ராணிப்பேட்டை மாவட்ட 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு 2026 வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை (10th Social Science Quarterly Exam 2026 Question Paper & Answer Key) தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்காக இந்தப் பக்கத்தில் வழங்கியுள்ளோம். மாணவர்கள் இந்த வினாத்தாளைப் பயன்படுத்திப் பயிற்சி செய்வதன் மூலம், ராணிப்பேட்டை மாவட்ட வினாத்தாள் முறையைப் புரிந்துகொண்டு, வரவிருக்கும் பொதுத்தேர்வுக்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ளலாம்.
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
காலாண்டுப் பொதுத்தேர்வு – 2026
| வினா எண் | விடைக்குறிப்பு | வினா எண் | விடைக்குறிப்பு |
|---|---|---|---|
| 1 | ஆ) ஜப்பான் | 8 | இ) செம்மண் |
| 2 | இ) உட்ரோ வில்சன் | 9 | இ) மகாராஷ்டிரம் |
| 3 | ஆ) 1829 | 10 | ஆ) மக்களியல் |
| 4 | இ) மருதூர் | 11 | அ) ஒருமுறை |
| 5 | இ) போப் | 12 | இ) 30 வயது |
| 6 | இ) பாங்கர் | 13 | ஆ) புகூட் (BHKW) |
| 7 | இ) அயனமண்டல பருவக்காற்று காலநிலை | 14 | இ) பசுமைப்புரட்சி |
15. முதல் சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவம் யாது?
• சீனாவைச் சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது உலக நாடுகளை வியக்க வைத்தது.
• ரஷ்யா, ஜெர்மனி, பிரான்சு ஆகிய வல்லரசுகளின் எச்சரிக்கையையும் மீறி ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை போர்ட் ஆர்தர் துறைமுகத்துடன் இணைத்துக் கொண்டது.
• இதன் மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை வாய்ந்த நாடு என்பதை ஜப்பான் மெய்ப்பித்தது.
16. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மை மீது ஏற்படுத்திய தாக்கம் யாது?
• வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை பாதியாகக் குறைந்தது.
• விளைபொருட்களின் விலை சரிந்ததால், அரசுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி உள்ளிட்ட கட்டணங்களின் சுமை இருமடங்காக அதிகரித்தது.
17. பன்னாட்டு நிதியத்தின் (IMF) முதன்மை நோக்கங்கள் யாவை?
• உலக அளவில் நாடுகளிடையே நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுதல்.
• பன்னாட்டு வணிகத்திற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது.
18. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
• இத்திட்டம் இரண்டாம் உலகப் போரின் அழிவு மற்றும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகுத்தது.
19. 19-ஆம் நூற்றாண்டுச் சீர்திருத்தவாதிகள் ஒழிக்கப் பாடுபட்ட சமூகக் கொடுமைகள் யாவை?
20. தக்காணப் பீடபூமி – சிறுகுறிப்பு வரைக.
• இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது; இதன் பரப்பளவு சுமார் 7 லட்சம் சதுர கி.மீ ஆகும்.
• கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது.
21. இந்தியாவில் அதிக மழைபெறும் பகுதிகள் யாவை?
22. இந்தியாவின் முக்கியப் பயிர் பருவங்களைக் குறிப்பிடுக.
• ராபி பருவம்: அக்டோபர் – மார்ச்
• சையத் பருவம்: ஏப்ரல் – ஜூன்
23. மாங்கனீசின் பயன்கள் யாவை?
• வெளுக்கும் தூள் (பிளீச்சிங் பவுடர்), பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சுகள் மற்றும் மின்கலன்கள் (பேட்டரிகள்) தயாரிப்பில் பெருமளவு பயன்படுகிறது.
24. பன்னாட்டு வணிகம் என்றால் என்ன?
• ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இதன் இரு முக்கிய கூறுகள் ஆகும்; இதற்கு நீர்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்துகள் பயன்படுகின்றன, மேலும் அந்நிய நாட்டுச் செலாவணி பயன்படுத்தப்படுகிறது.
25. நீதிப்பேராணை என்றால் என்ன?
• அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் சில தவறான சட்டங்களை நிறைவேற்றாமல் தடை செய்யவும் இது வெளியிடப்படுகிறது; உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் 5 வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன.
26. ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?
2. 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
3. நாடாளுமன்றத்திலோ அல்லது எந்த மாநிலச் சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது மற்றும் எவ்வித ஆதாயம் தரும் பதவிகளிலும் இருக்கக்கூடாது.
27. நாட்டு வருமானம் – வரையறு.
28. [கட்டாய வினா] முடிவு வாக்கு (Casting Vote) பற்றி எழுதுக.
29. கோடிட்ட இடங்களை நிரப்புக:
2. ஒரு பைசா தமிழன் வார இதழைத் தொடங்கியவர் அயோத்திதாசர்.
3. இந்தியாவில் அதிக மழைபெறும் இடம் மௌசின்ராம்.
4. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம் ஆகும்.
5. ஊட்டச்சத்துக் குறைபாட்டின் முக்கிய வெளிப்பாடு இரத்த சோகை (எடை குறைவு) ஆகும்.
30. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கிய சரத்துகளைக் குறிப்பிடுக.
• ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் கடுமையாகச் சுருக்கப்பட்டது; சிறிய கப்பற்படையை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.
• பிரான்சிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அல்சேஸ் - லொரைன் பகுதிகள் மீண்டும் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.
• போலந்து நாடு மீண்டும் சுதந்திர நாடாக உருவாக்கப்பட்டது.
• ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனியின் ஒருங்கிணைப்பு நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டது; பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் மற்றும் புகாரெஸ்ட் உடன்படிக்கைகளைத் திரும்பப் பெற ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
31. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
• அணு ஆயுதப் பரவல்: அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அணு ஆயுதப் போட்டியில் இறங்கி பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்தன.
• பன்னாட்டு முகமைகள் உருவாதல்: எதிர்காலத்தில் உலகப் போர்களைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை (UNO), உலக வங்கி, மற்றும் பன்னாட்டு நிதியம் (IMF) ஆகியவை அமைக்கப்பட்டன.
• காலனி ஆதிக்க நீக்கம்: ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அடுத்தடுத்து விடுதலை பெற்றன.
32. 19-ஆம் நூற்றாண்டுச் சமூக சீர்திருத்த இயக்கங்களின் தலைவர்கள் ஆற்றிய பங்களிப்பை விவரி.
• கேசவ் சந்திர சென்: பிரம்ம சமாஜத்தின் முக்கியத் தலைவராக விளங்கி குழந்தைத் திருமணத்தை ஒழிக்கப் பாடுபட்டார்.
• ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்: பெண் கல்வியை மேம்படுத்தினார்; இளவயதிலேயே விதவைகளான பெண்களின் மறுமணத்திற்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்து 1856-ல் விதவை மறுமணச் சட்டம் பிறப்பிக்க வழிசெய்தார்.
• நீதிபதி M.G. ராணடே: பிரார்த்தனை சமாஜத்தின் மூலம் சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், ஆதரவற்றோர் இல்லங்களை உருவாக்கினார்.
• ஜோதிபா புலே: ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் கல்விக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் முதல் பள்ளியைத் தொடங்கி விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
33. அ) வேறுபடுத்துக: i) வானிலை மற்றும் காலநிலை ii) புதுப்பிக்க இயலும் வளங்கள் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள். ஆ) காரணம் கூறுக: இமயமலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன.
| வானிலை | காலநிலை |
|---|---|
| ஒரு குறிப்பிட்ட இடத்தின் குறுகிய கால வளிமண்டலத் தன்மை. | ஒரு குறிப்பிட்ட இடத்தின் 30 முதல் 35 ஆண்டு கால வானிலை சராசரி. |
| தினந்தோறும் அல்லது ஒரு நாளுக்குள்ளேயே மாறும். | ஒப்பீட்டளவில் மாறாது (பருவத்திற்கு ஏற்பவே மாறுபடும்). |
| வானிலையியல் (Meteorology) இதன் படிப்பாகும். | காலநிலையியல் (Climatology) இதன் படிப்பாகும். |
ii) புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்:
| புதுப்பிக்க இயலும் வளங்கள் | புதுப்பிக்க இயலா வளங்கள் |
|---|---|
| இயற்கையாகவே குறுகிய காலத்தில் மீட்டுருவாக்கம் செய்ய இயலும். | பயன்படுத்தப் பயன்படுத்தத் தீர்ந்துவிடும்; மீட்டுருவாக்கம் செய்ய இயலாது. |
| சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. | சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். |
| எ.கா: சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர். | எ.கா: நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு. |
ஆ) காரணம்: புவி மேலோட்டுப் பேரியக்க விசையின் காரணமாக, தெத்திஸ் கடற்படுகையின் படிவுகள் அழுத்தப்பட்டு மடிக்கப்பட்டதால் இமயமலைகள் இளம் மடிப்பு மலைகள் எனப்படுகின்றன.
34. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவத்தையும் விவரி.
1. டிரான்ஸ் இமயமலைகள் (மேற்கு இமயமலை): திபெத்தியன் இமயமலை எனவும் அழைக்கப்படுகிறது; காரகோரம், லடாக், ஜாஸ்கர், கைலாஷ் மலைத்தொடர்களைக் கொண்டது.
2. இமயமலைகள் (மத்திய இமயமலை):
• பெரிய இமயமலை (இமாத்ரி): வடபகுதி; மிக உயர்ந்த பனிபடர்ந்த சிகரங்கள் உள்ளன.
• சிறிய இமயமலை (இமாச்சல்): மத்திய பகுதி; சிம்லா, டார்ஜிலிங் போன்ற கோடைவாழிடங்கள் உள்ளன.
• வெளி இமயமலை (சிவாலிக்): தொடர்ச்சியற்ற தென்பகுதி; டூன்கள் மற்றும் டூயர்ஸ் சமவெளிகள் உள்ளன.
3. பூர்வாஞ்சல் குன்றுகள் (கிழக்கு இமயமலை): வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ள மலைக் குன்றுகள்.
முக்கியத்துவம்: வட இந்தியப் பகுதிக்குக் கனமழையைத் தருகிறது; இயற்கை அரணாக விளங்குகிறது; வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது; பல்லுயிர் மண்டலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
35. பல்நோக்குத் திட்டங்கள் பற்றி எழுதுக.
• ஹிராகுட் திட்டம்: மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அணை; ஒடிசா மாநிலம் இதன் மூலம் பாசனமும், 347.5 மெகாவாட் நீர்மின்சாரமும் பெறுகிறது.
• பக்ரா – நங்கல் திட்டம்: சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய புவிஈர்ப்பு அணை; பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்கள் பயனடைகின்றன; 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
36. இந்தியாவில் தொழில் தொடங்குவதில் உள்ள சவால்கள் / சிக்கல்கள் யாவை?
• தொழிலகங்களை அமைக்கப் போதிய பரந்த நிலப்பரப்பு கிடைக்காமை.
• வங்கிகளில் உரிய நேரத்தில் கடன் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அதிக வட்டி விகிதம்.
• திறமையான மற்றும் தொழில்முறைப் பயிற்சி பெற்ற வேலையாட்கள் பற்றாக்குறை.
• நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிலாளர்கள் வசிப்பதற்கேற்ற சூழல் இல்லாமை.
37. இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்களை விவரி.
2. இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு உலக நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
3. இது நெகிழும் தன்மை மற்றும் நெகிழாத்தன்மை ஆகிய இரண்டையும் சம அளவில் ஒருங்கிணைத்துள்ளது.
4. மத்தியில் வலுவான கூட்டாட்சி அரசாங்க முறையையும், மாநிலங்களில் தன்னாட்சியையும் ஏற்படுத்துகிறது.
5. இந்தியாவை எந்தவொரு மதத்தையும் சாராத சமயச்சார்பற்ற நாடாக்குகிறது மற்றும் சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
6. 18 வயது பூர்த்தியடைந்த குடிமக்கள் அனைவருக்கும் உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அளிக்கிறது.
38. இந்தியப் பிரதம அமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
• அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, இடம் மற்றும் நிகழ்ச்சி நிரலை முடிவு செய்து தலைமை தாங்குகிறார்.
• மத்திய அரசு விவகாரங்கள், நிர்வாக முடிவுகள் மற்றும் சட்ட முன்மொழிவுகள் குறித்து குடியரசுத் தலைவருடன் கலந்து ஆலோசிக்கிறார்.
• குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே முதன்மைத் தகவல் தொடர்புப் பாலமாகச் செயல்படுகிறார்.
• சர்வதேச மாநாடுகளில் (காமன்வெல்த், சார்க் போன்றவை) நாட்டின் சார்பாகப் பங்கேற்று தேசத்தின் முதன்மைச் செய்தித் தொடர்பாளராக விளங்குகிறார்.
39. நாட்டு வருமானத்தைக் கணக்கிடுவதற்குத் தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.
2. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP): ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பொருட்கள் மற்றும் பணிகளின் பணமதிப்பு.
3. நிகர நாட்டு உற்பத்தி (NNP): மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதனத் தேய்மானத்தைக் கழித்த பின் கிடைப்பது (NNP = GNP − தேய்மானம்).
4. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP): GDP-யிலிருந்து தேய்மானத்தைக் கழித்த பின் கிடைப்பது.
5. தலா வருமானம் (PCI): நாட்டின் மொத்த வருமானத்தை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பது; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் கருவி.
6. தனிப்பட்ட வருமானம் (PI): ஒரு நாட்டின் தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் உண்மையாகப் பெறும் வருமானம்.
40. உலகமயமாக்கலின் சவால்களை விவரி.
• உலகம் தழுவிய கடுமையான சந்தைப் போட்டியால் ஊதியங்கள் குறைக்கப்பட்டு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணிப் பாதுகாப்பு பாதிக்கப்படுகின்றன.
• உலகளாவிய பொருளாதார சமத்துவமின்மை, குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் மறைமுக அடிமைத்தனம் அதிகரிக்க வழிசெய்கிறது.
• துரித உணவுப் பழக்கவழக்கங்களால் உடல்நலக் குறைவும் நோய்களும் ஏற்படுகின்றன.
• கட்டுப்பாடற்ற தொழில் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்து இயற்கை வளங்கள் சீரழிகின்றன.
41. காலக்கோடு: 1900 – 1920 வரையிலான முக்கிய 5 இந்திய வரலாற்று நிகழ்வுகள்:
• 1905 — வங்கப் பிரிவினை / சுதேசி இயக்கம்
• 1906 — முஸ்லீம் லீக் தோற்றம் / சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் உருவாக்கம்
• 1909 — மிண்டோ - மார்லி சீர்திருத்தம்
• 1916 — தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) / லக்னோ ஒப்பந்தம்
• 1919 — ரௌலட் சட்டம் / ஜாலியன்வாலா பாக் படுகொலை
• 1920 — ஒத்துழையாமை இயக்கம் / கிலாபத் இயக்கம்
42. [கட்டாய வினா] உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களைக் குறிக்கவும்:
2. இங்கிலாந்து (பிரிட்டன்): வடமேற்கு ஐரோப்பியத் தீவு நாடு.
3. பிரான்சு: மேற்கு ஐரோப்பிய நாடு.
4. ஆஸ்திரியா - ஹங்கேரி: மத்திய ஐரோப்பியப் பேரரசுப் பகுதி.
5. மலாக்கா நீர்ச்சந்தி: மலேசியாவிற்கும் இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவிற்கும் இடையே உள்ள கடல் நீரிணை.
தோற்றம்: 1945 ஜூன் 26-ல் சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் சாசனம் கையெழுத்திடப்பட்டு, 1945 அக்டோபர் 24 அன்று 51 நாடுகளுடன் தொடங்கப்பட்டது; தற்போது 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
முக்கிய அமைப்புகள்:
1. பொதுச்சபை: அனைத்து உறுப்பு நாடுகளும் சமமான வாக்குரிமை பெற்று ஆண்டுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கும் உலக நாடாளுமன்றம்.
2. பாதுகாப்பு அவை: உலக அமைதியைப் பாதுகாக்கும் முதன்மைப் பொறுப்புடையது; வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர நாடுகள் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா) மற்றும் 10 தற்காலிக நாடுகளைக் கொண்டது.
3. பன்னாட்டு நீதிமன்றம்: ஐ.நாவின் முதன்மை நீதித்துறை அங்கம்; இது நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ளது.
4. பொருளாதார சமூக மாமன்றம் மற்றும் செயலகம்: உலகளாவிய பொருளாதார, சமூக, பண்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்கிறது.
5. துணை அமைப்புகள்: WHO, FAO, UNESCO, UNICEF போன்றவை சுகாதாரம், உணவு மற்றும் குழந்தைத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
செயல்பாடுகள்: உலக அமைதியைப் பேண அமைதிப்படையை அனுப்புதல்; காலனி ஆதிக்கத்தை நீக்குதல்; மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவத்தைப் பாதுகாத்தல்.
• இராமகிருஷ்ண பரமஹம்சர்:
1. பக்தி, பஜனைப் பாடல்களை மனமுருகிப் பாடுவதன் மூலம் பேரின்ப நிலையில் ஆன்ம ரீதியாகக் கடவுளோடு ஒன்றிணைய முடியும் என்றார்.
2. அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு மார்க்கங்களே என்பதைத் தன் சொந்த அனுபவங்கள் மூலம் நிலைநாட்டினார்.
3. "ஜீவன் என்பதே சிவன்" — அதாவது மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்று போதித்தார்.
4. உயிர்கள் மேல் இரக்கம் காட்டுவதை விட அவற்றுக்குச் சேவை செய்வதே தலையாய கடமை என்றார்.
• சுவாமி விவேகானந்தர்:
1. இராமகிருஷ்ணரின் முதன்மைச் சீடரான இவர், மனித குலத்திற்குத் தொண்டு செய்தல் என்ற உன்னதக் கோட்பாட்டை முன்வைத்தார்.
2. பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
3. 1897-ல் இராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்; இது மதப் பணிகளோடு மட்டுமின்றி, ஏழை மக்களுக்குக் கல்வி, மருத்துவ உதவி மற்றும் இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளையும் ஆற்றி வருகிறது.
• ஆரவல்லி மலைத்தொடர்: ராஜஸ்தானில் தென்மேற்கிலிருந்து வடகிழக்காக நீளும் பழமையான மடிப்பு மலை.
• கோதுமை விளையும் பகுதி: பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம்.
• கரிசல் மண் பகுதி: மகாராஷ்டிராவின் தக்காண எரிமலைப் பாறைப் பகுதி.
• சோட்டா நாகபுரி பீடபூமி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் கனிம வளம் நிறைந்த பீடபூமி.
• ஹிராகுட் அணை: ஒடிசாவில் மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை.
• தென்மேற்கு பருவக்காற்று: அரபிக்கடலிலிருந்து இந்திய நிலப்பரப்பை நோக்கி வடகிழக்காக வீசும் காற்று அம்புக்குறி.
• சென்னை: வட தமிழ்நாட்டின் வங்காள விரிகுடா கடற்கரை நகரம்.
• காவிரி ஆறு: கர்நாடகாவில் தோன்றி தமிழ்நாட்டின் வழியே வங்கக் கடலில் கலக்கும் நதி.
(அல்லது) ஆ) இரண்டாம் விருப்பத் தேர்வு வரைபட இடங்கள்:
• நிலக்கரி வயல் (ஜம்மு-காஷ்மீர் / நெய்வேலி / ராணிகஞ்ச்): நிலக்கரி கிடைக்கும் முக்கிய சுரங்கப் பகுதி.
• கங்கை நதி: இமயமலையில் தோன்றி உத்தராகண்ட், உ.பி., பீகார், வங்கம் வழியே பாயும் வற்றாத நதி.
• பாராத்வீப்: ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய இயற்கை துறைமுகம்.
• கிழக்கு தொடர்ச்சி மலை: வங்காள விரிகுடாக் கடற்கரைக்கு இணையாக உள்ள தொடர்ச்சியற்ற குன்றுகள்.
• பசுமை மாறாக் காடுகள்: மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவுப் பகுதி.
• சென்னை வாகனத் தொழிலகங்கள் (Detroit of South Asia): சென்னையில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி மண்டலம்.
• பாக் நீர்சந்தி: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட ஆழமற்ற கடல் பகுதி.
• அகத்தியர் மலை: தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளப் பெட்டகம்.
10th Study Materials
10th Social Science Study Materials
10th Question Papers & Answer Keys
10th Quarterly Exam Question Papers and Answer Keys
10th Half Yearly Exam Question Papers and Answer Keys
10th Public Exam Question Papers and Answer Keys
10th First Revision Test Question Papers and Answer Keys
10th Second Revision Test Question Papers and Answer Keys
10th Third Revision Test Question Papers and Answer Keys
10th First MidTerm Test Question Papers and Answer Keys
10th Second MidTerm Test Question Papers and Answer Keys