10th Tamil Quarterly Exam 2026 - Krishnagiri District Question Papers


10th Tamil Quarterly Exam 2026 - Krishnagiri District Question Papers
QSM | கிருஷ்ணகிரி மாவட்டம்

காலாண்டுத் தேர்வு - 2026

10 - வகுப்பு — தமிழ்
நேரம் : 3.15 மணி மதிப்பெண்கள் : 100
பகுதி - I மதிப்பெண்கள் : 15
I. அ) சரியான விடையைத் தேர்வு செய்க. (15 × 1 = 15)
1. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது....
அ) இடவழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி
2. காசிக்காண்டம் என்பது ...
அ) காசிநகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
3. ஒவ்வோர் ஆண்டும் விடுதலைத் திருநாள் ஆகஸ்டு மாதம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது என்பதைத் தமிழெண்ணில் தருக:
அ) உச
ஆ) கரு
இ) கசா
ஈ) உரு
4. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது
ஆ) என் மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ) இகழ்ந்தால் இறந்து விடாது என் மனம்
ஈ) என் மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
5. 'தா' என்ற வேர்சொல்லின் வினையெச்சத் தொடரைத் தேர்க.
அ) அரசர் தந்தார்
ஆ) தந்த அரசர்
இ) தந்து சென்றார்
ஈ) அரசே தருக
6. வேர்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது
அ) குலைப் பெயர் வகை
ஆ) மணிப் பெயர் வகை
இ) கிளைப் பெயர் வகை
ஈ) இலைப் பெயர் வகை
7. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
8. "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் / நாமம் கெடக்கெடும் நோய்" — இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகை நயத்தைத் தேர்க.
அ) வெகுளி - இவை மூன்றன்
ஆ) மயக்கம் - நோய்
இ) இவை மூன்றன் - கெடக்கெடும்
ஈ) காமம் - நாமம்
9. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது
அ) சுட்டி
ஆ) கிண்கிணி
இ) குழை
ஈ) சூழி
10. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' — தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
அ) பாடிய : கேட்டவர்
ஆ) பாடல் : பாடிய
இ) கேட்டவர் : பாடிய
ஈ) பாடல் : கேட்டவர்
11. திறன்பேசியின் தொடு திரையில் படித்துக் கொண்டிருந்தார். இத்தொடரில் 'தொடுதிரை' என்பதன் தொடர் வகை
அ) உவமைத் தொகை
ஆ) உம்மைத் தொகை
இ) வினைத்தொகை
ஈ) அன்மொழித் தொகை
பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க:-
"அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ்நாட்டில் எய்திற்றாலோ தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்! எந்தாய்!"
12. இப்பாடலில் 'தமர்' என்பதன் பொருள்
அ) பகைவர்
ஆ) தேவர்
இ) உறவினர்
ஈ) புலவர்
13. 'கானம்' - என்பதன் பொருள்
அ) பாடல்
ஆ) காடு
இ) கோயில்
ஈ) பிழை
14. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ) கம்பராமாயணம்
ஆ) திருவிளையாடற்புராணம்
இ) காசிக்காண்டம்
ஈ) மேகம்
15. 'எந்தாய் எந்தாய்' என்பது
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அடுக்குத்தொடர்
ஈ) இரட்டைக்கிளவி
பகுதி - II மதிப்பெண்கள் : 18
பிரிவு - I (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. (21ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.) (4 × 2 = 8)
16. விடைக்கேற்ற வினா அமைக்க:
அ) நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோருக்காகக் கட்டப்பட்டன.
ஆ) மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
17. "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" — இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?
18. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.
19. பலதுறை வளர்ச்சிக்கு மொழி பெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
20. "மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! / முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" — இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
21. 'தரும்' - என முடியும் குறளை எழுதுக.
பிரிவு - II (மதிப்பெண்கள்: 10)
III. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. வழுவை வழாநிலையாக மாற்றுக: அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும் போது அம்மா வழியனுப்பியது.
23. படிப்போம்; பயன்படுத்துவோம்:
அ) Multimedia   |   ஆ) Whirlwind
24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : உரைத்த
25. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத் தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
26. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக:
அ) ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
ஆ) பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
27. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) சிறு - சீறு   |   ஆ) தான் - தாம்
[குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா — பொருத்தமான தொழிற்பெயர்களை தேர்வு செய்து தொடர்களை முழுமை செய்க (சுட்டல், சுடுதல், தொடுத்தல், தொடுதல்):
காற்றின் மெல்லிய _______ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான _______ பூக்களை மாலையாக்குகிறது.]
28. பழமொழியை நிறைவு செய்க:
அ) உப்பிட்டவரை _______   |   ஆ) அளவுக்கு _______
பகுதி - III மதிப்பெண்கள் : 18
பிரிவு - I (மதிப்பெண்கள்: 6)
IV. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- (2 × 3 = 6)
29. "இன்மையிலும் விருந்தோம்பல்" — குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
30. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-
"ஒரு மணித்துளிக்கு 12 முதல் 18 முறை மூச்சுக்காற்றாய் நீங்கள் வெளிவிடும் கரியமில வளியை எடுத்துக் கொண்டு உங்கள் நுரையீரலுக்குத் தேவையான உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும் என் தோழர்களான மரங்களை வளருங்கள். நல்ல முறையில் குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுங்கள்; பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தாருங்கள். நீங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறீர்கள். என்னை, ஒரு நாள் மட்டும் கொண்டாடினால் போதாது. ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும்."
அ) உயிர்வளி என அழைக்கப்படுவது எது?
ஆ) "உலகக் காற்றுநாள்" எப்போது கொண்டாடப்படுகிறது?
இ) தூய்மையான காற்றைப் பெற நாம் செய்ய வேண்டுவன யாவை?
31. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
பிரிவு - II (மதிப்பெண்கள்: 6)
V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.) (2 × 3 = 6)
32. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை விரித்து எழுதுக.
33. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "விருந்தினனாக..." எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை அடிமாறாமல் எழுதுக.
(அல்லது)
ஆ) "தலைவர்..." எனத் தொடங்கி "...சட்டம்" என முடியும் காலக் கணிதம் பாடலை எழுதுக.
பிரிவு - III (மதிப்பெண்கள்: 6)
VI. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- (2 × 3 = 6)
35. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு தருக.
36. "மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்." — பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
37. "பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் / கண்ணோட்டம் இல்லாத கண்" — இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
பகுதி - IV மதிப்பெண்கள் : 25
VII. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. (5 × 5 = 25)
38. அ) வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
(அல்லது)
ஆ) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறியுள்ள கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
39. அ) மாவட்ட அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தைக் கவினுற எழுதுக: (திரையில் உள்ள மரத்தின் ஓவியத்தைக் காட்டி மரங்கள் இல்லாத வெட்டவெளியில் ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் காட்சி)
41. சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தாண்டவராயபுரம் அஞ்சல், 3/112 என்ற எண்ணில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் மகள் வாணிஸ்ரீ என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் ஆத்தூர் கிளை நூலகத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். அவருக்கு நூலக உறுப்பினர் படிவம் நிரப்பி உதவுக.
42. அ) பெரும் புயல் அறிவிப்பை வானொலியில் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
(அல்லது)
ஆ) மொழி பெயர்க்க:-
"Respected ladies and gentleman. I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Sri Lanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all."
[குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா — கதையாக்குக: மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்... அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.]
பகுதி - V மதிப்பெண்கள் : 24
VIII. அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. (3 × 8 = 24)
43. அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் "கோபல்லபுரத்து மக்கள்" கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
ஆ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
45. அ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்ற தலைப்பில், கீழ்க்கண்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:
(குறிப்புகள்: முன்னுரை - தமிழின் சிறப்புகள் - தமிழின் பெருமை - தமிழ்ச்சான்றோர்களின் பங்களிப்பு - திருக்குறள் சிறப்பு - சங்க இலக்கியத்தில் தமிழ் - தமிழின் அணிகலன்கள் - முடிவுரை)
(அல்லது)
ஆ) தமிழின் இலக்கிய வளம் - கல்விமொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துகள் - பிறத்துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை — மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

10th Std Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Std Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

10th Std Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment