திண்டுக்கல் மாவட்டம் (DGL)
பதிவு எண்: ____________
காலாண்டுத் தேர்வு - 2026
வகுப்பு : 10 — தமிழ்
காலம் : 3.00 மணி
மொத்த மதிப்பெண்கள்: 100
குறிப்புகள் : மாணாக்கர்கள் தேர்வு நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி விடைகளை எழுத்துப் பிழைகள் மற்றும் அடித்தல் திருத்தலின்றி தெளிவாகவும், நேர்த்தியாகவும் எழுதுதல் வேண்டும். விடைகள் பொருள் மாறாமல் மாணவர்களது சொந்த நடையில் இருத்தல் வேண்டும். தேர்வெழுத நீலம் அல்லது கருப்பு நிற மையினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பகுதி - I
மதிப்பெண்கள்: 15
I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். II. கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் சரியான விடையினைக் குறியீட்டுடன் சேர்த்து எழுதவும். (15 × 1 = 15)
1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
2. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்....... இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்.......
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
3. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்' — இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது:
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
4. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது.....
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
5. கேட்க வேண்டிய பாடல் — இலக்கணக் குறிப்பு தருக?
அ) வினைமுற்றுத் தொடர்
ஆ) இடைச்சொல் தொடர்
இ) உரிச்சொல் தொடர்
ஈ) கூட்டுநிலைப் பெயரெச்சத் தொடர்
6. கீழ்க்காண்பவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள்
ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை
ஈ) சிலப்பதிகாரம்
7. பிள்ளைத்தமிழ் பருவங்கள்.... வகைப்படும்.
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) பத்து
ஈ) பதினொன்று
8. குழல் மீன் கறியும் உணவும் நெய்தல் நிலத்தவர் கொடுத்ததாகக் கூறும் நூல்:
அ) புறநானூறு
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) நற்றிணை
ஈ) சிலப்பதிகாரம்
9. "இரவின் இருளமைதியில் இரைச்சலாய் சில சுவர்க்கோழிகள்; வறண்ட வானத்தில் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்..." — நயமிகு தொடருக்குப் பொருத்தமான தலைப்பு:
அ) உயிர்ப்பின் ஏக்கம்
ஆ) மிதக்கும் வாசம்
இ) மொட்டின் வருகை
ஈ) காற்றின் பாடல்
10. காசிக்காண்டம் என்பது ....
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
11. நன்மொழி என்பது...........
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
"கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை"
12. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?
அ) பரிபாடல்
ஆ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
இ) சிலப்பதிகாரம்
ஈ) தேம்பாவணி
13. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) நாகூர் ரூமி
ஆ) இளங்கோவடிகள்
இ) குமரகுருபரர்
ஈ) கீரந்தையார்
14. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்கள் யாவை ?
அ) கம்பி, கட்டிய
ஆ) முச்சியு, முச்சி
இ) குண்டல, மேனியு
ஈ) கம்பி, வம்பவ
15. ஆடுக — இலக்கணக் குறிப்பு தருக:
அ) வியங்கோள் வினைமுற்று
ஆ) தொழிற்பெயர்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
பகுதி - II
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21ஆம் வினாவுக்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (4 × 2 = 8)
16. திருவிளையாடற் புராணம் பாடல் வரிகள் கூறும் 'கழிந்த பெரும் கேள்வியினான்' யார்? 'காதல்மிகு கேண்மையினான்' யார்?
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) தாகூருக்குக் கீதாஞ்சலி என்ற நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது.
ஆ) தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
18. 'பலகை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
19. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது ?
20. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
21. "அருமை" எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. வழுவமைதி வகையை இனங்கண்டு எழுதுக: அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
23. பழமொழிகளை நிறைவு செய்க:
அ) உப்பிட்டவரை.... |
ஆ) அளவுக்கு _______
24. பதிந்து — பகுபத உறுப்பிலக்கணம் தருக.
25. கலைச்சொற்கள் தருக: அ) Human Resource ஆ) Hospitality
[குறிப்பு - செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: கூட்டப் பெயர்களை எழுதுக: அ) புல் _______ | ஆ) கல் _______]
26. எண்ணுப்பெயர்களைக் கண்டுபிடித்துத் தமிழ் எண்களில் எழுதுக:
அ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
ஆ) எறும்புந்தன் கையால் எண்சாண்
27. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்கவும்:
அ) கொடு - கோடு |
ஆ) சிலை - சீலை
28. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
பகுதி - III
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். 'சேரமான் காதலி' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராகவும் ஆக்கப்பட்டு சிறப்புப்பெற்றவர்."
அ) கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
ஆ) சாகித்திய அகாதமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் எது?
இ) தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் யார்?
31. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 34வது வினாவுக்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். (2 × 3 = 6)
32. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக?
33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "விருந்தினனாக....." எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) "புண்ணியப் புலவீர் யான்..." எனத் தொடங்கும் திருவிளையாடற்புராணம் பாடல்.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (2 × 3 = 6)
35. "வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் / கோலொடு நின்றான் இரவு" — குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
36. "மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்." — பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
37. அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்தி எழுதுக:
அ) அன்புச் செல்வன் படித்துக் கொண்டிருந்தான்.
ஆ) வெண்டைக்காய் சுவையாக உள்ளது.
இ) தங்கமீன்கள் தண்ணீரில் விளையாடுகின்றன.
பகுதி - IV
மதிப்பெண்கள்: 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 × 5 = 25)
38. அ)
"மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே"
— கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
(அல்லது)
ஆ) இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
39. அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (மனிதர் ஒருவர் முகக்கவசம் மற்றும் முதுகில் செடியுடன் கூடிய பிராணவாயு உருளையைச் சுமந்து நிற்கும் காட்சி)
41. திருநெல்வேலி மாவட்டம், கதவு எண் 11, பாரதியார் நகரில் வசிக்கும் சின்னசாமி என்பவரின் மகன் சுப்பிரமணியன் 500 ரூபாய் தன் தந்தையிடம் பெற்றுக் கொண்டு நூலக உறுப்பினராக சேர உள்ளார். தேர்வர் தம்மை சுப்பிரமணியன் எனக் கருதி உரிய படிவத்தைப் பூர்த்தி செய்க.
42. அ) பள்ளியில் நான், வீட்டில் நான் என்னும் தலைப்பில் ஐந்து வரிகள் எழுதுக.
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க:
"Respected ladies and gentlemen! I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Sri Lanka, Malaysia, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you and all."
[குறிப்பு - செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா — உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
"பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்று போற்றப்படுகிறார். பாரதியின் மேல் இருந்த ஈடுபாட்டால் தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். அவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். பெண்கல்வி பற்றி தன்னுடைய இருண்ட வீடு கவிதைத் தொகுப்பில் எடுத்துரைக்கிறார். தமிழ் மொழி உயர்வுக்காக பாடுபட்டவர்." — i) பாரதிதாசன் எவ்வாறு போற்றப்படுகிறார்? ii) பாரதிதாசன் இயற்பெயர் என்ன? iii) பாரதிதாசன் பெயர்க்காரணம் கூறுக ? iv) பெண்கல்வி பற்றி எந்த கவிதைத் தொகுப்பில் எடுத்துரைக்கிறார்? v) இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினைத் தருக.]
பகுதி - V
மதிப்பெண்கள்: 24
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுடன் விளக்குக.
(அல்லது)
ஆ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
44. அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விளக்குகின்றன?
(அல்லது)
ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45. அ) "குமரிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதிக் கூறி கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்." — இக்கருத்தைக் கருவாகக் கொண்டு 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக:
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
(குறிப்புகள்: நூலின் தலைப்பு - நூலின் மையப்பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூல் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு - நூலாசிரியர்)