கோயம்புத்தூர் மாவட்டம்
1034-B'
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026
10-ஆம் வகுப்பு — தமிழ்
நேரம் : 3.00 மணி
மதிப்பெண்கள் : 100
பகுதி - I
மதிப்பெண்கள்: 15
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். (15 × 1 = 15)
1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை:
அ) குலை வகை
ஆ) மணி வகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை
2. காலில் அணியும் அணிகலன்களைக் குறிப்பது:
அ) சுட்டி
ஆ) கிண்கிணி
இ) குழை
ஈ) சூழி
3. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்னும் அடியில் 'அல்' என்னும் சொல்லின் பொருள்:
அ) அல்லி
ஆ) இரவு
இ) அன்பு
ஈ) விருந்தினர்
4. 'கத்தும் குயிலோசை' என்பது:
(அ) பால் வழுவமைதி
(ஆ) மரபு வழுவமைதி
(இ) திணைவழுவமைதி
(ஈ) கால வழுவமைதி
5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது:
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
6. திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள்:
7. இரவீந்திரநாத் தாகூர் _______ மொழியில் இயற்றிய கீதாஞ்சலியை _______ மொழிக்கு மொழிபெயர்த்த பிறகு தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம்
ஆ) வங்காள, தெலுங்கு
இ) வங்காள, ஆங்கிலம்
ஈ) தெலுங்கு, ஆங்கிலம்
8. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
அ) யாம்
ஆ) நீவிர்
இ) அவர்
ஈ) நாம்
9. நன்மொழி என்பது:
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத் தொகை
10. "கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது; வானம் இருண்டது; வாடைக்காற்று வீசியது" என்ற நயமிகு தொடருக்கு ஏற்ற தலைப்பு:
அ) வனத்தின் நடனம்
ஆ) மிதக்கும் வாசம்
இ) காற்றின் பாடல்
ஈ) மொட்டின் வருகை
11. 'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்' எனக் கூறும் நூல் எது?
அ) தென்றல் விடு தூது
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) புறநானூறு
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை அளிக்கவும்:
"கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!"
12. பாடலின் ஆசிரியர்:
அ) கண்ணதாசன்
ஆ) நாகூர் ரூமி
இ) வண்ணதாசன்
ஈ) பாரதிதாசன்
13. இப்பாடலில் அமைந்துள்ள சீர் எதுகை:
அ) புவியில் - புகழுடை
ஆ) பொன்னின் - பொருளென்
இ) கருப்படு - உருப்பட
ஈ) கவிஞன் - கருப்படு
14. "கவிஞன் யானோர் காலக் கணிதம்" — இவ்வடிகளில் அமைந்த நயம்:
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) முரண்
15. காலத்தை வெல்பவன் யார்?
அ) ஆசிரியர்
ஆ) அரசர்
இ) கவிஞன்
ஈ) ஓவியன்
பகுதி - II
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (21-ஆவது வினா கட்டாயம்) (4 × 2 = 8)
16. விடைக்கேற்ற வினா அமைக்க:
அ) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆ) காற்று தெற்கிலிருந்து வீசும்போது 'தென்றல்' என அழைக்கப்படுகிறது.
17. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
18. பிள்ளைத்தமிழ் — குறிப்பு வரைக.
19. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
20. சொல் வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
21. 'விடல்' என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 10)
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 × 2 = 10)
22. பலகை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
23. கலைச்சொல் தருக:
Tempest
[செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்றுவினா: கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களை எழுதுக: அ) பழம் | ஆ) கல்]
24. பழமொழிகளை நிறைவு செய்க:
அ) அளவுக்கு _______ |
ஆ) ஒரு பானை _______
25. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) கொள் - கோள் |
ஆ) வளி - வாளி
26. 'தண்ணீர்குடி', 'தயிர்க்குடம்' ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
27. தொழிற்பெயர்களின் பொருளுக்கு ஏற்ப தொடர்களை முழுமை செய்க:
அ) காட்டு விலங்குகளைச் _______ தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் _______ திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)
ஆ) பசுமையான _______ ஐக் கண்ணுக்கு நல்லது. (காணுதல் / காட்சி)
28. எண்ணுப்பெயர்களைக் கண்டுபிடித்துத் தமிழ் எண்களில் எழுதுக:
அ) நாற்றிசையும் செல்லாத நாடில்லை
ஆ) ஐந்து சால்பு ஊன்றிய தூண்
பகுதி - III
மதிப்பெண்கள் : 18
பிரிவு - 1 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
29. இன்மையிலும் விருந்தோம்பல் குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
30. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது' — இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
31. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
"மொழிபெயர்ப்பு எல்லாக் காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின் கீழ் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது. ஒரு மொழியில் இருக்கும் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்த்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்த, இருக்கின்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரைப் பற்றிய நூல்களையும் வெளியிட்டது. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் (NBT), தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன."
அ) எல்லாக் காலகட்டங்களிலும் எது தேவையான ஒன்று?
ஆ) இந்திய அரசு மொழிபெயர்ப்பை எதற்காக ஒரு கருவியாகக் கொண்டுள்ளது?
இ) மொழிபெயர்ப்பு முயற்சிகள் எதன் மூலம் செய்யப்பட்டன?
பிரிவு - 2 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (34 ஆவது வினா கட்டாயம்) (2 × 3 = 6)
32. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
33. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
34. அடிபிறழாமல் எழுதுக:
அ) "அன்னை மொழியே..." எனத் தொடங்கி "...மண்ணுலகப் பேரரசே" என முடியும் அன்னை மொழியே பாடல்.
(அல்லது)
ஆ) "விருந்தினனாக..." எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.
பிரிவு - 3 (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். (2 × 3 = 6)
35. "வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் / கோலொடு நின்றான் இரவு" — இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
36. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
37. "வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறு வினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்." — அடிக்கோடிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.
பகுதி - IV
மதிப்பெண்கள் : 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (5 × 5 = 25)
38. அ) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துக்களை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
(அல்லது)
ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் விளக்குக.
39. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டிப் பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.
(அல்லது)
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக: (மனிதர் ஒருவர் முகக்கவசம் மற்றும் முதுகில் செடியுடன் கூடிய பிராணவாயு உருளையைச் சுமந்து நிற்கும் காட்சி)
41. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், திருவள்ளுவர் நகர், பூங்கா சாலை, 93 ஆம் இலக்க வீட்டில் வசித்து வரும் தமிழரசன் மகன் பூவரசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் காஞ்சிபுரம் மைய நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தம்மைப் பூவரசனாகக் கருதி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புக.
42. 'இன்சொல் வழி', 'தீய சொல் வழி' — இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது? ஏன்?
(அல்லது)
தமிழில் மொழிபெயர்க்க:
"Respected ladies and gentleman, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil Culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Sri Lanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all."
[செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: "கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு... மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்..." — அ) கிழக்கு என்பதன் மற்றொரு பெயர் என்ன? ஆ) குளிர்ச்சி தரும் காற்று எது? இ) குடக்கு என்பது எத்திசையைக் குறிக்கிறது? ஈ) மேற்கிலிருந்து வீசும் காற்று யாது? உ) வெப்பக்காற்று என்பது எது? மழைக்காற்று என்பது எது?]
பகுதி - V
மதிப்பெண்கள் : 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்கவும். (3 × 8 = 24)
43. அ) நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழி நின்று விளக்குக.
(அல்லது)
ஆ) சங்க காலத்தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
44. அ) 'பிரும்மம்' கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
(அல்லது)
ஆ) "கற்கை நன்றே கற்கை நன்றே / பிச்சை புகினும் கற்கை நன்றே" — என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடம் இருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
45. அ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:
(குறிப்புகள்: முன்னுரை - விசும்பின் துளியும் பசும்புல் தலையும் - மழைநீர் சேகரிப்பு - நீர் மாசுபாடு - கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - முடிவுரை)