிடுக.
பகுதி - V மதிப்பெண்கள் : 24
VIII. அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. (3 × 8 = 24)
43. அ) நாட்டு வளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
ஆ) 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
45. அ) கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று வரைக:
(குறிப்புகள்: முன்னுரை - சாலைப் பாதுகாப்பு, உயிர்ப்பாதுகாப்பு - சாலைவிதிகள் - ஊர்தி ஓட்டுநருக்கு நெறிகள் - விபத்துக்களைத் தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம் - முடிவுரை)
(அல்லது)
ஆ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

வினா எண் : 41
நூலக உறுப்பினர் படிவம்
மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய / கிளை / ஊர்ப்புற நூலகம்
உறுப்பினர் சேர்க்கை அட்டை
அட்டை எண் : ____________ உறுப்பினர் எண் : ____________
1. பெயர்: __________________________________________________
2. தந்தை பெயர்: __________________________________________________
3. பிறந்த நாள்: __________________________________________________
4. வயது: __________________________________________________
5. படிப்பு: __________________________________________________
6. தொலைபேசி / அலைபேசி எண்: __________________________________________________
7. முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்): __________________________________________________
  __________________________________________________

நான் ____________ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. ____________, சந்தா தொகை ரூ. ____________ ஆக மொத்தம் ரூ. ____________ பணமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம் : ____________
நாள் : ____________
தங்கள் உண்மையுள்ள,

____________________
(உறுப்பினர் கையொப்பம்)

பிணையாளர் சான்று

திரு / திருமதி / செல்வி / செல்வன் ________________________ அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்றளிக்கிறேன்.

அலுவலக முத்திரை
பிணையாளர் கையொப்பம் : ____________________
(பதவி மற்றும் அலுவலகம்) : ____________________
(மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி / மாநகராட்சி / ஒன்றிய / பேரூராட்சி உறுப்பினர்கள்)

10th Std Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Std Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

10th Std Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment