10th Tamil Quarterly Exam 2026 - Erode District Question Paper


10th Quarterly Exam Question Papers & Answer Keys 2026
10 R | ஈரோடு மாவட்டம் Register No.: ____________

காலாண்டுத் தேர்வு - 2026

பத்தாம் வகுப்பு — தமிழ்
நேரம் : 3.00 மணி மதிப்பெண்கள் : 100
குறிப்புகள்: i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். கொடுக்கப்பட்ட நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினைச் சேர்த்து எழுதவும்.
பகுதி - I மதிப்பெண்கள் : 15
1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
2. பரிபாடல் அடியில் 'விசும்பில் இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
3. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர் திணையாகக் கொள்வது —
அ) இட வழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி
4. 'எறும்புதன் கையால் எண்சாண்' — செய்யுள் அடியில் அமைந்துள்ள எண்ணுக்கான தமிழ் எண்ணைத் தேர்க:
அ) எ
ஆ) அ
இ) ரு
ஈ) அஅ
5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது
அ) குலைப்பெயர் வகை
ஆ) மணிப்பெயர் வகை
இ) கிளைப்பெயர் வகை
ஈ) இலைப்பெயர் வகை
6. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
7. 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு' — இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை:
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
8. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
9. உவமையணிக்கும் எடுத்துக்காட்டு உவமையணிக்கும் இடையே அமைந்துள்ள வேறுபாட்டைத் தேர்க:
அ) மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது
ஆ) உவமை இடம்பெறுவது
இ) உவமேயம் இடம்பெறுவது
ஈ) உவம உருபு இடம்பெறுவது
10. காசிக்காண்டம் என்பது _______
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
11. "குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம்..." — இத்தொடருக்குப் பொருத்தமான தலைப்பு:
அ) வனத்தின் நடனம்
ஆ) மிதக்கும் வாசம்
இ) உயிர்ப்பின் ஏக்கம்
ஈ) நீரின் சிலிர்ப்பு
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக:
"கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை"
12. இப்பாடல் இடம்பெற்ற நூல் ........
அ) பரிபாடல்
ஆ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
இ) திருவிளையாடற் புராணம்
ஈ) காசிக்காண்டம்
13. பாடலில் தலையில் அணியும் அணிகலனைத் தேர்க:
அ) குண்டலம்
ஆ) குழை
இ) சூழி
ஈ) கிண்கிணி
14. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்க:
அ) கம்பி - குண்டலம்
ஆ) உச்சியும் - மேனியும்
இ) கட்டிய - சூழியும்
ஈ) கம்பி - வம்பவ
15. பாடலின் ஆசிரியரைத் தேர்க:
அ) வீரமாமுனிவர்
ஆ) குமரகுருபரர்
இ) கீரந்தையார்
ஈ) பரஞ்சோதி முனிவர்
பகுதி - II மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21 வது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். (4 × 2 = 8)
16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும்:
அ) காற்று பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டுவந்து மழையைத் தருகிறது.
ஆ) மொழிபெயர்ப்பு எல்லாக் காலகட்டங்களிலும் தேவையான ஒன்று.
17. 'நச்சப் படாதவன் செல்வம்' — இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
18. "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் / பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" — இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
19. தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
20. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுதானியங்களின் பெயர்களை எழுதுக.
21. 'விடும்' என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
23. பகுபத உறுப்பிலக்கணம் தருக — அமர்ந்தான்
24. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக:
அ) கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
ஆ) நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
25. படிப்போம்; பயன்படுத்துவோம் (கலைச்சொற்கள் தருக):   அ) Hospitality    ஆ) Human Resource
[குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: கீழ்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக: (குவியல், குலை, மந்தை, கட்டு) — அ) பழம்  |  ஆ) கல்]
26. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க: (தொடுத்தல், தொடுதல்)
அ) காற்றின் மெல்லிய _______ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது.
ஆ) கைகளின் நேர்த்தியான _______ பூக்களை மாலையாக்குகிறது.
27. பழமொழிகளை நிறைவு செய்க:
அ) அளவுக்கு _______   |   ஆ) உப்பிட்டவரை _______
28. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) வளி - வாளி   |   ஆ) மடு - மாடு
பகுதி - III மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகிறார். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால் 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்."
அ) விருந்தினர் என்போர் யாவர்?
ஆ) விருந்து குறித்துத் தொல்காப்பியர் கூறியது யாது?
இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
31. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால் உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 34 -க்குக் கட்டாயமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
33. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "புண்ணிய புலவீர்..." எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணப் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) "அன்னை மொழியே..." எனத் தொடங்கி "...பேரரசே" வரையுள்ள அன்னை மொழியே பாடலை எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 × 3 = 6)
35. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' — இவை அனைத்தையும் யாம் அறிவோம். இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
36. "வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் / கோலொடு நின்றான் இரவு" — குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
37. பின்வரும் குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க:
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்"
பகுதி - IV மதிப்பெண்கள் : 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 × 5 = 25)
38. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
(அல்லது)
ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக:
"கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக!" — கண்ணதாசன்
39. அ) வெள்ளத்தில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்றிய நண்பன் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுப் பெற்றதை வாழ்த்திக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (திரையில் உள்ள மரத்தின் ஓவியத்தைக் காட்டி மரங்கள் இல்லாத வெட்டவெளியில் ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் காட்சி)
41. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பாரதி தெரு 77ஆம் எண் வீட்டில் குடியிருக்கும் தமிழ்வாணன் மகள் பண்மொழி ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னைப் பண்மொழியாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) இன்சொல் பேசுவதற்கும் தீய சொல் பேசுவதற்கும் உள்ள வேறுபாடுகள் ஐந்தினை எழுதுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"Translation is an art in itself. No one can do that easily. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e., both the target language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages."
[குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா — உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு... வடக்கிலிருந்து வீசும் போது நான் வாடைக்காற்று எனப்படுகிறேன்... மிகவும் குளிர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்..." — i. மேற்கிலிருந்து வீசும் காற்று யாது? ii. ஊதைக்காற்று என்று அழைப்பதேன்? iii. 'மேற்கு' என்பதன் மற்றொரு பெயர் யாது? iv. 'வாடை' என்பது எத்திசையைக் குறிக்கிறது? v. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக.]
பகுதி - V மதிப்பெண்கள் : 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
ஆ) 'பிரும்மம்' கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
45. அ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக:
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
(குறிப்புகள் : நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூல் ஆசிரியர்)

10th Std Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Std Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

10th Std Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment